ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்: 65
ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று கூறுவதன் சிறப்பு.
6405. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி” (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)
அத்தியாயம்: 80
இறப்பு: ஹி-179 (வயது 86)
தரம்: ஹதீஸ்துறையின் முக்கியமான இமாம், மிகப் பலமானவர்.
இயற்பெயர்: மாலிக்.
தந்தை பெயர்: அனஸ் பின் மாலிக்
குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ்
குலம்: இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்ததால் அல்மதனீ என்றும் இவருக்கு சொல்லப்படுகிறது.
பிறப்பு: ஹிஜ்ரீ 92 - 95 க்குள் மதீனாவில் பிறந்தார்.
இறப்பு: ஹிஜ்ரீ 178 அல்லது 179 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதம் ஞாயிற்றுக் கிழமையன்று மரணித்தார். மரணிக்கும் போது இவருடைய வயது 86 ஆகும்.
(93 இல் பிறந்து 179 ல் மரணித்தார் என்பதின்படி இவர் வயது 86. வாகிதீ என்பவர் 90 வயதை அடைந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்)
கால கட்டம்: 7.
வளர்ப்பு: ஸவ்ன், ரிஃபாஹியா ஆகிய ஊர்களில் வளர்ந்தார்.
கல்வி: பத்து வயதை அடைந்திருக்கும் போதே கல்வி கற்க ஆரம்பித்தார். ஹிஜாஸ்வாசிகளில் உள்ள அறிஞர்களில் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார். ஹதீஸ் துறையில் முத்திரை பதித்தவர்களில் இவரும் ஒருவர். சட்டத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
கல்விக்காகப் பயணித்த ஊர்கள்: இமாம் மாலிக் அவர்கள் அதிகமான விஷயங்களை அறிந்திருந்தமையால் பல ஊர்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. தன்னிடத்தில் உள்ள ஞானமே போதும் என்று கருதினார். பல ஊர்களுக்குச் சென்று இவர் பயிலாவிட்டாலும் மார்க்கச் சட்டங்களைக் கூறுவதில் தலைமைத்துவத்தைப் பெற்றார். இவர் 21 வது வயதை அடைந்த போதே பிறருக்கு தான் படித்ததைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.
தாஃபியீன்களில் ஒரு பெரும் கூட்டம் இவருக்கு ஆசிரியராக இருந்தது.
1 . நாஃபிஃ,
2 . ஹிஷாம் பின் உர்வா,
3 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,
4 . அப்துல்லாஹ் பின் தீனார்,
5 . ஸைத் பின் அஸ்லம்,
6 . முஹம்மத் பின் முஸ்லிம்,
7 . அப்துல்லாஹ் பின் அபூபக்ர்,
8 . ஸயீத் பின் அபூஸயீத்
ஆகியோர் இவருடைய முக்கிய ஆசிரியர்கள்.
1 . முஹம்மத் பின் முஸ்லிம்,
2 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,
3 . நாஃபிஃ பின் மாலிக்
4 . யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான்,
ஆகிய இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து கற்றுள்ளார்கள்.
4 . இமாம் அபூஹனீஃபா, ...
5 . ஸுஃப்யான் ஸவ்ரீ,
6 . அல்லைஸ் பின் சஃத்,
7 . ஷுஅபா,
8 . அப்துல் மலிக்,
9 . மஃமர் பின் ராஷித்,
10 . இப்னுல் முபாரக்,
11 . வகீஃ பின் ஜர்ராஹ்
12 . இமாம் ஷாஃபிஈ
ஆகியோர் இவருடைய முக்கிய மாணவர்கள்.
புகாரி மற்றும் முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பு இவர் எழுதிய அல்முஅத்தா என்ற ஹதீஸ்களின் தொகுப்பு நூல் மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. பல அறிஞர்கள் இந்த நூலையே சார்ந்திருந்தார்கள்.
