Category: தப்ரானி – அல்முஃஜமுல் அவ்சத்

Al-Mu’jam al-Awsat

Almujam-Alawsat-4055

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4055. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமுதாயம் இரக்கத்திற்குரிய சமுதாயம். மறுமையில் அதற்கு (நிரந்தர) வேதனை இல்லை. உலகிலேயே அதற்கு நிலநடுக்கத்தில் மாட்டிக்கொள்ளுதல்; குழப்பங்கள்; கொல்லப்படுதல் போன்றவற்றால் வேதனை செய்யப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


«إِنَّ أُمَّتِي أُمَّةٌ مَرْحُومَةٌ، لَا عَذَابَ عَلَيْهَا، إِنَّمَا عَذَابُهَا فِي الدُّنْيَا: الزَّلَازِلُ، وَالْفِتَنُ، وَالْقَتْلُ»


Almujam-Alawsat-2359

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2359.


«إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ جَمَعَ اللَّهُ الْخَلَائِقَ فِي صَعِيدٍ وَاحِدٍ، ثُمَّ رَفَعَ لِكُلِّ قَوْمٍ آلِهَتَهُمُ الَّتِي كَانُوا يَعْبُدُونَ فَيُورِدُونَهُمُ النَّارَ، وَيَبْقَى الْمُوَحِّدُونَ، فَيُقَالَ لَهُمْ: مَا تَنْتَظِرُونَ؟ فَيَقُولُونَ: نَنْتَظِرُ رَبًّا كُنَّا نَعْبُدُهُ بِالْغَيْبِ، فَيُقَالُ لَهُمْ: أَوَتَعْرِفُونَهُ؟ فَيَقُولُونَ: إِنْ شَاءَ عَرَّفَنَا نَفْسَهُ، فَيَتَجَلَّى لَهُمْ تَبَارَكَ وَتَعَالَى، فَيَخِرُّونَ لَهُ سُجَّدًا، فَيُقَالُ لَهُمْ: يَا أَهْلَ التَّوْحِيدِ، ارْفَعُوا رُءُوسَكُمْ، فَقَدْ أَوْجَبَ اللَّهُ لَكُمُ الْجَنَّةَ، وَجَعَلَ مَكَانَ كُلِّ رَجُلٍ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا فِي النَّارِ»


Almujam-Alawsat-620

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

620. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் முஹம்மது நபி (ஸல் அவர்களின் சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு மனிதரிடமும் ஒரு யூதரையோ அல்லது கிறுஸ்துவரையோ அல்லாஹ் கொடுப்பான். அப்போது, “நரகத்தில் உனக்கு பிணையாக (பதிலாக) இவரைக் கொடுத்துக் கொள்” என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


«إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ أَعْطَى اللَّهُ عَزَّ وَجَلَّ الرَّجُلَ مِنْ أَمَةِ مُحَمَّدٍ الْيَهُودِيَّ وَالنَّصْرَانِيَّ، فَيُقَالُ: افْدِ بِهَذَا نَفْسَكَ مِنَ النَّارِ»


Almujam-Alawsat-1

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

بسم الله الرحمن الرحيم

அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அத்தியாயம்: 1

அலிஃப் வரிசை.

(எனது ஆசிரியர்களில்) அஹ்மத் என்ற பெயருடையவர்களின் ஹதீஸ்கள்.

1 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமுதாயம் இரக்கத்திற்குரிய சமுதாயம். மறுமையில் அதற்கு வேதனையில்லை.

மறுமைநாளில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் (நமக்கு முன்)  வேதம்கொடுக்கப்பட்ட யூத, கிருத்துவ சமுதாயத்திலிருந்து ஒருவரை கொடுத்து “முஸ்லிமே! இவர் தான் உனக்கு பதிலாக நரகில் இருப்பார்” என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


«أُمَّتِي أَمَةٌ مَرْحُومَةٌ، لَا عَذَابَ عَلَيْهَا فِي الْآخِرَةِ،

فَإِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ، دُفِعَ إِلَى كُلِّ رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ رَجُلٌ مِنْ أَهْلِ الْكِتَابَيْنِ، فَيُقَالَ: يَا مُسْلِمُ، هَذَا فِدَاؤُكَ مِنَ النَّارِ»


Almujam-Alawsat-4170

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4170. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (இஸ்ரா, மிஃராஜ்—ஜெரூசலத்திற்கும் பின்பு விண்ணுலகத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்ட) விண்ணுலகப் பயணத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டேன். அப்போது அவர்கள், முஹம்மதே! உமது சமுதாயத்திற்கு என்னுடைய ஸலாமைக் கூறுங்கள். மேலும் “சொர்க்கத்தின் மண் தூய்மையானது; அதன் தண்ணீர் மதுரமானது; மேலும் சொர்க்கம் விசாலமான காலியிடமாகும்; அதில் மரம் நடவேண்டுமென்றால் ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்), அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை), அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்),  வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது) என்ற வார்த்தைகளைக் கூறவேண்டும் என்பதையும் உமது சமுதாயத்திற்கு தெரியப்படுத்துங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«رَأَيْتُ إِبْرَاهِيمَ لَيْلَةَ أُسْرِيَ بِي، فَقَالَ: يَا مُحَمَّدُ أَقْرِئْ أُمَّتَكَ السَّلَامَ، وَأَخْبِرْهُمْ أَنَّ الْجَنَّةَ طَيِّبَةُ التُّرْبَةِ، عَذْبَةُ الْمَاءِ، وَإِنَّهَا قِيعَانٌ، وَغِرَاسُها قَوْلُ: سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»


