Category: புஹாரி

Bukhari

Bukhari-4196

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4196. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி(ப் போருக்காகப்) புறப்பட்டோம். இரவு நேரத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தபோது ஒருவர், (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் இப்னு அக்வஃ (ரலி) அவர்களிடம், ‘ஆமிரே! உங்கள் கவிதைகளில் சிலதை(ப் பாடி) எங்களுக்கு கேட்கச் செய்யமாட்டீர்களா?’ என்று கூறினார். ஆமிர் (ரலி) கவிஞராக இருந்தார்கள். அவர்கள் தங்களின் வாகனத்திலிருந்து இறங்கி மக்களுக்காக (பின்வரும் யாப்பு வகைக் கவிதையைப்) பாடி அவர்களின் ஒட்டகங்களைப் பாய்ந்தோடச் செய்தார்கள். ‘இறைவா! நீ இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். உனக்காக (எங்களை) அர்ப்பணம் செய்கிறோம். (உன் கட்டளைகளில்) எதனை நாங்கள் கைவிட்டு விட்டோமோ அதற்காக எங்களை மன்னிப்பாயாக! நாங்கள் (போர்க் களத்தில் எதிரியைச்) சந்திக்கும்போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! எங்களின் மீது அமைதியைப் பொழிவாயாக! எங்களின் மீது அமைதியைப் பொழிவாயாக! (அறவழியில் செல்ல) நாங்கள் அழைக்கப்பட்டால் நாங்கள் (தயாராக) வந்து விடுவோம். எங்களிடம் மக்கள் அபயக்குரல் எழுப்பினால் (உதவிக்கு வருவோம்)’ என்று பாடிக் கொண்டிருந்தார்கள்.

(வழக்கம் போன்று பாடலைக் கேட்டு ஒட்டகங்கள் விரைந்தோடத் தொடங்கின.) அப்போது

خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى خَيْبَرَ، فَسِرْنَا لَيْلًا، فَقَالَ رَجُلٌ مِنَ القَوْمِ لِعَامِرٍ: يَا عَامِرُ أَلاَ تُسْمِعُنَا مِنْ هُنَيْهَاتِكَ؟ وَكَانَ عَامِرٌ رَجُلًا شَاعِرًا، فَنَزَلَ يَحْدُو بِالقَوْمِ يَقُولُ:
[البحر الرجز]
اللَّهُمَّ لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا … وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا

فَاغْفِرْ فِدَاءً لَكَ مَا أَبْقَيْنَا … وَثَبِّتِ الأَقْدَامَ إِنْ لاَقَيْنَا
وَأَلْقِيَنْ سَكِينَةً عَلَيْنَا … إِنَّا إِذَا صِيحَ بِنَا أَبَيْنَا
وَبِالصِّيَاحِ عَوَّلُوا عَلَيْنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ هَذَا السَّائِقُ»، قَالُوا: عَامِرُ بْنُ الأَكْوَعِ، قَالَ: «يَرْحَمُهُ اللَّهُ» قَالَ رَجُلٌ مِنَ القَوْمِ: وَجَبَتْ يَا نَبِيَّ اللَّهِ، لَوْلاَ أَمْتَعْتَنَا بِهِ؟ فَأَتَيْنَا خَيْبَرَ فَحَاصَرْنَاهُمْ حَتَّى أَصَابَتْنَا مَخْمَصَةٌ شَدِيدَةٌ، ثُمَّ إِنَّ اللَّهَ تَعَالَى فَتَحَهَا عَلَيْهِمْ، فَلَمَّا أَمْسَى النَّاسُ مَسَاءَ اليَوْمِ الَّذِي فُتِحَتْ عَلَيْهِمْ، أَوْقَدُوا نِيرَانًا كَثِيرَةً، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا هَذِهِ النِّيرَانُ عَلَى أَيِّ شَيْءٍ تُوقِدُونَ؟» قَالُوا: عَلَى لَحْمٍ، قَالَ: «عَلَى أَيِّ لَحْمٍ؟» قَالُوا: لَحْمِ حُمُرِ الإِنْسِيَّةِ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَهْرِيقُوهَا وَاكْسِرُوهَا»، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَوْ نُهَرِيقُهَا وَنَغْسِلُهَا؟ قَالَ: «أَوْ ذَاكَ». فَلَمَّا تَصَافَّ القَوْمُ كَانَ سَيْفُ عَامِرٍ قَصِيرًا، فَتَنَاوَلَ بِهِ سَاقَ يَهُودِيٍّ لِيَضْرِبَهُ، وَيَرْجِعُ ذُبَابُ سَيْفِهِ، فَأَصَابَ عَيْنَ رُكْبَةِ عَامِرٍ فَمَاتَ مِنْهُ، قَالَ: فَلَمَّا قَفَلُوا قَالَ سَلَمَةُ: رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ آخِذٌ بِيَدِي، قَالَ: «مَا لَكَ» قُلْتُ لَهُ: فَدَاكَ أَبِي وَأُمِّي، زَعَمُوا أَنَّ عَامِرًا حَبِطَ عَمَلُهُ؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَذَبَ مَنْ قَالَهُ، إِنَّ لَهُ لَأَجْرَيْنِ – وَجَمَعَ بَيْنَ إِصْبَعَيْهِ – إِنَّهُ لَجَاهِدٌ مُجَاهِدٌ، قَلَّ عَرَبِيٌّ مَشَى بِهَا مِثْلَهُ»،

