தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-16828

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஈஸா பின் தல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் முஆவியா (ரலி) அவர்களை சந்தித்த போது, பாங்கு சொல்பவர் தொழுகைக்கு அழைப்பு விடுத்தார். அப்போது அவர், “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்” என்று கூறினார். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்” என்று பதிலளித்தார்கள்.

பின்னர் பாங்கு சொல்பவர், “அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்) என்று கூறினார். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், “நானும் சாட்சி கூறுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

(அபூஆமிர் அவர்களின் அறிவிப்பில்: “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நானும் சாட்சி கூறுகிறேன்” என்று உள்ளது)

பிறகு பாங்கு சொல்பவர், “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்” (முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்) என்று கூறினார். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், “நானும் சாட்சி கூறுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

(அபூஆமிர் அவர்களின் அறிவிப்பில்: முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நானும் சாட்சி கூறுகிறேன்” என்று உள்ளது)


யஹ்யா பின் கஸீர் (ரஹ்) அவர்கள் கூறினார்:

பாங்கு சொல்பவர் “ஹய்ய அலஸ்ஸலாஹ்” (தொழுகையின்பால் வாருங்கள்) என்று கூறியபோது, முஆவியா (ரலி) அவர்கள், “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியின்றி எந்த சக்தியும் இல்லை, எந்த வல்லமையும் இல்லை) என்று சொன்னதாக ஒரு மனிதர் எங்களுக்கு அறிவித்தார்.


(இறுதியில்) முஆவியா (ரலி) அவர்கள், “உங்களுடைய நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்வதை நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 16828)

حَدِيثُ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، قَالَ أَبِي: وَأَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، قَالَ أَبُو عَامِرٍ، فِي حَدِيثِهِ، قَالَ: حَدَّثَنِي عِيسَى بْنُ طَلْحَةَ، قَالَ:

دَخَلْنَا عَلَى مُعَاوِيَةَ، فَنَادَى الْمُنَادِي بِالصَّلَاةِ، فَقَالَ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، فَقَالَ مُعَاوِيَةُ: «اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ» ، فَقَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، قَالَ مُعَاوِيَةُ: «وَأَنَا أَشْهَدُ» – قَالَ أَبُو عَامِرٍ: أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ – قَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، قَالَ مُعَاوِيَةُ: «وَأَنَا أَشْهَدُ» – قَالَ أَبُو عَامِرٍ: أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ،

قَالَ يَحْيَى: فَحَدَّثَنَا رَجُلٌ أَنَّهُ لَمَّا – قَالَ: حَيَّ عَلَى الصَّلَاةِ، قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ» ،

قَالَ مُعَاوِيَةُ: «هَكَذَا سَمِعْتُ نَبِيَّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-16828.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.


ஆய்வின் சுருக்கம்:

இந்தச் செய்தியை முஆவியா (ரலி) அவர்களின் வழியாக அறிவிப்பவர்களில் அதிகமானோர் இதில் “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என்பதை குறிப்பிடவில்லை…

மேலும் “யஹ்யா பின் கஸீர் அவர்கள், ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ என்பதை முஆவியா (ரலி) கூறியதாக எனக்கு ஒரு மனிதர் அறிவித்தார்” என்று கூறியதாகவே மேற்கண்ட சில அறிவிப்புகளில் வந்துள்ளது…


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


 


2 . இந்தக் கருத்தில் முஆவியா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஈஸா பின் தல்ஹா —> முஆவியா (ரலி)

பார்க்க: … அஹ்மத்-16828, தாரிமீ-, புகாரி-612, 613, குப்ரா நஸாயீ-, இப்னு குஸைமா-414, …


  • அபூஉமாமா (ரலி) —> முஆவியா (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, அஹ்மத்-, புகாரி-914, குப்ரா நஸாயீ-, நஸாயீ-, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, குப்ரா பைஹகீ-,


ஆஸிம் —> அபூஸாலிஹ் —> முஆவியா (ரலி)

பார்க்க: அஹ்மத்-, அல்முஃஜமுல் கபீர்-,


லா ஹவ்ல…

  • அல்கமா பின் வக்காஸ் —> முஆவியா (ரலி)

பார்க்க: அஹ்மத்- 16831, 16896, தாரிமீ- 1239, குப்ரா நஸாயீ-, நஸாயீ-677, இப்னு குஸைமா- 416, …


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.


மேலும் பார்க்க: முஸ்லிம்-629.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.