Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-522

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 179

அதானை செவிமடுப்பவர் சொல்ல வேண்டிய பதில்.

522. (தொழுகைக்கான) அழைப்பை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்கள் சொல்லுங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.


«إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ»


Abu-Dawood-520

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 177

பாங்கு சொல்லும் போது வலப்புறம் இடப்புறம் திரும்புதல்.

520. அவ்ன் பின் அபீஜஹ்பா தன் தந்தை வழியாக அறிவிக்கின்றார்கள் :

மக்காவில் நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் தோலினால் ஆன சிவப்புக் கூடாரத்தில் அமர்ந்திருந்தார்கள். பிலால் (ரலி) வெளியே வந்து அதான் சொன்னார். நான் இந்த பக்கமாகவும் அந்த பக்கமாகவும் பிலாலுடைய வாயைக் கவனித்துக் கொண்டிருந்தேன். பிறகு யமன் நாட்டின் கித்ர் என்ற ரகத்தைச் சார்ந்த சிவப்பு ஆடை அணிந்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுவதற்காக) புறப்பட்டு வந்தார்கள். இது மூஸா பின் சுலைமான் அல் அன்பாரி அறிவிப்பாகும் மூஸா தனது அறிவிப்பில், பிலால் (ரலி) அப்தஹ் என்ற இடத்திற்கு சென்று அதான் சொல்லக் கண்டேன். அவர் அதான் சொல்லும் போது, ஹய்ய அலஸ் ஸலா, ஹய்ய அலல் ஃபலாஹ் என்பதை அடைந்ததும் (தனது உடல் முழுவதையும்) திரும்பாமல் தனது கழுத்தை வலது, இடது பக்கமாக திருப்பினார்கள். பிறகு பள்ளிக்குள் சென்று கைத்தடியை கொண்டு வந்தார் என்று தொடர்ந்து அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா

أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ وَهُوَ فِي قُبَّةٍ حَمْرَاءَ مِنْ أَدَمٍ فَخَرَج بِلَالٌ فَأَذَّنَ فَكُنْتُ أَتَتَبَّعُ فَمَهُ هَاهُنَا وَهَاهُنَا، قَالَ: «ثُمَّ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ بُرُودٌ يَمَانِيَةٌ  قِطْرِيٌّ» – وَقَالَ مُوسَى – قَالَ: رَأَيْتُ بِلَالًا خَرَجَ إِلَى الْأَبْطَحِ فَأَذَّنَ فَلَمَّا بَلَغَ حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، لَوَى عُنُقَهُ يَمِينًا وَشِمَالًا، وَلَمْ يَسْتَدِرْ ثُمَّ دَخَلَ فَأَخْرَجَ الْعَنَزَةَ وَسَاقَ حَدِيثَهُ


Abu-Dawood-519

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்: 176

மனாராவின் (உயரமான இடத்தின்) மேல் நின்று பாங்கு சொல்லுதல்.

519. பனூ நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறியதாவது:

பள்ளியை சுற்றி உள்ள வீடுகளில் எனது வீடு மிக உயரமாக அமைந்திருந்தது. பிலால் (ரலி) அவர்கள் அதில் ஏறி பஜ்ருக்கான பாங்கு சொல்வார். ஸஹர் நேரத்தில் வந்து, அமர்ந்து பஜ்ர் நேரத்தை கவனித்துக் கொண்டிருப்பார். பஜ்ர் நேரத்தை அவர் பார்த்ததும் அவர் உடல் சிலிர்த்து எழுந்து, “அல்லாஹும்ம இன்னீ அஹ்மதுக்க வ அஸ்தயீனுக்க அலா குரைஷின் அன் யுகீமூ தீனக்க” (யாஅல்லாஹ்! உன்னைப் புகழ்கின்றேன். குறைஷிகள் உன்னுடைய மார்க்கத்தை நிலை நாட்ட வேண்டுமென உன்னிடமே உதவி தேடுகின்றேன்) என்று சொல்வார். பிறகு பாங்கு சொல்வார். ஒரு இரவு கூட இந்த வார்த்தைகளை (சொல்லாமல்) விட்டதாக நான் காணவில்லை!