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَاتِمٌ قَالَ: «نَشَأَ بِهَا»


Bukhari-4195

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 39 கைபர் போர்258
4195. சுவைத் இப்னு நுஅமான்(ரலி) அறிவித்தார்.
கைபர் போர் நடந்த வருடம், நபி(ஸல்) அவர்களுடன் நானும் புறப்பட்டேன். கைபருக்கு அருகிலுள்ள ‘ஸஹ்பா’ என்ற இடத்தை அடைந்ததும் நபி(ஸல்) அவர்கள் அஸ்ருத் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர், பயண உணவைக் கொண்டு வரும்படிக் கூறினார்கள். அப்போது, மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரப்படவில்லை. அதைக் குழைக்கும் படி கட்டளையிட்டார்கள். அது குழைக்கப்பட்டதும் அதை நபி(ஸல்) அவர்களும் நாங்களும் சாப்பிட்டோம். பின்னர் மஃக்ரிப் தொழுகைக்காகச் சென்றார்கள். அப்போது வாயை (மட்டும்) கொப்பளித்தார்கள். நாங்களும் வாய் கொப்பளித்தோம். பின்னர் (புதிதாக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்.
Book : 64


أَنَّهُ خَرَجَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ خَيْبَرَ، حَتَّى إِذَا كُنَّا بِالصَّهْبَاءِ، وَهِيَ مِنْ أَدْنَى خَيْبَرَ، «صَلَّى العَصْرَ، ثُمَّ دَعَا بِالأَزْوَادِ فَلَمْ يُؤْتَ إِلَّا بِالسَّوِيقِ، فَأَمَرَ بِهِ فَثُرِّيَ، فَأَكَلَ وَأَكَلْنَا، ثُمَّ قَامَ إِلَى المَغْرِبِ، فَمَضْمَضَ وَمَضْمَضْنَا، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


Bukhari-4194

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 38 தாத்துல் கரத் போர் அது, கைபருக்கு மூன்று நாட்களுக்கு முன்னால், நபி (ஸல்) அவர்களின் பால்தரும் ஒட்டகங்களை எதிரிகள் கடத்திச்சென்ற போது நடந்த போராகும்.256
4194. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.
முதல் தொழுகை(யான ஃபஜ்ரு)க்கு அழைப்புக் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே நான் (மதீனாவிலிருந்து சிரியா வழியிலுள்ள ஃகாபாவை நோக்கிப்) புறப்பட்டேன். ‘தூகரத்’ என்னுமிடத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (பால் தரும்) ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களுக்குரிய ஓர் அடிமை (வந்து) என்னைச் சந்தித்து, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பால் தரும் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டுவிட்டன’ என்று கூறினான். நான், ‘அவற்றை யார் பிடித்துச் சென்றது?’ என்று கேட்டேன். அதற்கவன், ‘கத்ஃபான் குலத்தார்’ என்று பதில் சொன்னான். உடனே நான் உரக்கச் சப்தமிட்டு, ‘யா ஸபாஹா! (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையிலிருந்த அனைவருக்கும் கேட்கும்படி மும்முறை கத்தினேன். பிறகு முகத்தைத் திருப்பாமல் நேராக விரைந்து சென்று அவர்களை அடைந்தேன். அவர்கள் (கொள்ளையடித்துச் சென்ற ஒட்டகங்களைக்) கையில் பிடித்துக் கொண்டு நீர் புகட்டிக் கொண்டிருந்தனர். ‘நான்

