Category: புஹாரி

Bukhari

Bukhari-4399

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4399. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஹஜ்ஜத்துல்வதாவின்போது ‘கஸ்அம்’ குலத்துப் பெண்ணொருத்தி மார்க்கத் தீர்ப்பு கேட்டாள். அப்போது, ஃபள்ல் இப்னு அப்பாஸ்(ரலி) (வாகனத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டிருந்தார். அவள், ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ், தன் அடியார்களின் மீது கடமையாக்கிய (ஹஜ்ஜின்) விதி, வாகனத்தில் சரியாக அமர முடியாத அளவிற்குத் தள்ளாத முதியவரான நிலையில் என் தந்தையிடம் வந்து சேர்ந்தது. எனவே, நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?’ என்று கேட்டாள். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் (நிறைவேறும்)’ என்று பதிலளித்தார்கள்.
Book :64


أَنَّ امْرَأَةً مِنْ خَثْعَمَ اسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ، وَالفَضْلُ بْنُ عَبَّاسٍ رَدِيفُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا، لاَ يَسْتَطِيعُ أَنْ يَسْتَوِيَ عَلَى الرَّاحِلَةِ، فَهَلْ يَقْضِي أَنْ أَحُجَّ عَنْهُ؟ قَالَ: «نَعَمْ»


Bukhari-4398

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4398. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் வதாவை நிறைவேற்றிய ஆண்டில், (தவாஃபும் சஃயும் செய்து தலைமுடி குறைத்துவிட்டு) துணைவியருக்கு உத்தரவிட்டார்கள். அப்போது நான், ‘நீங்கள் ஏன் (இஹ்ராமிலிருந்து) விடுபடவில்லை?’ என்று கேட்டேன். அவர்கள், ‘நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படியச் செய்துவிட்டேன். என் தியாகப் பிராணிக்குக் கழுத்தில் (அடையாள) மாலை தொங்கவிட்டுவிட்டேன். எனவே, நான் தியாகப் பிராணியை அறுக்கும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடப் போவதில்லை’ என்று கூறினார்கள்.
Book :64


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ أَزْوَاجَهُ أَنْ يَحْلِلْنَ عَامَ حَجَّةِ الوَدَاعِ، فَقَالَتْ حَفْصَةُ: فَمَا يَمْنَعُكَ؟ فَقَالَ: «لَبَّدْتُ رَأْسِي، وَقَلَّدْتُ هَدْيِي، فَلَسْتُ أَحِلُّ حَتَّى أَنْحَرَ هَدْيِي»


Bukhari-4397

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4397. நபி(ஸல்) அவர்கள் பத்ஹாவில் இருந்தபோது, நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘ஹஜ் செய்ய நாடிவிட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘ஆம்’ என்றேன். அவர்கள், எதற்காக இஹ்ராம் கட்டினீர்கள்?’ என்று கேட்டார்கள். நான், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியதைப் போன்றே (அதே ஹஜ்ஜுல் கிரானுக்காகவே) நானும் இஹ்ராம் கட்டினேன்’ என்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்து, ஸஃபா மர்வாவுக்கு இடையே ஓடுங்கள்; பிறகு இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுங்கள்’ என்று கூறினார்கள். எனவே, நான் இறையில்லம் கஅபாவைச் சுற்றிவந்து, ஸஃபா, மர்வாவுக்கு இடையே ஓடிய பிறகு கைஸ் குலத்துப் பெண் ஒருத்தியிடம் சென்றேன். அவள் என் தலையில் பேன் பார்த்தாள். என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
Book :64


قَدِمْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَطْحَاءِ، فَقَالَ: «أَحَجَجْتَ» قُلْتُ: نَعَمْ، قَالَ: «كَيْفَ أَهْلَلْتَ» قُلْتُ: لَبَّيْكَ بِإِهْلاَلٍ كَإِهْلاَلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «طُفْ بِالْبَيْتِ، وَبِالصَّفَا، وَالمَرْوَةِ، ثُمَّ حِلَّ» فَطُفْتُ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالمَرْوَةِ، وَأَتَيْتُ امْرَأَةً مِنْ قَيْسٍ، فَفَلَتْ رَأْسِي


