Category: புஹாரி

Bukhari

Bukhari-4516

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31 மேலும், நீங்கள் அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யுங்கள். இன்னும் உங்கள் கரங்களால் அழிவைத் தேடிக் கொள்ளாதீர்கள். (நல்லெண்ணத்துடன்) சிறந்த முறையில் செயல்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ், சிறந்த முறையில் செயலாற்றக்கூடியவர் களை நேசிக்கின்றான் எனும் (2:195ஆவது) இறைவசனம். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) தஹ்லுகா (அழிவு) எனும் சொல்லும் ஹலாக் எனும் சொல்லும் ஒன்றேயாகும். (இரண்டும் அழிவு எனும் பொருள் கொண்ட வேர்ச் சொற்களேயாகும்.)
4516. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
‘இறைவழியில் செலவிடுங்கள். உங்கள் கரங்களால் அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 02:195 வது) இறைவசனம் (இறைவழியில்) செலவிடுவதைக் (கைவிடுவது) குறித்து அருளப்பட்டது.
Book : 65


{وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلاَ تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ} [البقرة: 195] قَالَ: «نَزَلَتْ فِي النَّفَقَةِ»


Bukhari-4515

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4515. அந்த மனிதர், ‘அலீ(ரலி) அவர்களைக் குறித்தும், உஸ்மான்(ரலி) அவர்களைக் குறித்தும் உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டார்.
இப்னு உமர்(ரலி), ‘உஸ்மான்(ரலி) அவர்களை (அன்னார் உஹுதுப் போரின்போது வெருண்டோடியதற்காக) அல்லாஹ்வே மன்னித்துவிட்டான். ஆனால், அல்லாஹ் அவரை மன்னிப்பதை நீங்கள் தாம் விரும்பவில்லை. அலீ(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் புதல்வரும், நபி(ஸல்) அவர்களின் மருமகனுமாவார்’ என்று கூறியவாறே, ‘(நபியவர்களின் வீடுகளுக்கு மிக நெருக்கத்தில்) நீங்கள் காண்கிறீர்களே இதுதான் அலீ அவர்களின் வீடாகும்’ என்று தம் கையால் சைகை செய்தபடி கூறினார்கள்.
Book :65


قَالَ: فَمَا قَوْلُكَ فِي عَلِيٍّ وَعُثْمَانَ؟ قَالَ: «أَمَّا عُثْمَانُ فَكَأَنَّ اللَّهَ عَفَا عَنْهُ، وَأَمَّا أَنْتُمْ فَكَرِهْتُمْ أَنْ تَعْفُوا عَنْهُ، وَأَمَّا عَلِيٌّ فَابْنُ عَمِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَخَتَنُهُ» وَأَشَارَ بِيَدِهِ، فَقَالَ: «هَذَا بَيْتُهُ حَيْثُ تَرَوْنَ»


Bukhari-4514

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4514. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) அவர்களிடம், (காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒருவர் வந்து, அபூ அப்திர் ரஹ்மானே! நீங்கள் ஓர் ஆண்டு ‘ஹஜ்’ செய்கிறீர்கள்; மறு ஆண்டு உம்ராச் செய்கிறீர்கள். (ஆனால்,) இறைவழியில் அறப்போராட்டம் புரிவதை (மட்டும்) கைவிட்டுவிடுகிறீர்களே, ஏன்? அறப்போர் (புரிவது) குறித்து அல்லாஹ் ஆர்வமூட்டியிருப்பதைத் தாங்கள் அறிந்துதானே உள்ளீர்கள்!’ என்று கேட்டார். (அதற்கு) இப்னு உமர்(ரலி), ‘என் சகோதரர் மகனே! இஸ்லாம் ஐந்து அம்சங்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது 2. (தினம்) ஐவேளைத் தொழுகைகள். 3. ரமளான் (மாத) நோன்பு. 4. (கடமையானோர்) ஸகாத்தை நிறைவேற்றுதல். 5. (இயன்றோர்) இறையில்லமான) கஅபாவில் ஹஜ் செய்தல்’ என்றார்கள்.
அந்த மனிதர், ‘அபூ அப்திர் ரஹ்மானே! அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் ‘இறை நம்பிக்கையாளர்களிலுள்ள இரண்டு வகுப்பார் தங்களுக்குள் சச்சரவு செய்தால், அவர்களுக்கிடையே சமாதானம் செய்துவையுங்கள். பின்னர் அவர்களில் ஒரு வகுப்பார், மற்றொரு வகுப்பாரின் மீது (வரம்பு மீறி) அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்தவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின்பால் வரும் வரையில், அவர்களுடன் நீங்கள் (எதிர்த்துப்) போரிடுங்கள்’ என்றும் (திருக்குர்ஆன் 49:09), ‘குழப்பம் நீங்கும்

