பாடம்: 58
நாம் மறுமைநாளில் நீதித் தராசுகளை வைப்போம் எனும் (அல்குர்ஆன்: 21:47) ஆவது இறை வசனமும், மனிதர்களின் செயல்களும் சொற்களும் (அவற்றில்) நிறுக்கப்படும் என்பதும்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
குஸ்தாஸ்’ அல்லது கிஸ்தாஸ்’ எனும் சொல்லுக்கு ரோமானியர் மொழியில் நீதி என்று பொருள்.
(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) கிஸ்த் (நீதி) என்பது முக்ஸித்’, (நீதி செலுத்துபவன்) என்பதன் வேர்ச் சொல்லாகும். ஆனால், காஸித்’ என்பதற்குக் கொடுங்கோலன்’ என்று பொருள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அல்லாஹ்வைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை; நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். (அவை:)
1 . ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்).
2 . ஸுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அத்தியாயம்: 97
(புகாரி: 7563)بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَنَضَعُ المَوَازِينَ القِسْطَ لِيَوْمِ القِيَامَةِ} [الأنبياء: 47]، وَأَنَّ أَعْمَالَ بَنِي آدَمَ وَقَوْلَهُمْ يُوزَنُ وَقَالَ مُجَاهِدٌ: ” القُسْطَاسُ: العَدْلُ بِالرُّومِيَّةِ ” وَيُقَالُ: ” القِسْطُ: مَصْدَرُ المُقْسِطِ وَهُوَ العَادِلُ، وَأَمَّا القَاسِطُ فَهُوَ الجَائِرُ
حَدَّثَنِي أَحْمَدُ بْنُ إِشْكَابَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ بْنِ القَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
كَلِمَتَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ، خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي المِيزَانِ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ العَظِيمِ
Bukhari-Tamil-7563.
Bukhari-TamilMisc-7563.
Bukhari-Shamila-7563.
Bukhari-Alamiah-7008.
Bukhari-JawamiulKalim-7031.
சமீப விமர்சனங்கள்