Category: முஸ்னத்-பஸ்ஸார்

Musnad al-Bazzar

Bazzar-2327

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2327. (அறியாமைக் காலத்தில் நாங்கள் வணங்கி வந்த எங்கள்) சிலைகள் இருந்த இடத்திலேயே (அவைகளை அகற்றிவிட்டு) தாயிஃப் பள்ளிவாசலை அமைத்துக் கொள்ளுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அபுல் ஆஸ் (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُ أَنْ يَجْعَلَ مَسْجِدَ الطَّائِفِ حَيْثُ كَانَتْ طَاغِيَتُهُمْ»


Bazzar-3982

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3982.


«إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوا بِالصَّلَاةِ فِي شِدَّةِ الْحَرِّ

يَعْنِي  بِصَلَاةِ الظُّهْرِ»


Bazzar-7583

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7583. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், அல்லாஹ்விடம் மூன்று தடவை சொர்க்கத்தை கேட்டு பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது.

ஒருவர், (அல்லாஹ்விடம்) மூன்று தடவை நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


من سأل الجنة ثلاثًا قالت الجنة: اللهم أدخله الجنة، وَمَنْ استعاذ من النار ثلاثًا قالت النار: اللهم أعذه من النار.


Bazzar-9681

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9681. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு அடியார், (அல்லாஹ்விடம்) நரகத்தை விட்டு காப்பாற்றும்படி ஏழுதடவை பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை என்னை விட்டு காப்பாற்றுவாயாக!” என நரகம் கூறுகிறது.

ஒரு அடியார், (அல்லாஹ்விடம்) ஏழுதடவை சொர்க்கத்தைக் கேட்டு பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை என்னிடம் தங்கச் செய்துவிடுவாயாக!” என்று (அல்லது இது போன்ற வார்த்தையை) சொர்க்கம் கூறுகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَا استعاذ عبد من النار سبعا إلا قالت النار اللهم أعذه مني ولا سأل الجنة سبعا إلا قالت الجنة اللهم أسكينه إياي أو كلمة نحوها.


Bazzar-2905

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2905.


«مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ الْخَبِيثَةِ أَوِ الْبَقْلَةِ الْخَبِيثَةِ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا»


Bazzar-3514

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3514. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்கள் விசயத்திலும் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை எச்சரித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)

பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட செய்தியை உமர் (ரலி) வழியாகவே நாம் மனனமிட்டுள்ளோம். என்றாலும் அது நபியின் கூற்றா? என்பதில் அறிவிப்பாளர்கள் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர் என்பதால் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்தியை கூறியுள்ளோம்.

என்றாலும் உமர் (ரலி) வழியாக வரும் செய்தி ஆதாரத்திற்கேற்ற செய்திதான் என்பதால் அதை நாம் கூறியுள்ளோம். மேலும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்தி ஹஸன் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்தொடர் என்பதால் அதையும் கூறியுள்ளோம்.


«حَذَّرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّ مُنَافِقٍ عَلِيمِ اللِّسَانِ»


Next Page » « Previous Page