Category: புஹாரி

Bukhari

Bukhari-4369

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4369. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ‘ரபீஆ’ கோத்திரத்தின் இன்ன (அப்துல் கைஸ்) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். (உங்களைச் சந்திக்கவிடாமல்) உங்களுக்கும் எங்களுக்குமிடையே ‘முளர்’ குலத்து இறைமறுப்பாளர்கள் தடையாக உள்ளனர். அதனால், (போர் புரியக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்ட) புனித மாதத்தில் தான் நாங்கள் உங்களிடம் வர முடியும். எனவே, எங்களுக்குச் சில விஷயங்களைக் கட்டளையிடுங்கள். அவற்றை நாங்கள் கடைப்பிடிப்போம்; எங்களுக்குப் பின்னாலிருப்பவர்களையும் கடைப்பிடித்து நடக்கும் படி அழைப்போம்’ என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் நான்கு விஷயங்களை (செயல்படுத்தும்படி உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். நான்கு பொருட்களை உங்களுக்குத் தடை செய்கிறேன்.
(கட்டளையிடும் நான்கு விஷயங்களாவன:) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது; (அதாவது) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று உறுதி கூறுவது – இவ்வாறு சொல்லி ‘ஒன்று’ என (தம் விரலால்) எண்ணினார்கள் – தொழுகையை நிலை நிறுத்துவது, ஸகாத் வழங்குவது, மேலும், நீங்கள் அடைந்த போர்ச் செல்வங்களில் ஐந்திலொரு பங்கை அல்லாஹ்வுக்காகச்

قَدِمَ وَفْدُ عَبْدِ القَيْسِ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا هَذَا الحَيَّ مِنْ رَبِيعَةَ، وَقَدْ حَالَتْ بَيْنَنَا وَبَيْنَكَ كُفَّارُ مُضَرَ، فَلَسْنَا نَخْلُصُ إِلَيْكَ إِلَّا فِي شَهْرٍ حَرَامٍ، فَمُرْنَا بِأَشْيَاءَ نَأْخُذُ بِهَا، وَنَدْعُو إِلَيْهَا مَنْ وَرَاءَنَا، قَالَ: «آمُرُكُمْ بِأَرْبَعٍ، وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ، الإِيمَانِ بِاللَّهِ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، – وَعَقَدَ وَاحِدَةً – وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَأَنْ تُؤَدُّوا لِلَّهِ خُمْسَ مَا غَنِمْتُمْ، وَأَنْهَاكُمْ عَنِ الدُّبَّاءِ، وَالنَّقِيرِ، وَالحَنْتَمِ، وَالمُزَفَّتِ»


Bukhari-4368

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 70 அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு5
4368. அபூ ஜம்ரா(ரஹ்) அறிவித்தார்.
நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘என்னிடம் ‘நபீத்’ (பழச்சாறு மது) வைக்கப்படுகிற மண்பாண்டம் ஒன்று இருந்தது. மண்பாண்டத்தில் இனிப்பாக இருக்கும் நிலையில் நான் அதை அருந்துவேன். நான் அதை அதிகமாக அருந்தி, மக்களுடன் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் (போதையில் தாறுமாறாக நடந்து) கேவலப்பட்டுப் போய் விடுவேன் என நான் அஞ்சினேன்’ என்று சொன்னேன். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) (இவ்வாறு) கூறினார்கள்:
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘(அப்துல் கைஸ்) சமுதாயத்தாரே! உங்கள் வரவு நல்வரவாகட்டும். இழிவுக்குள்ளாகாமலும், மனவருத்தத்திற்குள்ளாகாமலும் வருக!’ என்று கூறினார்கள். அம்மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கும் உங்களுக்குமிடையே ‘முளர்’ குலத்து இணைவைப்பாளர்கள் (நாம் சந்திக்க முடியாதபடி) தடையாக உள்ளனர். இதனால், (போரிடக் கூடாதென தடைவிதிக்கப்பட்டுள்ள) புனித மாதங்களில் தவிர (வேறு மாதங்களில்) நாங்கள் உங்களிடம் வர முடியவில்லை. எனவே, எந்தக் கட்டளைகளை நாங்கள் செயல்படுத்தினால் நாங்கள் சொர்க்கம் புகவும் எங்களுக்குப் பின்னாலிருப்பவர்களை அவற்றின்

