பாடம் : 32 அவன் அனுமதியளித்தவர்களுக்குத் தவிர வேறெவருக்காகவும் அவனிடம் பரிந்துரை செய்வது பயனளிக்காது. (தீர்ப்பு நாளன்று) மக்களுடைய உள்ளங்களில் இருந்து அச்சம் அகற்றப்பட்டுவிடும் போது (பரிந்துரைப் பவர்களிடம்), உங்கள் இறைவன் என்ன பதிலுரைத்தான்?’ என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு சரியான பதிலுரைத் துள்ளான். அவன் மிக உயர்ந்தவனாகவும் பெரியவனாகவும் இருக்கின்றான்’என்று கூறுவார்கள் எனும் (34:23ஆவது) இறை வசனம். உங்கள் இறைவன் என்ன படைத்தான் என்று (அவர்கள் கேட்டதாக) அல்லாஹ் சொல்லவில்லை.123 மேலும், புகழுக்குரிய அல்லாஹ் கூறகின்றான்: அவனுடைய அனுமதியின்றி அவனிடம் பரிந்துரைப்பவர் யார்? (2:255) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமி ருந்து மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின் றார்கள்: அல்லாஹ் வஹீயின் மூலம் பேசும் போது வானவர்கள் (அதில்) சிறிது கேட்டு (அதிர்ச்சியாகி)விடுகிறார்கள். பின்னர் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து அச்சம் நீக்கப்பட்டு குரல் ஓய்ந்துவிடும் போது, இது (தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள) சத்திய வாக்கு என்று புரிந்துகொள்வார்கள். மேலும், உங்கள் இறைவன் என்ன சொன்னான்? என்று கேட்பார்கள். உண்மை சொன்னான் என்று மற்றவர்கள் பதிலளிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ் தன் அடியார்களை ஒன்று திரட்டுவான்; அப்போது அவன், அருகில் இருப்பவர் கேட்பதைப் போன்று தொலைவில் இருப்பவரும் கேட்கின்ற வகையில் உரத்த குரலில் அவர்களை அழைத்து நானே அரசன்; நானே கூலி கொடுப்பவன் என்று சொல்வான்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால் வானவர்கள் இறைக் கட்டளைக்குப் பணிந்தவர்களாகத் தம் சிறகுகளை அடித்துக்கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை,) பாறை மேல் சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போன்று (வானவர்கள் கேட்பார்கள்)
மற்றோர் அறிவிப்பில் காணப்படுவதாவது: அந்த ஒசை அவர்களைப் போய்ச் சேரும். (அப்போது வானவர்கள் பீதியடைகிறார்கள்.) பின்னர் அவர்களின் இதயங்களிலிருந்து பீதி அகற்றப்படும்போது ‘உங்களுடைய இறைவன் என்ன சொன்னான்?’ என்று வினவுகிறார்கள். ‘உண்மையே சொன்னான். அவன் உயர்ந்தவன்; பெரியவன்’ என்று கூறுவர்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.124
இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
இக்ரிமா(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில் (பின்வருமாறு) காணப்படுகிறது: மேற்கண்ட (திருக்குர்ஆன் 34:23 வது) வசனத்தின் மூலத்தில் ‘ஃபுஸ்ஸிஅ’ (அச்சம் அகற்றப்படும் போது) என்பதை ‘ஃபுர்ரிஃக’ (அகற்றப்படும் போது) என ஓதினார்கள்.
சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இதுவே எங்களின் ஓதல் முறையாகும்.
Book : 97
(புகாரி: 7481)بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَلاَ تَنْفَعُ الشَّفَاعَةُ عِنْدَهُ إِلَّا لِمَنْ أَذِنَ لَهُ حَتَّى إِذَا فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ قَالُوا مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا الحَقَّ وَهُوَ العَلِيُّ الكَبِيرُ} [سبأ: 23]، ” وَلَمْ يَقُلْ: مَاذَا خَلَقَ رَبُّكُمْ
وَقَالَ جَلَّ ذِكْرُهُ: {مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ} [البقرة: 255] وَقَالَ مَسْرُوقٌ، عَنْ ابْنِ مَسْعُودٍ: «إِذَا تَكَلَّمَ اللَّهُ بِالوَحْيِ سَمِعَ أَهْلُ السَّمَوَاتِ شَيْئًا، فَإِذَا فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ وَسَكَنَ الصَّوْتُ، عَرَفُوا أَنَّهُ الحَقُّ وَنَادَوْا»: {مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا الحَقَّ} [سبأ: 23] وَيُذْكَرُ عَنْ جَابِرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” يَحْشُرُ اللَّهُ العِبَادَ، فَيُنَادِيهِمْ بِصَوْتٍ يَسْمَعُهُ مَنْ بَعُدَ كَمَا يَسْمَعُهُ مَنْ قَرُبَ: أَنَا المَلِكُ، أَنَا الدَّيَّانُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
إِذَا قَضَى اللَّهُ الأَمْرَ فِي السَّمَاءِ، ضَرَبَتِ المَلاَئِكَةُ بِأَجْنِحَتِهَا خُضْعَانًا لِقَوْلِهِ، كَأَنَّهُ سِلْسِلَةٌ عَلَى صَفْوَانٍ قَالَ – عَلِيٌّ: وَقَالَ غَيْرُهُ: صَفْوَانٍ يَنْفُذُهُمْ ذَلِكَ – فَإِذَا “: {فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ قَالُوا مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا الحَقَّ وَهُوَ العَلِيُّ الكَبِيرُ} [سبأ: 23]، قَالَ عَلِيٌّ، وَحَدَّثَنَا سُفْيَانُ: حَدَّثَنَا عَمْرٌو، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ بِهَذَا، قَالَ سُفْيَانُ: قَالَ عَمْرٌو: سَمِعْتُ عِكْرِمَةَ: حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، قَالَ عَلِيٌّ: قُلْتُ لِسُفْيَانَ: قَالَ سَمِعْتُ عِكْرِمَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ؟ قَالَ: نَعَمْ، قُلْتُ لِسُفْيَانَ: إِنَّ إِنْسَانًا رَوَى عَنْ عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَرْفَعُهُ: أَنَّهُ قَرَأَ: (فُرِّغَ)، قَالَ سُفْيَانُ: هَكَذَا قَرَأَ عَمْرٌو، فَلاَ أَدْرِي سَمِعَهُ هَكَذَا أَمْ لاَ؟ قَالَ سُفْيَانُ: وَهِيَ قِرَاءَتُنَا
சமீப விமர்சனங்கள்