Category: முஸ்னத்-பஸ்ஸார்

Musnad al-Bazzar

Bazzar-305

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

உமர் (ரலி) அவர்களிடமிருந்து அஹ்னஃப் பின் கைஸ் என்பவரின் அறிவிப்பு…

305. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்கள் விசயத்திலும் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை எச்சரித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்)


حَذَّرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّ مُنَافِقٍ عَلِيمِ اللِّسَانِ


Bazzar-78

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

78.


«أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْمَاءَ بِنْتَ عُمَيْسٍ حِينَ نُفِسَتْ بِمُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ أَنْ تَغْتَسِلَ وَتُهِلَّ»


Bazzar-9658

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9658. மக்களை சொர்க்கத்தில் நுழையச்செய்கின்ற காரியம் எது? என்று உங்களுக்கு தெரியுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், “அல்லாஹ்வும், அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், “இறையச்சமும், நற்குணமும்” என்று பதிலளித்தார்கள்.

மக்களை அதிகம் நரகத்தில் நுழையச்செய்கின்ற காரியம் எது? என்று உங்களுக்கு தெரியுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், “அல்லாஹ்வும், அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், “வாயும், மர்ம உறுப்பும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أتدرون ما يدخل الناس الجنة قالوا: الله ورسوله أعلم , قال تقوى الله وحسن الخلق أتدرون ما يدخل الناس النار قالوا: الله ورسوله أعلم , قال الأجوفان الفم والفرج.


Bazzar-9647

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9647. “உங்கள் விசயத்தில் நான் அதிகம் பயப்படுவது மர்ம உறுப்பு, வாய் ஆகியவற்றைப் பற்றித் தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 


أخوف ماأخاف عليكم الأجوفان الفرج والفم.


Bazzar-9653

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9653. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் மலம், ஜலம் போன்ற இயற்கை உபாதை இருக்கும் நிலையிலோ அல்லது அதை அடக்கிக்கொண்டோ தொழ (நிற்க) வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


لا يصلين أحدكم وبه شيء من الخبث أو هو يدافع الخبث.


Bazzar-4389

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4389.


كَيْفَ تقول ياحمزة إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ قَالَ: أَقُولُ كَذَا وكذا قال: وكيف تقول أنت ياعلي. قَالَ: أَقُولُ كَذَا وَكَذَا أَحْسَبُهُ قَالَ: إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي مَنَّ عَلَيَّ وَأَفْضَلُ الْحَمْدِ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ رَبِّ كُلِّ شَيْءٍ وَإِلَهِ كُلِّ شَيْءٍ أَعُوذُ بِكَ مِنَ النَّارِ.


Bazzar-3487

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3487. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் எனக்காகப் பூமியைச் சுருட்டிக் காட்டினான். நான் அதன் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் பார்த்தேன். அதில் எனக்குச் சுருட்டிக் காட்டப்பட்ட அளவுக்கு என் சமுதாயத்தாரின் ஆட்சி விரிவடையும். எனக்குச் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தாலான (தங்கம் மற்றும் வெள்ளியின்) இரு கருவூலங்கள் வழங்கப்பட்டன.

நான் என் இறைவனிடம் என் சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழித்துவிடாதே எனப் பிரார்த்தித்தேன். மேலும், “அவர்கள்மீது அவர்களிடையே உள்ள எதிரிகளைத் தவிர வெளி எதிரிகளைச் சாட்டி விடாதே! என்றும் பிரார்த்தித்தேன்…

என் இறைவன், “முஹம்மதே! நான் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அது மாற்றப்படாது. நான் உம்முடைய சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழிக்கமாட்டேன் என்பதை உமக்கு (வாக்குறுதியாக) அளிக்கிறேன். மேலும், அவர்களுக்கெதிராக அவர்களிடையேயுள்ள எதிரிகள் அல்லாமல் வெளி எதிரிகளைச் சாட்டி, அவர்களது ஆட்சியை முற்றாக அழிக்கமாட்டேன்; எதிரிகள் பூமியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அவர்களுக்கு எதிராகத் திரண்டாலும் சரியே! ஆனால், அவர்களிலேயே சிலர் சிலரை அழிப்பார்கள். அவர்களிலேயே சிலர் சிலரைச் சிறைபிடிப்பார்கள்” என்று கூறினான்.

மேலும் அல்லாஹ்வின்

إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى زَوَى لِيَ الْأَرْضَ حَتَّى رَأَيْتُ مَشَارِقَهَا وَمَغَارِبَهَا، وَإِنَّ مُلْكَ أُمَّتِي سَيَبْلُغُ مَا زُوِيَ لِي مِنْهَا، وَإِنَّ رَبِّي أَعْطَانِي الْكَنْزَيْنِ الْأَحْمَرَ وَالْأَبْيَضَ،

