Category: புஹாரி

Bukhari

Bukhari-4506

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 உங்களில் யார் (ரமளான் எனும்) அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும் (எனும் 2:185ஆவது வசனத் தொடர்).
4506. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி), (திருக்குர்ஆன் 02:184வது வசனத்தில் ‘அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்’ என்பதன் மூலத்தை) ‘ஃபித்யத்து தஆமி மஸாகீன’ என்று (‘ஏழைகள்’ எனப் பன்மையாக) ஓதிக்காட்டி ‘இது, சட்டம் மாற்றப்பட்டுவிட்ட வசனமாகும்’ என்று கூறினார்கள்.
Book : 65


أَنَّهُ قَرَأَ: (فِدْيَةُ طَعَامِ مَسَاكِينَ) قَالَ: «هِيَ مَنْسُوخَةٌ»


Bukhari-4505

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 (நோன்பு நோற்கவேண்டும் என்ற விதி ரமளான் எனும்) குறிப்பிட்ட சில நாட்களில் தான். ஆனால், (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால், அவர் (அந்நாட்களில் நோன்பு நோற்காமல்) மற்ற நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளவேண்டும். நோன்பு நோற்கச் சிரமப்படுகின்றவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவ ளிப்பது கடமையாகும். ஆனால்,எவரேனும் விரும்பி (கடமைக்குமேல்) அதிக நன்மை செய்தால், அது அவருக்கு மிகச் சிறந்ததாகும். நீங்கள் (நோன்பின் பலனை) அறிந்தவர் களாக இருப்பின் நோன்பு நோற்பதே மிக்க மேலானதாகும் எனும் (2:184ஆவது) இறை வசனம். அல்லாஹ் (பொதுவாகக்) கூறியிருப் பதைப் போன்றே, எல்லா வித நோய்களின் காரணமாகவும் (ரமளான்) நோன்பை நோற்காமல் விட்டுவிடலாம் என்று அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்.41 ஹஸன் அல்பஸரீ, இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்:42 (குழந்தைக்குப்) பாலூட்டுகின்றவளும் கார்ப்பிணிப்பெண்ணும் (நோன்பு நோற்பதால்) தம் உயிருக்கோ, தம் குழந்தையின் உயிருக்கோ ஆபத்து நேரும் என அஞ்சினால் நோன்பை விட்டுவிட்டு, (பிறிதொரு சமயம்) விடுபட்டதை நிறைவேற்றலாம். தள்ளாத முதியவராயிருந்து அவரால் நோன்பு நோற்க இயலவில்லையென்றால், (நோன்பை விட்டதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்.

سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقْرَأُ وَعَلَى الَّذِينَ يُطَوَّقُونَهُ فَلاَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ قَالَ ابْنُ عَبَّاسٍ: «لَيْسَتْ بِمَنْسُوخَةٍ هُوَ الشَّيْخُ الكَبِيرُ، وَالمَرْأَةُ الكَبِيرَةُ لاَ يَسْتَطِيعَانِ أَنْ يَصُومَا، فَيُطْعِمَانِ مَكَانَ كُلِّ يَوْمٍ مِسْكِينًا»


Bukhari-4504

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4504. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

அறியாமைக் காலத்தில் குறைஷியர் நோன்பு நோற்கும் நாளாக ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாள் இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். (ஹிஜ்ரத் செய்து) மதீனா நகருக்கு அவர்கள் வந்தபோது அந்நாளில் தாமும் நோன்பு நோற்று, (மற்றவர்களும்) நோன்பு நோற்கும்படி பணித்தார்கள். பிறகு ரமளான் (நோன்பு) கடமையானபோது ரமளான் (மாத நோன்பு) கடமையான வணக்கமாகி, ஆஷூரா நோன்பு கைவிடப்பட்டு, அன்று விரும்பியவர் நோன்பு நோற்கலாம்; விரும்பியவர் நோன்பு நோற்காமலுமிருக்கலாம் என்று (கூடுதல் வணக்கமாக) ஆகி விட்டது.
Book :65


«كَانَ يَوْمُ عَاشُورَاءَ تَصُومُهُ قُرَيْشٌ فِي الجَاهِلِيَّةِ، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ فَلَمَّا قَدِمَ المَدِينَةَ صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ ، فَلَمَّا نَزَلَ رَمَضَانُ كَانَ رَمَضَانُ الفَرِيضَةَ، وَتُرِكَ عَاشُورَاءُ، فَكَانَ مَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ لَمْ يَصُمْهُ»


