Category: தப்ரானி – அல்முஃஜமுஸ் ஸகீர்

Al-Mu’jam as-Saghir

Almujam-Assaghir-866

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

866.


مَا جَلَسَ ابْنُ عُمَرَ مَجْلِسًا إِلَّا تَكَلَّمَ فِيهِ بِكَلِمَاتٍ فَسَأَلَ عَنْهُنَّ , فَقَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ يَدْعُو بِهِنَّ: «اللَّهُمَّ , اغْفِرْ لِي مَا قَدَّمْتُ , وَمَا أَخَّرْتُ , وَمَا أَسْرَرْتُ , وَمَا أَعْلَنْتُ , وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي اللَّهُمَّ , ارْزُقْنِي مِنْ طَاعَتِكَ مَا يَحُولُ بَيْنِي وَبَيْنَ مَعْصِيَتِكَ , وَارْزُقْنِي مِنْ خَشْيَتِكَ مَا تُبَلِّغُنِي بِهِ رَحْمَتَكَ , وَارْزُقْنِي مِنَ الْيَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيَّ مِنْ مَصَائِبِ الدُّنْيَا , وَبَارِكْ فِي سَمْعِي وَبَصَرِي , وَاجْعَلْهُمَا الْوَارِثَ مِنِّي , وَاجْعَلْ ثَأْرِي عَلَى مَنْ ظَلَمَنِي , وَانْصُرْنِي عَلَى مَنْ عَادَانِي , وَلَا تَجْعَلْ مُصِيبَتِي فِي دِينِي , وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّي , وَلَا مَبْلَغَ عِلْمِي»


Almujam-Assaghir-485

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

485. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறுதி நாளின் நெருக்கத்தில்) இஸ்லாமிய மார்க்கத்தை கடைப்பிடிப்பது மிகவும் சிரமமாகிவிடும். மக்கள் அதிகம் கஞ்சத்தனமாக நடந்துக் கொள்வர். மோசமான மனிதர்களே இருக்கும் போது உலக அழிவு நிகழும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«لَا يَزْدَادُ الزَّمَانُ إِلَّا شِدَّةً , وَلَا يَزْدَادُ النَّاسُ إِلَّا شُحًّا , وَلَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى شِرَارِ النَّاسِ»


Almujam-Assaghir-992

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

992.

…ஆதம் அலை பாவம் புரிந்த போது தனது தலையை வானத்தை நோக்கி உயர்த்தி, “இறைவா! முஹம்மதின் பொருட்டால் நீ என்னை மன்னிக்குமாறு கேட்கிறேன்” என கூறினார். அப்போது, “முஹம்மது யார்?” என இறைவன் வஹீ மூலம் கேட்க, “நீ கண்ணியம் பொருந்தியவன். நீ என்னை படைத்த போது எனது தலையை உனது சிம்மாசனத்தை நோக்கி உயர்த்தினேன். அப்போது லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என எழுதப்பட்டு இருந்தது. உன்னுடைய பெயரோடு யாரை சேர்த்திருந்தாயோ அவரை விட உன்னிடம் மதிப்பு பெற்றவர் எவரும் இல்லை என அறிந்து கொண்டேன்” என கூறினார். அதற்கு அல்லாஹ், “ஆதமே! அவர் உமது சந்ததியிலிருந்து தோன்றும் நபிமார்களில் இறுதியானவர். அவர் இல்லாவிட்டால் உன்னை நான் படைத்திருக்க மாட்டேன்” என இறைவன் வஹீ மூலம் கூறினான்…


