Category: புஹாரி

Bukhari

Bukhari-4526

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 39 உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளை நிலம் ஆவர். ஆகவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் விளைநிலத்திற்குச் செல்லுங்கள். இன்னும் உங்களு(டைய எதிர் கால நலன்களு)க்காக ஆயத்தம் செய்து கொள்ளுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவனை நீங்கள் சந்திப்பவர்கள்தாம் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுங்கள் எனும் (2:223ஆவது) இறைவசனம்.
4526. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) குர்ஆனை ஓதினால் அதை ஓதி முடிக்கும் வரை (வேறு எதுவும்) பேசமாட்டார்கள். ஒரு நாள் (அவர்கள் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்த போது) அவர்களை (ஓதவிடாமல்) நான் பிடித்துக்கொண்டேன். அவர்கள் ‘அல்பகரா’ அத்தியாயத்தை ஓதியபடி ஓரிடத்தில் நிறுத்தி ‘இந்த வசனம் எந்த விஷயத்தில் அருளப்பட்டது என்று உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘தெரியாது’ என்றேன். அதற்கு அவர்கள், ‘இன்ன இன்ன விஷயத்தில் அருளப்பட்டது’ என்று கூறிவிட்டு பிறகு தொடர்ந்து ஓதினார்கள்.
Book : 65


إِذَا قَرَأَ القُرْآنَ لَمْ يَتَكَلَّمْ حَتَّى يَفْرُغَ مِنْهُ، فَأَخَذْتُ عَلَيْهِ يَوْمًا، فَقَرَأَ سُورَةَ البَقَرَةِ، حَتَّى انْتَهَى إِلَى مَكَانٍ، قَالَ: تَدْرِي فِيمَ أُنْزِلَتْ؟ قُلْتُ: لاَ، قَالَ: أُنْزِلَتْ فِي كَذَا وَكَذَا، ثُمَّ مَضَى


Bukhari-4525

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4525. அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ஆயிஷா(ரலி), ‘அல்லாஹ் காப்பாற்றட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ், தன் தூதர் எவருக்கும் ஏதேனும் ஒரு வாக்குறுதி அளித்தால் அது தம் இறப்புக்கு முன் நடந்தே தீரும் என அத்தூதர் அறியாமல் இருந்ததில்லை. ஆனால், இறைத் தூதர்களுக்குத் தொடர்ந்து சோதனைகள் வந்துகொண்டேயிருந்தன. எந்த அளவிற்கென்றால், தம்முடன் இருப்பவர்கள் தம்மைப் பொய்ப்பிக்க முற்படுவார்களோ என அந்த இறைத் தூதர்கள் அஞ்சும் அளவிற்கு அவை தொடர்ந்து வந்தன’ என்று கூறினார்கள்.
மேலும், ஆயிஷா(ரலி), ‘வழன்னூ அன்னஹும் கத் குஃத்திபூ’ என்று (குஃதிபூ என்று லேசாகச் சொல்லாமல் ‘குஃத்திபூ’ என்று) அழுத்தம் கொடுத்து ஓதி வந்தார்கள்.
Book :65


«مَعَاذَ اللَّهِ وَاللَّهِ مَا وَعَدَ اللَّهُ رَسُولَهُ مِنْ شَيْءٍ قَطُّ إِلَّا عَلِمَ أَنَّهُ كَائِنٌ قَبْلَ أَنْ يَمُوتَ، وَلَكِنْ لَمْ يَزَلِ البَلاَءُ بِالرُّسُلِ، حَتَّى خَافُوا أَنْ يَكُونَ مَنْ مَعَهُمْ يُكَذِّبُونَهُمْ» فَكَانَتْ تَقْرَؤُهَا: (وَظَنُّوا أَنَّهُمْ قَدْ كُذِّبُوا) مُثَقَّلَةً


Bukhari-4524

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 38 உங்களுக்கு முன் சென்றுவிட்ட (இறை நம்பிக்கை கொண்ட)வர்களின் (சோதனை யான) நிலை உங்களுக்கு நேராமலேயே நீங்கள் சொர்க்கம் புகுந்து விடலாம் என நினைத்தீர்களா? அவர்களைத் துன்பங் களும் துயரங்களும் ஆட் கொண்டன. இறைத்தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? என்று கேட்கின்ற அளவிற்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட் டார்கள். இதோ! அல்லாஹ்வின் உதவி நிச்சயாக அண்மையில் இருக்கிறது (என அவர்களுக்குச் சமாதானம் கூறப்பட்டது (எனும் 2:214ஆவது இறைவசனம்).
4524. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.
இப்னு அப்பாஸ்(ரலி) ‘(நிராகரிக்கும் மக்கள் இனி நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று) இறைத் தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறையுதவி வருமென்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும் கூட) கருதலானார்கள். இந்நிலையில் நம்முடைய உதவி அவர்களுக்கு வந்தது’ எனும் (திருக்குர்ஆன் 12:110 வது) வசனத்தில் (‘குஃத்திபூ’ இறைத்தூதர்கள் தாம் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டோம் என்று கருதலானார்கள் – என்று வாசிக்காமல்) ‘குஃதிபூ’ (தங்களிடம் பொய்யுரைக்கப்பட்டது என மக்கள் கருதலானார்கள்’) என்று வாசித்துவிட்டு அவ்வசனத்திலிருந்து, ‘இறைத் தூதரும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களும்