1 . ரிஸாலத்துன் ஃபில் கத்ர்,
2 . ரிசாலத்துன் ஃபின்னஜ்ம்,
3 . ரிசாலத்துன் ஃபில் அக்ளியா,
4 . ரிசாலத்துன் இலா அபீ ஹஸ்ஸான்,
5 . ரிசாலத்துன் இலல் லைஸ்,
6 . ஜுஸ்உன் ஃபித் தஃப்சீர்,
7 . கிதாபுஸ் ஸிர்,
8 . ரிஸாலத்துன் இலர் ரஷீத் ஆகியவற்றைத் தொகுத்துள்ளார்.
https://tamil.quranandhadis.com/bukhari-6405/
بَابُ فَضْلِ التَّسْبِيحِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، حُطَّتْ خَطَايَاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ البَحْرِ
Bukhari-Tamil-6405. Bukhari-TamilMisc-6405. Bukhari-Shamila-6405. Bukhari-Alamiah-. Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 இமாம்
2 . அப்துல்லாஹ் பின் மஸ்லமா
3 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93 இறப்பு ஹிஜ்ரி 179 வயது: 86 முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர். இமாம்
4 . ஸுமைய் (அபூபக்ர்-ரலி-அவர்களின் முன்னாள் அடிமை)
5 . அபூஸாலிஹ்-தக்வான்-ஸம்மான்
6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி)
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்ற திக்ர்.
நேரம் குறிப்பிடவில்லை.
சிறப்பு: கடலின் நுரை போன்ற அளவுள்ள பாவம் மன்னிக்கப்படும்.
மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93 இறப்பு ஹிஜ்ரி 179 வயது: 86 முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர். இமாம் —> ஸுமைய் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி)
பார்க்க: மாலிக்-561 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- 29417, அஹ்மத்-8009 , 10683 , புகாரி-6405 , இப்னு மாஜா-3812 , திர்மிதீ-3466 , 3468 , குப்ரா நஸாயீ-10593 , இப்னு ஹிப்பான்-829 , அத்துஆ-தப்ரானீ- 1683, அமாலீ–676, அல்அஸ்மா வஸ்ஸிஃபாத்-189, அத்தஃவாதுல் கபீர்-140, ஷுஅபுல் ஈமான்- 591,
ஆய்வுச் செய்திகள்:
1 . ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்ற திக்ர்.
காலை, மாலை கூறுதல்.
சிறப்பு: அதிக நன்மை
ஸுஹைல் பின் அபூஸாலிஹ், அபூஅல்கமா ஆகியோரின் அறிவிப்புகள்:
1 . இஸ்மாயீல் பின் ஸகரிய்யா, ரவ்ஹ் பின் காஸிம் —> ஸுஹைல் பின் அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி)
பார்க்க: அஹ்மத்-8835 , முஃஜம் இப்னுல் அஃராபீ-1776,
முஃஜம் இப்னுல் அஃராபீ-1776.
معجم ابن الأعرابي (2/ 857)
1776 – نا عَبَّاسٌ، نا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ، نا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، نا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ أَبِي سُهَيْلٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَالَ حِينَ يُصْبِحُ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ، وَإِذَا أَمْسَى كَذَلِكَ لَمْ يُوَافِ أَحَدًا مِنَ الْخَلَائِقِ بِمِثْلِ مَا وَافَى
…
2 . அப்துல்அஸீஸ் பின் முக்தார் —> ஸுஹைல் —> ஸுமைய் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி)
பார்க்க: முஸ்லிம்-5222 , திர்மிதீ-3469 , குப்ரா நஸாயீ-10327 ,
3 . அப்துல்அஸீஸ் பின் அபூஹாஸிம் —> ஸுஹைல் —> ஸுமைய் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி)
பார்க்க: அமலுல்யவ்மி வல்லைலா-இப்னுஸ் ஸன்னீ-74,
4 . ஹம்மாத் பின் ஸலமா —> ஸுஹைல் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி)
காலை, மாலை கூறுதல்.
