தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-8

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அத்தியாயம்: 2

ஈமான் எனும் இறைநம்பிக்கை.

பாடம்: 1

“இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து தூண்கள்மீது எழுப்பப்பட்டுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.

இறைநம்பிக்கை (ஈமான்) என்பது, சொல்லும் செயலும் இணைந்ததே ஆகும். அது கூடலாம்; குறையலாம்.

(இதற்கான ஆதாரங்கள் வருமாறு:) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:

(1) அவர்கள், தமது நம்பிக்கையுடன் (மேலும்) நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்வதற்காக அவன்தான் இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களில் அமைதியை அருளினான். (அல்குர்ஆன்: 48:4)

(2) நாம் அவர்களுக்கு (அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும்) நல்வழியை அதிகமாக்கினோம்.(அல்குர்ஆன்: 18:13)

(3) (ஈமான் மூலம்) நல்வழியைக் கடைப்பிடிப்போருக்கு நல்வழியை (மேலும்) அல்லாஹ் அதிகமாக்குகின்றனான். (அல்குர்ஆன்: 19:76)

(4) யார் (ஈமான் மூலம்) நேர்வழியைக் கடைப்பிடிக்கின்றாரோ அவருக்கு (அல்லாஹ் மேலும்) நல்வழியை அதிகமாக்குகின்றான்; அவருக்கு இறையச்சத்தையும் அவன் வழங்குகின்றான். (அல்குர்ஆன்: 47:17)

(5) இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களுக்கு அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாவதற்காக (நரகத்தின் காவலர்களான வானவர்களின் எண்ணிக்கையை நாம் ஒரு சோதனையாக ஆக்கினோம்). (அல்குர்ஆன்: 74:31)

(6) (இறைவனிடமிருந்து) ஓர் அத்தியாயம் அருளப்பெற்றால், “இது உங்களில் யாருக்கு இறைநம்பிக்கையை அதிகமாக்கியது?” என்று (கேலியாகக்) கேட்போரும் (நயவஞ்சகர்களான) அவர்களில் உள்ளனர். யார் இறைநம்பிக்கை கொண்டார்களோ அவர்களுக்கு அது இறைநம்பிக்கையை அதிகமாக்கவே செய்யும். (அல்குர்ஆன்: 9:124)

புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்:

(7) அவர்களிடம் மக்கள் சிலர், “உங்களுக்கெதிராக மனிதர்கள் ஒன்றுதிரண்டு விட்டனர்; எனவே, அவர்களை அஞ்சுங்கள்” என்று கூறினர். ஆனால், இது அவர்களுக்கு இறைநம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. (அல்குர்ஆன்: 3:173)

(8) இந்நிகழ்ச்சி இறைநம்பிக்கையையும் கீழ்ப்படிதலையும்தான் அவர்களுக்கு அதிமாக்கியது.  (அல்குர்ஆன்: 33:22).

அல்லாஹ்வுக்காக (ஒருவரை) நேசிப்பதும் அல்லாஹ்வுக்காக (ஒருவரை) கோபிப்பதும் இறைநம்பிக்கையில் அடங்கும் (என்கிறது ஒரு நபிமொழி).

உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்கள் (தம் ஆளுநர்) அதீ பின் அதீ (ரஹ்) அவர்களுக்கு (பின்வருமாறு கடிதம்) எழுதினார்கள்:

இறைநம்பிக்கைக்குச் சில கட்டாயக் கடமைகள், கொள்கைகள், விலக்குகள், விரும்பத் தக்க (நபி)வழிகள் ஆகியவை உள்ளன. எனவே, யார் அவற்றை முழுமையாக நிறைவேற்றுகிறாரோ அவர் (தமது) இறைநம்பிக்கையை முழுமைப் படுத்திக்கொண்டவர் ஆவார். யார் அவற்றை முழுமையாக நிறைவேற்ற வில்லையோ அவர் (தமது) இறை நம்பிக்கையை முழுமைப்படுத்திக் கொள்ளவில்லை.