خَرَجْتُ قَبْلَ أَنْ يُؤَذَّنَ بِالأُولَى، وَكَانَتْ لِقَاحُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرْعَى بِذِي قَرَدَ، قَالَ: فَلَقِيَنِي غُلاَمٌ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، فَقَالَ: أُخِذَتْ لِقَاحُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْتُ: مَنْ أَخَذَهَا؟ قَالَ: غَطَفَانُ، قَالَ: فَصَرَخْتُ ثَلاَثَ صَرَخَاتٍ يَا صَبَاحَاهْ، قَالَ فَأَسْمَعْتُ مَا بَيْنَ لاَبَتَيِ المَدِينَةِ، ثُمَّ انْدَفَعْتُ عَلَى وَجْهِي حَتَّى أَدْرَكْتُهُمْ، وَقَدْ أَخَذُوا يَسْتَقُونَ مِنَ المَاءِ، فَجَعَلْتُ أَرْمِيهِمْ بِنَبْلِي، وَكُنْتُ رَامِيًا، وَأَقُولُ
أَنَا ابْنُ الأَكْوَعْ … وَاليَوْمُ يَوْمُ الرُّضَّعْ
وَأَرْتَجِزُ، حَتَّى اسْتَنْقَذْتُ اللِّقَاحَ مِنْهُمْ، وَاسْتَلَبْتُ مِنْهُمْ ثَلاَثِينَ بُرْدَةً، قَالَ: وَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ، فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، قَدْ حَمَيْتُ القَوْمَ المَاءَ وَهُمْ عِطَاشٌ، فَابْعَثْ إِلَيْهِمُ السَّاعَةَ، فَقَالَ: «يَا ابْنَ الأَكْوَعِ، مَلَكْتَ فَأَسْجِحْ» قَالَ: ثُمَّ رَجَعْنَا وَيُرْدِفُنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَاقَتِهِ حَتَّى دَخَلْنَا المَدِينَةَ


Bukhari-4193

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4193. (அபூ கிலாபா – ரஹ் – அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அன்னாரின் முன்னாள் அடிமை) அபூ ரஜாஉ(ரஹ்) அறிவித்தார்.

நான் என் எஜமானர் அபூ கிலாபா அவர்களுடன் ஷாம் நாட்டிலிருந்தேன். (கலீஃபா) உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) ஒரு தினம் மக்களிடம், ‘இந்த ‘கஸாமா’ விஷயத்தில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று ஆலோசனை கேட்டார்கள். ‘அது இறைத்தூதர் (ஸல்) அவர்களும் உங்களுக்கு முன் (வந்த) கலீஃபாக்களும் தீர்ப்பளித்த உண்மை (விதி) தான்’ என்று மக்கள் பதிலளித்தனர். அபூ கிலாபா(ரஹ்), அப்போது உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களின் அரியணைக்குப் பின்னால் இருந்தார்கள். அப்போது அன்பஸா இப்னு ஸயீத் (ரஹ்), ‘உரைனா குலத்தார் பற்றிய அனஸ் (ரலி) அவர்களின் ஹதீஸ் எங்கே (போயிற்று)?’ என்று கேட்டார்கள். அப்போது அபூ கிலாபா (ரஹ்), ‘(உரைனா குலத்தார் பற்றி) எனக்கும் அனஸ் (ரலி) அறிவித்தார்’ என்று கூறினார்கள்.

 

அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து அப்துல் அஸீஸ் இப்னு ஸுஹைப் (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில், ‘உரைனா குலத்தாரில் சிலர்’ என்று காணப்படுகிறது.

அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அபூ கிலாபா (ரஹ்) அறிவிக்கிற அறிவிப்பில், ‘உக்ல் குலத்தாரில் சிலர்’ (என்று கூறிவிட்டு) முழு நிகழ்ச்சியையும் கூறினார்கள்.
Book :64


أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ العَزِيزِ، اسْتَشَارَ النَّاسَ يَوْمًا، قَالَ: مَا تَقُولُونَ فِي هَذِهِ القَسَامَةِ؟ فَقَالُوا: «حَقٌّ قَضَى بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَقَضَتْ بِهَا الخُلَفَاءُ قَبْلَكَ» قَالَ: وَأَبُو قِلاَبَةَ خَلْفَ سَرِيرِهِ، فَقَالَ عَنْبَسَةُ بْنُ سَعِيدٍ فَأَيْنَ حَدِيثُ أَنَسٍ فِي العُرَنِيِّينَ

