Category: அல்அதபுல் முஃப்ரத்

Al-Adab al-Mufrad

Al-Adabul-Mufrad-614

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

614.


أَنَّ الطُّفَيْلَ بْنَ عَمْرٍو قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَلْ لَكَ فِي حِصْنٍ وَمَنَعَةٍ، حِصْنِ دَوْسٍ؟ قَالَ: فَأَبَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِمَا ذَخَرَ اللَّهُ لِلْأَنْصَارِ، فَهَاجَرَ الطُّفَيْلُ، وَهَاجَرَ مَعَهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ، فَمَرِضَ الرَّجُلُ فَضَجِرَ – أَوْ كَلِمَةٌ شَبِيهَةٌ بِهَا – فَحَبَا إِلَى قَرْنٍ، فَأَخَذَ مِشْقَصًا فَقَطَعَ وَدَجَيْهِ فَمَاتَ، فَرَآهُ الطُّفَيْلُ فِي الْمَنَامِ قَالَ: مَا فُعِلَ بِكَ؟ قَالَ: غُفِرَ لِي بِهِجْرَتِي إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَا شَأْنُ يَدَيْكَ؟ قَالَ: فَقِيلَ: إِنَّا لَا نُصْلِحُ مِنْكَ مَا أَفْسَدْتَ مِنْ يَدَيْكَ، قَالَ: فَقَصَّهَا الطُّفَيْلُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ» ، وَرَفَعَ يَدَيْهِ


Al-Adabul-Mufrad-254

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

254. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களில் ஒரு குழுவினரிடம் சென்றார்கள். அவர்கள் சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக, நான் அறிந்ததை நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் குறைவாகச் சிரித்து, அதிகமாக அழுவீர்கள்” என்று கூறினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து சென்றார்கள். (அவர்களின் வார்த்தைகள்) அந்த தோழர்களை அழ வைத்து விட்டது. அப்போது மதிப்பும், மாண்பும் மிக்க அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு (வஹீ) இறைச் செய்தி அறிவித்தான்: முஹம்மதே, என் அடியார்களை நீர் ஏன் நம்பிக்கையிழக்கச் செய்கிறீர்?.

உடனே நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்து, “நற்செய்தி பெறுங்கள்! நேர்மையாக நடந்து, நல்லதை நாடுங்கள்” என்று கூறினார்கள்.


خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَهْطٍ مِنْ أَصْحَابِهِ يَضْحَكُونَ وَيَتَحَدَّثُونَ، فَقَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا، وَلَبَكَيْتُمْ كَثِيرًا» ، ثُمَّ انْصَرَفَ وَأَبْكَى الْقَوْمَ، وَأَوْحَى اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِ: «يَا مُحَمَّدُ، لِمَ تُقَنِّطُ عِبَادِي؟» ، فَرَجَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَبْشِرُوا، وَسَدِّدُوا، وَقَارِبُوا»


Al-Adabul-Mufrad-1182

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1182.

ஜாபிர் பின் சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு போர்வையில் அமர்ந்திருந்தார்கள், அதன் ஓரங்கள் அவர்களின் கால்களில் தொங்கிக் கொண்டிருந்தன. ஜாபிர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே, எனக்கு உபதேசம் செய்யுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், எந்தவொரு நன்மையையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். உதாரணமாக, நீர் அருந்த விரும்புபவருக்கு உங்கள் வாளியிலிருந்து அவரது பாத்திரத்தில் நீர் ஊற்றுவது, அல்லது உங்கள் சகோதரருடன் மகிழ்ச்சியுடன் பேசுவது போன்ற செயல்களைச் செய்யுங்கள். மேலும், ஆடையை தரையில் இழுத்துச் செல்வதை தடுத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அது பெருமையின் ஒரு வடிவமாகும், அல்லாஹ் அதை விரும்புவதில்லை. யாராவது உங்களைப் பற்றி ஏதாவது குறை கூறினால், நீங்கள் அவரைப் பற்றி ஏதாவது குறை கூறாதீர்கள். அவரை விடுங்கள், அதன் பாவம் அவர் மீது இருக்கட்டும், அதன் வெகுமதி உங்களுக்கு கிடைக்கும். மேலும், யாரையும் திட்டாதீர்கள்.”

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “அதன் பிறகு நான் எந்தவொரு விலங்கையும் அல்லது மனிதனையும் திட்டவில்லை.”


أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُحْتَبٍ فِي بُرْدَةٍ، وَإِنَّ هُدَّابَهَا لَعَلَى قَدَمَيْهِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَوْصِنِي، قَالَ: «عَلَيْكَ بِاتِّقَاءِ اللَّهِ، وَلَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا، وَلَوْ أَنْ تُفْرِغَ لِلْمُسْتَسْقِي مِنْ دَلْوِكَ فِي إِنَائِهِ، أَوْ تُكَلِّمَ أَخَاكَ وَوَجْهُكَ مُنْبَسِطٌ، وَإِيَّاكَ وَإِسْبَالَ الْإِزَارِ، فَإِنَّهَا مِنَ الْمَخِيلَةِ، وَلَا يُحِبُّهَا اللَّهُ، وَإِنِ امْرُؤٌ عَيَّرَكَ بِشَيْءٍ يَعْلَمُهُ مِنْكَ فَلَا تُعَيِّرْهُ بِشَيْءٍ تَعْلَمُهُ مِنْهُ، دَعْهُ يَكُونُ وَبَالُهُ عَلَيْهِ، وَأَجْرُهُ لَكَ، وَلَا تَسُبَّنَّ شَيْئًا» ، قَالَ: فَمَا سَبَبْتُ بَعْدُ دَابَّةً وَلَا إِنْسَانًا


Al-Adabul-Mufrad-964

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

பாடம்:

ஒருவரின் கால் மரத்துப் போகும் போது என்ன கூறவேண்டும்?

964. அப்துர்ரஹ்மான் பின் ஸஃத் அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) இப்னு உமர் (ரலி) அவர்களின் கால் மரத்துப் போய்விட்டது. அப்போது ஒருவர் அவர்களிடம், “மக்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தமானவரை நினையுங்கள்” என்று கூறினார். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள், “யா முஹம்மத்” என்று கூறினார்கள். (மரத்துப் போன அவர்களின் கால் சரியாகிவிட்டது)


خَدِرَتْ رِجْلُ ابْنِ عُمَرَ، فَقَالَ لَهُ رَجُلٌ: اذْكُرْ أَحَبَّ النَّاسِ إِلَيْكَ، فَقَالَ: يَا مُحَمَّدُ


Al-Adabul-Mufrad-650

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

650. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம மத்திஃனீ பிஸம்ஈ, வ பஸரீ, வஜ்அல்ஹுமல் வாரிஸ மின்னீ, வன்ஸுர்னீ அலா அதுவ்வீ, வ அரினீ மின்ஹு ஸஃரீ” எனும் பிரார்த்தனையை கேட்பவர்களாக இருந்தார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! எனது செவியின் மூலமும், பார்வையின் மூலமும் எனக்கு நற்பலன்களை வழங்குவாயாக!. வயதான காலத்திலும் அவ்விரண்டையும் எனக்கு சீராக்குவாயாக! எனது எதிரிக்கு எதிராக எனக்கு உதவி செய்வாயாக! அவரை நான் பழிவாங்குவதை எனக்கு காட்டுவாயாக!)


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ مَتِّعْنِي بِسَمْعِي وَبَصَرِي، وَاجْعَلْهُمَا الْوَارِثَ مِنِّي، وَانْصُرْنِي عَلَى عَدُوِّي، وَأَرِنِي مِنْهُ ثَأْرِي»


Al-Adabul-Mufrad-701

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

701.


أَنَّهُ قَالَ لِأَبِيهِ: يَا أَبَتِ، إِنِّي أَسْمَعُكَ تَدْعُو كُلَّ غَدَاةٍ: «اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ» ، تُعِيدُهَا ثَلَاثًا حِينَ تُمْسِي، وَحِينَ تُصْبِحُ ثَلَاثًا، وَتَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ» ، تُعِيدُهَا ثَلَاثًا حِينَ تُمْسِي، وَحِينَ تُصْبِحُ ثَلَاثًا، فَقَالَ: نَعَمْ، يَا بُنَيَّ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بِهِنَّ، وَأَنَا أُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ

قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” دَعَوَاتُ الْمَكْرُوبِ: اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لَا إِلَهَ أَلَا أَنْتَ “


Al-Adabul-Mufrad-407

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

407.


«لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُصَارِمَ مُسْلِمًا فَوْقَ ثَلَاثِ لَيَالٍ، فَإِنَّهُمَا مَا صَارَمَا فَوْقَ ثَلَاثِ لَيَالٍ، فَإِنَّهُمَا نَاكِبَانِ عَنِ الْحَقِّ مَا دَامَا عَلَى صِرَامِهِمَا، وَإِنَّ أَوَّلَهُمَا فَيْئًا يَكُونُ كَفَّارَةً لَهُ سَبْقُهُ بِالْفَيْءِ، وَإِنْ هُمَا مَاتَا عَلَى صِرَامِهِمَا لَمْ يَدْخُلَا الْجَنَّةَ جَمِيعًا»


Al-Adabul-Mufrad-8

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

பெற்றோரிடம் மென்மையாகப் பேசுதல்.