சிறப்பு மாற்றம்-பாவமன்னிப்பு
பார்க்க: இப்னு ஹிப்பான்-859 ,
2 . ஸுப்ஹானல்லாஹில் அளீம், வபிஹம்திஹி என்ற திக்ர்.
காலை, மாலை கூறுதல்.
சிறப்பு: அதிக நன்மை
5 . ரவ்ஹ் பின் காஸிம் —> ஸுஹைல் —> ஸுமைய் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி)
பார்க்க: அபூதாவூத்-5091 , இப்னு ஹிப்பான்-860 , அத்துஆ-தப்ரானீ- 326,
6 . லைஸ் —> ஸுஹ்ரா பின் மஃபத் —> அபூஅல்கமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி)
ஃபஜ்ர், அஸருக்கு பின் கூறுதல்.
சிறப்பு மாற்றம்-பாவமன்னிப்பு
பார்க்க: ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-3934 ,
3 . ஸுப்ஹானல்லாஹி ரப்பியல் அளீம், வபிஹம்திஹி என்ற திக்ர்.
காலை, மாலை கூறுதல்.
சிறப்பு: அதிக நன்மை
7 . ரவ்ஹ் பின் காஸிம் —> ஸுஹைல் —> ஸுமைய் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-2382 ,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-6406 , 3293 , இப்னு ஹிப்பான்-5528 ,
Favorite
புகாரீ இமாம்
محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبه الجعفي البخاري
இறப்பு: ஹிஜ்ரி 256, ஸமர்கந்த்
தரம்: மிகப் பலமானவர், ஹாஃபிழ்
விபரங்கள்
இயற்பெயர்: முஹம்மத் பின் இஸ்மாயீல் பின் இப்ராஹீம் பின் அல்முகீரா பின் பர்திஸ்பா
தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்
வம்சம்: அல்ஜுஃஃபீ
புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ்
ஊர் பெயர்: புகாரா
பயணித்த ஊர்கள்: புகாரா, பஸரா, ஹிஜாஸ், எகிப்து, பஃக், ஸமர்கந்த்
பிறப்பு: ஹிஜ்ரி 194, புகாரா
இறப்பு: ஹிஜ்ரி 256, ஸமர்கந்த்
கால கட்டம்: பிந்தைய காலத்தவர்
வாழ்க்கைக் குறிப்பு
புகாரீ இமாம் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 194 ஆம் ஆண்டு புகாராவில் பிறந்தார்கள். அவர்கள் ஹதீஸ் கலையில் மிகப் பலமானவர் மற்றும் ஹாஃபிழ் ஆவார். ஹதீஸ் கலையில் உலக இமாமாகத் திகழ்ந்தார்கள்.
அவர்கள் ஹதீஸ்களைத் திரட்டுவதற்காக முஸ்லிம் உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்தார்கள். அவர்கள் தொகுத்த ஸஹீஹ் புகாரீ, குர்ஆனுக்குப் பிறகு மிகவும் நம்பகமான ஹதீஸ் நூலாகக் கருதப்படுகிறது. அவர்கள் ஹிஜ்ரி 256 ஆம் ஆண்டு ஸமர்கந்தில் மரணமடைந்தார்கள்.
