Category: முஸ்னத் அபீ யஃலா

Musnad Abi Yala

Abi-Yala-4097

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4097. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும், செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


«مَنْ سَرَّهُ النَّسَاءُ فِي أَجَلِهِ، وَالْمَدُّ فِي رِزْقِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ»


Abi-Yala-3609

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3609. ஒருவர் தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும், செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும் என நபி ஸல் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


مَنْ أَحَبَّ أَنْ يُنْسَأَ لَهُ فِي أَجَلِهِ وَيُبْسَطَ لَهُ فِي – أَحْسِبُهُ قَالَ: فِي رِزْقِهِ – فَلْيَصِلْ رَحِمَهُ


Abi-Yala-840

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

840. …நானே அல்லாஹ். நானே ரஹ்மான். நான் “ரஹிமை’ (உறவுமுறையை) படைத்துஅதற்குரிய பெயரை எனது பெயரிலிருந்து எடுத்தேன்.

யார் அதைச் சேர்த்துக் கொள்கிறாரோ அவரை நானும் சேர்த்துக் கொள்கிறேன். யார் அதைத் துண்டிக்கிறாரோ அவரை நானும் துண்டித்து விடுகிறேன் .”

என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)


قَالَ اللَّهُ: أَنَا اللَّهُ وَأَنَا الرَّحْمَنُ، وَهِيَ الرَّحِمُ، خَلَقْتُ الرَّحِمَ وَاشْتَقَقْتُ لَهَا مِنِ اسْمِي، فَمَنْ وَصَلَهَا وَصَلْتُهُ، وَمَنْ قَطَعَهَا قَطَعْتُهُ، أَوْ بَتَتُّهُ


Abi-Yala-5953

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5953. ” நானே ரஹ்மான். ரஹிம் என்ற உறவுமுறையை எனது பெயரிலிருந்து எடுத்தேன். யார் அதைச் சேர்த்துக் கொள்கிறாரோ அவரை நானும் சேர்த்துக் கொள்கிறேன். யார் அதைத் துண்டிக்கிறாரோ அவரை நானும் துண்டித்து விடுகிறேன் .”

என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


قَالَ اللَّهُ: أَنَا الرَّحْمَنُ وَهِيَ الرَّحِمُ، شَقَقْتُ لَهَا مِنِ اسْمِي، فَمَنْ وَصَلَهَا أَصِلْهُ، وَمَنْ قَطَعَهَا أَقْطَعْهُ فَأَبُتَّهُ


Abi-Yala-4599

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4599. உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். ஆகவே அதனுடன் யார் ஒட்டி வாழ்கின்றாரோ அவருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை யார் முறித்துக் கொள்கின்றாரோ அவரை நானும் முறித்துக் கொள்வேன் என்று (அல்லாஹ் கூறியதாக) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«إِنَّ الرَّحِمَ شُجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، مَنْ وَصَلَهَا وَصَلَهُ، وَمَنْ قَطَعَهَا قَطَعَهُ»


Abi-Yala-4446

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4446. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைவன் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது) உறவானது, இறை அரியணையைப் பிடித்துக்கொண்டு, “என்னோடு ஒட்டி வாழ்பவனுடன் இறைவனும் உறவாடுவான். என்னை முறித்துக் கொள்பவனை இறைவனும் முறித்துக் கொள்வான்” என்று கூறியது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


الرَّحِمُ مُعَلَّقَةٌ بِالْعَرْشِ تَقُولُ: مَنْ وَصَلَنِي وَصَلَهُ اللَّهُ، وَمَنْ قَطَعَنِي قَطَعَهُ اللَّهُ


Abi-Yala-7392

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7392. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.


«لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ»


Abi-Yala-7394

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7394. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ»


Abi-Yala-7391

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7391. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ»


Abi-Yala-2871

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2871. கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் அனஸ் (ரலி) அவர்களிடம் ‘முஸாஃபஹா (கரம் பற்றி வாழ்த்துத் தெரிவிக்கும் வழக்கம்) நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம் (இருந்தது)’ என்றார்கள்.

மேலும் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்.

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் முஸாஃபஹா (கரம் பற்றி வாழ்த்துத் தெரிவிக்கும் வழக்கம்) உள்ளவராக இருந்தார்.


قُلْتُ لِأَنَسٍ: أَكَانَتِ الْمُصَافَحَةُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «نَعَمْ»، قَالَ قَتَادَةُ: وَكَانَ الْحَسَنُ يُصَافِحُ


Next Page » « Previous Page