8. தைஸலா பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், (காரிஜிய்யாவின்-ஹரூரிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) நஜ்தா பின் ஆமிர் என்பவரின் ஆதரவாளர்களுடன் சேர்ந்திருந்தபோது சில பாவங்களை செய்துவிட்டேன். அவைகளை பெரும்பாவங்கள் என்று நான் கருதினேன். எனவே இது பற்றி இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நான் கூறினேன். அதற்கவர்கள், “அந்தப் பாவங்கள் எவை? என்று என்னிடம் கேட்டார்கள். நான், “அவை இன்னின்ன பாவங்கள்” என்று கூறினேன்.

அதற்கவர்கள், இவைகள் பெரும்பாவங்கள் அல்ல. பெரும்பாவங்கள் ஒன்பதாகும். அவைகள்:

1 . அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும்,
2 . நியாயமின்றி கொலைசெய்வதும்,
3 . போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும்,
4 . கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும்,
5 . வட்டியை உண்பதும்,
6 . அனாதைகளின் செல்வத்தை உண்பதும்,
7 . கஅபாவின் புனிதத்தை சீர்குழைப்பதும்,
8 . (கேலி கிண்டல் செய்வதும்; அல்லது) சூனியம் செய்வதும்,
9 . பெற்றோருக்கு தொல்லைத் தந்து அழவைப்பதும் ஆகும்

என்று கூறினார்கள்.

மேலும் இப்னு உமர் (ரலி) அவர்கள், “நீ நரகத்தை பயந்து; சொர்க்கம் செல்ல ஆசைப்படுகிறாயா? என்று என்னிடம் கேட்டார்கள். நான், “ஆம் அல்லாஹ்வின் மீது ஆணையாக!” என்று கூறினேன். அதற்கவர்கள், உனது தந்தை உயிரோடு உள்ளாரா?

كُنْتُ مَعَ النَّجَدَاتِ، فَأَصَبْتُ ذُنُوبًا لَا أَرَاهَا إِلَّا مِنَ الْكَبَائِرِ، فَذَكَرْتُ ذَلِكَ لِابْنِ عُمَرَ قَالَ: مَا هِيَ؟ قُلْتُ: كَذَا وَكَذَا، قَالَ: لَيْسَتْ هَذِهِ مِنَ الْكَبَائِرِ، هُنَّ تِسْعٌ: الْإِشْرَاكُ بِاللَّهِ، وَقَتْلُ نَسَمَةٍ، وَالْفِرَارُ مِنَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَةِ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَإِلْحَادٌ فِي الْمَسْجِدِ، وَالَّذِي يَسْتَسْخِرُ، وَبُكَاءُ الْوَالِدَيْنِ مِنَ الْعُقُوقِ. قَالَ لِي ابْنُ عُمَرَ: أَتَفْرَقُ النَّارَ، وَتُحِبُّ أَنْ تَدْخُلَ الْجَنَّةَ؟ قُلْتُ: إِي وَاللَّهِ، قَالَ: أَحَيٌّ وَالِدُكَ؟ قُلْتُ: عِنْدِي أُمِّي، قَالَ: فَوَاللَّهِ لَوْ أَلَنْتَ لَهَا الْكَلَامَ، وَأَطْعَمْتَهَا الطَّعَامَ، لَتَدْخُلَنَّ الْجَنَّةَ مَا اجْتَنَبْتَ الْكَبَائِرَ


Al-Adabul-Mufrad-1237

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

உண்ணி பூச்சிகளை சபிக்க வேண்டாம்.

1237. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது உண்ணி பூச்சியை சபித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதை சபிக்காதீர்!  ஏனெனில் நபிமார்களில் ஒரு நபியை தொழுகைக்காக அது எழுப்பியது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


 أَنَّ رَجُلًا لَعَنَ بُرْغُوثًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لَا تَلْعَنْهُ، فَإِنَّهُ أَيْقَظَ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ لِلصَّلَاةِ»


Al-Adabul-Mufrad-715

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

715. வணக்கங்களில் சிறந்தது எதுவென நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “ஒருவர் தனக்காக (அல்லாஹ்விடம்) செய்யும் பிரார்த்தனையாகும்” என அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْعِبَادَةِ أَفْضَلُ؟ قَالَ: «دُعَاءُ الْمَرْءِ لِنَفْسِهِ»


Next Page »