ஆசிரியர்கள், மாணவர்கள்
யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): உபைதுல்லாஹ் பின் மூஸா பின் அபில்முக்தார், முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல்அன்ஸாரீ, ளஹ்ஹாக் பின் மக்லத் அபூ ஆஸிம் அன்னபீல், மக்கீ பின் இப்ராஹீம் பின் பஷாயர், அலீ பின் அல்மதனீ, யஹ்யா பின் மஈன், இஸ்ஹாக் பின் ரஹ்வாயா, ஸயீத் பின் அபீ மர்யம், அஃப்பான் பின் முஸ்லிம், மாலிக் இமாம், குதைபா பின் ஸயீத் பின் ஜமீல், உஸ்மான் பின் முஹம்மத் (அபூ ஷைபா)
இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அபூ தாவூத், இமாம் திர்மிதீ, இப்ராஹீம் பின் இஸ்ஹாக் அல்ஹரவீ, முஹம்மத் பின் அஹ்மத் பின் தூலாப், மன்சூர் பின் முஹம்மத் பஸ்தூரீ
வேறு பெயர்கள்: முஹம்மத் பின் இஸ்மாயீல், இமாம் புகாரீ
ஆதாரம்: muslimscholars.info (30001) · Should verify
அப்துல்லாஹ் பின் மஸ்லமா-அல்கஅனபீ (ரஹ்) – 'Abdullah bin Muslima bin Qa'nab
இறப்பு: ஹிஜ்ரி 221-ல், மக்கா
தரம்: பலமானவர்
விபரங்கள்
இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் மஸ்லமா பின் கஅனப்
தந்தை பெயர்: மஸ்லமா பின் கஅனப் அல்ஹாரிஸீ
வம்சம்: அல்ஹாரிஸீ
புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான்
ஊர் பெயர்: மதீனா
பயணித்த ஊர்கள்: மதீனா, பஸரா, மக்கா
பிறப்பு: ஹிஜ்ரி 130-க்குப் பிறகு, மதீனா
இறப்பு: ஹிஜ்ரி 221-ல், மக்கா
கால கட்டம்: தபஉத் தாபிஈ
வாழ்க்கைக் குறிப்பு
அப்துல்லாஹ் பின் மஸ்லமா அல்கஅனபீ ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 130-க்குப் பிறகு மதீனாவில் பிறந்தார். அவர் மதீனா, பஸரா, மக்கா ஆகிய நகரங்களில் வசித்தார். அவர் ஹதீஸ் கலையில் பலமானவர் ஆவார்.
மாலிக் இமாமின் 'முவத்தா' நூலை அறிவித்தவர்களில் இவரை விட சிறந்தவர் இல்லை என்று யஹ்யா பின் மயீன் மற்றும் அலீ பின் அல்மதீனீ போன்றோர் கூறினர். அவர் ஹிஜ்ரி 221-ல் மக்காவில் மரணமடைந்தார்.
ஆசிரியர்கள், மாணவர்கள்
யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): மஸ்லமா பின் கஅனப் அல்ஹாரிஸீ, அஃப்லஹ் பின் ஹுமைத் பின் நாஃபிஃ, ஸலமா பின் வர்தான் அல்லைஸீ, மாலிக் இமாம், ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், அல்லைஸ் பின் ஸஅத், தாவூத் பின் கைஸ் அல்ஃபர்ரா, ஸுலைமான் பின் பிலால் அத்தைமீ, ஸைத் பின் அஸ்லம், யஸீத் பின் இப்ராஹீம் அத்தஸ்தரீ, நாஃபிஃ பின் அப்துர்ரஹ்மான், இப்ராஹீம் பின் ஸஅத் பின் இப்ராஹீம்
இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): புகாரி இமாம், முஸ்லிம் இமாம், அபூதாவூத், திர்மிதீ இமாம், அப்து பின் ஹுமைத் பின் நஸ்ர், அம்ர் பின் மன்சூர் அன்நஸாயீ, மூஸா பின் ஹிஸாம், ஹிலால் பின் அல்அலா பின் ஹிலால் பின் உமர், முஹம்மத் பின் ஸியாத் அல்யஷ்கரீ, முஹம்மத் பின் அப்துர்ரஹீம் பின் அபூஸுஹைர், அஹ்மத் பின் ஸினான் பின் அஸத், அபூ ஸுர்ஆ அர்ராஸீ
வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்லமா அல்கஅனபீ, அப்துல்லாஹ் அல்கஅனபீ, அப்துல்லாஹ் பின் மஸ்லமா பின் கஅனப்
ஆதாரம்: muslimscholars.info (20164) · Should verify
மாலிக் இமாம்
مالك بن أنس الأصبحي
இறப்பு: ஹி-179 (வயது 86)
தரம்: ஹதீஸ்துறையின் முக்கியமான இமாம், மிகப் பலமானவர்.
