தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7481

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம்: 32

அவன் அனுமதியளித்தவர்களுக்குத் தவிர வேறெவருக்காகவும் அவனிடம் பரிந்துரை செய்வது பயனளிக்காது. (தீர்ப்பு நாளன்று) மக்களுடைய உள்ளங்களில் இருந்து அச்சம் அகற்றப்பட்டுவிடும் போது (பரிந்துரைப் பவர்களிடம்), உங்கள் இறைவன் என்ன பதிலுரைத்தான்?’ என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு சரியான பதிலுரைத் துள்ளான். அவன் மிக உயர்ந்தவனாகவும் பெரியவனாகவும் இருக்கின்றான்’என்று கூறுவார்கள் எனும் (34:23ஆவது) இறை வசனம்.

உங்கள் இறைவன் என்ன படைத்தான் என்று (அவர்கள் கேட்டதாக) அல்லாஹ் சொல்லவில்லை. மேலும், புகழுக்குரிய அல்லாஹ் கூறகின்றான்: அவனுடைய அனுமதியின்றி அவனிடம் பரிந்துரைப்பவர் யார்? (2:255)

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ் வஹீயின் மூலம் பேசும் போது வானவர்கள் (அதில்) சிறிது கேட்டு (அதிர்ச்சியாகி)விடுகிறார்கள். பின்னர் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து அச்சம் நீக்கப்பட்டு குரல் ஓய்ந்துவிடும் போது, இது (தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள) சத்திய வாக்கு என்று புரிந்துகொள்வார்கள். மேலும், உங்கள் இறைவன் என்ன சொன்னான்? என்று கேட்பார்கள். உண்மை சொன்னான் என்று மற்றவர்கள் பதிலளிப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ் தன் அடியார்களை ஒன்று திரட்டுவான்; அப்போது அவன், அருகில் இருப்பவர் கேட்பதைப் போன்று தொலைவில் இருப்பவரும் கேட்கின்ற வகையில் உரத்த குரலில் அவர்களை அழைத்து நானே அரசன்; நானே கூலி கொடுப்பவன் என்று சொல்வான். (பார்க்க: அஹ்மத்-16042)


7481. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால் வானவர்கள் இறைக் கட்டளைக்குப் பணிந்தவர்களாகத் தம் சிறகுகளை அடித்துக்கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை), பாறை மேல் சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போன்று (வானவர்கள் கேட்பார்கள்)

மற்றோர் அறிவிப்பில் காணப்படுவதாவது: அந்த ஒசை அவர்களைப் போய்ச் சேரும். (அப்போது வானவர்கள் பீதியடைகிறார்கள்.) பின்னர் அவர்களின் இதயங்களிலிருந்து பீதி அகற்றப்படும்போது ‘உங்களுடைய இறைவன் என்ன சொன்னான்?’ என்று வினவுகிறார்கள். ‘உண்மையே சொன்னான். அவன் உயர்ந்தவன்; பெரியவன்’ என்று கூறுவர்.

அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)


இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

இக்ரிமா (ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில் (பின்வருமாறு) காணப்படுகிறது: மேற்கண்ட (அல்குர்ஆன்: 34:23) ஆவது வசனத்தின் மூலத்தில் ‘ஃபுஸ்ஸிஅ’ (அச்சம் அகற்றப்படும் போது) என்பதை ‘ஃபுர்ரிஃக’ (அகற்றப்படும் போது) என ஓதினார்கள். ஸுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதுவே எங்களின் ஓதல் முறையாகும்.

அத்தியாயம்: 97

مالك بن أنس الأصبحي

இறப்பு: ஹி-179 (வயது 86)

தரம்: ஹதீஸ்துறையின் முக்கியமான இமாம், மிகப் பலமானவர்.


இயற்பெயர்: மாலிக்.

தந்தை பெயர்: அனஸ் பின் மாலிக்

குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ்

குலம்: இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்ததால் அல்மதனீ என்றும் இவருக்கு சொல்லப்படுகிறது.

பிறப்பு: ஹிஜ்ரீ 92 - 95 க்குள் மதீனாவில் பிறந்தார்.

இறப்பு: ஹிஜ்ரீ 178 அல்லது 179 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதம் ஞாயிற்றுக் கிழமையன்று மரணித்தார். மரணிக்கும் போது இவருடைய வயது 86 ஆகும்.

(93 இல் பிறந்து 179 ல் மரணித்தார் என்பதின்படி இவர் வயது 86. வாகிதீ என்பவர் 90 வயதை அடைந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்)

கால கட்டம்: 7.


வளர்ப்பு: ஸவ்ன், ரிஃபாஹியா ஆகிய ஊர்களில் வளர்ந்தார்.

கல்வி: பத்து வயதை அடைந்திருக்கும் போதே கல்வி கற்க ஆரம்பித்தார். ஹிஜாஸ்வாசிகளில் உள்ள அறிஞர்களில் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார். ஹதீஸ் துறையில் முத்திரை பதித்தவர்களில் இவரும் ஒருவர். சட்டத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள்: இமாம் மாலிக் அவர்கள் அதிகமான விஷயங்களை அறிந்திருந்தமையால் பல ஊர்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. தன்னிடத்தில் உள்ள ஞானமே போதும் என்று கருதினார். பல ஊர்களுக்குச் சென்று இவர் பயிலாவிட்டாலும் மார்க்கச் சட்டங்களைக் கூறுவதில் தலைமைத்துவத்தைப் பெற்றார். இவர் 21 வது வயதை அடைந்த போதே பிறருக்கு தான் படித்ததைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

தாஃபியீன்களில் ஒரு பெரும் கூட்டம் இவருக்கு ஆசிரியராக இருந்தது.