Bukhari-4503

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4503. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
(ஒருநாள்) நான் உணவுண்டு கொண்டிருந்தபோது அஷ்அஸ் இப்னு கைஸ் அவர்கள் வந்து, ‘இன்று ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளாயிற்றே’ என்று (நான் நோன்பு நோற்காமல் உண்டு கொண்டிருப்பதைக் கண்டு வியந்து) கூறினார். நான், ‘ரமளான் (நோன்பு) கடமையாவதற்கு முன்பு அந்த நாளில் நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமளான் (நோன்பு) கடமையானபோது அந்த (ஆஷூரா) நோன்பு (கட்டாயம் நோற்கப்பட வேண்டும் எனும் சட்டம்) கைவிடப்பட்டது. எனவே, அருகில் வந்து நீங்களும் உண்ணுங்கள்’ என்று சொன்னேன்.
Book :65


دَخَلَ عَلَيْهِ الأَشْعَثُ وَهْوَ يَطْعَمُ فَقَالَ: اليَوْمُ عَاشُورَاءُ؟ فَقَالَ: «كَانَ يُصَامُ قَبْلَ أَنْ يَنْزِلَ رَمَضَانُ، فَلَمَّا نَزَلَ رَمَضَانُ تُرِكَ فَادْنُ فَكُلْ»


Bukhari-4502

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4502. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

ரமளானு(டைய நோன்பு)க்கு முன்பு ‘ஆஷூரா’ (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமளான் (நோன்பு) கடமையானபோது விரும்பியவர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டுவிட்டார்கள்.
Book :65


كَانَ عَاشُورَاءُ يُصَامُ قَبْلَ رَمَضَانَ فَلَمَّا نَزَلَ رَمَضَانُ قَالَ: «مَنْ شَاءَ صَامَ، وَمَنْ شَاءَ أَفْطَرَ»


Bukhari-4501

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டதைப் போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது; நீங்கள் தூய்மை அடையும் பொருட்டு (எனும் 2:183 ஆவது இறைவசனம்).

4501. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

அறியாமைக்கால மக்கள் (குறைஷியர்) ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் (நோன்பு) கடமையானபோது நபி (ஸல்) அவர்கள், ‘(ஆஷூரா நோன்பை நோற்க) விரும்புகிறவர் அதை நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகிறவர் அதைவிட்டுவிடலாம்’ என்று கூறினார்கள்.
Book : 65


كَانَ عَاشُورَاءُ يَصُومُهُ أَهْلُ الجَاهِلِيَّةِ، فَلَمَّا نَزَلَ رَمَضَانُ قَالَ: «مَنْ شَاءَ صَامَهُ، وَمَنْ شَاءَ لَمْ يَصُمْهُ»


Bukhari-4500

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4500. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
என் தந்தையின் சகோதரி (அத்தை) ‘ருபய்யிஉ’ (பின்த் நள்ர்) அவர்கள் ஒர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார்கள். எனவே, என் அத்தையின் குலத்தார் அப்பெண்ணி(ன் குலத்தாரி)டம் மன்னித்து விடும்படி கோரினார். அவர்கள் (மன்னிக்க) மறுத்துவிட்டார்கள். எனவே, என் அத்தையில் குலத்தார் ஈட்டுத் தொகை செலுத்த முன் வந்தனர். அதற்கும் அவர்கள் மறுத்துவிடவே இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (இறைச் சட்டப்படி தீர்ப்பளிக்கும்படி கேட்டு) வந்தனர். அப்போதும் அவர்கள் பழிவாங்குவதைத் தவிர வேறெதற்கும் (ஒப்புக் கொள்ள) மறுத்துவிட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பழிவாங்கும்படி உத்தரவிட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் இப்னு நள்ர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! (என் சகோதரி) ‘ருபய்யிஉ’வின் முன்பல் உடைக்கப்படுமா? வேண்டாம்! உங்களைச் சத்திய (மார்க்கத்)துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக அவரின் முன்பல் உடைக்கப்படக்கூடாது’ என்று கூறினார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும்’ என்று கூறினார்கள். அதற்குள் அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக்கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்தார்கள். அப்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘அல்லாஹ்வின்

