தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7553

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 55

மாறாக, இது பெருமை மிக்கக் குர்ஆன் ஆகும். இது பாதுகாக்கப்பெற்ற பலகையில் (பதிவாகி) உள்ளது எனும் (85:21,22ஆகிய) இறைவசனங்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:

தூர் (சினாய்) மலை மீது சத்தியமாக! எழுதப்பெற்ற வேதத்தின் மீதும் சத்தியமாக! (52:1,2).

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: எழுதப்பெற்ற’ என்பதற்கு மூல ஏடான மொத்த ஏட்டில் எழுதப்பெற்ற என்று பொருள்.

50:18 ஆவது வசனத்தின் பொருளாவது: மனிதன் பேசும் எந்தப் பேச்சும் எழுதிப் பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நன்மை தீமை அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன.

(5:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யுஹர்ரிஃபூன’ எனும் சொல்லுக்கு அகற்றுகிறார்கள்’ என்ற பொருள் இருந்தாலும், எந்த இறை வேதத்திலிருந்தும் அதன் சொல்லை எவராலும் அகற்ற முடியாது. மாறாக, அதற்கு உண்மைக்குப் புறம்பான விளக்கமளிக்கிறார்கள் என்றே பொருளாகும்.

(6:156ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) திராசா’ என்பதற்கு ஓதுவது’ என்று பொருள்.

(69:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தஇய’ எனும் சொல்லுக்குப் பாதுகாத்தல்’ என்று பொருள்.

உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காக இந்தக் குர்ஆன் எனக்கு அருளப்பெற்றது எனும் (6:19ஆவது) வசனத்தின் பொருளாவது: மக்காவாசிகளுக்கும், இது யார் யாருக்கு எட்டுகிறதோ அவர்களுக்கும் இந்தக் குர்ஆன் ஓர் எச்சரிக்கையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (படைப்புகளைப்) படைக்கும் பணியை நிறைவு செய்தபோது தன்னிடமுள்ள அரியாசனத்திற்கு மேலே ‘என் கோபத்தை என் கருணை வென்றுவிட்டது’ அல்லது ‘முந்திவிட்டது’ என்றொரு விதியை எழுதினான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 97

(புகாரி: 7553)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {بَلْ هُوَ قُرْآنٌ مَجِيدٌ فِي لَوْحٍ مَحْفُوظٍ} [البروج: 22]

{وَالطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ} [الطور: 1] قَالَ قَتَادَةُ: «مَكْتُوبٌ»، {يَسْطُرُونَ} [القلم: 1]: «يَخُطُّونَ»، {فِي أُمِّ الكِتَابِ} [الزخرف: 4]: «جُمْلَةِ الكِتَابِ وَأَصْلِهِ»، {مَا يَلْفِظُ} [ق: 18]: «مَا يَتَكَلَّمُ مِنْ شَيْءٍ إِلَّا كُتِبَ عَلَيْهِ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «يُكْتَبُ الخَيْرُ وَالشَّرُّ»، {يُحَرِّفُونَ} [النساء: 46]: «يُزِيلُونَ، وَلَيْسَ أَحَدٌ يُزِيلُ لَفْظَ كِتَابٍ مِنْ كُتُبِ اللَّهِ عَزَّ وَجَلَّ، وَلَكِنَّهُمْ يُحَرِّفُونَهُ، يَتَأَوَّلُونَهُ عَلَى غَيْرِ تَأْوِيلِهِ» {دِرَاسَتُهُمْ} [الأنعام: 156]: «تِلاَوَتُهُمْ»، {وَاعِيَةٌ} [الحاقة: 12]: «حَافِظَةٌ»، {وَتَعِيَهَا} [الحاقة: 12]: «تَحْفَظُهَا»، {وَأُوحِيَ إِلَيَّ هَذَا القُرْآنُ لِأُنْذِرَكُمْ بِهِ} [الأنعام: 19]، «يَعْنِي أَهْلَ مَكَّةَ» {وَمَنْ بَلَغَ} [الأنعام: 19]: «هَذَا القُرْآنُ فَهُوَ لَهُ نَذِيرٌ»

وَقَالَ لِي خَلِيفَةُ بْنُ خَيَّاطٍ: حَدَّثَنَا مُعْتَمِرٌ، سَمِعْتُ أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

لَمَّا قَضَى اللَّهُ الخَلْقَ، كَتَبَ كِتَابًا عِنْدَهُ: غَلَبَتْ، أَوْ قَالَ سَبَقَتْ رَحْمَتِي غَضَبِي، فَهُوَ عِنْدَهُ فَوْقَ العَرْشِ





2 comments on Bukhari-7553

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஜஸாகல்லாஹு கைரா. பிழை சரி செய்யப்பட்டு விட்டது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.