{حَتَّى إِذَا اسْتَيْأَسَ الرُّسُلُ وَظَنُّوا أَنَّهُمْ قَدْ كُذِبُوا} [يوسف: 110] خَفِيفَةً، ذَهَبَ بِهَا هُنَاكَ، وَتَلاَ: {حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلاَ إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ} [البقرة: 214]. فَلَقِيتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ فَذَكَرْتُ لَهُ ذَلِكَ


Bukhari-4523

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 37 அவன் (எதற்கெடுத்தாலும்) கடுமையாகச் சண்டைபிடிக்கும் வழக்கமுடையவன் (எனும் 2:204ஆவது வசனத் தொடர்). (2:205ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நஸ்ல் எனும் சொல்லுக்கு உயிரினம் என்று பொருள் என அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
4523. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
‘அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் (எதற்கெடுத்தாலும்) கடுமையாகச் சண்டைபிடிப்பவனேயாவான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book : 65


«أَبْغَضُ الرِّجَالِ إِلَى اللَّهِ الأَلَدُّ الخَصِمُ» وَقَالَ عَبْدُ اللَّهِ: حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي ابْنُ جُرَيْجٍ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-4522

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 36 (அல்லாஹ்வைப் பல வழிகளிலும் நினைவு கூரும் மக்கள் உள்ளனர்.) அவர்களில் சிலர், எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக! எனப் பிரார்த்திக்கின்றனர் (எனும் 2:201ஆவது இறைவசனம்).
4522. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக?’ எனப் பிரார்த்தித்து வந்தார்கள்.
Book : 65


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ»


Bukhari-4521

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4521. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(மக்காவிலேயே தங்கியிருப்பவர், அல்லது ‘தமத்துஉ’ ஹஜ் செய்கிற எண்ணத்தில் உம்ராவை முடித்து அதற்கான இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில் இருப்பவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கூடுதலாக) இறையில்லம் கஅபாவை அவர் வலம்வரலாம் (சுற்றி வரலாம்.) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி (ஹஜ் கிரியைகளை நிறைவேற்றி) அரஃபா பயணமாம்விட்டால் அவர் தம்மால் இயன்ற குர்பானியைக் கொடுக்கவேண்டும். அது ஒட்டகம், அல்லது மாடு, அல்லது ஆடு இவற்றில் அவர் விரும்பும் எதுவாகவும் இருக்கலாம். குர்பானிப் பிராணி கிடைக்கவில்லையென்றால் ஹஜ் நாள்களில் அரஃபா நாளுக்கு முன்பாக மூன்று நோன்புகள் நோற்க வேண்டும். (மூன்று நோன்புகளில்) கடைசி நோன்பு அரஃபா நாளில் வந்துவிட்டாலும் பரவாயில்லை. பிறகு மக்காவிலிருந்து புறப்பட்டு அரஃபாத்திற்கு அவர் செல்லட்டும். அங்கு அஸ்ருத் தொழுகையிலிருந்து இரவின் இருள்படரும் வரைத் தங்கியிருக்கட்டும். பிறகு அரஃபாத்திலிருந்து மற்ற மக்களெல்லாம் புறப்பட்டு திரும்பிச் செல்லும்போது அவரும் திரும்பிச் செல்லட்டும். பிறகு மக்கள் அனைவருடனும் சேர்ந்து இரவை முஸ்தலிஃபாவில் கழிக்கட்டும். பிறகு, அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூரட்டும்! (அவர் மட்டுமின்றி) நீங்கள் (அனைவரும்) விடியும் வரை அதிகமாக அல்லாஹு

