Category: முஸ்னத் அபீ யஃலா

Musnad Abi Yala

Abi-Yala-5269

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5269. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பாலைவனப் பகுதியில் இருக்கும் போது அவருடைய வாகனம் தப்பிவிட்டால் அவர், “அல்லாஹ்வின் அடியார்களே! என்னிடத்தில் (வாகனத்தை) அனுப்புங்கள். அல்லாஹ்வின் அடியார்களே! என்னிடத்தில் (வாகனத்தை) அனுப்புங்கள்” என்று கூறட்டும். ஏனென்றால் பூமியில் அல்லாஹ்விற்காக சிலர் இருக்கின்றனர். அவர்கள் அதை உங்களிடத்தில் திருப்பி அனுப்புவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


إِذَا انْفَلَتَتْ دَابَّةُ أَحَدِكُمْ بِأَرْضٍ فَلَاةٍ فَلْيُنَادِ: يَا عِبَادَ اللَّهِ احْبِسُوا، يَا عَبَّادَ اللَّهِ احْبِسُوا، فَإِنَّ لِلَّهِ حَاضِرًا فِي الْأَرْضِ سَيَحْبِسُهُ


Abi-Yala-1722

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1722. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் தமது வீட்டில் வாகனப் பிராணி ஒன்று இருக்க, “அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தை ஓதினார். உடனே அந்தப் பிராணி மிரள ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து (பிரார்த்தனை புரிந்துவிட்டு சும்மாயிருந்து) விட்டார்.

உடனே, மேகத் திரள் ஒன்று வந்து அவரை மூடியது. இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (மறு நாள்) சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், ‘இன்னாரே! ஓதிக் கொண்டேயிரு(ந்திருக்க வேண்டும் நீ)ங்கள். ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்களின் மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்’ என்று கூறினார்கள்.


قَرَأَ رَجُلٌ الْكَهْفَ وَفِي الدَّارِ دَابَّةٌ فَجَعَلْتُ تَنْفِرُ فَسَلَّمَ، فَإِذَا ضَبَابَةٌ أَوْ سَحَابَةٌ قَدْ غَشِيَتْهُ، فَذَكَرَهُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «اقْرَأْ فُلَانُ، فَإِنَّهَا السَّكِينَةُ نَزَلَتْ عِنْدَ الْقُرْآنِ، أَوْ تَنَزَّلَتْ لِلْقُرْآنِ»


Abi-Yala-1185

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1185. ஆதமுடைய மகன் (மனிதன்) காலையில் எழுந்தவுடன் மற்ற உறுப்புகள் அனைத்தும் நாவைக் கண்டு பயப்படுகின்றன. அவை நாவை நோக்கி “நாவே! எங்கள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்! நாங்கள் உன்னைச் சார்ந்துள்ளோம். நீ நேராக இருந்தால் நாங்களும் நேராக இருப்போம். நீ கோணலாகி விட்டால் நாங்களும் கோணலாகி விடுவோம்!’ எனக் கூறுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)


تُصْبِحُ الْأَعْضَاءُ تُكَفِّرُ اللِّسَانَ تَقُولُ: اتَّقِ اللَّهَ فِينَا، فَإِنِ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا، وَإِنِ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا


Abi-Yala-2432

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2432. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர், அந்த நேரத்தில் இரத்தம் சிகப்பு நிறத்தில் வந்திருந்தால் ஒரு தீனாரும், மஞ்சள் நிறத்தில் வந்திருந்தால் அரை தீனாரும் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…


فِي ” رَجُلٍ جَامَعَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ فَقَالَ: إِنْ كَانَ دَمًا عَبِيطًا فَلْيَتَصَدَّقْ بِدِينَارٍ، وَإِنْ كَانَ فِيهِ صُفْرَةٌ فَنِصْفُ دِينَارٍ


Abi-Yala-5727

ஹதீஸின் தரம்: More Info

5727. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதி பொறுப்பேற்று, அநியாயமாக தீர்ப்பளிப்பவர் நரகத்தில் நுழைவார். நீதிபதி பொறுப்பேற்று உண்மையை அறியாமல் தீர்ப்பளிப்பவர் நரகத்தில் நுழைவார். நீதிபதி பொறுப்பேற்று நீதமாக தீர்ப்பளிப்பவர் தப்பித்துக்கொள்வார்…

