பாடம்: 25
வேதக்காரர்களிடம் எதைப் பற்றியும் கேட்காதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியது.
ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்:
முஆவியா (ரலி) அவர்கள் (ஹஜ்ஜின் போது) மதீனாவில் குறைஷியர் குழு ஒன்றுக்கு ஹதீஸ்களை அறிவித்ததை நான் கேட்டேன். அப்போது முஆவியா (ரலி) அவர்கள் கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, “வேதக்காரர்களிடமிருந்து செய்திகளை அறிவிப்பவர்களிலேயே மிகவும் வாய்மையானவர் கஅப் (ரஹ்) அவர்கள் தாம். அப்படியிருந்தும் நாங்கள் அன்னாருடைய செய்திகளில் தவறானவை ஏதும் உண்டா? என சோதித்துப் பார்த்துவந்தோம்” என்றார்கள்.
அத்தியாயம்: 96
(புகாரி: 7361)بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَسْأَلُوا أَهْلَ الكِتَابِ عَنْ شَيْءٍ»
وَقَالَ أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ
سَمِعَ مُعَاوِيَةَ، يُحَدِّثُ رَهْطًا مِنْ قُرَيْشٍ بِالْمَدِينَةِ، وَذَكَرَ كَعْبَ الأَحْبَارِ فَقَالَ: «إِنْ كَانَ مِنْ أَصْدَقِ هَؤُلاَءِ المُحَدِّثِينَ الَّذِينَ يُحَدِّثُونَ عَنْ أَهْلِ الكِتَابِ، وَإِنْ كُنَّا مَعَ ذَلِكَ لَنَبْلُو عَلَيْهِ الكَذِبَ»
Bukhari-Tamil-7361.
Bukhari-TamilMisc-7361.
Bukhari-Shamila-7361.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
குறிப்பு: இந்தச் செய்தியில் முஆவியா (ரலி) அவர்கள், கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, “வேதக்காரர்களிடமிருந்து செய்திகளை அறிவிப்பவர்களிலேயே மிகவும் வாய்மையானவர் கஅப் (ரஹ்) அவர்கள் தாம். அப்படியிருந்தும் நாங்கள் அன்னாருடைய செய்திகளில் தவறானவை ஏதும் உண்டா? என சோதித்துப் பார்த்துவந்தோம்” என்று கூறியுள்ளதாக வந்துள்ளது.
அரபியில் உள்ள வாசகம் وَإِنْ كُنَّا مَعَ ذَلِكَ لَنَبْلُو عَلَيْهِ الكَذِبَ – கஅப் (ரஹ்) அவர்களின் செய்தியில் பொய் ஏதும் உண்டா? என சோதித்துப் பார்த்துவந்தோம் என்பதாகும். இதன் கருத்து கஅப் அவர்கள் பொய் சொல்வார் என்பதல்ல. முன்னுள்ள வேதங்களில் உள்ள தகவல் தவறாக, பொய்யாகக் கூட இருக்கலாம் என்பதின் அடிப்படையில் இவ்வாறு முஆவியா (ரலி) அவர்கள் கூறியுள்ளார். மேலும் கதிப் என்ற வார்த்தை தவறாக கூறிவிடும் செய்திக்கும் கூறப்படும்.
இந்தக் கருத்தை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.போன்ற பல ஹதீஸ்துறை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
(நூல்: ஃபத்ஹுல் பாரீ-13/335)
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
சமீப விமர்சனங்கள்