இயற்பெயர்: மாலிக்.
தந்தை பெயர்: அனஸ் பின் மாலிக்
குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ்
குலம்: இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்ததால் அல்மதனீ என்றும் இவருக்கு சொல்லப்படுகிறது.
பிறப்பு: ஹிஜ்ரீ 92 - 95 க்குள் மதீனாவில் பிறந்தார்.
இறப்பு: ஹிஜ்ரீ 178 அல்லது 179 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதம் ஞாயிற்றுக் கிழமையன்று மரணித்தார். மரணிக்கும் போது இவருடைய வயது 86 ஆகும்.
(93 இல் பிறந்து 179 ல் மரணித்தார் என்பதின்படி இவர் வயது 86. வாகிதீ என்பவர் 90 வயதை அடைந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்)
கால கட்டம்: 7.
வளர்ப்பு: ஸவ்ன், ரிஃபாஹியா ஆகிய ஊர்களில் வளர்ந்தார்.
கல்வி: பத்து வயதை அடைந்திருக்கும் போதே கல்வி கற்க ஆரம்பித்தார். ஹிஜாஸ்வாசிகளில் உள்ள அறிஞர்களில் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார். ஹதீஸ் துறையில் முத்திரை பதித்தவர்களில் இவரும் ஒருவர். சட்டத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
கல்விக்காகப் பயணித்த ஊர்கள்: இமாம் மாலிக் அவர்கள் அதிகமான விஷயங்களை அறிந்திருந்தமையால் பல ஊர்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. தன்னிடத்தில் உள்ள ஞானமே போதும் என்று கருதினார். பல ஊர்களுக்குச் சென்று இவர் பயிலாவிட்டாலும் மார்க்கச் சட்டங்களைக் கூறுவதில் தலைமைத்துவத்தைப் பெற்றார். இவர் 21 வது வயதை அடைந்த போதே பிறருக்கு தான் படித்ததைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.
தாஃபியீன்களில் ஒரு பெரும் கூட்டம் இவருக்கு ஆசிரியராக இருந்தது.
1 . நாஃபிஃ,
2 . ஹிஷாம் பின் உர்வா,
3 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,
4 . அப்துல்லாஹ் பின் தீனார்,
5 . ஸைத் பின் அஸ்லம்,
6 . முஹம்மத் பின் முஸ்லிம்,
7 . அப்துல்லாஹ் பின் அபூபக்ர்,
8 . ஸயீத் பின் அபூஸயீத்
ஆகியோர் இவருடைய முக்கிய ஆசிரியர்கள்.
1 . முஹம்மத் பின் முஸ்லிம்,
2 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,
3 . நாஃபிஃ பின் மாலிக்
4 . யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான்,
ஆகிய இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து கற்றுள்ளார்கள்.
4 . இமாம் அபூஹனீஃபா, ...
5 . ஸுஃப்யான் ஸவ்ரீ,
6 . அல்லைஸ் பின் சஃத்,
7 . ஷுஅபா,
8 . அப்துல் மலிக்,
9 . மஃமர் பின் ராஷித்,
10 . இப்னுல் முபாரக்,
11 . வகீஃ பின் ஜர்ராஹ்
12 . இமாம் ஷாஃபிஈ
ஆகியோர் இவருடைய முக்கிய மாணவர்கள்.
புகாரி மற்றும் முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பு இவர் எழுதிய அல்முஅத்தா என்ற ஹதீஸ்களின் தொகுப்பு நூல் மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. பல அறிஞர்கள் இந்த நூலையே சார்ந்திருந்தார்கள்.