நான் (இன்னும் சில காலம் இவ்வுலகில்) வாழ்வானேயானால், நீங்கள் (அதன்படி) செயல்படுவதற்காக அவற்றை உங்களுக்கு விளக்குவேன். (ஒரு வேளை) நான் அதற்குள் இறந்துவிட்டால், (காலமெல்லாம்) நான் உங்களுடனேயே இருக்க வேண்டுமென்ற பேராசை பிடித்தவன் அல்லன்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள் (என அல்லாஹ் கூறுகின்றான்): …எனினும், (எனது நம்பிக்கை அதிகமாகி) எனது உள்ளம் நிம்மதி அடைவதற்காகவே (இறந்தவர்களை உயிர்ப்பித்துக்காட்டுமாறு உன்னிடம் வேண்டினேன்). (அல்குர்ஆன்: 2:260)

(அஸ்வத் பின் ஹிலால் (ரலி) அவர்களிடம்) முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், “எம்முடன் நீங்களும் அமருங்கள்; நாம் சிறிது நேரம் (இறையை நினைவு கூர்ந்து) இறைநம்பிக்கை(யை அதிமாக்கிக்) கொள்வோம்” என்று சொன்னார்கள்.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், “மன உறுதிதான் முழு இறைநம்பிக்கை ஆகும்” என்று கூறினார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உள்ளத்தில் (இது தவறாக இருக்குமோ என்ற) உறுத்தலைக்கூட கைவிடாத வரை இறையச்சத்தின் உண்மையை ஓர் அடியார் எட்ட முடியாது.

“எந்த மார்க்கத்தை அவன் நூஹுக்கு வகுத்தளித்திருந்தானோ அதே மார்க்கத் தைத்தான் உங்களுக்கும் அவன் நிர்ணயித்திருக்கின்றான்” (அல்குர்ஆன்: 42:13) எனும் வசனத்திற்கு விளக்கமளிக்கையில் முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

“முஹம்மதே! உமக்கும் (நூஹ் நபியாகிய) அவருக்கும் நாம் ஒரே மார்க்கத்தையே அறிவுறுத்தியிருக்கிறோம்” என இறைவன் நபி (ஸல்) அவர்களிடம் கூறினான்.

“உங்களில் ஒவ்வொரு வ(குப்பா)ருக்கும் ஒரு ‘ஷிர்அத்’ (ஷரீஅத்)தையும் ஒரு ‘மின்ஹாஜை’யும் நாமே ஏற்படுத்தினோம்” (அல்குர்ஆன்: 5:48) எனும் வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘வழியையும் நடைமுறையையும்’ என்று விளக்கமளித்தார்கள்.

பாடம்: 2

பிரார்த்தனை (துஆ) என்பது இறைநம்பிக்கையே (ஈமான்) ஆகும்.

ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே! மக்களிடம்) கூறுக: உங்களது ‘துஆ’ (பிரார்த்தனை மட்டும்) இல்லாதிருந்தால், என் இறைவன் உங்களை(ச் சற்றும்) பொருட்படுத்தியிருக்கமாட்டான்.  (அல்குர்ஆன்: 25:77) .

(பொதுவாக) அகராதியில் ‘துஆ’ எனும் சொல்லுக்கு ‘இறைநம்பிக்கை’ (ஈமான்) என்பதே பொருள்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் ஐந்து தூண்கள்மீது எழுப்பப்பட்டுள்ளது.

