பாடம் : 131 சஜ்தாவின் போது கால் விரல்களைக் கிப்லாவை நோக்கி வைப்பது.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாக அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (குறிப்பு: காண்க ஹதீஸ் எண்-828)
பாடம் : 132 சஜ்தாவை பூரணமாக (நிதானத்துடன்) செய்யாவிட்டால் (ஏற்படும் கேடுகள்).
அபூ வாயில் அறிவித்தார்.
ருகூவையும் ஸுஜுதையும் பூரணமாகச் செய்யாத ஒரு மனிதரை ஹுதைஃபா(ரலி) கண்டார்கள். அம்மனிதர் தொழுது முடித்தபோது அவரை நோக்கி ‘நீ தொழவில்லை’; இந்நிலையில் நீ மரணித்துவிட்டால் நபி வழி அல்லாத வேறு வழியில் நீ மரணித்தவனாவாய்’ என்று கூறினார்கள்.
Book : 10
بَابُ يَسْتَقْبِلُ بِأَطْرَافِ رِجْلَيْهِ القِبْلَةَ
قَالَهُ أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
بَابُ إِذَا لَمْ يُتِمَّ السُّجُودَ
حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ
رَأَى رَجُلًا لَا يُتِمُّ رُكُوعَهُ، وَلاَ سُجُودَهُ فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ لَهُ حُذَيْفَةُ: «مَا صَلَّيْتَ؟» قَالَ: وَأَحْسِبُهُ قَالَ: «وَلَوْ مُتَّ مُتَّ عَلَى غَيْرِ سُنَّةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
சமீப விமர்சனங்கள்