يَطَّوَّفُ الرَّجُلُ بِالْبَيْتِ مَا كَانَ حَلاَلًا حَتَّى يُهِلَّ بِالحَجِّ، فَإِذَا رَكِبَ إِلَى عَرَفَةَ فَمَنْ تَيَسَّرَ لَهُ هَدِيَّةٌ مِنَ الإِبِلِ أَوِ البَقَرِ أَوِ الغَنَمِ، مَا تَيَسَّرَ لَهُ مِنْ ذَلِكَ، أَيَّ ذَلِكَ شَاءَ، غَيْرَ أَنَّهُ إِنْ لَمْ يَتَيَسَّرْ لَهُ فَعَلَيْهِ ثَلاَثَةُ أَيَّامٍ فِي الحَجِّ، وَذَلِكَ قَبْلَ يَوْمِ عَرَفَةَ، فَإِنْ كَانَ آخِرُ يَوْمٍ مِنَ الأَيَّامِ الثَّلاَثَةِ يَوْمَ عَرَفَةَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ، ثُمَّ لِيَنْطَلِقْ حَتَّى يَقِفَ بِعَرَفَاتٍ مِنْ صَلاَةِ العَصْرِ إِلَى أَنْ يَكُونَ الظَّلاَمُ، ثُمَّ لِيَدْفَعُوا مِنْ عَرَفَاتٍ إِذَا أَفَاضُوا مِنْهَا حَتَّى يَبْلُغُوا جَمْعًا الَّذِي يُتَبَرَّرُ فِيهِ، ثُمَّ لِيَذْكُرُوا اللَّهَ كَثِيرًا، وَأَكْثِرُوا التَّكْبِيرَ وَالتَّهْلِيلَ قَبْلَ أَنْ تُصْبِحُوا، ثُمَّ أَفِيضُوا فَإِنَّ النَّاسَ كَانُوا يُفِيضُونَ، وَقَالَ اللَّهُ تَعَالَى: {ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ} [البقرة: 199] حَتَّى تَرْمُوا الجَمْرَةَ


Bukhari-4520

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 35 பின்னர் மக்கள் (அனைவரும்) திரும்பி வருகின்ற (அரஃபாத் எனும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிவாருங்கள் (எனும் 2:199ஆவது வசனத் தொடர்).
4520. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறையுயரும் அவர்களின் மதத்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். (ஹரம் – புனித எல்லையைவிட்டு வெளியேறமாட்டார்கள்.) அவர்கள் (இந்த விஷயத்தில்) ‘உறுதிமிக்கவர்கள்’ எனப் பெயரிடப்பட்டு வந்தனர். மற்ற அரபுகள் அனைவருமே அரஃபாத்தில் தங்கிவந்தார்கள். இஸ்லாம் வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (ஃதுல்ஹஜ் 9 வது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான் ‘மக்கள் அனைவரும் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 02:199 வது) இறைவசனமாகும்.
Book : 65


«كَانَتْ قُرَيْشٌ وَمَنْ دَانَ دِينَهَا يَقِفُونَ بِالْمُزْدَلِفَةِ، وَكَانُوا يُسَمَّوْنَ الحُمْسَ، وَكَانَ سَائِرُ العَرَبِ يَقِفُونَ بِعَرَفَاتٍ، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ أَمَرَ اللَّهُ نَبِيَّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْتِيَ عَرَفَاتٍ، ثُمَّ يَقِفَ بِهَا، ثُمَّ يُفِيضَ مِنْهَا» فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى: {ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ} [البقرة: 199]


Bukhari-4519

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 34 (ஹஜ் பயணத்தில்) உங்கள் இறைவனின் அருளை (வியாபாரத்தின் மூலம்) நீங்கள் தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது (எனும் 2:198ஆவது வசனத் தொடர்).
4519. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
உகாழ், மஜன்னா, மற்றும் ஃதுல்மஜாஸ் ஆகியன அறியாமைக் காலத்துச் சந்தைகளாக இருந்தன. (இஸ்லாம் வந்த பிறகு) மக்கள் ஹஜ்ஜுப் பருவத்தில் (அங்கு) வியாபாரம் செய்வதைப் பாவச் செயலாகக் கருதினர். எனவே, ஹஜ் பருவத்தில், ‘உங்களுடைய இறைவனின் அருளை (வியாபாரத்தின் மூலம்) தேடிக் கொள்வது உங்களின் மீது குற்றமாகாது’ எனும் (திருக்குர்ஆன் 02:198 வது) வசனத்தொடர் அருளப்பட்டது.
Book : 65


كَانَتْ عُكَاظُ، وَمَجَنَّةُ، وَذُو المَجَازِ أَسْوَاقًا فِي الجَاهِلِيَّةِ، فَتَأَثَّمُوا أَنْ يَتَّجِرُوا فِي المَوَاسِمِ، فَنَزَلَتْ: {لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ} [البقرة: 198]. فِي مَوَاسِمِ الحَجِّ


