தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7488

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 34

ஆனால், (நபியே!) அல்லாஹ் உங்களுக்கு அருளியவற்றைத் தன் பேரறிவைக் கொண்டே அருளினான் என்பதற்குத் தானே சான்று வழங்குகின்றான். வானவர்களும் சாட்சி வழங்குபவர்களாக இருக்கின்றார்கள் எனும் (4:166 ஆவது) இறைவசனம்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவற்றிற்கிடையே (இறைவனின்) கட்டளை இறங்கிக் கொண்டிருக்கின்றது (65:12). அதாவது ஏழாவது வானத்திற்கும் ஏழாவது பூமிக்கும் இடையே.

 பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னை நோக்கி, ‘இன்னாரே! நீங்கள் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ‘இறைவா! நான் என்னை உன்னிடம் ஒப்படைக்கிறேன். என் முகத்தை உன்னிடமே திருப்பினேன். என் காரியத்தை உன்னிடமே ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும் தான் (இவற்றை செய்தேன்.) உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடம் இல்லை. நீ அருளிய உன் வேதத்தையும் நீ அனுப்பி வைத்த உன் தூதரையும் நான் நம்பினேன்’ என்று பிரார்த்தியுங்கள்.

ஏனெனில், (இவ்விதம் பிரார்த்தித்து) அன்றைய இரவில் நீங்கள் இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவராவீர்கள். காலையில் (உயிருடன் விழித்து) எழுந்தால் இந்தப் பிரார்த்தனைக்கான நற்பலனைப் பெற்றுக் கொள்வீர்கள்’ என்றார்கள்.131

Book : 97

(புகாரி: 7488)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {أَنْزَلَهُ بِعِلْمِهِ وَالمَلاَئِكَةُ يَشْهَدُونَ} [النساء: 166]

قَالَ مُجَاهِدٌ: {يَتَنَزَّلُ الأَمْرُ بَيْنَهُنَّ} [الطلاق: 12] «بَيْنَ السَّمَاءِ السَّابِعَةِ وَالأَرْضِ السَّابِعَةِ»

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الهَمْدَانِيُّ، عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

يَا فُلاَنُ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَقُلْ: اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ، فَإِنَّكَ إِنْ مُتَّ فِي لَيْلَتِكَ مُتَّ عَلَى الفِطْرَةِ، وَإِنْ أَصْبَحْتَ أَصَبْتَ أَجْرًا





மேலும் பார்க்க : புகாரி-247 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.