ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்:
தொழுகையில் கையை ஊன்றுவது வெறுக்கத்தக்கது.
992. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் தொழுகையில் தம் கையை ஊன்றி அமர்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
(இது அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்கள் கூறிய வார்த்தையாகும்)
(ஸஜ்தாவிற்காக அமர்ந்தாலும், அத்தஹிய்யாத்திற்காக அமர்ந்தாலும் கையை ஊன்றுவது தடை என்று மேற்கண்ட நபிமொழி குறிப்பிடுகிறது.)
ஒருவர் தொழுகையில் கை ஊன்றுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்று இப்னு ஷப்புவைஹி அறிவிக்கிறார். (எல்லா நிலையிலும் கையை ஊன்றுவது தடுக்கப்படுவதாக இந்தச் செய்தி கூறுகிறது)
ஒருவர் தொழுகையில் தம் கையை ஊன்றுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்று இப்னு ராஃபிஉ கூறுகிறார். இதை ஸஜ்தாவிலிருந்து எழும்போது பற்றிய பாடத்தில் குறிப்பிடுகிறார்.
ஒருவர் தொழுகையிலிருந்து எழும்போது தம் கையை ஊன்றி எழுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்று இப்னு அப்துல் மலிக் அறிவிக்கிறார். (இது ஸஜ்தாவிலிருந்து எழும்போது கை ஊன்றுவது தடுக்கப்படுவதாக குறிப்பிடுகிறது)
نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ: – أَنْ يَجْلِسَ الرَّجُلُ فِي الصَّلَاةِ، وَهُوَ مُعْتَمِدٌ عَلَى يَدِهِ
وَقَالَ ابْنُ شَبُّوَيْهِ: «نَهَى أَنْ يَعْتَمِدَ الرَّجُلُ عَلَى يَدِهِ فِي الصَّلَاةِ»،
وَقَالَ ابْنُ رَافِعٍ: «نَهَى أَنْ يُصَلِّيَ الرَّجُلُ، وَهُوَ مُعْتَمِدٌ عَلَى يَدِهِ» وَذَكَرَهُ فِي بَابِ الرَّفْعِ مِنَ السُّجُودِ،
وَقَالَ ابْنُ عَبْدِ الْمَلِكِ، «نَهَى أَنْ يَعْتَمِدَ الرَّجُلُ عَلَى يَدَيْهِ إِذَا نَهَضَ فِي الصَّلَاةِ»
சமீப விமர்சனங்கள்