Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-3652

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

அல்லாஹ்வின் வேதமான குர்ஆனுக்கு அறிவு-ஞானமின்றி விளக்கமளிப்பது.

3652. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

யார், குர்ஆனில் (அதனுடைய வசனங்களில்,கருத்துகளில் தன் அறிவில் தோன்றியதை) சுயமாக பேசுகிறாரோ அவரின் கூற்று (எதார்த்தமாக) சரியாகவே இருந்தாலும் (மார்க்கத்தின் பார்வையில்) அவர் தவறிழைத்தவராவார்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி)


مَنْ قَالَ: فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ بِرَأْيِهِ فَأَصَابَ، فَقَدْ أَخْطَأَ


Abu-Dawood-4833

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

4833. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதன் தன் நண்பனின் வழியிலேயே இருக்கிறான். ஆகவே, உங்களில் ஒருவர், தாம் யாருடன் நட்பு கொள்கிறோம் என்பதைக் கவனிக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ، فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ»


Abu-Dawood-2452

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2452.


دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ فَسَأَلْتُهَا عَنِ الصِّيَامِ، فَقَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنِي أَنْ أَصُومَ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، أَوَّلُهَا الِاثْنَيْنِ وَالْخَمِيسِ»


Abu-Dawood-2437

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்: 

துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப ஒன்பது நாள்களில் நோன்பு நோற்பது.

2437. ஹுனைதா பின் காலித் (ரலி) அவர்களின் மனைவி கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், துல்ஹஜ் மாதம் (முதல்) ஒன்பது நாள்களும், ஆஷூரா (நாளான முஹர்ரம் மாதம் 10ஆம்) நாளன்றும், மாதத்தின் முதல் திங்கட் கிழமை, (இரண்டு) வியாழக் கிழமை ஆகிய மூன்று நாள்களும் நோன்பு நோற்றுவந்தார்கள்” என நபி (ஸல்) அவர்களின் மனைவியர்களுள் ஒருவர் அறிவித்தார்கள்.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ تِسْعَ ذِي الْحِجَّةِ، وَيَوْمَ عَاشُورَاءَ، وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، أَوَّلَ اثْنَيْنِ مِنَ الشَّهْرِ وَالْخَمِيسَ»


Abu-Dawood-2484

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அறப்போர் (மறுமை நாள் வரை) தொடர்ந்து நடைபெறும்.

2484. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமுதாயத்தில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்காக போராடிக் கொண்டே இருப்பார்கள்; தங்கள் எதிரிகளை வெல்பவர்களாக இருப்பார்கள்; அவர்களில் கடைசியில் வருவோர் மஸீஹுத் தஜ்ஜாலுடன் சண்டையிடுவார்கள்.


«لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ عَلَى مَنْ نَاوَأَهُمْ، حَتَّى يُقَاتِلَ آخِرُهُمُ الْمَسِيحَ الدَّجَّالَ»


Abu-Dawood-4165

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4165. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் (பைஅத் எனும்) உறுதிமொழி வாங்கிக் கொள்ளுங்கள்” என்று ஹிந்த் பின்த் உத்பா (ரலி) கூறினார். அதற்கு, “நீ உமது இரு கைகளையும் (மருதாணியால்) நிறம் மாற்றாத வரை உம்மிடம் உறுதிமொழி வாங்கமாட்டேன்; அவ்விரண்டும் விலங்கின் கரம் போன்று உள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


أَنَّ هِنْدَ بِنْتَ عُتْبَةَ، قَالَتْ: يَا نَبِيَّ اللَّهِ، بَايِعْنِي، قَالَ: «لَا أُبَايِعُكِ حَتَّى تُغَيِّرِي كَفَّيْكِ، كَأَنَّهُمَا كَفَّا سَبُعٍ»


Abu-Dawood-4166

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4166. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் திரைக்குப் பின்னால் இருந்துக்கொண்டு, தனது கையை நபி (ஸல்) அவர்களிடம் நீட்டினார். அவரின் கையில் கடிதம் இருந்தது. அவரின் கையைப் பிடித்த நபி (ஸல்) அவர்கள், இது ஆணின் கரமா? அல்லது பெண்ணின் கரமா? என்று எனக்குத் தெரியவில்லையே! என்று கூறினார்கள். அதற்கு அந்தப்பெண், “பெண்ணின் கரம்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்கள் நகங்களை (மருதாணி போன்றதைக் கொண்டு) மாற்றியிருக்க வேண்டுமே! என்று கூறினார்கள்.


أَوْمَتْ امْرَأَةٌ مِنْ وَرَاءِ سِتْرٍ بِيَدِهَا، كِتَابٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَبَضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ، فَقَالَ: «مَا أَدْرِي أَيَدُ رَجُلٍ، أَمْ يَدُ امْرَأَةٍ؟» قَالَتْ: بَلِ امْرَأَةٌ، قَالَ: «لَوْ كُنْتِ امْرَأَةً لَغَيَّرْتِ أَظْفَارَكِ» يَعْنِي بِالْحِنَّاءِ


Abu-Dawood-1300

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1300.

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பனூ அப்தில் அஷ்ஹல் குலத்தாரின் பள்ளிவாசலில் ‘மஃக்ரிப்’ தொழுகையைத் தொழுதார்கள். பிறகு மக்கள் கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழ எழுந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்தத் தொழுகையை (உங்கள்) வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இஸ்ஹாக் பின் கஅப் (ரஹ்)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى مَسْجِدَ بَنِي عَبْدِ الْأَشْهَلِ، فَصَلَّى فِيهِ الْمَغْرِبَ، فَلَمَّا قَضَوْا صَلَاتَهُمْ رَآهُمْ يُسَبِّحُونَ بَعْدَهَا، فَقَالَ: «هَذِهِ صَلَاةُ الْبُيُوت»


Abu-Dawood-1448

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1448. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுடைய இல்லங்களிலும் உங்கள் தொழுகைகளில் சிலவற்றைத் தொழுங்கள். இல்லங்களை (தொழுகை நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلَاتِكُمْ، وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا»


Abu-Dawood-1043

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஒருவர் (கடமையல்லாத)  உபரியானத் தொழுகைகளை தனது வீட்டில் தொழுதல்.

1043. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுடைய இல்லங்களிலும் உங்கள் தொழுகைகளில் சிலவற்றைத் தொழுங்கள். இல்லங்களை (தொழுகை நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلَاتِكُمْ، وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا»


Next Page » « Previous Page