كَانَ بَيْتِي مِنْ أَطْوَلِ بَيْتٍ حَوْلَ الْمَسْجِدِ وَكَانَ بِلَالٌ يُؤَذِّنُ عَلَيْهِ الْفَجْرَ فَيَأْتِي بِسَحَرٍ فَيَجْلِسُ عَلَى الْبَيْتِ يَنْظُرُ إِلَى الْفَجْرِ، فَإِذَا رَآهُ تَمَطَّى، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَحْمَدُكَ وَأَسْتَعِينُكَ عَلَى قُرَيْشٍ أَنْ يُقِيمُوا دِينَكَ» قَالَتْ: ثُمَّ يُؤَذِّنُ، قَالَتْ: وَاللَّهِ مَا عَلِمْتُهُ كَانَ تَرَكَهَا لَيْلَةً وَاحِدَةً تَعْنِي هَذِهِ الْكَلِمَاتِ


Abu-Dawood-516

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

516. தொழுகைக்கு பாங்கு சொல்லப்படும் போது ஷைத்தான் பாங்கை செவியுறக் கூடாது என்பதற்காக காற்று விட்டுக் கொண்டே பின்னோக்கி ஓட்டமெடுக்கின்றான். பாங்கு முடிக்கப்பட்டதும் முன்னோக்கி வருகின்றான். தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டதும் பின்னோக்கி ஓடுகின்றான். இகாமத் முடிந்ததும், முன்னோக்கி வந்து (தொழுகின்ற) ஒருவரின் உள்ளத்தில் இதை நினைத்துப் பார்! அதை நினைத்துப்பார்! என்று அவர் அது வரை நினைத்திராத செய்திகளை நினைவுபடுத்துகின்றான். இதனால் தொழுபவர் தான் எத்தனை (ரத்அத்துக்கள்) தொழுதோம் என்று தெரியாது போய்விடுகின்றார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.


إِذَا نُودِيَ بِالصَّلَاةِ أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ التَّأْذِينَ، فَإِذَا قُضِيَ النِّدَاءُ أَقْبَلَ حَتَّى إِذَا ثُوِّبَ بِالصَّلَاةِ أَدْبَرَ، حَتَّى إِذَا قُضِيَ التَّثْوِيبُ أَقْبَلَ حَتَّى يَخْطُرَ بَيْنَ الْمَرْءِ  وَنَفْسِهِ، وَيَقُولُ: اذْكُرْ كَذَا اذْكُرْ كَذَا لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ، حَتَّى يَضِلَّ الرَّجُلُ أَنْ يَدْرِيَ كَمْ صَلَّى


Abu-Dawood-515

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 174

சப்தமிட்டு அதான் சொல்லுதல்.

515. அதான் சொல்பவரின் சப்தம் எட்டும் எல்லை வரை அவரது பாவம் மன்னிக்கப்படுகின்றது. காய்ந்த மற்றும் ஈரமான அனைத்து பொருட்களும் அவருக்காக சாட்சி சொல்கின்றன. தொழுகையில் கலந்து கொள்பவருக்கு இருபத்தைந்து தொழுகையின் நன்மைகள் எழுதப்பட்டு இரண்டு தொழுகைகளுக்கு இடையிலான தீமைகள் அழிக்கப்படுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் நஸயீ, இப்னு மாஜா விலும் இடம் பெறுகின்றது.)


«الْمُؤَذِّنُ يُغْفَرُ لَهُ مَدَى صَوْتِهِ وَيَشْهَدُ لَهُ كُلُّ رَطْبٍ وَيَابِسٍ وَشَاهِدُ الصَّلَاةِ يُكْتَبُ لَهُ خَمْسٌ وَعِشْرُونَ صَلَاةً وَيُكَفَّرُ عَنْهُ مَا بَيْنَهُمَا»


Abu-Dawood-514

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

514. சுப்ஹு தொழுகையின் முதல் அதானின் போது நபி (ஸல்) அவர்கள் எனக்கு அதான் சொல்லும்படி உத்தரவிட்டார்கள். நான் அதான் சொன்னதும் அல்லாஹ்வின் தூதரே! இகாமத் சொல்லட்டுமா? என்று கேட்டேன். அவர்கள் கிழக்கு பக்கமாக பஜ்ர் நேரம் உதயமாகிவிட்டதா? என்று பார்த்து விட்டு வேண்டாம் என்றார்கள். சுப்ஹு நேரம் உதயமானதும் (வாகனத்திலிருந்து) இறங்கி உலூச் செய்து விட்டு என்னிடம் திரும்ப வந்தார்கள். (பிரிந்து பிரிந்து நின்ற) நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்து விட்டார்கள். அப்போது பிலால் (ரலி) இகாமத் சொல்ல விரும்பிய போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் சகோதரர் சுதாயி தான் பாங்கு சொன்னார். யார் பாங்கு சொல்கின்றாரோ அவரே இகாமத்தும் சொல்வாராக என்று சொன்னதும் நான் இகாமத் சொன்னேன் என்று சியாத் பின் அல்ஹர்ஸ் சுதாயி அறிவிக்கின்றார்.

