6898.
قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” صُمْ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ أَوَّلِهِ: الِاثْنَيْنِ وَالْخَمِيسَ، وَالْخَمِيسَ الَّذِي يَلِيهِ
Musnad Abi Yala
6898.
قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” صُمْ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ أَوَّلِهِ: الِاثْنَيْنِ وَالْخَمِيسَ، وَالْخَمِيسَ الَّذِي يَلِيهِ
4867. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள்!
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
«اجْعَلُوا مِنْ صَلَاتِكُمْ فِي بُيُوتِكُمْ»
1084. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னால் எப்படி இன்புற்றிருக்க முடியும்?. எக்காளம் ஊதுகின்ற (வான)வர் எக்காளத்தின் முனைப் பகுதியை தமது வாயில் வைத்துக்கொண்டு, ஊதுமாறு எப்போது உத்தரவிடப்படும் என்று நெற்றியை உயர்த்திக் காத்திருக்கிறாரே! என்று கூறினார்கள்.
அப்போது, ‘அல்லாஹ்வின் தூதரே! அந்நாளில் நாங்கள் என்னக் கூறவேண்டும்’ என்றுக் கேட்டோம். அதற்கவர்கள், “ஹஸ்புனல்லாஹு, வ நிஃமல் வகீல்; அலல்லாஹி தவக்கல்னா. (பொருள்: அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்; அவனே சிறந்த பாதுகாவலன்; அல்லாஹ்வையே நாங்கள் சார்ந்துள்ளோம்) எனக் கூறுங்கள்” என்று பதிலளித்தார்கள்.
«كَيْفَ أَنْعَمُ وَصَاحِبُ الصُّوَرِ قَدِ الْتَقَمَ وَحَنَا جَبْهَتَهُ يَنْتَظِرُ مَتَى يُؤْمَرُ أَنْ يَنْفُخَ؟»، قِيلَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، مَا نَقُولُ يَوْمَئِذٍ؟ قَالَ: ” قُولُوا: حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، عَلَى اللَّهِ تَوَكَّلْنَا “
1083.
…
«كَيْفَ أَنْعَمُ وَصَاحِبُ الصُّوَرِ قَدِ الْتَقَمَ وَحَنَا جَبْهَتَهُ يَنْتَظِرُ مَتَى يُؤْمَرُ أَنْ يَنْفُخَ؟»، قِيلَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، مَا نَقُولُ يَوْمَئِذٍ؟ قَالَ: ” قُولُوا: حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، عَلَى اللَّهِ تَوَكَّلْنَا “
6556. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு தடவை) ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரின் (உடல்) ஆரோக்கியத்தையும், பலத்தையும் கண்டு நபி (ஸல்) அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
எனவே அவரிடம், “எப்போதாவது உமக்கு உம்மு மில்தம் ஏற்பட்டுள்ளதா? என்று கேட்டார்கள். அதற்கவர் உம்மு மில்தம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் காய்ச்சல் என்று பதிலளித்தார்கள். அதற்கவர், காய்ச்சல் என்றால் என்ன? என்று (திருப்பிக்) கேட்டார். அதற்கவர்கள், “தோலுக்கும் எழும்புக்கும் இடையில் ஏற்படும் சூடு” என்று கூறினார்கள். அந்த கிராமவாசி இது போன்று எனக்கு ஏற்பட்டதில்லை என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள், அவரிடம் “உமக்கு எப்போதாவது தலைவலி(யாவது) ஏற்பட்டதுண்டா? என்று கேட்டார்கள். அதற்கவர், தலைவலி என்றால் என்ன? என்று (திருப்பிக்) கேட்டார். அதற்கவர்கள், “மனிதனின் இரு நெற்றிப்பொட்டிலும், தலையிலும் ஏற்படும் வலி” என்று கூறினார்கள். அதற்கு அந்த கிராமவாசி, “இது போன்று எனக்கு ஏற்பட்டதில்லை” என்று கூறினார். பிறகு அவர் திரும்பிச் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளில் ஒரு மனிதரைக் காண விருப்பமுள்ளவர்கள் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.
جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْرَابِيٌّ فَأَعْجَبَهُ صِحَّتُهُ وَجَلَدُهُ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَتَى أَحْسَسْتَ أُمَّ مِلْدَمٍ؟»، فَقَالَ الْأَعْرَابِيُّ: وَأَيُّ شَيْءٍ أُمُّ مِلْدَمٍ؟ قَالَ: «الْحُمَّى»، قَالَ: وَأَيُّ شَيْءٍ الْحُمَّى؟ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سُخْنَةٌ تَكُونُ بَيْنَ الْجِلْدِ وَالْعَظْمِ»، فَقَالَ الْأَعْرَابِيُّ: مَا لِي بِذَلِكَ عَهْدٌ، قَالَ لَهُ: «فَمَتَى أَحْسَسْتَ بِالصُّدَاعِ؟»، قَالَ: وَأَيُّ شَيْءٍ الصُّدَاعُ؟ فَقَالَ لَهُ: «ضَرَبَانٌ يَكُونُ فِي الصُّدْغَيْنِ وَالرَّأْسِ»، فَقَالَ: مَا لِي بِذَلِكَ عَهْدٌ، قَالَ: فَلَمَّا وَلَّى الْأَعْرَابِيُّ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ النَّارِ، فَلْيَنْظُرْ إِلَيْهِ»، يَعْنِي الْأَعْرَابِيَّ
6551.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எத்தனையோ நோன்பாளிகள், தங்களின் நோன்பினால் பசியையும், தாகத்தையுமே தனது பங்காக பெறுகின்றனர். (அவர்களுக்கு நன்மை கிடைப்பதில்லை).
இன்னும் இரவில் (கண்விழித்து) நின்று வணங்கும் எத்தனையோ பேர், தங்களின் இரவு வணக்கத்தால் இரவில் கண்விழித்திருந்ததையே தனது பங்காக பெறுகின்றனர். (அவர்களுக்கு நன்மை கிடைப்பதில்லை).
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«رُبَّ صَائِمٍ حَظُّهُ مِنْ صِيَامِهِ الْجُوعُ وَالْعَطَشُ، وَرُبَّ قَائِمٍ حَظُّهُ مِنْ قِيَامِهِ السَّهَرُ»
793.
مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَدْعُو بِأُصْبُعَيَّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحَدْ أَحَدْ» وَأَشَارَ بِالسَّبَّابَةِ
6033.
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْصَرَ رَجُلًا يَدْعُو بِإِصْبَعَيْهِ جَمِيعًا فَنَهَاهُ، وَقَالَ: «بِإِحْدَاهُمَا، بِالْيَمِينِ»
4242. ஒரு முதியவர் ஒரு தேவையின் நிமித்தமாக நபி (ஸல்) அவர்களின் சபைக்கு வந்தார். அவருக்கு இடமளிக்க மக்கள் தாமதித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும்; பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
جَاءَ شَيْخٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَتِهِ فَأَبْطَئُوا عَنِ الشَّيْخِ أَنْ يُوَسِّعُوا لَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيُوَقِّرْ كَبِيرَنَا»
சமீப விமர்சனங்கள்