Bukhari-4518

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33 எவரேனும் உம்ரா(வை நிறைவேற்றுவதன்) மூலம் ஹஜ்ஜுக்கு முன்பே (ஹஜ் காலத்தில் தடுக்கப்பெற்றிருந்த) சுகத்தை அனுபவித்து விட்டால் அவர் பலிப்பிராணிகளில் தமக்குச் சாத்தியமானதை குர்பானி கொடுக்க வேண்டும். பலிப்பிராணி கிடைக்கப் பெறாத வர் ஹஜ் காலத்தில் மூன்று நாட்களும், (வீடு) திரும்பிவிட்டபின் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். இவை முழுமை யான பத்து (நோன்புகள்) ஆகும் (எனும் 2:196ஆவது வசனத் தொடர்).53
4518. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.
‘தமத்துஉ’ (ஹஜ் தொடர்பான இந்த 02:196 வது) வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் அருளப்பட்டது. எனவே, நாங்கள் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் செயல்படுத்தினோம். அதைத் தடை செய்யும் குர்ஆன் (வசனம்) எதுவும் அருளப்படவில்லை. நபி(ஸல்) அவர்களும் தாம் இறக்கும் வரை அதைத் தடை செய்யவில்லை. (ஆனால், இந்த விஷயத்தில்) ஒருவர் மட்டும் தாம் விரும்பிய (மாற்றுக் கருத்)தைக் தம் (சொந்த) அபிப்பிராயப்படி தெரிவித்தார்.
முஹம்மத் இப்னு இஸ்மாயீல் புகாரீயாகிய நான் கூறுகிறேன்: ‘அவர் உமர்(ரலி) தாம்’ என்று சொல்லப்படுகிறது.
Book : 65


أُنْزِلَتْ آيَةُ المُتْعَةِ فِي كِتَابِ اللَّهِ، فَفَعَلْنَاهَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يُنْزَلْ قُرْآنٌ يُحَرِّمُهُ، وَلَمْ يَنْهَ عَنْهَا حَتَّى مَاتَ، قَالَ: رَجُلٌ بِرَأْيِهِ مَا شَاءَ


Bukhari-4517

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32

ஆயினும், (இஹ்ராம் கட்டிய நிலையில்) உங்களில் யாரேனும் நோயாளியாக, அல்லது தம் தலையில் பிணி ஏதும் உள்ளவராக இரு(ந்து பலியிடுவதற்கு முன்பே தலை முடியைக் களைய வேண்டிய கட்டாயம் நேரிட்டிரு)ந்தால், அதற்குப் பரிகாரம் நோன்பு நோற்றல், அல்லது தர்மம் வழங்குதல், அல்லது பலிகொடுத்தல் ஆகும் (எனும் 2:196ஆவது வசனத் தொடர்).

4517. அப்துல்லாஹ் இப்னு மஅகில் (ரஹ்) கூறினார்.

நான் இந்தப் பள்ளிவாசலில் – அதாவது, கூஃபா நகரின் பள்ளிவாசலில் – கஅப்பின் உஜ்ரா (ரலி) அருகே அமர்ந்தேன். அவர்களிடம் (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரமாக நோன்புகள் நோற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொட்டிக்கொண்டிருக்க, நான் நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். அவர்கள், ‘உங்களுக்கு இந்த அளவிற்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை’ என்று கூறிவிட்டு, ‘உங்களுக்கு ஓர் ஆடு கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘மூன்று நாள்கள் நோன்பு வையுங்கள்! அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை ‘ஸாவு’ உணவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளியுங்கள்; உங்கள் தலையை மழித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

قَعَدْتُ إِلَى كَعْبِ بْنِ عُجْرَةَ فِي هَذَا المَسْجِدِ يَعْنِي مَسْجِدَ الكُوفَةِ، فَسَأَلْتُهُ عَنْ فِدْيَةٌ مِنْ صِيَامٍ، فَقَالَ: حُمِلْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالقَمْلُ يَتَنَاثَرُ عَلَى وَجْهِي، فَقَالَ: «مَا كُنْتُ أُرَى أَنَّ الْجَهْدَ قَدْ بَلَغَ بِكَ هَذَا، أَمَا تَجِدُ شَاةً». قُلْتُ: لاَ، قَالَ: «صُمْ ثَلاَثَةَ أَيَّامٍ، أَوْ أَطْعِمْ سِتَّةَ مَسَاكِينَ لِكُلِّ مِسْكِينٍ نِصْفُ صَاعٍ مِنْ طَعَامٍ، وَاحْلِقْ رَأْسَكَ» فَنَزَلَتْ فِيَّ خَاصَّةً وَهْيَ لَكُمْ عَامَّةً


Next Page » « Previous Page