قَالَ أَبُو قِلاَبَةَ، إِيَّايَ حَدَّثَهُ أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ عَبْدُ العَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، مِنْ عُرَيْنَةَ، وَقَالَ أَبُو قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، مِنْ عُكْلٍ ذَكَرَ القِصَّةَ


Bukhari-4192

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 37

உக்ல் மற்றும் உரைனா குலத்தாரின் நிகழ்ச்சி252

4192. உக்ல்’ மற்றும் ‘உரைனா’ குலத்தாரில் சிலர் மதீனாவிற்கு வந்து நபி (ஸல்) அவர்களிடம், தாங்கள் இஸ்லாத்தை ஏற்பதாகப் பேசினர். அப்போது அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் பால்தரும் கால்நடைகள் வைத்திருப்பவர்கள். நாங்கள் விளைநிலங்கள் வைத்திருப்பவர்கள் அல்லர். (நாங்கள் பால்தரும் கால்நடைகளைக் காடுகளில் மேய்த்து அதன் பாலை அருந்துபவர்களாய் இருந்தோம்)’ என்று கூறினர். அவர்களுக்கு மதீனா(வின் தட்ப வெப்பம்) ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (பத்துக்குட்பட்ட) ஒட்டகங்களையும் ஒரு மேய்ப்பரையும் அவர்களு(டைய உபயோகத்து)க்காக வழங்கும் படி உத்தரவிட்டார்கள். மேலும் ‘ஒட்டகங்கள் (மேயும்) இடத்திற்குச் சென்று அந்த ஒட்டகங்களின் பாலையும் மூத்திரத்தையும் பருகிக் கொள்ளுங்கள் (இன்ஷா அல்லாஹ் நிவாரணம் கிடைக்கும்)’ என்று உத்தரவிட்டார்கள்.

அவ்வாறே அவர்கள் சென்றனர். (அவற்றின் பாலை அருந்தி நிவாரணமும் பெற்றுக் கொண்டனர்.) அவர்கள் (கருங்கற்கள் நிறைந்த) ‘ஹர்ரா’ பகுதியில் இருந்தபோது இஸ்லாத்திலிருந்து விலகி இறை மறுப்பாளர்களாக (மதம்) மாறிவிட்டனர். மேலும், நபி (ஸல்) அவர்களின் கால்நடை மேய்ப்பாளர் (யஸார் (ரலி) அவர்களைக்

أَنَّ نَاسًا مِنْ عُكْلٍ وَعُرَيْنَةَ قَدِمُوا المَدِينَةَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَكَلَّمُوا بِالإِسْلاَمِ، فَقَالُوا يَا نَبِيَّ اللَّهِ: إِنَّا كُنَّا أَهْلَ ضَرْعٍ، وَلَمْ نَكُنْ أَهْلَ رِيفٍ، وَاسْتَوْخَمُوا المَدِينَةَ، «فَأَمَرَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَوْدٍ وَرَاعٍ، وَأَمَرَهُمْ أَنْ يَخْرُجُوا فِيهِ فَيَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا»، فَانْطَلَقُوا حَتَّى إِذَا كَانُوا نَاحِيَةَ الحَرَّةِ، كَفَرُوا بَعْدَ إِسْلاَمِهِمْ، وَقَتَلُوا رَاعِيَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتَاقُوا الذَّوْدَ، «فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَعَثَ الطَّلَبَ فِي آثَارِهِمْ، فَأَمَرَ بِهِمْ فَسَمَرُوا أَعْيُنَهُمْ، وَقَطَعُوا أَيْدِيَهُمْ، وَتُرِكُوا فِي نَاحِيَةِ الحَرَّةِ حَتَّى مَاتُوا عَلَى حَالِهِمْ»

قَالَ قَتَادَةُ: بَلَغَنَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ ذَلِكَ كَانَ يَحُثُّ عَلَى الصَّدَقَةِ وَيَنْهَى عَنِ المُثْلَةِ وَقَالَ شُعْبَةُ: وَأَبَانُ، وَحَمَّادٌ، عَنْ قَتَادَةَ، مِنْ عُرَيْنَةَ، وَقَالَ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ: وَأَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ قَدِمَ نَفَرٌ مِنْ عُكْلٍ


