3228. ஹாரிஸா பின் நுஃமான் (ரலி) அவர்கள், கண்தெரியாதவராக ஆகிவிட்டார். அவர் தனது தொழுமிடத்திலிருந்து அறையின் (வாசல்) கதவு வரை ஒரு கயிற்றைக் கட்டியிருப்பார். தன்னிடம் இரு கைப்பிடி உள்ள கூடை ஒன்றை வைத்திருப்பார். கூடையினுள் பேரீத்தம் பழம் போன்றவை இருக்கும். வாசலில் ஏழை யாரெனும் வந்து ஸலாம் கூறினால் தன்னிடமுள்ள கயிற்றின் மற்றொரு பகுதியில் வைத்து அந்தக் கூடையை (கயிறு) வழியாக அனுப்புவார். (பிறகு அந்த ஏழை கூடையை அறைக்குள் அனுப்பி விடுவார்.)
ஹாரிஸா (ரலி) அவர்களின் உறவினர்கள் இதற்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம் என்று சொன்னபோது, (அதை மறுத்துவிட்டு) “ஏழைக்கு தனது கையால் தர்மம் செய்வது தீய மரணத்தை விட்டு காக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உஸ்மான் என்பவர்.
كَانَ حَارِثَةُ بْنُ النُّعْمَانِ قَدْ ذَهَبَ بَصَرُهُ، فَاتَّخَذَ خَيْطًا فِي مُصَلَّاهُ إِلَى بَابِ حُجْرَتِهِ، وَوَضَعَ عِنْدَهُ مِكْتَلًا فِيهِ تَمْرٌ وَغَيْرُهُ، فَكَانَ إِذَا جَاءَ الْمِسْكِينُ فَسَلَّمَ أَخَذَ مِنْ ذَلِكَ الْمِكْتَلِ، ثُمَّ أَخَذَ بِطَرَفِ الْخَيْطِ حَتَّى يُنَاوِلَهُ، وَكَانَ أَهْلُهُ يَقُولُونُ: نَحْنُ نَكْفِيكَ. فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مُنَاوَلَةُ الْمِسْكِينِ تَقِي مِيتَةَ السُّوءِ»
சமீப விமர்சனங்கள்