Category: அல்அதபுல் முஃப்ரத்

Al-Adab al-Mufrad

Al-Adabul-Mufrad-120

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நல்லொழுக்கமுள்ள அண்டைவீட்டார் பற்றிய பாடம்.

உமாரா இப்னு குராப் அவர்கள் தனது சிற்றன்னை முஃமின்களின் அன்னை ‘ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டதாகக் கூறினார்கள், “ஒரு பெண்ணின் கணவர் அவளை விரும்பினான், அவள் கோபமாகவோ அல்லது ஆர்வம் இல்லாததாலோ தன்னைக் கொடுக்க மறுத்துவிட்டால், அதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? என்று”ஆம்,” என்று அவர்கள் பதிலளித்தார்கள். “உங்கள் மீது அவர் வைத்திருக்கும் உரிமையின் ஒரு பகுதி என்னவென்றால், நீங்கள் ஒரு சேணத்தில் இருக்கும்போது அவர் உங்களை விரும்பினால், நீங்கள் அவரை மறுக்கக்கூடாது.” மேலும் நான் அவரிடம் கேட்டேன்” , ‘எங்களில் ஒருவர் மாதவிடாயாக இருந்தால், அவளுக்கும் அவரது கணவருக்கும் ஒரே ஒரு போர்வை மட்டும் இருந்தால், அவள் என்ன செய்ய வேண்டும்?’ என்று. அதற்கு அவர், ‘அவள் தன் போர்த்தியைச் சுற்றிக் கொண்டு அவனுடன் தூங்க வேண்டும். அதன் கீழ் பகுதியில் அவளும் அதன் மேல் இருப்பதை அவனும் பயன்படுத்திக் கொள்ளலாம். என்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் என்னுடன் ஒரு இரவில் என்ன செய்தார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். நான் கொஞ்சம் வாற் கோதுமை சமைத்து அவருக்ளுக்கு ரொட்டி செய்து வைத்தேன். அவர் உள்ளே வந்தவுடன், மீண்டும் வாசலுக்கு திரும்பி, பின்னர் பள்ளிவாசலுக்கு சென்றார்கள்.

إِنَّ زَوْجَ إِحْدَانَا يُرِيدُهَا فَتَمْنَعُهُ نَفْسَهَا ، إِمَّا أَنْ تَكُونَ غَضَبَى أَوْ لَمْ تَكُنْ نَشِيطَةً ، فَهَلْ عَلَيْنَا فِي ذَلِكَ مِنْ حَرَجٍ ؟ قَالَتْ : نَعَمْ ، إِنَّ مِنْ حَقِّهِ عَلَيْكِ أَنْ لَوْ أَرَادَكِ وَأَنْتِ عَلَى قَتَبٍ لَمْ تَمْنَعِيهِ ، قَالَتْ : قُلْتُ لَهَا : إِحْدَانَا تَحِيضُ ، وَلَيْسَ لَهَا وَلِزَوْجِهَا إِلاَّ فِرَاشٌ وَاحِدٌ أَوْ لِحَافٌ وَاحِدٌ ، فَكَيْفَ تَصْنَعُ ؟ قَالَتْ : لِتَشُدَّ عَلَيْهَا إِزَارَهَا ثُمَّ تَنَامُ مَعَهُ ، فَلَهُ مَا فَوْقَ ذَلِكَ ، مَعَ أَنِّي سَوْفَ أُخْبِرُكِ مَا صَنَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم : إِنَّهُ كَانَ لَيْلَتِي مِنْهُ ، فَطَحَنْتُ شَيْئًا مِنْ شَعِيرٍ ، فَجَعَلْتُ لَهُ قُرْصًا ، فَدَخَلَ فَرَدَّ الْبَابَ ، وَدَخَلَ إِلَى الْمَسْجِدِ ، وَكَانَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ أَغْلَقَ الْبَابَ ، وَأَوْكَأَ الْقِرْبَةَ ، وَأَكْفَأَ الْقَدَحَ ، وَأطْفَأَ الْمِصْبَاحَ ، فَانْتَظَرْتُهُ أَنْ يَنْصَرِفَ فَأُطْعِمُهُ الْقُرْصَ ، فَلَمْ يَنْصَرِفْ ، حَتَّى غَلَبَنِي النَّوْمُ ، وَأَوْجَعَهُ الْبَرْدُ ، فَأَتَانِي فَأَقَامَنِي ثُمَّ قَالَ : أَدْفِئِينِي أَدْفِئِينِي ، فَقُلْتُ لَهُ : إِنِّي حَائِضٌ ، فَقَالَ : وَإِنْ ، اكْشِفِي عَنْ فَخِذَيْكِ ، فَكَشَفْتُ لَهُ عَنْ فَخِذَيَّ ، فَوَضَعَ خَدَّهُ وَرَأْسَهُ عَلَى فَخِذَيَّ حَتَّى دَفِئَ . فَأَقْبَلَتْ شَاةٌ لِجَارِنَا دَاجِنَةٌ فَدَخَلَتْ ، ثُمَّ عَمَدَتْ إِلَى الْقُرْصِ فَأَخَذَتْهُ ، ثُمَّ أَدْبَرَتْ بِهِ . قَالَتْ : وَقَلِقْتُ عَنْهُ ، وَاسْتَيْقَظَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَبَادَرْتُهَا إِلَى الْبَابِ ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : خُذِي مَا أَدْرَكْتِ مِنْ قُرْصِكِ ، وَلاَ تُؤْذِي جَارَكِ فِي شَاتِهِ