Bukhari-4396

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4396. இப்னு ஜுரைஜ்(ரஹ்) அறிவித்தார்
இப்னு அப்பாஸ்(ரலி), ‘உம்ரா செய்பவர் இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடுவார்’ என்று சொன்னதாக அதாஉ(ரஹ்) எனக்கு அறிவித்தார்கள். நான், ‘எந்த ஆதாரத்தை வைத்து இப்னு அப்பாஸ்(ரலி) இப்படிக் கூறுகிறார்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘தியாகப் பிராணிகளை அறுத்துத் தியாகம் செய்வதற்கான இடம் தொன்மையான ஆலயத்தின் அருகில் உள்ளது’ எனும் (திருக்குர்ஆன் 22:33வது) இறைவசனத்தை ஆதாரமாகக் கொண்டும், நபி(ஸல்) அவர்கள், ‘ஹஜ்த்துல வதாவின்போது இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடும் படி தம் தோழர்களுக்கு உத்தரவிட்டதை ஆதாரமாகக் கொண்டும் தான் இப்படிக் கூறினார்கள்’ என்று பதிலளித்தார்கள். நான், ‘இஹ்ராமிலிருந்து விடுபடுவது அரஃபாவில் (போய்த்) தங்கிய பின்புதானே?’ என்று கேட்டேன். அதற்கு அதாஉ(ரஹ்), ‘அரஃபாவில் தங்குவதற்கு முன்பும் அங்கிருந்து வந்த பின்பும் (இரண்டு நேரங்களிலுமே) இஹ்ராமிலிருந்து விடுபடுவது அனுமதிக்கப்பட்டதே என்று இப்னு அப்பாஸ்(ரலி) கருதி வந்தார்கள்’ என்று பதிலளித்தார்கள்.
Book :64


إِذَا طَافَ بِالْبَيْتِ فَقَدْ حَلَّ، فَقُلْتُ: مِنْ أَيْنَ؟ قَالَ: هَذَا ابْنُ عَبَّاسٍ قَالَ: مِنْ قَوْلِ اللَّهِ تَعَالَى: {ثُمَّ مَحِلُّهَا إِلَى البَيْتِ العَتِيقِ} [الحج: 33] وَمِنْ «أَمْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصْحَابَهُ أَنْ يَحِلُّوا فِي حَجَّةِ الوَدَاعِ»، قُلْتُ: إِنَّمَا كَانَ ذَلِكَ بَعْدَ المُعَرَّفِ قَالَ: كَانَ ابْنُ عَبَّاسٍ: «يَرَاهُ قَبْلُ وَبَعْدُ»


Bukhari-4395

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 78 ஹஜ்ஜத்துல் வதா37
4395. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ‘ஹஜ்ஜத்துல் வதாவுக்காகப் புறப்பட்டோம். (முதலில்) உம்ரா செய்வதற்காக இஹ்ராம் கட்டினோம். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘எவரிடம் தியாகப் பிராணியுள்ளதோ அவர்கள் உம்ராவுடன் ஹஜ்ஜும் செய்து கொள்ளட்டும. அவ்விரண்டையும் நிறைவேற்றிய பிறகே அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்’ என்று கூறினார்கள். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நபி(ஸல்) அவர்களுடன் மக்காவுக்குச் சென்றேன். (மாதவிடாயின் காரணத்தால்) நான் இறையில்லத்தைச் சுற்றிவரவில்லை. ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே ஓடவுமில்லை. எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அப்போது அவர்கள், ‘உன் தலை (முடியை) அவிழ்த்து வாரிக்கொள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள். உம்ராவைவிட்டு விடு’ என்று கூறினார்கள். அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி முடித்தபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர் அஸ்ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் தன்யீமுக்கு அனுப்பினார்கள். அங்கிருந்து நான் உம்ரா செய்தேன். ‘இது (இந்த உம்ரா) உன்னுடைய (விடுபட்ட) உம்ராவுக்கு பதிலாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ، فَأَهْلَلْنَا بِعُمْرَةٍ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ مَعَهُ هَدْيٌ فَلْيُهْلِلْ بِالحَجِّ مَعَ العُمْرَةِ، ثُمَّ لاَ يَحِلَّ حَتَّى يَحِلَّ مِنْهُمَا جَمِيعًا»، فَقَدِمْتُ مَعَهُ مَكَّةَ وَأَنَا حَائِضٌ، وَلَمْ أَطُفْ بِالْبَيْتِ، وَلاَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ، فَشَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «انْقُضِي رَأْسَكِ وَامْتَشِطِي، وَأَهِلِّي بِالحَجِّ، وَدَعِي العُمْرَةَ» فَفَعَلْتُ، فَلَمَّا قَضَيْنَا الحَجَّ أَرْسَلَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ إِلَى التَّنْعِيمِ فَاعْتَمَرْتُ، فَقَالَ: «هَذِهِ مَكَانَ عُمْرَتِكِ»، قَالَتْ: فَطَافَ الَّذِينَ أَهَلُّوا بِالعُمْرَةِ بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ، ثُمَّ حَلُّوا، ثُمَّ طَافُوا طَوَافًا آخَرَ، بَعْدَ أَنْ رَجَعُوا مِنْ مِنًى، وَأَمَّا الَّذِينَ جَمَعُوا الحَجَّ وَالعُمْرَةَ فَإِنَّمَا طَافُوا طَوَافًا وَاحِدًا


