Category: தப்ரானி – அல்முஃஜமுல் அவ்சத்

Al-Mu’jam al-Awsat

Almujam-Alawsat-7659

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7659. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு பெரும்குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை உலக முடிவு நாள் வராது. ஆனால், அவ்விரண்டும் முன் வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும்.

மேலும் அவ்விரண்டு குழுவினர்களுக்கிடையில் (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்றும் தோன்றும். இரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக நெருக்கத்திலிருக்கும் பிரிவினர் அவர்களைக் கொன்றொழிப்பார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)


«تَقْتَتِلُ فِئَتَانِ عَظِيمَتَانِ، دَعْوَاهُمَا وَاحِدَةٌ، فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ مَرَقَتْ مِنْهُمْ مَارِقَةٌ، تَقْتُلُهَا أَوْلَى الطَّائِفَتَيْنِ بِالْحَقِّ»


Almujam-Alawsat-879

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

879. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கடனை அடைக்க முடியாமல் சிரமப்படும் ஒருவருக்கு யார் அவகாசம் அளிக்கிறாரோ அல்லது அவரது கடனைத் தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மறுமை நாளில் தன் அர்ஷின் நிழலில் இடம்தருகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ أَنْظَرَ مُعْسِرًا أَوْ وَضَعَ عَنْهُ، أَظَلَّهُ اللَّهُ فِي ظِلِّ عَرْشِهِ يَوْمَ الْقِيَامَةِ»


Almujam-Alawsat-3121

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3121.


«إِنَّ وَرَاءَكُمْ أَيَّامَ الصَّبْرِ، الْمُتَمَسِّكُ فِيهِنَّ يَوْمَئِذٍ بِمِثْلِ مَا أَنْتُمْ عَلَيْهِ لَهُ كَأَجْرِ خَمْسِينَ مِنْكُمْ» ، قَالُوا: يَا نَبِيَّ اللَّهِ، أَوَمِنْهُمْ؟ قَالَ: «لَا، بَلْ مِنْكُمْ» ، قَالُوا: يَا نَبِيَّ اللَّهِ، أَوَمِنْهُمْ؟ قَالَ: «لَا، بَلْ مِنْكُمْ» ثَلَاثَ مَرَّاتٍ، أَوْ أَرْبَعًا


Almujam-Alawsat-8789

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8789. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«بَادِرُوا بِأَعْمَالِكُمْ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ، يُصْبِحُ أَحَدُكُمْ فِيهَا مُسْلِمًا وَيُمْسِي كَافِرًا، وَيُمْسِي مُسْلِمًا وَيُصْبِحُ كَافِرًا، يَبِيعُ دِينَهُ بِالْعَرَضِ الْيَسِيرِ»


Almujam-Alawsat-4449

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4449.


«عَلَى كُلِّ سُلَامَى أَوْ عَلَى عُضْوٍ مِنْ بَنِي آدَمَ فِي كُلِّ يَوْمٍ صَدَقَةٌ، وَتُجْزِئُ مِنْ ذَلِكَ كُلِّهِ رَكْعَتَا الضُّحَى»


Almujam-Alawsat-8394

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8394. அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவரின் தங்கை அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி) அவர்களும் இருந்தார்கள். மேலும் அவர் கைப்பகுதி அகலமான நீண்ட ஆடையை அணிந்திருந்தார். அவரைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே சென்று விட்டார்கள். உடனே ஆயிஷா (ரலி), அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வெறுக்கும் ஒரு செயலை உன்னிடம் கண்டுள்ளார்கள். எனவே நீ சென்றுவிடு என்று அஸ்மாவிடம் கூறினார்கள். பின்பு அவர்கள் கதவை திறக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளே வந்தார்கள். அவர்களிடம், ஆயிஷா (ரலி)  நீங்கள் ஏன் சென்றுவிட்டீர்கள் என்று கேட்க, அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அஸ்மாவின் உடல் அமைப்பை நீ கவனிக்கவில்லையா?  ஒரு பெண் முகத்தையும், இரு முன்கை விரல்களையும் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தக்கூடாது என்பதை செயலில் செய்து காட்டினார்கள்…


دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عَائِشَةَ وَعِنْدَهَا أُخْتُهَا أَسْمَاءُ وَعَلَيْهَا ثِيَابٌ شَامِيَّةٌ وَاسِعَةُ الْأَكِمَّةِ، فَلَمَّا نَظَرَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ، فَخَرَجَ، فَقَالَتْ لَهَا عَائِشَةُ: تَنَحِّي، فَقَدْ رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْرًا كَرِهَهُ، فَتَنَحَّتْ، فَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَتْهُ عَائِشَةُ: لِمَ قَامَ؟ فَقَالَ: «أَوَلَمْ تَرَيْ إِلَى هَيْئَتِهَا، إِنَّهُ لَيْسَ لِلْمَرْأَةِ الْمُسْلِمَةِ أَنْ يَبْدُوَ مِنْهَا إِلَّا هَكَذَا» وَأَخَذَ بِكُمَّيْهِ، فَغَطَّى بِهِمَا كَفَّيْهِ حَتَّى لَمْ يَبْدُ مِنْ كَفَّيْهِ إِلَّا أَصَابِعُهُ، وَنَصَبَ كَفَّيْهِ عَلَى صُدْغَيْهِ حَتَّى لَمْ يَبْدُ إِلَّا وَجْهُهُ


Almujam-Alawsat-638

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

638. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்களுக்கு வெள்ளை ஆடைகளைப் பற்றி வலியுறுத்துகிறேன். அதையே நீங்கள் அணியுங்கள். மரணம் அடைந்தவர்களையும் அதில் கஃனிடுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«عَلَيْكُمْ بِثِيَابِ الْبَيَاضِ فَالْبَسُوهَا، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ»


Almujam-Alawsat-8340

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8340.


«ائْتَدِمُوا مِنْ هَذِهِ الشَّجَرَةِ، يَعْنِي: الزَّيْتَ، وَاكْتَحِلُوا بِهَذَا الْإِثْمِدِ، فَإِنَّهُ مَجْلَاةٌ لِلْبَصَرِ، وَمَنْ عُرِضَ عَلَيْهِ طِيبٌ فَلْيُصِبْ مِنْهُ»


Almujam-Alawsat-7848

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7848. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நடத்தையில்) சந்தேகம் ஏற்பட்டாலே தவிர வேறு எதற்காகவும் பெண்களை விவாகரத்து செய்யாதீர்கள். ஏனெனில் காமத்திற்காக (மட்டும்) திருமணம் செய்யும் ஆண்களையும், பெண்களையும் அல்லாஹ் விரும்பமாட்டான்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


«لَا تُطَلِّقُوا النِّسَاءَ إِلَّا مِنْ رِيبَةٍ، فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الذَّوَّاقِينَ وَلَا الذَّوَّاقَاتِ»


Next Page » « Previous Page