Al-Adabul-Mufrad-110

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அண்டை வீட்டாரின் உரிமை பற்றிய பாடம்.

அருகில் ஓர் அண்டைவீட்டார் இருக்கும் நிலையில் தூரத்தில் இருக்கும் அண்டை வீட்டாரிடமிருந்து (எதையாவது கொடுப்பதை) ஆரம்பிக்க வேண்டாம். என்றாலும் தூரத்தில் இருக்கும் அண்டை வீட்டாருக்கு (கொடுக்க) ஆரம்பிப்பதற்கு முன்னாள் அருகில் இருக்கும் அண்டை வீட்டாரிடமிருந்து ஆரம்பியுங்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


وَلَا يَبْدَأُ بِجَارِهِ الْأَقْصَى قَبْلَ الْأَدْنَى، وَلَكِنْ يَبْدَأُ بِالْأَدْنَى قَبْلَ الْأَقْصَى


Al-Adabul-Mufrad-94

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

தந்தை தன் பிள்ளைக்கு நன்மை செய்வது பற்றிய பாடம்.

 

அவர்கள் தங்கள் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு நன்மை செய்ததால் அல்லாஹ் அவர்களை ‘நல்லோர்கள்’ (அப்ரார்) என்று அழைக்கின்றான். அதேபோல் உங்கள் பெற்றோர்கள் மீது உங்களுக்கு கடமைகள் உள்ளது. அதேபோல உங்கள் பிள்ளைகள் மீதும் உங்களுக்கு கடமைகள் உள்ளது.

அறிவிப்பவர் : இப்னு உமர்


إِنَّمَا سَمَّاهُمُ اللَّهُ أَبْرَارًا، لِأَنَّهُمْ بَرُّوا الْآبَاءَ وَالْأَبْنَاءَ، كَمَا أَنَّ لِوَالِدِكَ عَلَيْكَ حَقًّا، كَذَلِكَ لِوَلَدِكَ عَلَيْكَ حَقٌّ


Al-Adabul-Mufrad-92

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

தந்தையின் நற்பண்புகள் மற்றும் அவர் தன் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய நன்மைகள் பற்றிய பாடம்.

நல்லறங்கள் என்பது அல்லாஹுவிடமிருந்து வருவதாகும். நற்பண்புகள் என்பது தன் பெற்றோரிடமிருந்து வருவதாகும் என்று அவர்கள் (மக்கள்) கூறுவார்கள். என்று தன் தந்தை கூறியதை கேட்டார்.

அறிவிப்பவர்: நுமைர் இப்னு அவ்ஸ்.


الصَّلاَحُ مِنَ اللَّهِ ، وَالأَدَبُ مِنَ الآبَاءِ


Al-Adabul-Mufrad-83

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

தன் பெண் பிள்ளைகள் மரணிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதை வெறுப்பவர் பற்றிய பாடம்.

இப்னு உமர் (ரலி) அவர்களுடன் ஒரு மனிதர் இருந்தார். அவருக்கு பெண் குழந்தைகள் இருந்தார்கள். அவர் அந்த பெண் பிள்ளைகள் மரணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எனவே இப்னு உமர் (ரலி) அவர்கள் அவரிடம் கோபம் கொண்டு: “நீயா அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குகிறாய்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


أَنَّ رَجُلًا كَانَ عِنْدَهُ، وَلَهُ بَنَاتٌ فَتَمَنَّى مَوْتَهُنَّ، فَغَضِبَ ابْنُ عُمَرَ فَقَالَ: أَنْتَ تَرْزُقُهُنَّ؟


Al-Adabul-Mufrad-80

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட தன் பெண் பிள்ளையை பராமரிப்பவரின் சிறப்பு.