Bukhari-4394

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 77 தய்யி குலத்தாரின் தூதுக் குழு நிகழ்ச்சியும் அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களின் செய்தியும்36
4394. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்
உமர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தில்) ஒரு குழுவாக நாங்கள் வந்தோம். அவர்கள் ஒவ்வொரு மனிதராகப் பெயர் சொல்லி அழைக்கலானார்கள்; (என்னை முதலில் அழைக்கவில்லை.) எனவே நான், ‘என்னைத் தெரியவில்லையா? நம்பிக்கையாளர்களின் தலைவரே!’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஆம், தெரியும். மக்கள் மறுத்தபோது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றீர்கள்; அவர்கள் (இஸ்லாத்தை ஏற்காமல்) பின் வாங்கிச் சென்றபோது நீங்கள் (அதை ஏற்க) முன் வந்தீர்கள். அவர்கள் (ஸகாத்தை வழங்காமல்) மோசடி செய்தபோது நீங்கள் நிறைவேற்றினீர்கள். (உண்மையை) அவர்கள் நிராகரித்தபோது நீங்கள் ஏற்றீர்கள்’ என்று கூறினார்கள்.
நான், ‘அப்படியென்றால் (என்னை முதலில் அழைக்காதது குறித்து) நான் பொருட்படுத்தப்போவதில்லை’ என்றேன்.
Book : 64


أَتَيْنَا عُمَرَ فِي وَفْدٍ، فَجَعَلَ يَدْعُو رَجُلًا رَجُلًا وَيُسَمِّيهِمْ، فَقُلْتُ: أَمَا تَعْرِفُنِي يَا أَمِيرَ المُؤْمِنِينَ؟ قَالَ: بَلَى «أَسْلَمْتَ إِذْ كَفَرُوا، وَأَقْبَلْتَ إِذْ أَدْبَرُوا، وَوَفَيْتَ إِذْ غَدَرُوا، وَعَرَفْتَ إِذْ أَنْكَرُوا». فَقَالَ عَدِيٌّ: فَلاَ أُبَالِي إِذًا


Bukhari-4393

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4393. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
நான் நபி(ஸல்) அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்பதற்காக) வந்தபோது, வழியில், ‘எவ்வளவு நீண்ட, களைப்பூட்டுகிற இரவு! ஆயினும், அது இறைமறுப்பு கோலோச்சும் நாட்டிலிருந்து என்னை விடுதலை செய்துவிட்டது’ என்று பாடினேன். என் அடிமை ஒருவன் வழியில் தப்பியோடிவிட்டான். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். நான் அவர்களிடம் இருந்தபோது (என்னுடைய) அந்த அடிமை வந்தான். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அபூ ஹுரைராவே! இதோ உன் அடிமை!’ என்று கூறினார்கள். நான், ‘அவன் அல்லாஹ்வின் திருப்திக்காக (விடுதலை)’ என்று சொல்லி அவனை விடுதலை செய்துவிட்டேன்.
Book :64


لَمَّا قَدِمْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ فِي الطَّرِيقِ:
[البحر الطويل]
يَا لَيْلَةً مِنْ طُولِهَا وَعَنَائِهَا … عَلَى أَنَّهَا مِنْ دَارَةِ الكُفْرِ نَجَّتِ
وَأَبَقَ غُلاَمٌ لِي فِي الطَّرِيقِ، فَلَمَّا قَدِمْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعْتُهُ، فَبَيْنَا أَنَا عِنْدَهُ إِذْ طَلَعَ الغُلاَمُ، فَقَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا هُرَيْرَةَ هَذَا غُلاَمُكَ» فَقُلْتُ: هُوَ لِوَجْهِ اللَّهِ، فَأَعْتَقْتُهُ


Bukhari-4392

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 45 ஷாம் நாட்டில் நடைபெற்ற மூத்தா போர்.304
4392. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
துஃபைல் இப்னு அம்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘தவ்ஸ் குலத்தார் அழிந்துவிட்டார்கள்; (இறைவனுக்கும் இறைத்தூதருக்கும்) மாறு செய்துவிட்டார்கள்; (இஸ்லாத்தை) ஏற்க மறுத்துவிட்டார்கள். எனவே, தாங்கள் அவர்களுக்கெதிராகப் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! ‘தவ்ஸ்’ குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (எம்மிடம்) கொண்டு வருவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.
Book : 64