قُلْتُ لِابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: إِنَّ لِي جَرَّةً يُنْتَبَذُ لِي نَبِيذٌ، فَأَشْرَبُهُ حُلْوًا فِي جَرٍّ، إِنْ أَكْثَرْتُ مِنْهُ، فَجَالَسْتُ القَوْمَ فَأَطَلْتُ الجُلُوسَ، خَشِيتُ أَنْ أَفْتَضِحَ، فَقَالَ: قَدِمَ وَفْدُ عَبْدِ القَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَرْحَبًا بِالقَوْمِ، غَيْرَ خَزَايَا وَلاَ النَّدَامَى»، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّ بَيْنَنَا وَبَيْنَكَ المُشْرِكِينَ مِنْ مُضَرَ، وَإِنَّا لاَ نَصِلُ إِلَيْكَ إِلَّا فِي أَشْهُرِ الحُرُمِ، حَدِّثْنَا بِجُمَلٍ مِنَ الأَمْرِ: إِنْ عَمِلْنَا بِهِ دَخَلْنَا الجَنَّةَ، وَنَدْعُو بِهِ مَنْ وَرَاءَنَا. قَالَ: «آمُرُكُمْ بِأَرْبَعٍ ، وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ الإِيمَانِ بِاللَّهِ، هَلْ تَدْرُونَ مَا الإِيمَانُ بِاللَّهِ؟ شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَإِقَامُ الصَّلاَةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، وَصَوْمُ رَمَضَانَ، وَأَنْ تُعْطُوا مِنَ المَغَانِمِ الخُمُسَ، وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ، مَا انْتُبِذَ فِي الدُّبَّاءِ، وَالنَّقِيرِ، وَالحَنْتَمِ، وَالمُزَفَّتِ»


Bukhari-4367

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4367. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.
பனூ தமீம் குலத்தாரில் ஒரு பயணக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரினர்.) அபூ பக்ர்(ரலி), ‘(இறைத்தூதர் அவர்களே!) கஅகாஉ இப்னு மஅபத் இப்னி ஸுராரா அவர்களை இவர்களுக்குத் தலைவராக்குங்கள்’ என்று கூறினார்கள். உமர்(ரலி), ‘இல்லை; அக்ரஉ இப்னு ஹாபிஸ் அவர்களைத் தலைவராக்குங்கள்’ என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (உமர்(ரலி) அவர்களிடம்), ‘நீங்கள் எனக்கு மாறுசெய்யவே விரும்புகிறீர்கள்’ என்று சொல்ல, உமர்(ரலி), ‘உங்களுக்கு மாறுசெய்வது என் நோக்கமல்ல’ என்று பதிலளித்தார்கள். இருவரும் இப்படி மாறி மாறிப் பேசிச் சச்சரவிட்டுக்கொண்டார்கள். இறுதியில், இருவரின் குரல்களும் உயர்ந்தன. இது தொடர்பாகவே, ‘இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முன்பாக (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். திண்ணமாக, அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான்’ எனும் (திருக்குர்ஆன் 49:1வது) வசனம் அருளப்பட்டது.
Book :64


«أَنَّهُ قَدِمَ رَكْبٌ مِنْ بَنِي تَمِيمٍ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، فَقَالَ أَبُو بَكْرٍ: أَمِّرِ القَعْقَاعَ بْنَ مَعْبَدِ بْنِ زُرَارَةَ، قَالَ عُمَرُ: بَلْ أَمِّرِ الأَقْرَعَ بْنَ حَابِسٍ، قَالَ أَبُو بَكْرٍ: مَا أَرَدْتَ إِلَّا خِلاَفِي، قَالَ عُمَرُ: مَا أَرَدْتُ خِلاَفَكَ، فَتَمَارَيَا حَتَّى ارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا، فَنَزَلَ فِي ذَلِكَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تُقَدِّمُوا} [الحجرات: 1] حَتَّى انْقَضَتْ


