பாடம் : 23 பாங்கைக் கேட்கும் போது சொற்பொழிவு மேடையில் அமர்ந்துள்ள இமாமும் அதற்கு பதில் கூறவேண்டும்.
அபூ உமாமா(ரலி) அறிவித்தார்.
முஆவியா(ரலி) மிம்பரில் அமர்ந்திருந்தபோது முஅத்தின் பாங்கு சொன்னார். அவர் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்று கூறியதும் முஆவியா(ரலி)வும் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்றார்கள்.
முஅத்தின் ‘அஷ்ஹது அல் லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறியதும் ‘நானும் (அவ்வாறே நம்புகிறேன்)’ எனக் கூறினார்கள். முஅத்தின் ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்’ எனக் கூறியதும் ‘நானும்’ என்றார்கள்.
பாங்கு சொல்லி முடித்தும், ‘மக்களே! முஅத்தின் பாங்கு சொன்னபோது நான் கூறிய இதே வார்த்தையை இதே இடத்தில் நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்’ என்று முஆவியா(ரலி) குறிப்பிட்டார்கள்.
Book : 11
بَابٌ: يُجِيبُ الإِمَامُ عَلَى المِنْبَرِ إِذَا سَمِعَ النِّدَاءَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عُثْمَانَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ
سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، وَهُوَ جَالِسٌ عَلَى المِنْبَرِ، أَذَّنَ المُؤَذِّنُ، قَالَ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، قَالَ مُعَاوِيَةُ: «اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ»، قَالَ: أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ مُعَاوِيَةُ: «وَأَنَا»، فَقَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَقَالَ مُعَاوِيَةُ: «وَأَنَا»، فَلَمَّا أَنْ قَضَى التَّأْذِينَ، قَالَ: يَا أَيُّهَا النَّاسُ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى هَذَا المَجْلِسِ، «حِينَ أَذَّنَ المُؤَذِّنُ، يَقُولُ مَا سَمِعْتُمْ مِنِّي مِنْ مَقَالَتِي»
சமீப விமர்சனங்கள்