جَاءَ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ دَوْسًا قَدْ هَلَكَتْ عَصَتْ وَأَبَتْ فَادْعُ اللَّهَ عَلَيْهِمْ، فَقَالَ: «اللَّهُمَّ اهْدِ دَوْسًا وَأْتِ بِهِمْ»


Bukhari-4391

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4391. அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்
நாங்கள் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது கப்பாப்(ரலி) வந்து, ‘அபூ அப்திர் ரஹ்மானே! நீங்கள் (குர்ஆன்) ஓதுவதைப் போல் இந்த இளைஞர்களால் ஓதமுடியுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்வூத்(ரலி), ‘நீங்கள் விரும்பினால் உங்களுக்கு (குர்ஆன்) ஓதிக் காட்டும்படி இவர்களில் சிலருக்குக் கட்டளையிடுகிறேன்’ என்று கூறினார்கள். அதற்கு கப்பாப்(ரலி), ‘சரி! (ஓதிக் காட்டச் சொல்லுங்கள்)’ என்று கூறினார்கள். இப்னு மஸ்வூத்(ரலி) (என்னிடம்), ‘அல்கமா! நீங்கள் ஓதுங்கள்’ என்று கூற, ஸியாத் இப்னு ஹுதைர்(ரஹ்) அவர்களின் சகோதரர் ஸைத் இப்னு ஹுதைர்(ரஹ்), ‘அல்கமா, எங்களில் மிகச் சிறந்த ஓதுநராக இல்லாதிருக்க, அவரையா ஓதச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார். உடனே இப்னு மஸ்ஊத்(ரலி), ‘நீங்கள் விரும்பினால் நபி(ஸல்) அவர்கள் உங்கள் குலத்தார் (பனூ அசத்) பற்றியும், அல்கமாவுடைய குலத்தார் (நகஉ) பற்றியும் கூறியதை உங்களுக்கு நான் அறிவிப்பேன்’ என்று கூறினார்கள். அப்போது நான் (குர்ஆனின் 19வது) அத்தியாயம் மர்யமிலிருந்து ஐம்பது வசனங்களை ஓதினேன். அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) (கப்பாப்(ரலி) அவர்களை நோக்கி), ‘(இவரின் ஓதல்) எப்படியிருப்பதாகக் கருதுகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு

كُنَّا جُلُوسًا مَعَ ابْنِ مَسْعُودٍ، فَجَاءَ خَبَّابٌ، فَقَالَ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، أَيَسْتَطِيعُ هَؤُلاَءِ الشَّبَابُ أَنْ يَقْرَءُوا كَمَا تَقْرَأُ؟ قَالَ: أَمَا إِنَّكَ لَوْ شِئْتَ أَمَرْتُ بَعْضَهُمْ يَقْرَأُ عَلَيْكَ؟ قَالَ: أَجَلْ، قَالَ: اقْرَأْ يَا عَلْقَمَةُ، فَقَالَ زَيْدُ بْنُ حُدَيْرٍ، أَخُو زِيَادِ بْنِ حُدَيْرٍ: أَتَأْمُرُ عَلْقَمَةَ أَنْ يَقْرَأَ وَلَيْسَ بِأَقْرَئِنَا؟ قَالَ: أَمَا إِنَّكَ إِنْ شِئْتَ أَخْبَرْتُكَ بِمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قَوْمِكَ وَقَوْمِهِ؟ فَقَرَأْتُ خَمْسِينَ آيَةً مِنْ سُورَةِ مَرْيَمَ، فَقَالَ عَبْدُ اللَّهِ: كَيْفَ تَرَى؟ قَالَ: قَدْ أَحْسَنَ، قَالَ عَبْدُ اللَّهِ: مَا أَقْرَأُ شَيْئًا إِلَّا وَهُوَ يَقْرَؤُهُ، ثُمَّ التَفَتَ إِلَى خَبَّابٍ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ ذَهَبٍ، فَقَالَ: أَلَمْ يَأْنِ لِهَذَا الخَاتَمِ أَنْ يُلْقَى، قَالَ: أَمَا إِنَّكَ لَنْ تَرَاهُ عَلَيَّ بَعْدَ اليَوْمِ، فَأَلْقَاهُ ” رَوَاهُ غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ


Bukhari-4390

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4390. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யமன் வாசிகள் உங்களிடம் வந்துள்ளனர். அவர்கள் இளகியமனம் படைத்தவர்கள். மென்மையான நெஞ்சம் உடையவர்கள். மார்க்க ஞானம் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்; விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :64


«أَتَاكُمْ أَهْلُ اليَمَنِ، أَضْعَفُ قُلُوبًا، وَأَرَقُّ أَفْئِدَةً، الفِقْهُ يَمَانٍ وَالحِكْمَةُ يَمَانِيَةٌ»


Next Page » « Previous Page