ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
260. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் முஸ்லிமாக ஆகாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) முஸ்லிமாக ஆக முடியாது. உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். அதனால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம்.
உங்களுக்கிடையே பகை ஏற்படுவதை விட்டு உங்களை எச்சரிக்கிறேன். அவை தான் மழித்துவிடக் கூடியது. அவை முடியை மழிக்கும் என்று நான் கூறவில்லை. மாறாக மார்க்கத்தை மழித்து விடும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரை (ரலி)
وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَا تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُسْلِمُوا، وَلَا تُسْلِمُوا حَتَّى تَحَابُّوا، وَأَفْشُوا السَّلَامَ تَحَابُّوا، وَإِيَّاكُمْ وَالْبُغْضَةَ، فَإِنَّهَا هِيَ الْحَالِقَةُ، لَا أَقُولُ لَكُمْ: تَحْلِقُ الشَّعْرَ، وَلَكِنْ تَحْلِقُ الدِّينَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي أُسَيْدٍ مِثْلَهُ
சமீப விமர்சனங்கள்