وَإِنِّي سَأَلْتُ رَبِّي أَنْ لَا يُهْلِكَهَا بِسَنَةٍ عَامَّةٍ، وَلَا يُسَلِّطَ عَلَيْهَا عَدُوًّا فَيَهْلَكُوا بِالْعَامَّةِ، وَلَا يَلْبِسَنَا شِيَعًا، وَلَا يُذِيقَ بَعْضَنَا بَأْسَ بَعْضٍ، فَقَالَ: يَا مُحَمَّدُ إِنِّي إِذَا قَضَيْتُ قَضَاءً، فَإِنَّهُ لَا يُرَدُّ، وَإِنِّي أَعْطَيْتُكَ لِأُمَّتِكَ أَنْ لَا أُهْلِكَهُمْ بِسَنَةٍ عَامَّةٍ، وَلَا أُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا فَيُهْلِكُوهُمْ بِعَامَّةٍ حَتَّى يَكُونَ بَعْضُهُمْ يَقْتُلُ بَعْضًا وَبَعْضُهُمْ يَسْبِي بَعْضًا “،

قَالَ: وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَإِنِّي لَا أَخَافُ عَلَى أُمَّتِي إِلَّا الْأَئِمَّةَ الْمُضِلِّينَ، فَإِذَا وُضِعَ السَّيْفُ فِي أُمَّتِي لَمْ يُرْفَعْ عَنْهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ» ،

قَالَ أَحْمَدُ بْنُ مَنْصُورٍ: فَقُلْتُ لِعَبْدِ الرَّزَّاقِ إِنَّمَا هَذَا عَنْ ثَوْبَانَ، فَقَالَ: لَا نَظَرْتَ وَهُوَ هَكَذَا،

وَهَذَا الْحَدِيثُ رَوَاهُ حَمَّادُ بْنُ زَيْدٍ، وَعَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ الصَّوَابُ ،

وَرَوَاهُ قَتَادَةُ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي أَسْمَاءَ عَنْ ثَوْبَانَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bazzar-3389

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3389.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ فِي الْعِيدَيْنِ سَبْعًا، فِي الْأُولَى وَفِي الْآخِرَةِ خَمْسًا»


Bazzar-2751

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

2751. ஹதீஸ் எண்-2750 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் சிறிது வார்த்தை மாற்றத்துடன் வந்துள்ளது.


رَمَقْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ نَحْوَهُ


Bazzar-2750

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

2750. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையை பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு நாள் இரவில் அவர்களுடன் தங்கினேன். அப்போது அவர்கள் (நடுஇரவில்) எழுந்து பல்துலக்க ஆரம்பித்தார்கள். பிறகு உளூச் செய்து (இரவுத்தொழுகை) தொழ நின்றார்கள். நானும் அவர்களுடன் தொழ நின்றேன்.

(பிறகு) அவர்கள் திருக்குர்ஆனின் 2 வது அத்தியாயமான ஸூரத்துல் பகராவை ஓத ஆரம்பித்தார்கள். அதில் அல்லாஹ்வின் அருள் சம்பந்தமான வசனங்கள் வரும் போதெல்லாம் ஓதுவதை நிறுத்திவிட்டு அல்லாஹ்வின் அருளைக் கேட்டார்கள். அதில் அல்லாஹ்வின் தண்டனை சம்பந்தமான வசனங்கள் வரும்போதெல்லாம் ஓதுவதை நிறுத்திவிட்டு அல்லாஹ்வின் தண்டனையை விட்டு பாதுகாப்பு கேட்டார்கள். பின்பு அவர்கள் நிலையில் நின்ற அளவு ருகூஃவில் (குனிந்து) இருந்தார்கள். மேலும் அந்த ருகூவில், “ஸுப்ஹான தில்ஜபரூத்தி, வல்மலகூத்தி, வல்கிப்ரியாயி வல்அளமஹ்” (பொருள்: அடக்கி ஆளுதலும், அதிகாரமும், பெருமையும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் பரிசுத்தமானவன்) என்று கூறினார்கள்.

பிறகு ஸஜ்தாவில், நிலையில் நின்ற அளவு இருந்தார்கள். ஸஜ்தாவிலும் அந்த பிரார்த்தனையை கூறினார்கள். பின்பு நிலைக்கு எழுந்து 3 வது அத்தியாயமான ஸூரத்து ஆல இம்ரானை ஓதினார்கள். பிறகு முதல் ரக்அத்தில்

قُمْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَأَرَدْتُ أَنْ أَرْمُقَ صَلَاتَهُ فَاسْتَاكَ، ثُمَّ تَوَضَّأَ، ثُمَّ قَامَ يُصَلِّي فَقُمْتُ مَعَهُ فَبَدَأَ فَاسْتَفْتَحَ مِنْ سُورَةِ الْبَقَرَةِ لَا يَمُرُّ بِآيَةِ رَحْمَةٍ إِلَّا وَقَفَ فَسَأَلَ، وَلَا يَمُرُّ بِآيَةِ عَذَابٍ إِلَّا وَقَفَ فَتَعَوَّذَ، ثُمَّ رَكَعَ فَمَكَثَ رَاكِعًا بِقَدْرِ قِيَامِهِ يَقُولُ فِي رُكُوعِهِ: «سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ، وَالْمَلَكُوتِ، وَالْكِبْرِيَاءِ، وَالْعَظَمَةِ» ، ثُمَّ سَجَدَ بِقَدْرِ رُكُوعِهِ يَقُولُ فِي سُجُودِهِ: «سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ، وَالْمَلَكُوتِ، وَالْكِبْرِيَاءِ، وَالْعَظَمَةِ» ثُمَّ قَرَأَ آلَ عِمْرَانَ يَفْعَلُ مِثْلَ ذَلِكَ


Next Page » « Previous Page