أَنَّ رَجُلًا أَتَى ابْنَ عُمَرَ فَقَالَ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ مَا حَمَلَكَ عَلَى أَنْ تَحُجَّ عَامًا، وَتَعْتَمِرَ عَامًا وَتَتْرُكَ الجِهَادَ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ، وَقَدْ عَلِمْتَ مَا رَغَّبَ اللَّهُ فِيهِ، قَالَ: «يَا ابْنَ أَخِي بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ، إِيمَانٍ بِاللَّهِ وَرَسُولِهِ، وَالصَّلاَةِ الخَمْسِ، وَصِيَامِ رَمَضَانَ، وَأَدَاءِ الزَّكَاةِ، وَحَجِّ البَيْتِ» قَالَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ: أَلاَ تَسْمَعُ مَا ذَكَرَ اللَّهُ فِي كِتَابِهِ: {وَإِنْ طَائِفَتَانِ مِنَ المُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا، فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ} [الحجرات: 9] {قَاتِلُوهُمْ حَتَّى لاَ تَكُونَ فِتْنَةٌ} [الأنفال: 39] قَالَ: ” فَعَلْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ الإِسْلاَمُ قَلِيلًا، فَكَانَ الرَّجُلُ يُفْتَنُ فِي دِينِهِ: إِمَّا قَتَلُوهُ، وَإِمَّا يُعَذِّبُونَهُ، حَتَّى كَثُرَ الإِسْلاَمُ فَلَمْ تَكُنْ فِتْنَةٌ


Bukhari-4513

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30 குழப்பம் நீங்கி மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாகும் வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள். அவர்கள் (குழப்பத்திலிருந்து) விலகிக் கொண்டால் அப்பால் அநீதி இழைப்போர் மீதேயன்றி போர்தொடுத்தல் என்பது இல்லை (எனும் 2:193ஆவது இறைவசனம்).
4513. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (மக்காவினுள் ஹஜ்ஜாஜ் இப்னு ஒசுஃபால் முற்றுகையிடப்பட்ட யுத்தக்) குழப்ப (வருட)த்தில் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் இரண்டு மனிதர்கள் வந்து, ‘மக்கள் (அரசியல் காரணங்களுக்காகத் தங்களிடையே பிளவுபட்டு) அலைக்கழிக்கப்படுகிறார்கள். தாங்கள் உமர்(ரலி) அவர்களின் புதல்வரும் நபி(ஸல்) அவர்களின் தோழரும் ஆவீர்கள். (நியாயத்திற்காகப் போராட) தாங்கள் புறப்படுவதற்கு எது தடையாக உள்ளது?’ என்று கேட்டனர். அதற்கு இப்னு உமர்(ரலி), ‘என் சகோதரனின் இரத்தத்தைச் சிந்துவதற்கு அல்லாஹ் தடை விதித்திருப்பதே (புறப்படவிடாமல்) என்னைத் தடுக்கிறது’ என்று கூறினார்கள். அதற்கு அவர்களிருவரும் ‘குழப்பம் நீங்கி மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாகும் வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள்’ என்று (திருக்குர்ஆன் 02:193 வது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா?’ என்று கேட்டார்கள். அதற்கு இப்னு உமர்(ரலி), ‘(ஆம்! இறைத்தூதர்(ஸல்)

