பாடம் : 12 அல்லாஹ்வுக்கு தொண்ணூற்றொன்பது பெயர்கள் உள்ளன. (அவற்றில் ஒன்றான) துல் ஜலால்’ என்பதற்கு மகத்துவமிக்கவன்’ என்று பொருள். (மற்றொரு பெயரான) அல்பர்ரு’ என்பதற்கு மென்மையானவன்’ என்று பொருள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
நிச்சயமாக அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது – நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கத்தில் நுழைவார்.27
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘அஹ்ஸா’ எனும் சொல்லுக்கு ‘மனனமிடல்’ என்று பொருள்.
Book : 97
(புகாரி: 7392)بَابٌ: إِنَّ لِلَّهِ مِائَةَ اسْمٍ إِلَّا وَاحِدًا
قَالَ ابْنُ عَبَّاسٍ: {ذُو الجَلاَلِ} [الرحمن: 27] «العَظَمَةِ»، {البَرُّ} [البقرة: 177] «اللَّطِيفُ»
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا، مِائَةً إِلَّا وَاحِدًا، مَنْ أَحْصَاهَا دَخَلَ الجَنَّةَ» أَحْصَيْنَاهُ حَفِظْنَاهُ
அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் ஷாபி-இலங்கை.
கேள்வி – அல்லாஹ்வின் 99 பெயர்களை தெரிந்தவர் சொர்க்கம் செல்வார்கள் என்பது சரியான பொருளா? இதை எப்படி புரிந்து கொள்வது?
ஜஸாகல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும்.
இதன் மூலம் அல்லாஹ்வின் பண்புகளை தெரிந்து, அவனுக்கு பயந்து கட்டுப்பட்டு நடக்கும் பக்குவம் வரும் என்பதால் தான் அவர் சொர்க்கம் செல்வார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிந்தால் மட்டும் போதாது. அமலும் வேண்டும். சொர்க்கம் செல்வதை தடுக்கும் செயல்களை செய்யாமல் இருக்க வேண்டும்.