Bukhari-4366

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 69 (உயைனா படைப் பிரிவு)3 இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா பின் பத்ர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பனுல் அம்பர் கூட்டத்தாரிடம் அனுப்பினார்கள். ஆகவே அவர்கள், அக்கூட்டத்தார் மீது தாக்குதல் தொடுத்து அவர்களில் சிலரை வீழ்த்தினார்கள். அவர்களில் சிலரைக் கைது செய்தார்கள்.
4366. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தாரிடம் மூன்று அம்சங்கள் குடிகொண்டிருப்பதாகக் கூறியதைக் கேட்டதிலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்கலானேன்.
அவையாவன:
1. ‘பனூ தமீம் குலத்தார் தாம் என் சமுதாயத்தாரிலேயே தஜ்ஜாலிடம் மிகக் கடுமையாக நடந்து கொள்பவர்கள்’ என்று (ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
2. அக்குலத்தாரைச் சேர்ந்த பெண் போர்க் கைதி ஒருவர் ஆயிஷா(ரலி) அவர்களிடம் இருந்தார். எனவே, (ஆயிஷா(ரலி) அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், ‘அவளை விடுதலை செய்துவிடு. ஏனெனில், அவள் (இறைத்தூதர்) இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததிகளில் உள்ளவள்’ என்று கூறினார்கள்.
3. (ஒரு முறை) பனூ தமீம் குலத்தாரின் தானப் பொருள்கள் வந்தன. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இவை ‘ஒரு (முக்கிய) சமுதாயத்தின்’ அல்லது ‘என் சமுதாயத்தின்’ தானப்

لاَ أَزَالُ أُحِبُّ بَنِي تَمِيمٍ بَعْدَ ثَلاَثٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُهَا فِيهِمْ: «هُمْ أَشَدُّ أُمَّتِي عَلَى الدَّجَّالِ» وَكَانَتْ فِيهِمْ سَبِيَّةٌ عِنْدَ عَائِشَةَ، فَقَالَ: «أَعْتِقِيهَا، فَإِنَّهَا مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ»، وَجَاءَتْ صَدَقَاتُهُمْ، فَقَالَ: ” هَذِهِ صَدَقَاتُ قَوْمٍ، أَوْ: قَوْمِي


Bukhari-4365

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 68 பனூ தமீம் குலத்தாரின் தூதுக் குழு.1
4365. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.
பனூ தமீம் குலத்தாரில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!’ என்று அவர்களிடம் கூறினார்கள். அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு நற்செய்தி சொன்னீர்கள் (அது இருக்கட்டும்! தர்மம்) கொடுங்கள்’ என்று கூறினார்கள். (இவர்கள் நம் நற்செய்தியை ஏற்க மறுத்து உலகப் பொருளையே விரும்புகிறார்களே என்று) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கவலை காணப்பட்டது. அப்போது யமன் நாட்டிலிருந்து (அஷ்அரீ குலத்தார்) சிலர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘(யமன் வாசிகளே!) நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை’ என்று கூறினார்கள். அதற்கு யமனியர், ‘நாங்கள் (அதை) ஏற்றுக் கொண்டோம், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள்.
Book : 64


أَتَى نَفَرٌ مِنْ بَنِي تَمِيمٍ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «اقْبَلُوا البُشْرَى يَا بَنِي تَمِيمٍ». قَالُوا: يَا رَسُولَ اللَّهِ قَدْ بَشَّرْتَنَا فَأَعْطِنَا، فَرُئِيَ ذَلِكَ فِي وَجْهِهِ، فَجَاءَ نَفَرٌ مِنَ اليَمَنِ، فَقَالَ: «اقْبَلُوا البُشْرَى إِذْ لَمْ يَقْبَلْهَا بَنُو تَمِيمٍ» قَالُوا: قَدْ قَبِلْنَا يَا رَسُولَ اللَّهِ


Bukhari-4364

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4364. பராஉ(ரலி) அறிவித்தார்.
முழுமையான வடிவில் அருளப்பட்ட கடைசி அத்தியாயம், ‘பராஅத்’ (என்னும் 9-வது ‘அத் தவ்பா’) அத்தியாயம் ஆகும். கடைசியாக அருளப்பட்ட அத்தியாயப் பகுதி ‘அந்நிஸா’வின் இறுதிப் பகுதியாகும். அந்த வசனம் வருமாறு:
(நபியே!) மக்கள் உங்களிடம் ‘கலாலா’ பற்றி தீர்ப்பு வழங்குமாறு கேட்கிறார்கள். நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் உங்களுக்கு ‘கலாலா’ பற்றி இவ்வாறு தீர்ப்பளிக்கிறான்.. (திருக்குர்ஆன் 04: 176)
Book :64


