ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி ✔
6644. எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம் (20:124) என்ற இந்த வசனம் எது குறித்து இறங்கியது என்று உங்களுக்கு தெரியுமா? நெருக்கடியான வாழ்க்கை என்றால் எது என்றும் உங்களுக்கு தெரியுமா? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு மக்கள் அல்லாஹ்வும், அவனது தூதருமே மிக அறிந்தவர்கள் என்று கூறினார்கள். இறைமறுப்பாளன் அவனுடைய மண்ணறையில் வேதனை செய்யபடுவதை (குறிப்பிடுகிறது). எனது உயிர் எவன் கைவசம் உள்ளதே அவன் மீது ஆணையாக! அவனுக்கு எதிராக தொண்னூற்று ஒன்பது பாம்புகள் சாட்டப்படும். ஒவ்வொரு பாம்புகளுக்கு ஏழு தலைகள் இருக்கும். மறுமை நாள் வரை அவனுடைய உடம்பில் அவை ஊதிக் கொண்டும், தீண்டிக் கொண்டும், ஊர்ந்து கொண்டும் இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«الْمُؤْمِنُ فِي قَبْرِهِ فِي رَوْضَةٍ، وَيُرَحَّبُ لَهُ قَبْرُهُ سَبْعِينَ ذِرَاعًا، وَيُنَوَّرُ لَهُ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، أَتَرَوْنَ فِيمَا أُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ»: {فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا، وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى} [طه: 124]، قَالَ: «أَتَدْرُونَ مَا الْمَعِيشَةُ الضَّنْكُ؟»، قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «عَذَابُ الْكَافِرِ فِي قَبْرِهِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهُ لَيُسَلَّطُ عَلَيْهِمْ تِسْعَةٌ وَتِسْعُونَ تِنِّينًا، أَتَدْرُونَ مَا التِّنِّينُ؟»، قَالَ: «تِسْعَةٌ وَتِسْعُونَ حَيَّةً لِكُلِّ حَيَّةٍ سَبْعَةُ رُءُوسٍ يَنْفُخُونَ فِي جِسْمِهِ وَيَلْسَعُونَهُ، وَيَخْدِشُونَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»
சமீப விமர்சனங்கள்