1 . ரிஸாலத்துன் ஃபில் கத்ர்,
2 . ரிசாலத்துன் ஃபின்னஜ்ம்,
3 . ரிசாலத்துன் ஃபில் அக்ளியா,
4 . ரிசாலத்துன் இலா அபீ ஹஸ்ஸான்,
5 . ரிசாலத்துன் இலல் லைஸ்,
6 . ஜுஸ்உன் ஃபித் தஃப்சீர்,
7 . கிதாபுஸ் ஸிர்,
8 . ரிஸாலத்துன் இலர் ரஷீத் ஆகியவற்றைத் தொகுத்துள்ளார்.
ஸுமைய் (அபூபக்ர்-ரலி-அவர்களின் முன்னாள் அடிமை)
இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.
அபூஸாலிஹ்-தக்வான்-ஸம்மான்
ذكوان أبو صالح السمان الزيات
இறப்பு: ஹிஜ்ரி 101, மதீனா
தரம்: மிகப் பலமானவர்
விபரங்கள்
இயற்பெயர்: தக்வான்
வம்சம்: மவ்லா ஜுவைரிய்யா பின்த் அல்அஹ்மஸ்
புனைப்பெயர்: அபூஸாலிஹ், அபூஸுஹைல்
ஊர் பெயர்: மதீனா
பயணித்த ஊர்கள்: மதீனா, கூஃபா
இறப்பு: ஹிஜ்ரி 101, மதீனா
கால கட்டம்: தாபிஈ
வாழ்க்கைக் குறிப்பு
அபூஸாலிஹ் தக்வான் அஸ்ஸம்மான் அஸ்ஸியாத் ரஹ் அவர்கள் ஜுவைரிய்யா பின்த் அல்அஹ்மஸ் அவர்களின் மவ்லா ஆவார். இவர் கூஃபாவிற்கு நெய் மற்றும் எண்ணெயை கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தார். இவர் உஸ்மான் ரலி அவர்களின் காலத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்தார்.
இவர் ஹிஜ்ரி 101 ஆம் ஆண்டு மதீனாவில் மரணமடைந்தார். இவர் மிகப் பலமானவர் ஆவார்.
ஆசிரியர்கள், மாணவர்கள்
யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அபூஹுரைரா, அபூதர்தா, அபூஸயீத் அல்குத்ரீ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், இப்னு உமர், இப்னு அப்பாஸ், முஆவியா பின் அபூஸுஃப்யான், ஆயிஷா பின்த் அபூபக்ர், உம்மு ஹபீபா பின்த் அபூஸுஃப்யான், உம்மு ஸலமா, அகீல் பின் அபூதாலிப், ஸஃத் பின் அபூவக்காஸ்
இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸுஹைல் பின் அபூஸாலிஹ், ஸாலிஹ் பின் அபூஸாலிஹ், அப்துல்லாஹ் பின் அபூஸாலிஹ் அஸ்ஸம்மான், அதா பின் அபூ ரபாஹ், அப்துல்லாஹ் பின் தீனார், ரஜா பின் ஹய்வா, ஸைத் பின் அஸ்லம், ஸுலைமான் அல்அஃமஷ், அபூஹாஸிம் ஸல்மா பின் தீனார், ஸமீ மவ்லா அபூபக்ர் பின் அப்துர்ரஹ்மான், அல்கம் பின் உதைபா, ஆஸிம் பின் அபூ அன்நஜூத்
வேறு பெயர்கள்: அபூஸாலிஹ் அஸ்ஸம்மான், தக்வான், அபூஸாலிஹ்
ஆதாரம்: muslimscholars.info (11161) · Should verify
இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா
தரம்: நபித்தோழர் (ஸஹாபி)
விபரங்கள்
இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்
தந்தை பெயர்: ஸக்ர்
வம்சம்: தவ்ஸீ
புனைப்பெயர்: அபூ ஹுரைரா
ஊர் பெயர்: யமன்
பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்
பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்
இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா
கால கட்டம்: நபித்தோழர்
வாழ்க்கைக் குறிப்பு
அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.
நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.
ஆசிரியர்கள், மாணவர்கள்
யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்
இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்
வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்
ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify
சமீப விமர்சனங்கள்