தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6406

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

(அல்லாஹ்வைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும். (அவை:)

1 . ஸுப்ஹானல்லாஹில் அழீம். (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)

2 . ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி. (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்).

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 80

(புகாரி: 6406)

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي المِيزَانِ، حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ: سُبْحَانَ اللَّهِ العَظِيمِ، سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ


Bukhari-Tamil-6406.
Bukhari-TamilMisc-6406.
Bukhari-Shamila-6406.
Bukhari-Alamiah-5927.
Bukhari-JawamiulKalim-5954.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . ஸுஹைர் பின் ஹர்ப்

3 . முஹம்மத் பின் ஃபுளைல்

4 . உமாரா பின் கஃகாஃ

5 . அபூஸுர்ஆ பின் அம்ர்

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31045-முஹம்மத் பின் ஃபுளைல் பின் ஃகஸ்வான் அவர்கள் பற்றி சிலர் பலமானவர் என்றும், வேறுசிலர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர். இவர் ஷீஆ அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது ஆட்சிக்கு எதிராக காரிஜியாக்கள் புரட்சி செய்த போது, அலீ அவர்களது ஆட்சிக்கு ஆதரவாக ஒரு கூட்டம் செயல்படத் தொடங்கியது. இவர்களே ஷியாக்கள் ஆவர். ஷியா என்ற சொல் (شيعة علي ஷீஅது அலீ) “அலீயை பின்பற்றுவோர்” என்று பொருள்படும் அரபு மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. காலப் போக்கில், அலீ அவர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று விட்டனர். முகம்மது நபி, அலீ, அலீயின் மனைவி ஃபாத்திமா, மகன்கள் ஹஸன், ஹுசைன் ஆகிய ஐவருக்கும் தெய்வத் தன்மை இருப்பதாக ஷியாக்கள் நம்புகின்றனர். இவர்கள் பல பிரிவினராக உள்ளனர். பல விசயங்களில் அஹ்லுஸ் ஸுன்னாவிற்கு-குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவோருக்கு மாறுபடுகின்றனர். அலீ அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நபித்துவம் அவர் சிறு வயதினராக இருந்ததால் முகம்மது நபி அவர்களிடம் வழங்கப்பட்டது என்பதும் ஷியாக்களின் நம்பிக்கையாகும்.கொள்கையுடையவர் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை ஸதூக்-நடுத்தரமானவர்; ஷீஆ அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது ஆட்சிக்கு எதிராக காரிஜியாக்கள் புரட்சி செய்த போது, அலீ அவர்களது ஆட்சிக்கு ஆதரவாக ஒரு கூட்டம் செயல்படத் தொடங்கியது. இவர்களே ஷியாக்கள் ஆவர். ஷியா என்ற சொல் (شيعة علي ஷீஅது அலீ) “அலீயை பின்பற்றுவோர்” என்று பொருள்படும் அரபு மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. காலப் போக்கில், அலீ அவர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று விட்டனர். முகம்மது நபி, அலீ, அலீயின் மனைவி ஃபாத்திமா, மகன்கள் ஹஸன், ஹுசைன் ஆகிய ஐவருக்கும் தெய்வத் தன்மை இருப்பதாக ஷியாக்கள் நம்புகின்றனர். இவர்கள் பல பிரிவினராக உள்ளனர். பல விசயங்களில் அஹ்லுஸ் ஸுன்னாவிற்கு-குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவோருக்கு மாறுபடுகின்றனர். அலீ அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நபித்துவம் அவர் சிறு வயதினராக இருந்ததால் முகம்மது நபி அவர்களிடம் வழங்கப்பட்டது என்பதும் ஷியாக்களின் நம்பிக்கையாகும்.கொள்கையுடையவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/676, தக்ரீபுத் தஹ்தீப்-1/889)

இந்தச் செய்தி இவர் வழியாக மட்டும் வந்துள்ளது என்பதால் இது ஹஸன் அல்லது ஸஹீஹ் எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.


  • இந்தச் செய்தியை தனது அத்துஆ எனும் நூலில் பதிவு செய்துள்ள முஹம்மத் பின் ஃபுளைல் அவர்கள், ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, ஸுப்ஹானல்லாஹில் அழீம் என்றே பதிவு செய்துள்ளார்.
  • இவரிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்களும் இவ்வாறே அறிவித்துள்ளனர்.
  • இவரிடமிருந்து அறிவிக்கும் ஸுஹைர் பின் ஹர்ப் அவர்கள் வழியாக புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்களும், இவரிடமிருந்து அறிவிக்கும் யூஸுஃப் பின் ஈஸா வழியாக திர்மிதீ அவர்களும்
    ஸுப்ஹானல்லாஹில் அழீம், ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்று அறிவித்துள்ளனர்.

இரண்டு வகையாகவும் முஹம்மத் பின் ஃபுளைல் அவர்கள் அறிவித்திருக்கலாம்.


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஹம்மத் பின் ஃபுளைல் —> உமாரா பின் கஃகாஃ —> அபூஸுர்ஆ பின் அம்ர் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அத்துஆ-இப்னு ஃபுளைல்-83 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29413 , 35026 , அஹ்மத்-7167 , புகாரி-6406 , 66827563 , முஸ்லிம்-5224 , இப்னு மாஜா-3806 , திர்மிதீ-3467 , முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-, …


  • அத்துஆ-இப்னு ஃபுளைல்-83.

الدعاء للضبي (ص: 259)
83 – حَدَّثَنَا عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ , ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ , حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

(அல்லாஹ்வைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும். (அவை:)

1 . ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி. (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்).

2 . ஸுப்ஹானல்லாஹில் அழீம். (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.