இந்த ஹதீஸ் திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் இடம் பெறுகின்றது.


لَمَّا كَانَ أَوَّلُ أَذَانِ الصُّبْحِ أَمَرَنِي يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَذَّنْتُ، فَجَعَلْتُ أَقُولُ: أُقِيمُ يَا رَسُولَ اللَّهِ؟ فَجَعَلَ يَنْظُرُ إِلَى نَاحِيَةِ الْمَشْرِقِ إِلَى الْفَجْرِ، فَيَقُولُ: «لَا» حَتَّى إِذَا طَلَعَ الْفَجْرُ نَزَلَ فَبَرَزَ، ثُمَّ انْصَرَفَ إِلَيَّ وَقَدْ تَلَاحَقَ أَصْحَابُهُ – يَعْنِي فَتَوَضَّأَ – فَأَرَادَ بِلَالٌ أَنْ يُقِيمَ، فَقَالَ لَهُ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَخَا صُدَاءٍ هُوَ أَذَّنَ وَمَنْ أَذَّنَ فَهُوَ يُقِيمُ»، قَالَ: فَأَقَمْتُ


Abu-Dawood-510

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

510. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் பாங்கின் வார்த்தைகள் இரண்டு இரண்டு தடவையாகவும், இகாமத் வார்த்தைகள் ஒரு தடவையாகவும் அமைந்து இருந்தன. ஆனால் கத் காமதிஸ் ஸலாஹ், கத் காமதிஸ் ஸலாஹ் என இரு தடவை (தொழுகைஅழைப்பாளர்) சொல்வார்.

இகாமத்தை செவியுற்றதும் நாங்கள் உளூச் செய்து பிறகு பள்ளிக்கு புறப்படுவோம் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஸ்லிம் பின் மிஹ்ரான் (ரஹ்)


இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:

அபூஜஅஃபர்-முஹம்மத் பின் இப்ராஹீம் பின் முஸ்லிம் அவர்களிடமிருந்து இந்த ஒரு ஹதீஸைத் தவிர வேறெதையும் நான் செவியுறவில்லை.


إِنَّمَا كَانَ الْأَذَانُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتَيْنِ، مَرَّتَيْنِ وَالْإِقَامَةُ مَرَّةً، مَرَّةً غَيْرَ أَنَّهُ، يَقُولُ: قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، فَإِذَا سَمِعْنَا الْإِقَامَةَ تَوَضَّأْنَا، ثُمَّ خَرَجْنَا إِلَى الصَّلَاةِ “، قَالَ شُعْبَةُ: لَمْ أَسْمَعْ مِنْ أَبِي جَعْفَرٍ غَيْرَ هَذَا الْحَدِيثِ


Abu-Dawood-509

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

509. ஹதீஸ் எண் : 508-ல் உள்ள ஹதீஸ் போன்றே இங்கு இடம் பெறுகின்றது.


إِلَّا الْإِقَامَةَ


Abu-Dawood-508

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 172

இகாமத் சொல்லுதல்.

508. அதா(னின் வார்த்தைகளை)னை இரண்டிரண்டு தடவைகளும் இகாமத் (தின் வார்த்தைகளை)தை ஒவ்வொரு தடவையும் சொல்ல வேண்டும் என பிலால் (ரலி)க்கு உத்தரவிடப்பட்டது என அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

1) அனஸ் ——–> அபூகிலாபா ——–> அய்யூப் ——–> உஹைப் ——–> மூஸா பின் இஸ்மாயீல்

2) அனஸ் ——–> அபூகிலாபா ——–> அய்யூப் ——–> சிமாக் பின் அதிய்யா ——–> ஹம்மாத் ——–> சுலைமான் பின் ஹர்ப், அப்துற் ரஹ்மான் அல்முபாரக் ஆகிய இருவர்.

ஹம்மாத் தனது அறிவிப்பில் கத்காமத்திஸ் ஸலாத் என்ற வார்த்தையை தவிர (ஒவ்வொன்றாக சொல்ல வேண்டும் என்று) கூடுதலாக அறிவிக்கின்றார்.


«أُمِرَ بِلَالٌ أَنْ يَشْفَعَ الْأَذَانَ وَيُوتِرَ الْإِقَامَةَ»، زَادَ حَمَّادٌ فِي حَدِيثِهِ: إِلَّا الْإِقَامَةَ


Next Page » « Previous Page