Category: தப்ரானி – அல்முஃஜமுல் கபீர்

Al-Mu’jam Al-Kabir

Almujam-Alkabir-10204

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10204. கோடைக் காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் லுஹர் தொழுகையின் (நேர) அளவு, ஒருவரின் நிழல் அவரது மூன்று பாதங்கள் அளவிற்கு வந்ததிலிருந்து ஐந்து பாதங்கள் வரும் வரை இருக்கும். குளிர் காலத்தில் ஐந்து பாதங்கள் முதல் ஏழு பாதங்கள் அளவிற்கு வரும் வரை இருக்கும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«كَانَ قَدْرُ صَلَاةِ الظُّهْرِ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّيْفِ ثَلَاثَةَ أَقْدَامٍ إِلَى خَمْسَةِ أَقْدَامٍ، وَفِي الشِّتَاءِ خَمْسَةَ أَقْدَامٍ إِلَى سَبْعَةٍ»


Almujam-Alkabir-593-2

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

593-2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு பிறகு, உங்கள் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களை பற்றித்தான்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)


«إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمْ بَعْدِي كُلُّ مُنَافِقٍ عَلِيمِ اللِّسَانِ»


Almujam-Alkabir-22

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் (மலம், ஜலம் போன்ற) இயற்கை உபாதை இருக்கும் நிலையில் தொழ வேண்டாம்.

அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)


«لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ وَهُوَ يَجِدُ مِنَ الْأَذَى شَيْئًا»

يَعْنِي الْغَائِطَ وَالْبَوْلَ


Almujam-Alkabir-116

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

116.


بَعَثَنِي عُثْمَانُ فَدَعَوْتُ لَهُ الْأَشْتَرَ – فَقَالَ ابْنُ عَوْنٍ: فَأَظُنُّهُ قَالَ: فَطَرَحْتُ لِأَمِيرِ الْمُؤْمِنِينَ وِسَادَةً، وَلَهُ وِسَادَةٌ – فَقَالَ: «يَا أَشْتَرُ مَا يُرِيدُ النَّاسُ مِنِّي؟» قَالَ: ثَلَاثًا مَا مِنْ إِحْدَاهُنِّ بُدٌّ، قَالَ: «مَا هُنَّ؟» قَالَ: يُخَيِّرُونَكَ بَيْنَ أَنْ تَخْلَعَ لَهُمْ أَمْرَهُمْ، فَتَقُولَ: هَذَا أَمْرُكُمْ، فَاخْتَارُوا لَهُ مَنْ شِئْتُمْ، وَبَيْنَ أَنْ تَقُصَّ مِنْ نَفْسِكَ، فَإِنْ أَبَيْتَ هَذَيْنِ فَإِنَّ الْقَوْمَ قَاتِلُوكَ، قَالَ: «مَا مِنْ إِحْدَاهُنَّ بُدٌّ؟» قَالَ: مَا مِنْ إِحْدَاهُنَّ بُدٌّ قَالَ: «أَمَّا أَنْ أَخْلَعَ لَهُمْ أَمْرَهُمْ فَمَا كُنْتُ لِأَخْلَعَ سِرْبَالًا سُرْبِلْتُهُ» قَالَ: وَقَالَ الْحَسَنُ: قَالَ: ” وَاللهِ لَأَنْ أُقَدَّمَ فَيُضْرَبَ عُنُقِي أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَخْلَعَ أَمْرَ أُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْضُهَا عَلَى بَعْضٍ – قَالَ ابْنُ عَوْنٍ: وَهَذَا أَشْبَهُ بِكَلَامِ عُثْمَانَ – وَأَمَّا أَنْ أَقُصَّ مِنْ نَفْسِي، فَوَاللهِ لَقَدْ عَلِمْتُ أَنَّ صَاحِبَيْ بَيْنَ يَدَيْ كَانَا يُعَاقَبَانِ، وَمَا يَقُومُ بَدَنِي للقِصَاصِ، وَأَمَّا أَنْ تَقْتُلُونِي فَوَاللهِ لَئِنْ قَتَلْتُمُونِي لَا تُحَابُّونَ بَعْدِي أَبَدًا، وَلَا تُقَاتِلُونَ بَعْدِي عَدُوًّا جَمِيعًا أَبَدًا “، فَقَامَ الْأَشْتَرُ فَانْطَلَقَ، فَمَكَثْنَا، فَقُلْنَا: لَعَلَّ النَّاسَ إِذْ جَاءَ رَجُلٌ كَأَنَّهُ ذِئْبٌ فَاطَّلَعَ مِنْ بَابٍ، ثُمَّ رَجَعَ، ثُمَّ جَاءَ مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ فِي ثَلَاثَةَ عَشَرَ رَجُلًا حَتَّى انْتَهَوْا إِلَى عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ، فَأَخَذَ بِلِحْيَتِهِ، فَقَالَ بِهَا، وَقَالَ بِهَا، حَتَّى سَمِعْتُ وَقْعَ أَضْرَاسِهِ، وَقَالَ مَا أَغْنَى عَنْكَ مُعَاوِيَةُ، مَا أَغْنَى عَنْكَ ابْنُ عَامِرٍ، مَا أَغْنَى عَنْكَ كُتُبُكَ، قَالَ: «أَرْسِلْ لِحْيَتِي يَا ابْنَ أَخِي، أَرْسِلْ لِحْيَتِي يَا ابْنَ أَخِي» ، قَالَ: فَأَنَا رَأَيْتُهُ اسْتَدْعَى رَجُلًا مِنَ الْقَوْمِ بِعَيْنِهِ فَقَامَ إِلَيْهِ بِمِشْقَصٍ حَتَّى وَجَأَهُ بِهِ فِي رَأْسَهِ، قُلْتُ: ثُمَّ مَهْ قَالَ: ثُمَّ تَعَانُوا عَلَيْهِ، وَاللهِ حَتَّى قَتَلُوهُ


