Category: முஸ்னத்-பஸ்ஸார்

Musnad al-Bazzar

Bazzar-1678

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1678. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன் முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) பற்றித் தான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)


«أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ فِي الدِّمَاءِ»


Bazzar-4468

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4468. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.

  1. அநீதியாக தீர்ப்பளிப்பவர். இவர் நரகத்தில் புகுவார்.
  2. உண்மையை அறியாமல் மக்களுக்குத் தீர்ப்பு வழங்கியவர். இவர் நரகத்தில் புகுவார்.
  3. உண்மையை அறிந்து நீதமாக தீர்ப்பளிப்பவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)


الْقُضَاةُ ثَلاثَةٌ اثْنَانِ فِي النَّارِ وَوَاحِدٌ فِي الْجَنَّةِ قَاضٍ قَضَى بِجُورٍ فَهُوَ فِي النَّارِ وَقَاضٍ قَضَى بِغَيْرِ عِلْمٍ فَهُوَ فِي النَّارِ وَقَاضٍ بِالْحَقِّ فَهُوَ فِي الْجَنَّةِ.


Bazzar-2766

ஹதீஸின் தரம்: Pending

2766. “என் தந்தையே! நீங்கள் நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரையும் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அலீ (ரலி) யை கூஃபாவில் ஏறத்தாழ ஐந்தாண்டுகள் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அவர்களெல்லாம் ஃபஜ்ரில் குனூத் ஓதுவார்களா?” என்று என் தந்தையிடம் கேட்டேன். அதற்கவர் “அருமை மகனே! அது பின்னர் உருவாக்கப்பட்ட பித்அத்தாகும்” என விடையளித்தார்.

அறிவிப்பவர் : அபூ மாலிக் அஷ்ஜயீ


قُلْتُ لِأَبِي يَا أَبَةِ صَلَّيْتَ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَخَلْفَ أَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ، وَعَلِيٍّ هَلْ رَأَيْتَ أَحَدًا مِنْهُمْ قَنَتَ؟، قَالَ: مُحْدَثًا يَا بُنَيَّ


Bazzar-5011

ஹதீஸின் தரம்: Pending

5011. …


أَنَّ النَّبيَّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قَنَتَ ثَلاثِينَ صَبَاحًا فِي صَلاةِ الضُّحَى


Bazzar-633

ஹதீஸின் தரம்: More Info

633. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்குவது, முதல்தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது, ஸலாம் கொடுப்பதாகும்”.

அறிவிப்பவர் : அலீ (ரலி)


«مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»


Bazzar-1813

ஹதீஸின் தரம்: Pending

1813. பத்ருப் போர் அன்று நபிகள் நாயகத்துடன் அபூ லுபாபா, அலி பின் அபீதாலிப் ஆகிய இருவரும் ஒட்டகத் தோழராக இருந்தனர். நபிகள் நாயகத்தின் முறை வந்த போது ‘உங்களுக்காக நாங்கள் நடக்கிறோம்’ என இருவரும் கூறினார்கள். ‘நீங்கள் என்னை விட வலிமையானவரும் அல்லர். நான் உங்களை விட (இறைவனின்) கூலியில் தேவையற்றவனும் அல்லன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)


كَانَ زَمِيلَيِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيٌّ، وَأَبُو لُبَابَةَ، فَكَانَتْ إِذَا جَاءَتْ عَقْبَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَا: ارْكَبْ حَتَّى نَمْشِيَ، فَيَقُولَ: «مَا أَنْتُمَا بِأَقْوَى مِنِّي، وَمَا أَنَا بِأَغْنَى عَنِ الْأَجْرِ مِنْكُمَا»


Bazzar-2511

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2511. நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படுபவன், சங்கையானவன். ஒரு அடியான் அல்லாஹ்விடம் தனது இருகரமேந்தி கேட்கும் போது, அவ்விரண்டையும் வெறுங்கையாக திருப்பியனுப்ப அவன் வெட்கப்படுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் ஃபார்ஸீ (ரலி)


«إِنَّ اللَّهَ حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحِي أَنْ يَرْفَعَ الْعَبْدُ يَدَيْهِ فَيَرُدَّهُمَا صَفَرًا»


Abi-Yala-4108

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4108. மக்களே! நிச்சயமாக உங்கள் இறைவன்-அல்லாஹ் வெட்கப்படுபவன், பெருந்தன்மை மிக்கவன். (எனவே)  உங்களில் ஒருவர் அல்லாஹ்விடம் இருகரமேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பி அனுப்புவதை அவன் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ رَبِّكُمْ حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحِي أَنْ يَمُدَّ أَحَدُكُمْ يَدَيْهِ إِلَيْهِ فَيَرُدَّهُمَا خَائِبَتَيْنِ»


Next Page » « Previous Page