Bukhari-4191

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4191. கஅப் இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் ‘இஹ்ராம்’ அணிந்தவர்களாக ஹுதைபிய்யாவில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களை (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) இணை வைப்பவர்கள் தடுத்து விட்டிருந்தனர். எனக்கு (காது சோணை வரை) நிறைய தலைமுடி இருந்தது. (அதிலிருந்து) பேன்கள் என் முகத்தின் மீது (உதிர்ந்து) விழத் தொடங்கின. அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், ‘உன்னுடைய தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று கூறினேன். (அப்போதுதான், ‘இஹ்ராம்’ அணிந்தவர் ‘இஹ்ராம்’ அணிந்திருக்கும்போது செய்யக் கூடாத காரியங்களைச் செய்தால் அதற்கான பரிகாரம் என்ன என்பது தொடர்பாக), ‘உங்களில் யாரேனும் நோயாளியாக, இருந்தால், அல்லது அவரின் தலையில் துன்பம் தரும் (பேன், பொடுகு, காயம் அல்லது நோய்) ஏதும் இருந்தால் (அதன் காரணத்தால் இஹ்ராம் அணிந்த நிலையிலேயே அவர் தம் தலையை மழித்துக் கொள்ள நேரிட்டால் அதற்குப்) பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும்; அல்லது தர்மம் செய்ய வேண்டும்; அல்லது குர்பானி கொடுக்கவேண்டும்’ என்னும் இந்த (திருக்குர்ஆன் 02:196-ம்) வசனம் அருளப்பட்டது.
Book :64


كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالحُدَيْبِيَةِ وَنَحْنُ مُحْرِمُونَ، وَقَدْ حَصَرَنَا المُشْرِكُونَ، قَالَ: وَكَانَتْ لِي وَفْرَةٌ، فَجَعَلَتِ الهَوَامُّ تَسَّاقَطُ عَلَى وَجْهِي، فَمَرَّ بِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَيُؤْذِيكَ هَوَامُّ رَأْسِكَ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: وَأُنْزِلَتْ هَذِهِ الآيَةُ: {فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ} [البقرة: 196]


Bukhari-4190

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4190. கஅப் இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார்.
ஹுதைபிய்யா சமயத்தில் (உம்ராவுக்காக நான் ‘இஹ்ராம்’ அணிந்திருந்த போது) நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (அப்போது என் தலையிலிருந்து) பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உன்னுடைய தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று கூறினேன். அதற்கு, ‘உன்னுடைய தலையை மழித்துக் கொள். பின்பு மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக் கொள். அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளி. அல்லது (உன்னால் முடிந்த) ஏதாவது ஒரு தியாகப் பிராணியை அறுத்துக் குர்பானி செய்திடு. (இதுவே இஹ்ராம் அணிந்த நிலையில் தலையை மழித்ததற்கான பரிகாரமாகும்)’ என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர் வரிசையில் வரும்) அய்யூப்(ரஹ்) கூறினார்.
(இந்த மூன்றில்) எதனை முதலில் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
Book :64


أَتَى عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الحُدَيْبِيَةِ، وَالقَمْلُ يَتَنَاثَرُ عَلَى وَجْهِي، فَقَالَ: «أَيُؤْذِيكَ هَوَامُّ رَأْسِكَ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «فَاحْلِقْ، وَصُمْ ثَلاَثَةَ أَيَّامٍ، أَوْ أَطْعِمْ سِتَّةَ مَسَاكِينَ، أَوْ انْسُكْ نَسِيكَةً» قَالَ أَيُّوبُ: «لاَ أَدْرِي بِأَيِّ هَذَا بَدَأَ»


Bukhari-4189

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4189. அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அறிவித்தார்.
‘ஸிஃப்பீன் சண்டையிலிருந்து ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) திரும்பி வந்தபோது நாங்கள் அவர்களிடம் (அன்னார் சண்டையில் ஈடுபட்டு காட்டாதது பற்றி) செய்தி அறியச் சென்றோம். அப்போது அவர்கள், ‘(நான் இந்தப் போரில் ஈடுபாடு கொள்ளாதது குறித்து என்னைக் குற்றம் சாட்டாதீர்கள். உங்கள்) எண்ணத்தையே குற்றம் சாட்டுங்கள். அபூ ஜஹ்ல் (அபயம் தேடி வந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையின்) நாளில், நபி(ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்க மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் ஏற்க மறுத்திருப்பேன் – அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் -(அத்தகைய மனநிலையில் அன்று நான் இருந்தேன். அன்று) எங்கள் தோள்களில் நாங்கள் எங்கள் வாட்களை (முடக்கி) வைத்துக் கொண்டது எங்களுக்குச் சிரமம் தரக்கூடிய விஷயமான போருக்கு அஞ்சியல்ல. நாங்கள் அறிந்த எளிய விஷயமான சமாதானத்தை அடைந்திட (முடக்கப்பட்ட) அந்த வாட்களே வழி வகுத்தன. ஆனால், இதுவெல்லாம் ஸிஃப்பீன் போருக்கு முன்னால் தான். (ஆனால், முஸ்லிம்களுக்கிடையிலேயே போர் மூண்டுவிட்ட இந்தச் சூழ்நிலையில்) நாங்கள் குழப்பத்தின் ஒரு மூலையை அடைக்கப் போனால் இன்னொரு மூலை பீறிட்டு வெடிக்கிறது. இதை எப்படிச் சமாளிப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை’ என்று கூறினார்கள்.