أَنَّ الرُّبَيِّعَ عَمَّتَهُ كَسَرَتْ ثَنِيَّةَ جَارِيَةٍ، فَطَلَبُوا إِلَيْهَا العَفْوَ فَأَبَوْا، فَعَرَضُوا الأَرْشَ فَأَبَوْا، فَأَتَوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَوْا، إِلَّا القِصَاصَ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالقِصَاصِ، فَقَالَ أَنَسُ بْنُ النَّضْرِ: يَا رَسُولَ اللَّهِ أَتُكْسَرُ ثَنِيَّةُ الرُّبَيِّعِ؟ لاَ وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ لاَ تُكْسَرُ ثَنِيَّتُهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَنَسُ، كِتَابُ اللَّهِ القِصَاصُ». فَرَضِيَ القَوْمُ فَعَفَوْا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ


Bukhari-4499

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4499. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
(கொலைக் குற்றத்தில்) அல்லாஹ்வின் சட்டம் பழி வாங்குவதாகும்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :65


«كِتَابُ اللَّهِ القِصَاصُ»


Bukhari-4498

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 இறை நம்பிக்கை கொண்டோரே! கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர மனிதன் சுதந்திர மனிதனுக்கு பதிலாகவும், அடிமை அடிமைக்கு பதிலாக வும், பெண் பெண்ணுக்கு பதிலாகவுமே (பழிவாங்கப்படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால், நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகையை) நிறைவேற்றிட வேண்டும். இது, உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும். இதன் பின்னரும் யாராவது வரம்பு மீறினால் அவருக்குத் துன்பமிகு வேதனை உண்டு (எனும் 2:178ஆவது இறைவசனம்). (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) உஃபிய (மன்னிக்கப்பட்டால்) எனும் சொல்லுக்கு விட்டுக் கொடுக்கப் பட்டால் என்று பொருள்.
4498. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
இஸ்ரவேலர்களிடையே பழிக்குப்பழி வாங்கும் (கிஸாஸ்) சட்டம் (நடை முறையில்) இருந்தது. ஆனால், அவர்களிடையே உயிரீட்டுத் தொகை (பெற்றுக் கொண்டு கொலை செய்தவனை மன்னித்துவிடும் சட்டம் நடைமுறையில்) இருக்கவில்லை. எனவே, அல்லாஹ் (முஹம்மத்(ஸல்) அவர்களின்) இந்தச் சமுதாயத்திற்கு, ‘கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

«كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ القِصَاصُ، وَلَمْ تَكُنْ فِيهِمُ الدِّيَةُ». فَقَالَ اللَّهُ تَعَالَى لِهَذِهِ الأُمَّةِ: {كُتِبَ عَلَيْكُمُ القِصَاصُ فِي القَتْلَى الحُرُّ بِالحُرِّ وَالعَبْدُ بِالعَبْدِ، وَالأُنْثَى بِالأُنْثَى، فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ} [البقرة: 178] «فَالعَفْوُ أَنْ يَقْبَلَ الدِّيَةَ فِي العَمْدِ» {فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ} [البقرة: 178] «يَتَّبِعُ بِالْمَعْرُوفِ وَيُؤَدِّي بِإِحْسَانٍ» {ذَلِكَ تَخْفِيفٌ مِنْ رَبِّكُمْ وَرَحْمَةٌ} [البقرة: 178] «مِمَّا كُتِبَ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ» {فَمَنِ اعْتَدَى بَعْدَ ذَلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ} [البقرة: 178] «قَتَلَ بَعْدَ قَبُولِ الدِّيَةِ»


Bukhari-4497

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணைகளாக்கி அல்லாஹ்வை நேசிப்பதைப் போல அவற்றை நேசிக்கின்றவர்களும் மனிதர்களில் உள்ளனர் எனும் (2:165 ஆவது) வசனத் தொடர். (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அன்தாத் (இணைகள்) எனும் சொல்லுக்கு நேர் எதிரானவைகள் (அள்தாத்) என்று பொருள். இதன் ஒருமை நித்து என்பதாகும்.
4497. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை என வாதித்தபடி இறந்து விடுகிறவர் நரகம் புகுவார்’ என்று கூறினார்கள். ‘(அப்படியானால்) அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை கற்பிக்காதவராக இறந்துவிடுகிறவர் சொர்க்கம் புகுவார்’ என்று நான் சொன்னேன்.
Book : 65


«مَنْ مَاتَ وَهْوَ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ نِدًّا دَخَلَ النَّارَ» وَقُلْتُ أَنَا: مَنْ مَاتَ وَهْوَ لاَ يَدْعُو لِلَّهِ نِدًّا دَخَلَ الجَنَّةَ


Next Page » « Previous Page