80. மாபெரும் தர்மம் எதுவென்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா ?” என்று நபி (ஸல்) அவர்கள் ஷுராகா பின் ஜுஃஷும் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர், “ஆம்” (அறிவியுங்கள்) அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்களே வாழ்வாதாரத்திற்கு ஒரே வழி என இருக்கும் நிலையில் உங்கள் பெண் பிள்ளை உங்களிடம் திருப்பி அனுப்பப்படும் போது அவளுக்கு செலவு செய்வதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷுராகா பின் மாலிக் பின் ஜுஃஷும் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِسُرَاقَةَ بْنِ جُعْشُمٍ أَلَا أَدُلُّكَ عَلَى أَعْظَمِ الصَّدَقَةِ، أَوْ مِنْ أَعْظَمِ الصَّدَقَةِ؟» قَالَ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «ابْنَتُكَ مَرْدُودَةٌ إِلَيْكَ، لَيْسَ لَهَا كَاسِبٌ غَيْرُكَ


Al-Adabul-Mufrad-74

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

74.


قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: «مِمَّنْ أَنْتَ؟» قُلْتُ: مِنْ تَيْمِ تَمِيمٍ، قَالَ: مِنْ أَنْفُسِهِمْ أَوْ مِنْ مَوَالِيهِمْ؟ قُلْتُ: مِنْ مَوَالِيهِمْ، قَالَ: فَهَلَّا قُلْتَ: مِنْ مَوَالِيهِمْ إِذًا؟


Al-Adabul-Mufrad-62

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

62. ஒரு மனிதன் தனக்கோ அல்லது தனது குடும்பத்தாருக்கோ செலவு செய்தால் அதற்கு அல்லாஹ் கூலி வழங்காமல் இருப்பதில்லை. உங்களை சார்ந்து இருப்பவரிடமிருந்து துவங்குங்கள். பிறகு எஞ்சியதை உங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் பின்னர் அதற்கு அடுத்த நிலை உறவினர்களுக்கும் செலவு செய்யுங்கள்.

என இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.


مَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى نَفْسِهِ وَأَهْلِهِ يَحْتَسِبُهَا إِلَّا آجَرَهُ اللَّهُ تَعَالَى فِيهَا، وَابْدَأْ بِمَنْ تَعُولُ، فَإِنْ كَانَ فَضْلًا فَالْأَقْرَبَ الْأَقْرَبَ، وَإِنْ كَانَ فَضْلًا فَنَاوِلْ


Al-Adabul-Mufrad-47

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

உறவுகளை இணைத்து வாழ்வது மற்றும் அதன் அவசியம் பற்றிய பாடம்.

தன் பாட்டனார் கூறியதாக குலைப் இப்னு மன்ஃபா என்பவர் அறிவிக்கிறார்: அல்லாஹுவின் தூதரே நான் யாருக்கு நன்மை செய்ய வேண்டும்? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் : உன் தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் பிறகு உனது கட்டுப்பாட்டில் இருக்கும் உனக்கு உரிமை உடையவருக்கும் (நன்மை செய்ய வேண்டும்). மேலும் உறவுகள் என்பது இணைக்கப்பட வேண்டியவைகள் ஆகும் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : குலைப் இப்னு மன்ஃபா


قَالَ جَدِّي : يَا رَسُولَ اللَّهِ ، مَنْ أَبَرُّ ؟ قَالَ : أُمَّكَ وَأَبَاكَ ، وَأُخْتَكَ وَأَخَاكَ ، وَمَوْلاَكَ الَّذِي يَلِي ذَاكَ ، حَقٌّ وَاجِبٌ ، وَرَحِمٌ مَوْصُولَةٌ .


Al-Adabul-Mufrad-45

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஒரு மனிதர் தனது தந்தையை பெயர் சொல்லி அழைக்கக் கூடாது அவருக்கு முன்னால் அமரவோ நடக்கவோ கூடாது என்பது பற்றிய பாடம்.

நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் வெளியே சென்றோம் அப்போது அவருக்கு ஸாலிம் என்பவர் ” அப்துர் ரஹ்மானுடைய தந்தையே உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்று முகமன் கூறினார்.
அறிவிப்பவர் : ஷஹர் இப்னு ஹவ்ஷப்


قَالَ : خَرَجْنَا مَعَ ابْنِ عُمَرَ ، فَقَال لَهُ سَالِمٌ : الصَّلاَةَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ.


Next Page » « Previous Page