أَتَاهُ رَجُلاَنِ فِي فِتْنَةِ ابْنِ الزُّبَيْرِ فَقَالاَ: إِنَّ النَّاسَ صَنَعُوا وَأَنْتَ ابْنُ عُمَرَ، وَصَاحِبُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَا يَمْنَعُكَ أَنْ تَخْرُجَ؟ فَقَالَ «يَمْنَعُنِي أَنَّ اللَّهَ حَرَّمَ دَمَ أَخِي» فَقَالاَ: أَلَمْ يَقُلِ اللَّهُ: {وَقَاتِلُوهُمْ حَتَّى لاَ تَكُونَ فِتْنَةٌ} [الأنفال: 39]، فَقَالَ: «قَاتَلْنَا حَتَّى لَمْ تَكُنْ فِتْنَةٌ، وَكَانَ الدِّينُ لِلَّهِ، وَأَنْتُمْ تُرِيدُونَ أَنْ تُقَاتِلُوا حَتَّى تَكُونَ فِتْنَةٌ، وَيَكُونَ الدِّينُ لِغَيْرِ اللَّهِ»


Bukhari-4512

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29 நீங்கள் (உங்கள்) வீடுகளில் அவற்றின் பின் வாசல் வழியே நுழைவது புண்ணியமன்று; மாறாக,இறைவனுக்கு அஞ்சுபவர்தாம் புண்ணியவான் ஆவார். மேலும், நீங்கள் உங்கள் வீடுகளில் அவற்றின் முன் வாசல்கள் வழியே நுழையுங்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் (எனும் 2:189ஆவது வசனத் தொடர்).
4512. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
அறியாமைக் காலத்தில் அன்சாரிகள் (ஹஜ் மற்றும் உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டிவிட்டால் தம் வீட்டிற்குள் (அதன் முன்புற வாசல் வழியாக நுழையாமல்) அதன் பின்பக்க வாசல் வழியே நுழைந்து கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ், ‘நீங்கள் (உங்கள்) வீடுகளில் அவற்றின் பின் வாசல் வழியே நுழைவது புண்ணியமன்று; மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவர்தாம் புண்ணியவான் ஆவார். மேலும், நீங்கள் உங்கள் வீடுகளில் அவற்றின் முன் வாசல்கள் வழியே நுழையுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 02:189 வது) வசனத்தை அருளினான்.
Book : 65


«كَانُوا إِذَا أَحْرَمُوا فِي الجَاهِلِيَّةِ أَتَوْا البَيْتَ مِنْ ظَهْرِهِ» فَأَنْزَلَ اللَّهُ: {وَلَيْسَ البِرُّ بِأَنْ تَأْتُوا البُيُوتَ مِنْ ظُهُورِهَا وَلَكِنَّ البِرَّ مَنِ اتَّقَى وَأْتُوا البُيُوتَ مِنْ أَبْوَابِهَا} [البقرة: 189]


Bukhari-4511

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4511. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
(ஆரம்பத்தில்) ‘வெள்ளைக் கயிற்றைக் கறுப்புக் கயிற்றிலிருந்து பிரித்தறியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 02: 187வது வசனத்தின்) தொடர் ‘விடியலின்’ (‘மினல் ஃபஜ்ர்’) எனும் சொல் நீங்கலாக அருளப்பட்டது. அப்போது மக்கள் சிலர் தங்கள் இரண்டு கால்களிலும் (ஒன்றில்) வெள்ளைக் கயிற்றையும் (மற்றொன்றில்) கறுப்புக் கயிற்றையும் கட்டிக்கொண்டு இரண்டும் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும் வரை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். எனவே, அதற்குப் பின்னர் அல்லாஹ், ‘மினல் ஃபஜ்ர்’ (விடியலின்) எனும் சொல்லையும் சேர்த்து அருளினான். அப்போது அவர்கள், அதிகாலையையும் இரவையும் தான் இது குறிக்கிறது என்று அறிந்துகொண்டார்கள்.
Book :65


