ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம்:
ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடமிருந்து ஃபள்ல் பின் தல்ஹம் என்பவரின் அறிவிப்புகள்.
6707. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்கள் ஒருவரை வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவரையும்; கணவன் கோபமான நிலையில் இரவைக் கழிக்கும் பெண்ணையும்; (பாங்கு கூறும்போது) ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியை நோக்கி வாருங்கள்) என்பதை செவியேற்றும் அதற்கு பதிலளிக்காதவரையும் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:
இந்த செய்தியை ஹஸன் பஸரீ —> அனஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் ஃபள்ல் பின் தல்ஹம் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்று அறிகிறோம். இவர் ஹாஃபிள்.. அல்ல. இவர் பஸராவைச் சேர்ந்தவர்; பிரபலமானவர். இந்த செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து இவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.
لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم رَجُلا أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ وَامْرَأَةً بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ وَرَجُلا سَمِعَ حَيَّ عَلَى الْفَلاحِ فَلَمْ يُجِبْ.
சமீப விமர்சனங்கள்