لَمَّا أَذْنَبَ آدَمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الذَّنْبَ الَّذِي أَذْنَبَهُ رَفَعَ رَأْسَهُ إِلَى الْعَرْشِ , فَقَالَ: أَسْأَلُكَ بِحَقِّ مُحَمَّدٍ إِلَّا غَفَرْتَ لِي , فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ , «وَمَا مُحَمَّدٌ وَمَنْ مُحَمَّدٌ؟» فَقَالَ: تَبَارَكَ اسْمُكَ، لَمَّا خَلَقْتَنِي رَفَعْتُ رَأْسِي إِلَى عَرْشِكَ، فَإِذَا فِيهِ مَكْتُوبٌ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ , مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ , مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، فَعَلِمْتُ أَنَّهُ لَيْسَ أَحَدٌ أَعْظَمَ عِنْدَكَ قَدْرًا مِمَّنْ جَعَلْتَ اسْمَهُ مَعَ اسْمِكَ , فَأَوْحَى اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِ: «يَا آدَمُ , إِنَّهُ آخِرُ النَّبِيِّينَ مِنْ ذُرِّيَّتِكَ , وَإِنَّ أُمَّتَهُ آخِرُ الْأُمَمِ مِنْ ذُرِّيَّتِكَ , وَلَوْلَاهُ يَا آدَمُ مَا خَلَقْتُكَ»


Almujam-Assaghir-1010

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1010. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு இரவிலும் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை  வழமையாக ஓதிவரக்கூடியவர் மரணிக்கும்போது ஷீஹீதாக மரணிப்பார்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«مَنْ دَاوَمَ عَلَى قِرَاءَةِ يس كُلَّ لَيْلَةٍ , ثُمَّ مَاتَ , مَاتَ شَهِيدٌ»


Almujam-Assaghir-417

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

417. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பகலிலும், இரவிலும் ஒருவர் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை  ஓதினால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ قَرَأَ يس فِي يَوْمٍ أَوْ لَيْلَةٍ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ غُفِرَ لَهُ»


Almujam-Assaghir-724

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

724. இந்த சமுதாயம் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவார்கள். ஒரு கூட்டத்தை தவிர அனைவரும் நரகம் செல்வர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, அந்த ஒரு கூட்டம் யார்? என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நானும் என்னுடைய தோழர்களும் இன்றைய தினம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருக்கக் கூடியவர்கள்” தான் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

«تَفْتَرِقُ هَذِهِ الْأُمَّةُ عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ فِرْقَةً كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا وَاحِدَةً» , قَالُوا: وَمَا هِيَ تِلْكَ الْفُرْقَةُ؟ قَالَ: «مَا أَنَا عَلَيْهِ الْيَوْمَ وَأَصْحَابِي»


Almujam-Assaghir-596

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

596. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகையாகும். தொழுகையின் திறவுகோல் உளூ (அங்கத்தூய்மை) ஆகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلَاةُ , وَمِفْتَاحُ الصَّلَاةِ الْوُضُوءُ»


Almujam-Assaghir-877

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

877. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முதல்நாள் இரவில் பிறைப் பார்க்கப்பட்டு இது இரண்டாம் நாளின் பிறை என்று கூறப்படுமளவிற்கு பிறை பெரியதாக தெரிவது மறுமைநாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مِنِ اقْتِرَابِ السَّاعَةِ انْتِفَاخُ الْأَهِلَّةِ , وَأَنْ يُرَى الْهِلَالُ لِلَيْلَةٍ , فَيُقَالُ: هُوَ ابْنُ لَيْلَتَيْنِ


Almujam-Assaghir-1132

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1132. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மாதத்தின்) முதல் நாளில் பிறைப் பார்க்கப்படும் போது இது இரண்டாம் நாளின் பிறை என்று கூறப்படுவதும், பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும், திடீர் மரணங்கள் நிகழ்வதும் மறுமைநாள் நெருங்கிவிட்டதின் அடையாளங்களாகும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

 


«مِنِ اقْتِرَابِ السَّاعَةِ أَنْ يُرَى الْهِلَالُ قِبَلًا , فَيُقَالُ لِلَيْلَتَيْنِ , وَأَنْ تُتَّخَذَ الْمَسَاجِدَ طُرُقًا , وَأَنْ يَظْهَرَ مَوْتُ الْفُجَاءَةِ»


Next Page » « Previous Page