وَأُنْزِلَتْ: {وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الخَيْطُ الأَبْيَضُ مِنَ الخَيْطِ الأَسْوَدِ} [البقرة: 187] وَلَمْ يُنْزَلْ: {مِنَ الفَجْرِ} [البقرة: 187] ” وَكَانَ رِجَالٌ إِذَا أَرَادُوا الصَّوْمَ رَبَطَ أَحَدُهُمْ فِي رِجْلَيْهِ الخَيْطَ الأَبْيَضَ وَالخَيْطَ الأَسْوَدَ، وَلاَ يَزَالُ يَأْكُلُ حَتَّى يَتَبَيَّنَ لَهُ رُؤْيَتُهُمَا، فَأَنْزَلَ اللَّهُ بَعْدَهُ: {مِنَ الفَجْرِ} [البقرة: 187] «فَعَلِمُوا أَنَّمَا يَعْنِي اللَّيْلَ مِنَ النَّهَارِ»


Bukhari-4510

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4510. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.
‘இறைத்தூதர் அவர்களே! கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிற்றைப் பிரித்தறிய முடியும் நேரம் வரும் வரை’ என்ற (திருக்குர்ஆன் 02:187வது) வசனத்திலுள்ள கயிறுகள் (அல்கைத்) என்பவை உண்மையிலேயே இரண்டு கயிறுகள் தாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இரண்டு கயிறுகளையும் நீங்கள் (எடுத்துப்) பார்த்திருந்தால் உண்மையிலேயே நீங்கள் பிடரி அகலமானர் (அறிவு குறைந்தவர்) தாம் என்று கூறிவிட்டுப் பிறகு, ‘(அதன் பொருள்) அது வன்று; மாறாக, அது இரவின் கருமையும், பகலின் வெண்மையுமாகும்’ என்று கூறினார்கள்.
Book :65


قُلْتُ يَا رَسُولَ اللَّهِ: مَا الخَيْطُ الأَبْيَضُ، مِنَ الخَيْطِ الأَسْوَدِ أَهُمَا الخَيْطَانِ، قَالَ: «إِنَّكَ لَعَرِيضُ القَفَا، إِنْ أَبْصَرْتَ الخَيْطَيْنِ»، ثُمَّ قَالَ: «لاَ بَلْ هُوَ سَوَادُ اللَّيْلِ، وَبَيَاضُ النَّهَارِ»


Bukhari-4509

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28 இன்னும் இருள் ரேகையிலிருந்து விடிய-ன் வெள்ளை ரேகை உங்களுக்குத் தென்படும் வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள். பின்னர் இரவு (தொடங்கும்) வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் பள்ளிவாசல் களில் (இஃதிகாஃப்) தங்கியிருக்கும் போது (உங்கள் மனைவியரான) அவர்களுடன் கூடி விடாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்புக ளாகும். இவற்றை (மீறுகிற எண்ணத்தில்) நெருங்கிவிடாதீர்கள். இவ்வாறே மானிடர்களுக்கு அவர்கள் (தீமையிலிருந்து தம்மைப்) பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அல்லாஹ் தன் வசனங்களைத் தெளிவாக்கு கிறான் எனும் (2:187ஆவது) வசனத் தொடர். இஃதிகாஃப் இருப்பவர் என்றால் தங்கியிருப்பவர் என்று பொருள்.
4509. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.
(இந்த 02:187வது வசனம் அருளப்பட்டவுடன்) நான் வெள்ளைக் கயிறு ஒன்றையும் கறுப்புக் கயிறு ஒன்றையும் எடுத்துக் கொண்டு இரவின் ஒரு பகுதி கழிந்தவுடன் (அவற்றை) உற்றுப் பார்த்தேன். ஆனால், அவற்றைப் பிரித்தறிந்து கொள்ள முடியவில்லை. காலையானதும் (நபி(ஸல்) அவர்களிடம் சென்று,) ‘இறைத்தூதர் அவர்களே!’ என் தலையணையின் கீழே (இந்த இரண்டு கயிறுகளையும்) வைத்திருந்தேன். (ஆயினும் இரண்டையும்) பிரித்தறிய முடியவில்லையே?!)’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘வெள்ளைக் கயிறும் கறுப்புக் கயிறும் உங்கள்