Almujam-Alkabir-254

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்களிடமிருந்து ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களின் அறிவிப்புகள்.

254. மக்களிடம் ஒரு காலம் வரும். அன்று தமது செல்வத்திலிருந்து ஜகாத் கொடுப்பது மனிதனுக்கு மிக கடினமாகத் தோன்றும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி)


«يُوشِكُ أَنْ يَأْتِيَ عَلَى النَّاسِ زَمَانٌ يَشُقُّ عَلَى الرَّجُلِ أَنْ يُخْرِجَ فِيهِ زَكَاةَ مَالِهِ»


Almujam-Alkabir-10562

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10562. (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்கள், “நரகம் தடைசெய்யப்பட்ட ஒருவரை பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள்.

அதற்கு மக்கள், “ஆம் அறிவியுங்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பணிவுள்ள; நாகரீகமிக்க; மக்களின் நெருக்கத்திற்குரிய; மென்மையான ஒவ்வொருவருக்கும் நரகம் தடைசெய்யப்பட்டதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


«أَلَا أُخْبِرُكُمْ بِمَنْ يَحْرُمُ عَلَى النَّارِ؟» قَالُوا: بَلَى يَا رَسُولَ اللهِ، قَالَ: «كُلُّ هَيِّنٍ لَيِّنٍ قَرِيبٍ سَهْلٍ»


Almujam-Alkabir-7635

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7635.


كَانَ رَسُولُ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ إِذَا أَكَلَ طَعَامًا يَقُولُ: «الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفُورٍ، وَلَا مُوَدَّعٍ، وَلَا مُسْتَغْنًى عَنْهُ»


Almujam-Alkabir-13813

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13813. அனுமதிக்கப்பட்டவைகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது விவாகரத்தாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«أَبْغَضُ الحَلاَلِ إِلى اللهِ الطَّلاَقُ»


Almujam-Alkabir-11419

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11419. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«لَيْسَ لَنَا مَثَلُ السَّوْءِ، الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ»


Next Page » « Previous Page