1 . நாஃபிஃ,

2 . ஹிஷாம் பின் உர்வா,

3 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,

4 . அப்துல்லாஹ் பின் தீனார்,

5 . ஸைத் பின் அஸ்லம்,

6 . முஹம்மத் பின் முஸ்லிம்,

7 . அப்துல்லாஹ் பின் அபூபக்ர்,

8 . ஸயீத் பின் அபூஸயீத்

ஆகியோர் இவருடைய முக்கிய ஆசிரியர்கள்.

1 . முஹம்மத் பின் முஸ்லிம்,

2 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,

3 . நாஃபிஃ பின் மாலிக்

4 . யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான்,

ஆகிய இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து கற்றுள்ளார்கள்.

4 . இமாம் அபூஹனீஃபா, ...

5 . ஸுஃப்யான் ஸவ்ரீ,

6 . அல்லைஸ் பின் சஃத்,

7 . ஷுஅபா,

8 . அப்துல் மலிக்,

9 . மஃமர் பின் ராஷித்,

10 . இப்னுல் முபாரக்,

11 . வகீஃ பின் ஜர்ராஹ்

12 . இமாம் ஷாஃபிஈ

ஆகியோர் இவருடைய முக்கிய மாணவர்கள்.

புகாரி மற்றும் முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பு இவர் எழுதிய அல்முஅத்தா என்ற ஹதீஸ்களின் தொகுப்பு நூல் மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. பல அறிஞர்கள் இந்த நூலையே சார்ந்திருந்தார்கள்.

1 . ரிஸாலத்துன் ஃபில் கத்ர்,

2 . ரிசாலத்துன் ஃபின்னஜ்ம்,

3 . ரிசாலத்துன் ஃபில் அக்ளியா,

4 . ரிசாலத்துன் இலா அபீ ஹஸ்ஸான்,

5 . ரிசாலத்துன் இலல் லைஸ்,

6 . ஜுஸ்உன் ஃபித் தஃப்சீர்,

7 . கிதாபுஸ் ஸிர்,

8 . ரிஸாலத்துன் இலர் ரஷீத் ஆகியவற்றைத் தொகுத்துள்ளார்.


بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَلاَ تَنْفَعُ الشَّفَاعَةُ عِنْدَهُ إِلَّا لِمَنْ أَذِنَ لَهُ حَتَّى إِذَا فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ قَالُوا مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا الحَقَّ وَهُوَ العَلِيُّ الكَبِيرُ} [سبأ: 23]، ” وَلَمْ يَقُلْ: مَاذَا خَلَقَ رَبُّكُمْ

وَقَالَ جَلَّ ذِكْرُهُ: {مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ} [البقرة: 255] وَقَالَ مَسْرُوقٌ، عَنْ ابْنِ مَسْعُودٍ: «إِذَا تَكَلَّمَ اللَّهُ بِالوَحْيِ سَمِعَ أَهْلُ السَّمَوَاتِ شَيْئًا، فَإِذَا فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ وَسَكَنَ الصَّوْتُ، عَرَفُوا أَنَّهُ الحَقُّ وَنَادَوْا»: {مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا الحَقَّ} [سبأ: 23] وَيُذْكَرُ عَنْ جَابِرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” يَحْشُرُ اللَّهُ العِبَادَ، فَيُنَادِيهِمْ بِصَوْتٍ يَسْمَعُهُ مَنْ بَعُدَ كَمَا يَسْمَعُهُ مَنْ قَرُبَ: أَنَا المَلِكُ، أَنَا الدَّيَّانُ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

إِذَا قَضَى اللَّهُ الأَمْرَ فِي السَّمَاءِ، ضَرَبَتِ المَلاَئِكَةُ بِأَجْنِحَتِهَا خُضْعَانًا لِقَوْلِهِ، كَأَنَّهُ سِلْسِلَةٌ عَلَى صَفْوَانٍ قَالَ – عَلِيٌّ: وَقَالَ غَيْرُهُ: صَفْوَانٍ يَنْفُذُهُمْ ذَلِكَ – فَإِذَا “: {فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ قَالُوا مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا الحَقَّ وَهُوَ العَلِيُّ الكَبِيرُ} [سبأ: 23]، قَالَ عَلِيٌّ، وَحَدَّثَنَا سُفْيَانُ: حَدَّثَنَا عَمْرٌو، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ بِهَذَا، قَالَ سُفْيَانُ: قَالَ عَمْرٌو: سَمِعْتُ عِكْرِمَةَ: حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، قَالَ عَلِيٌّ: قُلْتُ لِسُفْيَانَ: قَالَ سَمِعْتُ عِكْرِمَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ؟ قَالَ: نَعَمْ، قُلْتُ لِسُفْيَانَ: إِنَّ إِنْسَانًا رَوَى عَنْ عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَرْفَعُهُ: أَنَّهُ قَرَأَ: (فُرِّغَ)، قَالَ سُفْيَانُ: هَكَذَا قَرَأَ عَمْرٌو، فَلاَ أَدْرِي سَمِعَهُ هَكَذَا أَمْ لاَ؟ قَالَ سُفْيَانُ: وَهِيَ قِرَاءَتُنَا


Bukhari-Tamil-7481.
Bukhari-TamilMisc-7481.
Bukhari-Shamila-7481.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.