آخِرُ سُورَةٍ نَزَلَتْ كَامِلَةً بَرَاءَةٌ، وَآخِرُ سُورَةٍ نَزَلَتْ خَاتِمَةُ سُورَةِ النِّسَاءِ {يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الكَلاَلَةِ} [النساء: 176]


Bukhari-4363

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 67 அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுடன் ஒன்பதாம் ஆண்டில் ஹஜ் செய்தது394
4363. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
‘ஹஜ்ஜத்துல வதா’வுக்கு முந்திய ஹஜ்ஜின்போது அபூ பக்கர்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் (ஹஜ் பயணக் குழுவுக்குத்) தலைவராக ஆக்கியிருந்தார்கள். அப்போது (துல்ஹஜ் மாதம் 10-ம் நாளான) நஹ்ருடைய நாளில் (மினாவில் வைத்து), ‘இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது. இறையில்லம் கஅபாவை நிர்வாணமாக எவரும் வலம் வரவும் கூடாது’ என்று பொது அறிவிப்புச் செய்யும் குழுவினரில் ஒருவனாக என்னை அபூ பக்ர்(ரலி) அனுப்பி வைத்தார்கள்.
Book : 64


أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ رَضِيَ اللَّهُ عَنْهُ بَعَثَهُ، فِي الحَجَّةِ الَّتِي أَمَّرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهَا قَبْلَ حَجَّةِ الوَدَاعِ، يَوْمَ النَّحْرِ فِي رَهْطٍ يُؤَذِّنُ فِي النَّاسِ «لاَ يَحُجُّ بَعْدَ العَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ»


Bukhari-4362

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4362. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் ‘கருவேல இலைப்’ படைப் பிரிவில் சென்றோம். அபூ உபைதா(ரலி) எங்களுக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார்கள். எங்களக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது இறந்த (பெரிய) மீன் ஒன்றைக் கடல், (கரையில் கொணர்ந்து) எறிந்தது. (அதற்கு முன்) அதைப் போல் (ஒரு மீனை) நாங்கள் பார்த்ததேயில்லை. அது ‘அம்பர்’ என்று அழைக்கப்படுகிறது. அதிலிருந்து அரை மாதம் நாங்கள் உண்டோம். அபூ உபைதா அவர்கள் அதன் (விலா) எலும்புகளில் ஒன்றை எடுத்து பூமியில் நட்டுவைக்க (அதன் கீழே) ஒருவர் வாகனத்தில் சென்றார்.
அறிவிப்பாளர்: அபுஸ் ஸுபைர்(ரஹ்) கூறினார்.
ஜாபிர்(ரலி) இவ்விதம் கூற கேட்டேன்.
அபூ உபைதா(ரலி), ‘உண்ணுங்கள்’ என்று கூறினார்கள். நாங்கள் மதீனாவுக்கு (திரும்பி) வந்தபோது நபி(ஸல்), அவர்களிடம் அதைச் சொன்னோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் (கடலிலிருந்து) வெளிப்படுததிய அந்த உணவை உண்ணுங்கள். (அதனால் தவறில்லை) உங்களுடன் (அதில் சிறிது) இருந்தால் நமக்கும் உண்ணக் கொடுங்கள்’ என்று கூறினார்கள். உடனே, அவர்களில் சிலர், நபி(ஸல்) அவர்களிடம் (அந்த மீனில்) ஒரு துண்டைக் கொண்டு வந்தனர். அதை நபி(ஸல்) அவர்கள் உண்டார்கள்.
Book :64


غَزَوْنَا جَيْشَ الخَبَطِ، وَأُمِّرَ أَبُو عُبَيْدَةَ فَجُعْنَا جُوعًا شَدِيدًا، فَأَلْقَى البَحْرُ حُوتًا مَيِّتًا لَمْ نَرَ مِثْلَهُ، يُقَالُ لَهُ العَنْبَرُ، فَأَكَلْنَا مِنْهُ نِصْفَ شَهْرٍ، فَأَخَذَ أَبُو عُبَيْدَةَ عَظْمًا مِنْ عِظَامِهِ، فَمَرَّ الرَّاكِبُ تَحْتَهُ

فَأَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرًا، يَقُولُ: قَالَ أَبُو عُبَيْدَةَ: كُلُوا فَلَمَّا قَدِمْنَا المَدِينَةَ ذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «كُلُوا، رِزْقًا أَخْرَجَهُ اللَّهُ، أَطْعِمُونَا إِنْ كَانَ مَعَكُمْ» فَأَتَاهُ بَعْضُهُمْ فَأَكَلَهُ


Bukhari-4361

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4361. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவக்ள் எங்களில் குதிரைப்படை வீரர்களான முந்நூறு பேரை (ஒரு புனிதப் போருக்கு) அனுப்பினார்கள். அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) எங்கள் தலைவராக இருந்தார்கள். நாங்கள் குறைஷிகளின் வணிகக் குழுவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். எனவே, நாங்கள் கடற்கரையோரமாக அரை மாதம் தங்கினோம். எங்களைக் கடுமையான பசி பீடிக்க, கருவேல மரத்தின் இலையை நாங்கள் புசித்தோம். எனவே, அந்தப் படைப் பிரிவு ‘கருவேல இலைப்படைப் பிரிவு’ என்று பெயர் சூட்டப்பட்டது. கடல் எங்களக்காக ‘அல் அம்பர்’ எனப்படும் (ஒரு வகை மீன் இனப்) பிராணியை (கரையில்) போட்டது. நாங்கள் அதிலிருந்து அரை மாதம் உண்டோம். அதன் கொழுப்பிலிருந்து எண்ணெய் எடுத்துக் கொண்டோம். அதனால் எங்கள் (வலிமையான) உடல்கள் எங்களுக்கு திரும்பக் கிடைத்துவிட்டன. அபூ உபைதா(ரலி) அந்த (பெரிய) மீனின் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அதை (பூமியில்) நட்டுவிட்டுத் தம்முடனிருந்த மிக உயரமான மனிதரிடம் சென்றார்கள். (அவரை அந்த விலா எலும்பின் கீழே நடந்து செல்லும்படி கேட்டுக் கொண்டார்கள்.)
மற்றோர் அறிவிப்பில் ‘ஒரு மனிதரையும் ஓர் ஒட்டகத்தையும் அழைத்துக் கொண்டு அந்த எலும்பு(க் கூடடுக்)க்குக் கீழே நடந்து சென்றார்கள்’ என்று இடம் பெற்றுள்ளது.

«بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلاَثَ مِائَةِ رَاكِبٍ أَمِيرُنَا أَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ نَرْصُدُ عِيرَ قُرَيْشٍ»، فَأَقَمْنَا بِالسَّاحِلِ نِصْفَ شَهْرٍ، فَأَصَابَنَا جُوعٌ شَدِيدٌ حَتَّى أَكَلْنَا الخَبَطَ، فَسُمِّيَ ذَلِكَ الجَيْشُ جَيْشَ الخَبَطِ، فَأَلْقَى لَنَا البَحْرُ دَابَّةً يُقَالُ لَهَا العَنْبَرُ، فَأَكَلْنَا مِنْهُ نِصْفَ شَهْرٍ، وَادَّهَنَّا مِنْ وَدَكِهِ حَتَّى ثَابَتْ إِلَيْنَا أَجْسَامُنَا، فَأَخَذَ أَبُو عُبَيْدَةَ ضِلَعًا مِنْ أَضْلاَعِهِ، فَنَصَبَهُ فَعَمَدَ إِلَى أَطْوَلِ رَجُلٍ مَعَهُ، قَالَ سُفْيَانُ: «مَرَّةً ضِلَعًا مِنْ أَضْلاَعِهِ فَنَصَبَهُ وَأَخَذَ رَجُلًا وَبَعِيرًا فَمَرَّ تَحْتَهُ» قَالَ جَابِرٌ: وَكَانَ رَجُلٌ مِنَ القَوْمِ نَحَرَ ثَلاَثَ جَزَائِرَ، ثُمَّ نَحَرَ ثَلاَثَ جَزَائِرَ ثُمَّ نَحَرَ ثَلاَثَ جَزَائِرَ، ثُمَّ إِنَّ أَبَا عُبَيْدَةَ نَهَاهُ وَكَانَ عَمْرٌو يَقُولُ: أَخْبَرَنَا أَبُو صَالِحٍ، أَنَّ قَيْسَ بْنَ سَعْدٍ قَالَ لِأَبِيهِ: كُنْتُ فِي الجَيْشِ فَجَاعُوا، قَالَ انْحَرْ، قَالَ: نَحَرْتُ، قَالَ: ثُمَّ جَاعُوا، قَالَ: انْحَرْ، قَالَ: نَحَرْتُ، قَالَ: ثُمَّ جَاعُوا، قَالَ انْحَرْ قَالَ: نَحَرْتُ، ثُمَّ جَاعُوا، قَالَ: انْحَرْ، قَالَ: نُهِيتُ


