Category: அல்அதபுல் முஃப்ரத்

Al-Adab al-Mufrad

Al-Adabul-Mufrad-356

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

356. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும்; பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


«مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيُجِلَّ كَبِيرَنَا، فَلَيْسَ مِنَّا»


Al-Adabul-Mufrad-353

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

பெரியோரின் சிறப்பு.

353. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا، فَلَيْسَ مِنَّا»


Al-Adabul-Mufrad-396

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஒருவர் தனது கூட்டத்தாரை நேசிப்பது.

396. நான் நபி (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும் போது அவர்களுக்குத் துணைபுரிவது இனவெறி ஆகுமா? என்று கேட்டேன். அதற்கவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَمِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُعِينَ الرَّجُلُ قَوْمَهُ عَلَى ظُلْمٍ؟ قَالَ: «نَعَمْ»


Al-Adabul-Mufrad-479

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

479. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரது கையில் பேரீத்தங்கன்று இருக்கும் நிலையில் கியாமத் நாள் வந்துவிட்டால் அதை நட்டிவைப்பதற்கு அவரால் முடிந்த பட்சத்தில் அவர் நட்டுவைத்துவிடட்டும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«إِنْ قَامَتِ السَّاعَةُ وَفِي يَدِ أَحَدِكُمْ فَسِيلَةٌ، فَإِنِ اسْتَطَاعَ أَنْ لَا تَقُومَ حَتَّى يَغْرِسَهَا فَلْيَغْرِسْهَا»


Al-Adabul-Mufrad-1204

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1204. அபூராஷித் அல்ஹுபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றவற்றிலிருந்து எங்களுக்கு சில செய்திகளைத் தெரிவியுங்கள்’ என்று கூறினேன். அப்போதவர்கள், என்னை நோக்கி கடிதம் ஒன்றைப் போட்டார்கள். மேலும், ‘இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு (மற்றவர்கள் மூலம்) எழுதி(யனுப்பி)ய கடிதமாகும் என்று கூறினார்கள். அப்போது அதை நான் பார்த்தேன். அதில் இடம்பெற்றிருந்து செய்தி பின்வருமாறு இருந்தது:

அபூபக்ர் (ரலி) அவர்கள், (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே!, ‘நான் காலையிலும், மாலையிலும், ஓதுவதற்கேற்ற (பிரார்த்தனை) ஒன்றை எனக்குக் கற்றுத்தாருங்கள்’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்)அவர்கள், “அல்லாஹும்ம ஃபா(த்)திரஸ் ஸமாவாத்தி வல்அர்ழி, ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாத(த்)தி, லாயிலாஹ இல்லா அன்(த்)த, ரப்ப குல்லி ஷையிவ் வமலீ(க்)கஹூ, அவூது பி(க்)க மின் ஷர்ரி நஃப்ஸீ, வமின் ஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹீ, வ அன் அக்தரிஃப அலா நஃப்ஸீ ஸூஅன், அவ் அஜுர்ரஹூ இலா முஸ்லிம் என்று ஓதுங்கள்” என்று கூறினார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. அனைத்துப்

أَتَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو فَقُلْتُ لَهُ: حَدِّثْنَا بِمَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَلْقَى إِلَيَّ صَحِيفَةً فَقَالَ: هَذَا مَا كَتَبَ لِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَظَرْتُ فِيهَا، فَإِذَا فِيهَا: إِنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ رَضِيَ اللَّهُ عَنْهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، عَلِّمْنِي مَا أَقُولُ إِذَا أَصْبَحْتُ وَإِذَا أَمْسَيْتُ، فَقَالَ: ” يَا أَبَا بَكْرٍ، قُلِ: اللَّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَشَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ، وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِي سُوءًا أَوْ أَجُرُّهُ إِلَى مُسْلِمٍ


Al-Adabul-Mufrad-1202

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1202.


قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ، عَلِّمْنِي شَيْئًا أَقُولُهُ إِذَا أَصْبَحْتُ وَأَمْسَيْتُ، قَالَ: ” قُلِ: اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ، قُلْهُ إِذَا أَصْبَحْتَ وَإِذَا أَمْسَيْتَ، وَإِذَا أَخَذْتَ مَضْجَعَكَ


Al-Adabul-Mufrad-1205

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1205.


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ قَالَ: «بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا» ، وَإِذَا اسْتَيْقَظَ مِنْ مَنَامِهِ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ»


Next Page » « Previous Page