தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6404

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

 அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஹதீஸ் எண்-6403 இல் வரும்) “லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்” என்பதை பத்து முறை ஓதுகிறவர், இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உமர் பின் அபூஸாயிதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இதே நபிமொழி அப்துல்லாஹ் பின் அபுஸ்ஸஃபர் —> ஷஅபீ —> ரபீஉ பின் குஸைம் என்ற அறிவிப்பாளர்தொடரிலும் எனக்கு கிடைத்தது.

நான் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ரபீஉ பின் குஸைம் (ரஹ்) அவர்களிடம், ‘இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், ‘அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்களிடமிருந்து (இதைச் செவியுற்றேன்)’ என்றார்கள். எனவே, நான் அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்களிடம் சென்று, ‘இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், ‘இப்னு அபூலைலா (ரஹ்) அவர்களிடமிருந்து (செவியுற்றேன்)’ என்றார்கள். எனவே, நான் இப்னு அபூலைலா (ரஹ்) அவர்களிடம் சென்று, ‘இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்களா?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், ‘இதை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி) அவர்களிடமிருந்து (செவியுற்றேன்)’ என்றார்கள்.


இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த நபிமொழி வந்துள்ளது.

அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூமுஹம்மத் அவர்களின் அறிவிப்பில், ‘இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததிகளில் ஓர் அடிமையை விடுதலை செய்தவரைப் போன்றவராவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என வந்துள்ளது.


அபூஅப்துல்லாஹ்-புகாரி இமாம் கூறுகிறார்:

இவற்றில் அப்துல்மலிக் பின் அம்ர் அவர்களின் சொல்லே (அதாவது அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரே) சரியானதாகும்.


அத்தியாயம்: 80

(புகாரி: 6404)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ المَلِكِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا عُمَرُ بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ

«مَنْ قَالَ عَشْرًا، كَانَ كَمَنْ أَعْتَقَ رَقَبَةً مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ»

قَالَ عُمَرُ بْنُ أَبِي زَائِدَةَ: وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي السَّفَرِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ رَبِيعِ بْنِ خُثَيْمٍ، مِثْلَهُ.
فَقُلْتُ لِلرَّبِيعِ مِمَّنْ سَمِعْتَهُ؟ فَقَالَ: مِنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، فَأَتَيْتُ عَمْرَو بْنَ مَيْمُونٍ، فَقُلْتُ: مِمَّنْ سَمِعْتَهُ؟ فَقَالَ: مِنَ ابْنِ أَبِي لَيْلَى، فَأَتَيْتُ ابْنَ أَبِي لَيْلَى، فَقُلْتُ: مِمَّنْ سَمِعْتَهُ؟ فَقَالَ: مِنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، يُحَدِّثَهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ: عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، حَدَّثَنِي عَمْرُو بْنُ مَيْمُونٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِي أَيُّوبَ قَوْلَهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
وَقَالَ مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ دَاوُدَ، عَنْ عَامِرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِي أَيُّوبَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
وَقَالَ إِسْمَاعِيلُ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الرَّبِيعِ، قَوْلَهُ.
وَقَالَ آدَمُ: حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ المَلِكِ بْنُ مَيْسَرَةَ، سَمِعْتُ هِلاَلَ بْنَ يَسَافٍ، عَنِ الرَّبِيعِ بْنِ خُثَيْمٍ، وَعَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ ابْنِ مَسْعُودٍ، قَوْلَهُ.
وَقَالَ الأَعْمَشُ، وَحُصَيْنٌ: عَنْ هِلاَلٍ، عَنِ الرَّبِيعِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَوْلَهُ.
وَرَوَاهُ أَبُو مُحَمَّدٍ الحَضْرَمِيُّ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ كَمَنْ أَعْتَقَ رَقَبَةً مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ»
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «وَالصَّحِيحُ قَوْلُ عَبْدِ المَلِكِ بْنِ عَمْرٍو»


Bukhari-Tamil-6404.
Bukhari-TamilMisc-6404.
Bukhari-Shamila-6404.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


 

 


فتح الباري لابن حجر (11/ 205 ط السلفية):
… وَاخْتِلَافُ هَذِهِ الرِّوَايَاتِ فِي عَدَدِ الرِّقَابِ مَعَ اتِّحَادِ الْمَخْرَجِ يَقْتَضِي التَّرْجِيحَ بَيْنَهَا ‌فَالْأَكْثَرُ ‌عَلَى ‌ذِكْرِ ‌أَرْبَعَةٍ وَيُجْمَعُ بَيْنَهُ وَبَيْنَ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ بِذِكْرِ عَشَرَةٍ لِقَوْلِهَا مِائَةٌ فَيَكُونُ مُقَابِلُ كُلِّ عَشْرِ مَرَّاتٍ رَقَبَةً مِنْ قَبْلِ الْمُضَاعَفَةِ فَيَكُونُ لِكُلِّ مَرَّةٍ بِالْمُضَاعَفَةِ رَقَبَةٌ وَهِيَ مَعَ ذَلِكَ لِمُطْلَقِ الرِّقَابِ وَمَعَ وَصْفِ كَوْنِ الرَّقَبَةِ مِنْ بَنِي إِسْمَاعِيلَ يَكُونُ مُقَابِلُ الْعَشَرَةِ مِنْ غَيْرِهِمْ أَرْبَعَةً مِنْهُمْ لِأَنَّهُمْ أَشْرَفُ مِنْ غَيْرِهِمْ مِنَ الْعَرَبِ فَضْلًا عَنِ الْعَجَمِ، وَأَمَّا ذِكْرُ رَقَبَةِ بِالْإِفْرَادِ فِي حَدِيثِ أَبِي أَيُّوبَ فَشَاذٌّ وَالْمَحْفُوظُ أَرْبَعَةٌ كَمَا بَيَّنْتُهُ.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-3553,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.