Category: முஸ்னத்-பஸ்ஸார்

Musnad al-Bazzar

Bazzar-5095

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5095. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை பார்த்து “பூமியில் நீ தான் மிகவும் அல்லாஹ்விற்கு விருப்பமான ஊராவாய்! என்னுடைய சமுதாயத்தினர் உன்னை விட்டும் என்னை வெளியேற்றாமலிருந்தால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم نَظَرَ إِلَى مَكَّةَ فَقَالَ: إِنَّكِ لأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَى اللَّهِ، ولولاَ أَنَّ قَوْمِي أَخْرَجُونِي مِنْكِ مَا خَرَجْتُ.


Bazzar-4690

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4690. நபி (ஸல்) அவர்கள் மக்காவை பார்த்து “பூமியில் நீ தான் மிகவும் அல்லாஹ்விற்கு விருப்பமான ஊராவாய்! என்னுடைய சமுதாயத்தினர் உன்னை விட்டும் என்னை வெளியேற்றாமலிருந்தால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ النَّبيَّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم نَظَرَ إِلَى مَكَّةَ فَقَالَ: إِنَّكِ لأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَى اللَّهِ، ولولاَ أَنَّ قَوْمِي أَخْرَجُونِي مِنْكِ مَا خَرَجْتُ.


Bazzar-7937

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

7937. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது அல்ஹுஜ்ஜூன் என்ற இடத்தில் நின்றவர்களாக அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! (என்னுடைய சமுதாயத்தினரால்) உன்னை விட்டும் நான் வெளியேற்றப்படாமலிருந்தால் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)……..என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم وقف عام الفتح بالحجون فقال: والله إنك لأخير أرض الله وأحب أرض الله إلى الله، ولولاَ أني أخرجت منك ما خرجت وإنها لم تحل لأحد كان قبلي، ولاَ تحل لأحد بعدي، وَإنَّما أحلت لي ساعة من نهار، ثُمَّ هي حرام ساعتي هذه لا يعضد شجرها، ولاَ يحتش كلأها، ولاَ تلتقط ضالتها إلاَّ لمنشد قال: فقال رجل قال – وزعم الناس أنه عباس – يا رَسولَ اللهِ إلاَّ الإذخر فإنه لبيوتنا ولقبورنا ولعيوننا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم: إلاَّ الإذخر.


Bazzar-2210

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2210. நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துக்கொண்டிருக்கும் போது அவர்களிடத்தில் நான் வந்தேன். அந்த வேலை முடிந்தவுடன் அவர்கள், “அப்துல்லாஹ்வே” என்று (என்னை) அழைத்து, “இந்த இரத்தத்தைக் கொண்டு சென்று இதை யாரும் பார்க்காதவாறு கீழே கொட்டிவிடு” என்று கூறினார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களை விட்டுத் தனியே சென்று அதைக் குடித்து விட்டேன். நான் அவர்களிடம் திரும்பி வந்தபோது, “அப்துல்லாஹ்வே! அதை நீ என்ன செய்தாய்?” என்று கேட்டார்கள். “மக்களை விட்டும் மறைவான இடம் என்று நான் கருதிய ஒரு இடத்தில் அதை வைத்துவிட்டேன்” என்று நான் கூறினேன். அவர்கள், “அதை நீ குடித்து விட்டாயா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன்…

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)


احْتَجَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَانِي الدَّمَ، فَقَالَ: «اذْهَبْ فَغَيِّبْهُ» فَذَهَبْتُ فَشَرِبْتُهُ ثُمَّ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي: «مَا صَنَعْتَ بِهِ؟» قُلْتُ غَيَّبْتُهُ، قَالَ: «لَعَلَّكَ شَرِبْتَهُ؟» قُلْتُ: شَرِبْتُهُ.


Bazzar-937

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

937.


مَرَرْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي نَخْلٍ فَرَأَى قَوْمًا فِي رُءُوسِ النَّخْلِ يُلَقِّحُونَ فَقَالَ: ” مَا تَصْنَعُونَ أَوْ مَا يَصْنَعُ هَؤُلَاءِ؟ قَالَ: يَأْخُذُونَ مِنَ الذَّكَرِ وَيَجْعَلُونَ فِي الْأُنْثَى فَقَالَ: مَا أَظُنُّ هَذَا يُغْنِي شَيْئًا فَبَلَغَهُمْ ذَلِكَ فَتَرَكُوهُ فَصَارَ شِيصًا، فَقَالَ: أَنْتُمْ أَعْلَمُ بِمَا يُصْلِحُكُمْ فِي دُنْيَاكُمْ، وَإِنِّي قُلْتُ لَكُمْ ‌ظَنًّا ظَنَنْتُهُ، فَمَا قُلْتُ لَكُمْ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ فَلَنْ أَكْذِبَ عَلَى اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى


Bazzar-6456

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6456. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருமணம் செய்வதை கட்டளையிடக்கூடியவர்களாகவும், துறவறத்தை அதிகம் தடுக்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

மேலும் அதிகம் விரும்பும், அதிகம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். ஏனென்றால் மறுமை நாளில் உங்களின் மூலமாகத் தான் (மற்ற நபிமார்களுக்கு முன்) மாபெரும் சமுதாயத்திற்குரிய (நபியாக) நான் திகழுவேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


أَنَّ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ بِالْبَاءَةِ وَيَنْهَى عَنِ التَّبَتُّلِ نَهْيًا شَدِيدًا وَيَقُولُ: تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الأُمَمَ يَوْمَ الْقِيَامَةِ.


Bazzar-3879

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3879. ஃபாத்திமா (ரலி) அவர்கள், ஹசன் (ரலி) அவர்களை பெற்றெடுத்த போது நபி (ஸல்) அவர்கள் ஹசன் பின் அலீ (ரலி) அவர்களின் காதில் (தொழுகைக்கு கூறப்படும் பாங்கு போன்று) பாங்கு கூறியதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அபூ ராஃபிஃ (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ أُمُّهُ فَاطِمَةُ بِالصَّلَاةِ»


Bazzar-2245

ஹதீஸின் தரம்: Pending

2245. ஜஃபர் பின் அபூதாலிப் (ரலி) அவர்களின் மரணசெய்தி வந்தபோது, ஜஃபரின் வீட்டினருக்கு கவலை தரும் செய்தி வந்து விட்டதால் அவரது குடும்பத்தாருக்காக உணவு செய்து கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)


«اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا فَقَدْ أَتَاهُمْ مَا يَشْغَلُهُمْ – أَوْ أَمْرٌ يَشْغَلُهُمْ – يَعْنِي يَوْمَ جَاءَ نَعْيُ جَعْفَرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ»


Bazzar-8560

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

8560. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறந்தவருக்கு நீங்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினால் அவருக்காக துஆவைக் கலப்பற்றதாகச் செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


إذا صلى أحدكم على جنازة فليخلص لها الدعاء.


Next Page » « Previous Page