لَمَّا قَدِمَ سَهْلُ بْنُ حُنَيْفٍ مِنْ صِفِّينَ أَتَيْنَاهُ نَسْتَخْبِرُهُ، فَقَالَ: «اتَّهِمُوا الرَّأْيَ، فَلَقَدْ رَأَيْتُنِي يَوْمَ أَبِي جَنْدَلٍ وَلَوْ أَسْتَطِيعُ أَنْ أَرُدَّ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْرَهُ لَرَدَدْتُ، وَاللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، وَمَا وَضَعْنَا أَسْيَافَنَا عَلَى عَوَاتِقِنَا لِأَمْرٍ يُفْظِعُنَا إِلَّا أَسْهَلْنَ بِنَا إِلَى أَمْرٍ نَعْرِفُهُ قَبْلَ هَذَا الأَمْرِ، مَا نَسُدُّ مِنْهَا خُصْمًا إِلَّا انْفَجَرَ عَلَيْنَا خُصْمٌ مَا نَدْرِي كَيْفَ نَأْتِي لَهُ»


Bukhari-4188

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4188. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்தபோது நாங்களும் அவர்களுடனிருந்தோம். (மக்காவில் நுழைந்ததும் புனித கஅபாவை) வலம் வந்தார்கள். நாங்களும் அவர்களுடன் வலம் வந்தோம். அவர்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்கும் இடையே தொங்கோட்டம் ஓடினார்கள். (நாங்களும் ஓடினோம்.) அப்போது (இணைவைக்கும்) மக்காவாசிகளில் எவரும் அவர்களை எந்த விதத்திலும் தாக்கி விடக் கூடாது என்பதற்காக அவர்களை மறைத்துக் கொண்டு (அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக) இருந்தோம்.
Book :64


كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ اعْتَمَرَ «فَطَافَ فَطُفْنَا مَعَهُ، وَصَلَّى وَصَلَّيْنَا مَعَهُ، وَسَعَى بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ، فَكُنَّا نَسْتُرُهُ مِنْ أَهْلِ مَكَّةَ لاَ يُصِيبُهُ أَحَدٌ بِشَيْءٍ»


Bukhari-4187

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

4187. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஹுதைபியா நாளில் நபி (ஸல்) அவர்களுடனிருந்த மக்கள், பல்வேறு மரங்களின் நிழலில் பிரிந்து சென்று (ஓய்வெடுத்துக்கொண்டு) இருந்தனர். அப்போது சிலர் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வரை நோக்கி), “அப்துல்லாஹ்வே! மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். என்ன விஷயம் என்று பார்” என்று கூறினார்கள். (அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் போய்ப் பார்த்தபோது அல்லாஹ்வின் தூதரிடம்) மக்கள் உறுதிமொழி கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்துவிட்டுப் பின்னர் உமர் (ரலி) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். (அவர்களிடம் விவரத்தைக் கூறவே) உடனே உமர் (ரலி) அவர்களும் புறப்பட்டுச் சென்று உறுதிமொழி அளித்தார்கள்.

அத்தியாயம்: 64


أَنَّ النَّاسَ كَانُوا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الحُدَيْبِيَةِ تَفَرَّقُوا فِي ظِلاَلِ الشَّجَرِ، فَإِذَا النَّاسُ مُحْدِقُونَ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا عَبْدَ اللَّهِ، انْظُرْ مَا شَأْنُ النَّاسِ قَدْ أَحْدَقُوا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَوَجَدَهُمْ يُبَايِعُونَ، فَبَايَعَ ثُمَّ رَجَعَ إِلَى عُمَرَ فَخَرَجَ فَبَايَعَ


Next Page » « Previous Page