1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழிவது.
2. தொழுகையைக் கடைப்பிடிப்பது.
3. (கடமையானோர்) ஸகாத் (கட்டாய தர்மம்) வழங்குவது.
4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது.
5. ரமளானில் நோன்பு நோற்பது.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம்: 2

(புகாரி: 8)

2 – كِتَابُ الإِيمَانِ

بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ»

وَهُوَ قَوْلٌ وَفِعْلٌ، وَيَزِيدُ وَيَنْقُصُ،

قَالَ اللَّهُ تَعَالَى {لِيَزْدَادُوا إِيمَانًا مَعَ إِيمَانِهِمْ} [الفتح: 4]
{وَزِدْنَاهُمْ هُدًى} [الكهف: 13]
{وَيَزِيدُ اللَّهُ الَّذِينَ اهْتَدَوْا هُدًى} [مريم: 76]
{وَالَّذِينَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًى وَآتَاهُمْ تَقْوَاهُمْ} [محمد: 17]
وَقَوْلُهُ: {وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَانًا} [المدثر: 31]
وَقَوْلُهُ: {أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا
فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا} [التوبة: 124]
وَقَوْلُهُ جَلَّ ذِكْرُهُ: {فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا} [آل عمران: 173]
وَقَوْلُهُ تَعَالَى: {وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا} [الأحزاب: 22]

وَالحُبُّ فِي اللَّهِ وَالبُغْضُ فِي اللَّهِ مِنَ الإِيمَانِ ”

وَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ العَزِيزِ إِلَى عَدِيِّ بْنِ عَدِيٍّ: «إِنَّ لِلْإِيمَانِ فَرَائِضَ، وَشَرَائِعَ، وَحُدُودًا، وَسُنَنًا، فَمَنِ اسْتَكْمَلَهَا اسْتَكْمَلَ الإِيمَانَ، وَمَنْ لَمْ يَسْتَكْمِلْهَا لَمْ يَسْتَكْمِلِ الإِيمَانَ، فَإِنْ أَعِشْ فَسَأُبَيِّنُهَا لَكُمْ حَتَّى تَعْمَلُوا بِهَا، وَإِنْ أَمُتْ فَمَا أَنَا عَلَى صُحْبَتِكُمْ بِحَرِيصٍ»

وَقَالَ إِبْرَاهِيمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي»

وَقَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ: «اجْلِسْ بِنَا نُؤْمِنْ سَاعَةً»

وَقَالَ ابْنُ مَسْعُودٍ: «اليَقِينُ الإِيمَانُ كُلُّهُ»

وَقَالَ ابْنُ عُمَرَ: «لاَ يَبْلُغُ العَبْدُ حَقِيقَةَ التَّقْوَى حَتَّى يَدَعَ مَا حَاكَ فِي الصَّدْرِ»

وَقَالَ مُجَاهِدٌ: «شَرَعَ لَكُمْ مِنَ الدِّينِ أَوْصَيْنَاكَ يَا مُحَمَّدُ وَإِيَّاهُ دِينًا وَاحِدًا»

وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «شِرْعَةً وَمِنْهَاجًا» سَبِيلًا وَسُنَّةً

باب دُعَاؤُكُمْ إِيمَانُكُمْ لِقَوْلِهِ عَزَّ وَجَلَّ: {قُلْ مَا يَعْبَأُ بِكُمْ رَبِّي لَوْلاَ دُعَاؤُكُمْ} [الفرقان: 77]

وَمَعْنَى الدُّعَاءِ فِي اللُّغَةِ الإِيمَانُ

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ»


Bukhari-Tamil-8.
Bukhari-TamilMisc-8.
Bukhari-Shamila-8.
Bukhari-Alamiah-7.
Bukhari-JawamiulKalim-7.




1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இக்ரிமா பின் காலித் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: புகாரி-8 , முஸ்லிம்-22 , திர்மிதீ-2609 , நஸாயீ-5001 ,

  • ஸஃத் பின் உபைதா —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: முஸ்லிம்-19 ,

  • முஹம்மத் பின் ஸைத் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: முஸ்லிம்-21 ,

  • ஹபீப் பின் ஸாபித் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: திர்மிதீ-2609 ,


2 . ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-19220 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.