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«مَنْ كَانَ قَاضِيًا فَقَضَى بِجَوْرٍ كَانَ مِنْ أَهْلِ النَّارِ، وَمَنْ كَانَ قَاضِيًا فَقَضَى بِجَهْلٍ كَانَ مِنْ أَهْلِ النَّارِ، وَمَنْ كَانَ قَاضِيًا فَقَضَى بِعَدْلٍ فَبِالْحَرِيِّ أَنْ يَنْفَلِتَ كَفَافًا»


Bazzar-3718

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3718. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும்போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஏற்றுக் கொண்டு, உங்கள் தோல்களும், முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணிந்து, அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதற்கு) உங்களை விட நான் மிகத் தகுதி வாய்ந்தவனே.

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும்போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுத்து, உங்களது தோல்களும் முடிகளும் விரண்டு ஓடி, அச்செய்தி உங்களுக்குத் தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களை விட அதை விட்டும் நான் மிக தூரமானவன்.

அறிவிப்பவர்கள் : அபூ ஹுமைத் (ரலி), அபூ உஸைத் (ரலி)


«إِذَا سَمِعْتُمُ الْحَدِيثَ تَعْرِفُهُ قُلُوبُكُمْ، وَتَلِينُ لَهُ أَشْعَارُكُمْ وَأَبْشَارُكُمْ، وَتَرَوْنَ أَنَّهُ مِنْكُمْ قَرِيبٌ، فَأَنَا أَوْلَاكُمْ بِهِ، وَإِذَا سَمِعْتُمُ الْحَدِيثَ تَقْشَعِرُّ مِنْهُ جُلُودُكُمْ، وَتَتَغَيَّرُ لَهُ قُلُوبُكُمْ أَوْ أَشْعَارُكُمْ، وَتَرَوْنَ أَنَّهُ مِنْكُمْ بَعِيدٌ فَأَنَا أَبْعَدُكُمْ مِنْهُ


Abi-Yala-616

ஹதீஸின் தரம்: More Info

616. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்குவது, முதல்தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது, ஸலாம் கொடுப்பதாகும்”.

அறிவிப்பவர் : அலீ (ரலி)


«مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»


Abi-Yala-412

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

412.


لَمَّا حَضَرَ الْبَأْسُ يَوْمَ بَدْرٍ، اتَّقَيْنَا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَانَ مِنْ أَشَدِّ النَّاسِ، مَا كَانَ أَحَدٌ قَالَ: وَلَمْ يَكُنْ أَحَدٌ أَقْرَبُ إِلَى الْمُشْرِكِينَ مِنْهُ


Abi-Yala-302

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

302.


«كُنَّا إِذَا احْمَرَّ الْبَأْسُ، وَلَقِيَ الْقَوْمُ، اتَّقَيْنَا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا يَكُونُ مِنَّا أَحَدٌ أَقْرَبَ إِلَى الْقَوْمِ مِنْهُ»


Abi-Yala-5359

ஹதீஸின் தரம்: Pending

5359. பத்ருப் போர் அன்று நபிகள் நாயகத்துடன் அபூ லுபாபா, அலி பின் அபீதாலிப் ஆகிய இருவரும் ஒட்டகத் தோழராக இருந்தனர். நபிகள் நாயகத்தின் முறை வந்த போது ‘உங்களுக்காக நாங்கள் நடக்கிறோம்’ என இருவரும் கூறினார்கள். ‘நீங்கள் என்னை விட வலிமையானவரும் அல்லர். நான் உங்களை விட (இறைவனின்) கூலியில் தேவையற்றவனும் அல்லன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)


كُنَّا يَوْمَ بَدْرٍ كُلُّ ثَلَاثَةٍ عَلَى بَعِيرٍ، فَكَانَ أَبُو لُبَابَةَ وَعَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ زَمِيلَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَكَانَ إِذَا حَانَتْ عُقْبَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَا: نَحْنُ نَمْشِي عَنْكَ، قَالَ: «مَا أَنْتُمَا بِأَقْوَى مِنِّي، وَمَا أَنَا بِأَغْنَى عَنِ الْأَجْرِ مِنْكُمَا»


Next Page » « Previous Page