Category: புஹாரி

Bukhari

Bukhari-5654

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 8

பெண்கள், (நோயுற்ற) ஆண்களை நலம் விசாரிப்பது.

உம்முத் தர்தா (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவரை (அவர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது) நலம் விசாரிக்கச் சென்றார்கள்.

5654. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவுக்கு வந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் பிலால் (ரலி) அவர்களுக்கும் காய்ச்சல் கண்டிருந்தது. அவ்விருவரிடமும் நான் சென்று, ‘‘என் தந்தையே! எப்படியிருக் கிறீர்கள்? பிலால் அவர்களே எப்படியிருக் கிறீர்கள்?” என்று (நலம்) விசாரித்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்குக் காய்ச்சல் காணும்போது (பின்வரும் கவிதையைக்) கூறுவார்கள்:

காலைவாழ்த்துக் கூறப்பெற்றநிலையில்ஒவ்வொரு மனிதனும்தம் குடும்பத்தாரோடுகாலைப் பொழுதை அடைகிறான்(ஆனால்,)அவன் செருப்பு வாரைவிட மிக அருகில்மரணம் இருக்கிறது (என்பதை அவன் அறிவதில்லை).

பிலால் (ரலி) அவர்கள் காய்ச்சல் விட்டதும்,

‘இத்கிர்’ (நறுமணப்) புல்லும்’ஜலீல்’ கூரைப் புல்லும்என்னைச் சூழ்ந்திருக்க,ஒரு இராப் பொழுதையேனும்(மக்காவின்) பள்ளத்தாக்கில்நான் கழிப்பேனா…?(மக்காவின்) ‘மிஜன்னா’ (சுனை) நீரைஒருநாள் ஒருபொழுதுநான் சுவைப்பேனா….?அந்தஷாமா, தஃபீல் மலைகள்(இனி எப்போதேனும்)எனக்குத் தென்படுமா…?

என்று

لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ، وُعِكَ أَبُو بَكْرٍ وَبِلاَلٌ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَتْ: فَدَخَلْتُ عَلَيْهِمَا، قُلْتُ: يَا أَبَتِ كَيْفَ تَجِدُكَ؟ وَيَا بِلاَلُ كَيْفَ تَجِدُكَ؟ قَالَتْ: وَكَانَ أَبُو بَكْرٍ إِذَا أَخَذَتْهُ الحُمَّى، يَقُولُ:
[البحر الرجز]
كُلُّ امْرِئٍ مُصَبَّحٌ فِي أَهْلِهِ … وَالمَوْتُ أَدْنَى مِنْ شِرَاكِ نَعْلِهِ
وَكَانَ بِلاَلٌ إِذَا أَقْلَعَتْ عَنْهُ يَقُولُ:
[البحر الطويل]
أَلاَ لَيْتَ شِعْرِي هَلْ أَبِيتَنَّ لَيْلَةً … بِوَادٍ وَحَوْلِي إِذْخِرٌ وَجَلِيلُ
وَهَلْ أَرِدَنْ يَوْمًا مِيَاهَ مِجَنَّةٍ … وَهَلْ تَبْدُوَنْ لِي شَامَةٌ وَطَفِيلُ
قَالَتْ عَائِشَةُ: فَجِئْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ، فَقَالَ: «اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا المَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ أَوْ أَشَدَّ، اللَّهُمَّ وَصَحِّحْهَا، وَبَارِكْ لَنَا فِي مُدِّهَا وَصَاعِهَا، وَانْقُلْ حُمَّاهَا فَاجْعَلْهَا بِالْجُحْفَةِ»


Bukhari-4604

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4604. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றிக்) கூறியவர் பொய் சொல்லிவிட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


مَنْ قَالَ: أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى فَقَدْ كَذَبَ


Bukhari-3946

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்: 53

சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது.

3946. அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள், “நான் ஓர் எசமானிடமிருந்து இன்னோர் எசமானாகப் பத்துக்கு மேற்பட்ட எசமானர் களின் கைக்கு (விற்கப்பட்டு) மாறிக் கொண்டிருந்தேன்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம்: 63


«أَنَّهُ تَدَاوَلَهُ بِضْعَةَ عَشَرَ، مِنْ رَبٍّ إِلَى رَبٍّ»


Next Page » « Previous Page