Bukhari-4360

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 66

ஸீஃபுல் பஹ்ர் (கடற்கரையோரப்) போர்.

நபித்தோழர்களின் ஒரு படை குறைஷி களின் வணிகக்குழு ஒன்றை (இடைமறிக்கத் தருணம் எதிர்பார்த்துக்) காத்துக் கொண்டி ருந்தது. அப்போது அபூ உபைதா பின் ஜர்ராஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அப்படையினருக்கு தளபதியாக இருந்தார்கள்.

4360. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடற்கரையை நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள். அப்படையினருக்கு அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) அவர்களைத் தளபதியாக்கினார்கள். அவர்கள் (மொத்தம்) முன்னூறு பேராக இருந்தனர். (அதில் நானும் கலந்து கொள்ள) நாங்கள் புறப்பட்டோம். சிறிது தொலைவு சென்றபின், வழியில் எங்கள் பயண உணவு தீர்ந்து போய்விட்டது. எனவே, அபூ உபைதா(ரலி) படையினரின் பயண உணவுகளை ஒன்று திரட்டும்படிக் கட்டளையிட, அவை ஒன்று சேகரிக்கப்பட்டன. அவை இரண்டு பைகள் நிறையப் பேரீச்சம் பழங்களாய் இருந்தன. அபூ உபைதா அவர்கள் அது தீரும் வரை (அதிலிருந்து) எங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக உண்ணக் கொடுத்தார்கள். எனவே, எங்களுக்கு ஒவ்வொரு பேரீச்சம்பழம் தான் (ஒவ்வொரு தினமும்) கிடைத்து வந்தது.

அறிவிப்பாளர்களில் ஒருவரான வஹ்ப் இப்னு கைஸான்(ரஹ்) கூறினார்:
நான் (ஜாபிர் – ரலி – அவர்களிடம்), ‘(ஒரு

«بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْثًا قِبَلَ السَّاحِلِ، وَأَمَّرَ عَلَيْهِمْ أَبَا عُبَيْدَةَ بْنَ الجَرَّاحِ» وَهُمْ ثَلاَثُ مِائَةٍ، فَخَرَجْنَا وَكُنَّا بِبَعْضِ الطَّرِيقِ فَنِيَ الزَّادُ، فَأَمَرَ أَبُو عُبَيْدَةَ بِأَزْوَادِ الجَيْشِ، فَجُمِعَ فَكَانَ مِزْوَدَيْ تَمْرٍ، فَكَانَ يَقُوتُنَا كُلَّ يَوْمٍ قَلِيلٌ قَلِيلٌ حَتَّى فَنِيَ فَلَمْ يَكُنْ يُصِيبُنَا إِلَّا تَمْرَةٌ تَمْرَةٌ، فَقُلْتُ: مَا تُغْنِي عَنْكُمْ تَمْرَةٌ؟ فَقَالَ: لَقَدْ وَجَدْنَا فَقْدَهَا حِينَ فَنِيَتْ، ثُمَّ انْتَهَيْنَا إِلَى البَحْرِ فَإِذَا حُوتٌ مِثْلُ الظَّرِبِ، فَأَكَلَ مِنْهَا القَوْمُ ثَمَانِيَ عَشْرَةَ لَيْلَةً، ثُمَّ أَمَرَ أَبُو عُبَيْدَةَ بِضِلَعَيْنِ مِنْ أَضْلاَعِهِ فَنُصِبَا، ثُمَّ أَمَرَ بِرَاحِلَةٍ فَرُحِلَتْ ثُمَّ مَرَّتْ تَحْتَهُمَا فَلَمْ تُصِبْهُمَا


Next Page » « Previous Page