Almujam-Alawsat-1943

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1943. அப்துல்லாஹ் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு கற்றுத் தந்த ஒரு வார்த்தையை உனக்கும் கற்றுத்தரவா?” என்று அபூஅய்யூப் (ரலி) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான், “ஆம்” கற்றுத்தாருங்கள் எனது தந்தையின் சகோதரரே! என்று கூறினேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் (அடைக்கலமாக) தங்க வந்த சமயம், “சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலத்தை உமக்கு கற்றுத்தரட்டுமா?” என்று என்னிடம் கேட்டார்கள். நான், “ஆம்” அல்லாஹ்வின் தூதரே! “என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம்!  என்று கூறினேன். அப்போது அவர்கள், “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியில்லாமல் யுக்தியுமில்லை; சக்தியுமில்லை) என்ற வார்த்தைகளை அதிகமாக கூறுவீராக! என்று கூறினார்கள்.


قَالَ لِي أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيُّ: أَلَا أُعَلِّمُكَ كَلِمَةً عَلَّمَنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قُلْتُ: بَلَى يَا عَمُّ. قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ حِينَ نَزَلَ عَلَيَّ قَالَ: «أَلَا أُعَلِّمُكَ كَلِمَةً مِنْ كَنْزِ الْجَنَّةِ؟» قُلْتُ: بَلَى، يَا رَسُولَ اللَّهِ، بِأَبِي أَنْتَ وَأُمِّي. قَالَ: «أَكْثِرْ مِنْ قَوْلِ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»


Almujam-Alawsat-9278

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9278. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பூமியில் வசிப்போரின் செயல்பதிவேடுகள், ஒவ்வொரு திங்கள், வியாழக் கிழமைகளில் வானில் இருப்போரிடம் நகல் எடுக்கப்படும். அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வொரு முஸ்லிமான மனிதருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையுள்ள மனிதரைத் தவிர.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«تُنْسَخُ دَوَاوِينُ أَهْلِ الْأَرْضِ فِي دَوَاوِينِ أَهْلِ السَّمَاءِ فِي كُلِّ اثْنَيْنٍ وَخَمِيسٍ، فَيُغْفَرُ لِكُلِّ مُسْلِمٍ لَا يُشْرَكُ بِاللَّهِ شَيْئًا إِلَّا رَجُلًا بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ»


Almujam-Alawsat-7037

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7037. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அந்த நாட்களில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குகிறான்; தமக்கிடையே பகைமையுள்ள இருமனிதர்களைத் தவிர.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ، فَيَغْفِرُ اللَّهُ لِمَنْ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا إِلَّا الْمُتَهَاجِرَيْنِ»


Almujam-Alawsat-7419

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7419. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம் அடியார்களின்) செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

அப்போது பாவமன்னிப்புக் கேட்பவருக்கு மன்னிப்பு வழங்கப்படும். பாவத்தை நினைத்து மனம் வருந்துபவருக்கு மன்னிப்பு வழங்கப்படும். விரோதம் கொண்டவர்களுக்கு அவர்கள் (விரோதத்திலிருந்து) வெளியேறும் வரை அது அவர்களுக்கு மறுக்கப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

 


«تُعْرَضُ الْأَعْمَالُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ، فَمِنْ مُسْتَغْفِرٍ فَيُغْفَرُ لَهُ، وَمِنْ تَائِبٍ فَيُتَابُ عَلَيْهِ، وَيُرَدُّ أَهْلُ الضَّغَائِنِ لِضَغَائِنِهِمْ حَتَّى يَتُوبُوا»


Almujam-Alawsat-1602

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1602.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَارَ قَوْمًا مِنَ الْأَنْصَارِ فِي دَرَاهِمْ، فَذَبَحُوا لَهُ شَاةً، وَصَنَعُوا لَهُ مِنْهَا طَعَامًا، فَأَخَذَ مِنَ اللَّحْمِ شَيْئًا لِيَأْكُلَهُ، فَمَضَغَهُ سَاعَةً لَا يُسِيغُهُ، فَقَالَ: «مَا شَأْنُ هَذَا اللَّحْمِ؟» فَقَالُوا: شَاةٌ لِفُلَانٍ، ذَبَحْنَاهَا حَتَّى يَجِيءَ صَاحِبُهَا، فَنُرْضِيهِ مِنْ لَحْمِهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَطْعِمُوهَا الْأُسَارَى»


Next Page » « Previous Page