أَخَذَ عَدِيٌّ عِقَالًا أَبْيَضَ، وَعِقَالًا أَسْوَدَ حَتَّى كَانَ بَعْضُ اللَّيْلِ نَظَرَ فَلَمْ يَسْتَبِينَا، فَلَمَّا أَصْبَحَ قَالَ يَا رَسُولَ اللَّهِ: جَعَلْتُ تَحْتَ وِسَادِي عِقَالَيْنِ، قَالَ: «إِنَّ وِسَادَكَ إِذًا لَعَرِيضٌ أَنْ كَانَ الخَيْطُ الأَبْيَضُ، وَالأَسْوَدُ تَحْتَ وِسَادَتِكَ»


Bukhari-4508

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் உங்க ளுக்கு ஆடையாக இருக்கிறார்கள்; நீங்கள் அவர்களுக்கு ஆடையாக இருக்கிறீர்கள். (இதுவரை) உங்களுக்கு நீங்களே அநீதியி ழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்து, நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதை ஏற்று, உங்களை மன்னித்தும் விட்டான். ஆதலால், இனி நீங்கள் அவர்களுடன் (இரவு நேரங்களில்) ஒன்று கூடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு(ச் சந்ததிகளாக) ஏற்படுத்தியதைத் தேடிக் கொள்ளுங்கள் (எனும் 2:187ஆவது வசனத் தொடர்).
4508. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
ரமளான் மாத நோன்பு கடமையானபோது, மக்கள் ரமளான் மாதம் முழுவதும் (தம்) மனைவியரை நெருங்காமலிருந்தார்கள். (மக்களில்) சிலர் தங்களுக்குத் தாங்கே அநீதியிழைத்துக் கொண்டிருந்தார்கள். எனவே, அல்லாஹ், ‘(இதுவரை) உங்களுக்கு நீங்களே அநீதியிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்து, நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதை ஏற்று, உங்களை மன்னித்துவிட்டான்’ என்று (திருக்குர்ஆன் 02:187வது) வசனத்தை அருளினான்.
Book : 65


«لَمَّا نَزَلَ صَوْمُ رَمَضَانَ كَانُوا لاَ يَقْرَبُونَ النِّسَاءَ رَمَضَانَ كُلَّهُ، وَكَانَ رِجَالٌ يَخُونُونَ أَنْفُسَهُمْ». فَأَنْزَلَ اللَّهُ {عَلِمَ اللَّهُ أَنَّكُمْ كُنْتُمْ تَخْتَانُونَ أَنْفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْ} [البقرة: 187]


Bukhari-4507

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4507. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.
‘நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்’ எனும் (திருக்குர்ஆன் 02:184வது) இறைவசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல்விட்டுவிட்டு பரிகாரம் செய்துவந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (‘உங்களில் அந்த மாதத்தை அடைகிறவர் அதில் நோன்பு நோற்கட்டும்!’ என்ற 02:185வது வசனம்) அருளப்பெற்றது.
அபூ அப்துல்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான புகைர் பின் அப்தில்லாஹ்(ரஹ்) (தமக்கு அறிவிப்புச் செய்த) யஸீத் இப்னு அபீ உபைத் அல்அஸ்லமீ(ரஹ்) அவர்களுக்கு முன்பே இறந்துவிட்டார்கள்.
Book :65


لَمَّا نَزَلَتْ: {وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ} [البقرة: 184]. «كَانَ مَنْ أَرَادَ أَنْ يُفْطِرَ وَيَفْتَدِيَ، حَتَّى نَزَلَتِ الآيَةُ الَّتِي بَعْدَهَا فَنَسَخَتْهَا» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «مَاتَ بُكَيْرٌ، قَبْلَ يَزِيدَ»


Next Page » « Previous Page