Category: முஸ்னத்-பஸ்ஸார்

Musnad al-Bazzar

Bazzar-2371

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2371. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணியவர் அல்ல. மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ وَلَكِنَّ الْوَاصِلَ الَّذِي إِذَا انْقَطَعَتْ رَحِمُهُ وَصَلَهَا»


Bazzar-1265

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1265. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். அதை யார் முறித்துக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்துவிடுவான்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«الرَّحِمُ شُجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، فَمَنْ قَطَعَهَا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ»


Bazzar-992

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

992. நானே ரஹ்மான். நான் “ரஹிமை’ (உறவுமுறையை படைத்து) அதற்குரிய பெயரை எனது பெயரிலிருந்து எடுத்தேன்.

யார் அதைச் சேர்த்துக் கொள்கிறாரோ அவரை நானும் சேர்த்துக் கொள்கிறேன். யார் அதைத் துண்டிக்கிறாரோ அவரை நானும் துண்டித்து விடுகிறேன் .”

என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)


يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: أَنَا الرَّحْمَنُ وَهِيَ الرَّحِمُ شَقَقْتُ لَهَا مِنَ اسْمِي فَمَنْ وَصَلَهَا وَصَلْتُهُ وَمَنْ قَطَعَهَا بَتَتُّهُ


Bazzar-3405

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3405. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ»


Bazzar-95

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

95. அபூ ஆத்திகா என்பவர் அறிவிக்கும் சீனா சென்றேனும் கல்வியை தேடு என்ற செய்தி அடிப்படையற்றது. அபூ ஆத்திகா என்பவர் யாரென தெரியவில்லை. இவர் இந்த செய்தியை யாரிடமிருந்து பெற்றார் என்பதும் புரியவில்லை.



Bazzar-7281

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7281. நபி (ஸல்) அவர்கள், நபியான பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


أَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم عَقَّ عَنْ نَفْسِهِ بَعْدَ مَا بُعِثَ نَبِيًّا.


Bazzar-6376

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6376. “நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று சொல்ல வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திக்காது. ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை” என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


إِذَا دَعَا أَحَدُكُمْ فَلْيَعْزِمْ فِي الدُّعَاءِ، ولاَ يَقُلِ: اللَّهُمَّ إِنْ شِئْتَ فَأَعْطِنِي فَإِنَّ اللَّهَ تَبَارَكَ وتعالي لا مستكره له.


Bazzar-3243

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3243. பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’ என்று உங்கள் இறைவன் கூறுகிறான்” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)


الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ، وَقَالَ رَبُّكُمْ تَبَارَكَ وَتَعَالَى {ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ} [غافر: 60]


Next Page » « Previous Page