Category: புஹாரி
Bukhari
Bukhari-6811
6811. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) கூறியதாவது:
நான், ‘இறைத்தூதர் அவர்களே! மிகப் பெரிய பாவம் எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கே நீ இணை கற்பிப்பதாகும்’ என்று சொன்னார்கள். ‘பிறகு, எது (பெரிய பாவம்)?’ என்று கேட்டேன். அவர்கள், ‘உன் குழந்தை உன்னுடன் அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என்பதற்காக அதை நீயே கொலை செய்வதாகும்’ என்றார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்’ என்றார்கள்.
இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அறிவிப்பாளர் அம்ர் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்களிடம் குறிப்பிட்டேன். அன்னார் (அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களுக்கும், அபூவாயில் (ரஹ்) அவர்களுக்கும் இடையே அபூமைஸரா (ரஹ்) அவர்கள் இடம்பெறாத) அறிவிப்பாளர்தொடரை விட்டுவிடுக!விட்டுவிடுக! என்று கூறினார்கள்.
(குறிப்பு:
قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الذَّنْبِ أَعْظَمُ؟ قَالَ: «أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ» قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «أَنْ تَقْتُلَ وَلَدَكَ مِنْ أَجْلِ أَنْ يَطْعَمَ مَعَكَ» قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ»
Bukhari-6762
6762. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.
ஒரு கூட்டத்தாரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவனே! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ابْنُ أُخْتِ القَوْمِ مِنْهُمْ – أَوْ: مِنْ أَنْفُسِهِمْ –
Bukhari-6759
பாடம் : 23
(தம்மால் விடுதலையான அடிமைக்கு) வாரிசாகும் உரிமை பெண்களுக்கும் உண்டு.
6759. இப்னு உமர் (ரலி) கூறியதாவது:
அடிமை பெண்ணாயிருந்த பரீராவை விலைக்கு வாங்க ஆயிஷா (ரலி) அவர்கள் விரும்பினார்கள். அப்போது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “பரீராவின் எசமானர்கள் வாரிசுரிமை தங்களுக்கே இருக்க வேண்டும் என்று நிபந்தனையிடுகின்றனர்” என்று சொன்னார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அவளை நீ வாங்கி விடுதலை செய்! ஏனெனில், (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது’ என்றார்கள்.
أَرَادَتْ عَائِشَةُ، أَنْ تَشْتَرِيَ بَرِيرَةَ، فَقَالَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّهُمْ يَشْتَرِطُونَ الوَلاَءَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْتَرِيهَا، فَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ»
Bukhari-6672
6672. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“நான் மறந்துபோனதற்காக என்னை தண்டிக்காதீர்கள். என் விசயத்தில் நீங்கள் கடுமையாக நடந்துக் கொள்ளாதீர்கள்” என்று களிர் (அலை) அவர்களிடம் மூஸா (அலை) அவர்கள் கூறினார் எனும் (18 : 73) ஆவது வசனத்தின் விளக்கத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதல் முறையில் மூஸா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியினால் ஆகும்” என்று கூறினார்கள்.
قُلْتُ: لِابْنِ عَبَّاسٍ، فَقَالَ: حَدَّثَنَا أُبَيُّ بْنُ كَعْبٍ: أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ، وَلَا تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا} [الكهف: ٧٣] قَالَ: «كَانَتِ الأُولَى مِنْ مُوسَى نِسْيَانًا»
Bukhari-6652
6652. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது பொய்ச் சத்தியம் செய்கிறவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகி விடுகிறார். எதன் மூலம் ஒருவர் தம்மைத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அதன் மூலம் அவர் நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவார்.
இறைநம்பிக்கையாளரை சபிப்பது அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். இறைநம்பிக்கையாளர் ஒருவரை இறைமறுப்பாளர் என்று ஒருவர் அவதூறு சொல்வது அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும்.
அறிவிப்பவர் : ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)
مَنْ حَلَفَ بِغَيْرِ مِلَّةِ الإِسْلاَمِ فَهُوَ كَمَا قَالَ، قَالَ: وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ عُذِّبَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ، وَلَعْنُ المُؤْمِنِ كَقَتْلِهِ، وَمَنْ رَمَى مُؤْمِنًا بِكُفْرٍ فَهُوَ كَقَتْلِهِ
சமீப விமர்சனங்கள்