Category: புஹாரி

Bukhari

Bukhari-4059

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4059. அலீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்று சேர்த்து ஸஅத் இப்னு மாலிக்(ரலி) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் (அர்ப்பணிப்பதாகக்) கூறியதை நான் கேட்டதில்லை. ஏனெனில், நான் உஹுது (போர் நடந்த) நாளில், ‘சஅதே! அம்பெய்யுங்கள். என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்டேன்.
Book :64


مَا سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمَعَ أَبَوَيْهِ لِأَحَدٍ إِلَّا لِسَعْدِ بْنِ مَالِكٍ، فَإِنِّي سَمِعْتُهُ يَقُولُ يَوْمَ أُحُدٍ: «يَا سَعْدُ ارْمِ فِدَاكَ أَبِي وَأُمِّي»


Bukhari-4058

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4058. அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்கள் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்று சேர்த்து ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் (அர்ப்பணிப்பதாகக்) கூறியதை நான் கேட்டதில்லை.
Book :64


«مَا سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْمَعُ أَبَوَيْهِ لِأَحَدٍ غَيْرَ سَعْدٍ»


Bukhari-4057

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4057. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அறிவித்தார்.

உஹுதுப் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்று சேர்த்து எனக்காக (அர்ப்பணிப்பதாகக்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) கூறினார்.

தாம் போர் புரிந்து கொண்டிருக்கும்போது, ‘என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்’ என்று தம்மிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் பற்றியே இவ்வாறு ஸஅத் (ரலி) குறிப்பிடுகிறார்கள்.
Book :64


لَقَدْ جَمَعَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ أَبَوَيْهِ كِلَيْهِمَا يُرِيدُ حِينَ قَالَ: «فِدَاكَ أَبِي وَأُمِّي» وَهُوَ يُقَاتِلُ


Bukhari-4056

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4056. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
உஹுதுப் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், எனக்காகத் தம் தாயையும் தந்தையையும் ஒன்று சேர்த்து, (‘என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்’ என்று) கூறி (போர் புரிய உற்சாகமூட்டி)னார்கள்.
Book :64


«جَمَعَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَبَوَيْهِ يَوْمَ أُحُدٍ»


Bukhari-4055

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4055. ஸஅத் இப்னு அபீ வாக்காஸ்(ரலி) அறிவித்தார்.
உஹுதுப் போரின்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் அம்புக் கூட்டிலிருந்து எனக்காக (அம்புகளை) உருவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது (என்னிடம்), ‘அம்பெய்யுங்கள். என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்’ என்று கூறினார்கள்.
Book :64


نَثَلَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كِنَانَتَهُ يَوْمَ أُحُدٍ، فَقَالَ «ارْمِ فِدَاكَ أَبِي وَأُمِّي»


Bukhari-4054

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4054. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
உஹுதுப் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களை பார்த்தேன் அவர்களுடன் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். அவ்விருவரும் நபியவர்களுக்காகக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள் வெள்ளை நிற உடையணிந்திருந்தார்கள். அதற்கு முன்போ அதற்குப் பின்போ அவ்விருவரையும் நான் பார்த்ததில்லை.
Book :64


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ، وَمَعَهُ رَجُلاَنِ يُقَاتِلاَنِ عَنْهُ، عَلَيْهِمَا ثِيَابٌ بِيضٌ، كَأَشَدِّ القِتَالِ مَا رَأَيْتُهُمَا قَبْلُ وَلاَ بَعْدُ»


Bukhari-4053

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4053. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
தன் மீது கடன் இருக்கும் நிலையில் ஆறு பெண் மக்களை (அநாதைகளாக)விட்டுவிட்டு என் தந்தை உஹுதுப்போரில் உயிர்த் தியாகியாகக் கொல்லப்பட்டார். பேரீச்சம் பழங்களைக் கொய்யும் (அறுவடைக்) காலம் வந்தபோது, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று, ‘என் தந்தை உஹுதுப் போரில் உயிர்த் தியாகியாகக் கொல்லப்பட்டார் என்பது தங்களுக்குத் தெரியும். அவர் நிறையக் கடனையும்விட்டுச் சென்றுள்ளார். கடன்காரர்கள் தங்களைச் சந்திக்க வேண்டுமென விரும்புகிறேன்’ என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ சென்று எல்லாப் பேரீச்சங் கனிகளையும் களத்தில் ஒரு மூலையில் (தனித் தனியாகக்) குவித்து வை!’ என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்தேன். நபி(ஸல்) அவர்கள் கண்டபோது, அதில் பெரிய குவியலை மூன்று முறை சுற்றி வந்து அதன் அருகே அமர்ந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களைக் கண்டபோது என்னால் ஆத்திரமூட்டப்பட்டவர்களைப் போல் அந்த நேரத்தில் தெரிந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கண்டபோது, அதில் பெரிய குவியலை மூன்று முறை சுற்றி வந்து அதன் அருகே அமர்ந்தார்கள். பிறகு, ‘உன் (கடன்காரத்) தோழர்களைக் கூப்பிடு’ என்று கூறினார்கள். (பிறகு) நபி(ஸல்) அவர்கள் (பேரீச்சங் கனிகளை) அவர்களுக்கு

أَنَّ أَبَاهُ، اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ عَلَيْهِ دَيْنًا، وَتَرَكَ سِتَّ بَنَاتٍ، فَلَمَّا حَضَرَ جِزَازُ النَّخْلِ قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: قَدْ عَلِمْتَ أَنَّ وَالِدِي قَدِ اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ دَيْنًا كَثِيرًا، وَإِنِّي أُحِبُّ أَنْ يَرَاكَ الغُرَمَاءُ، فَقَالَ: «اذْهَبْ فَبَيْدِرْ كُلَّ تَمْرٍ عَلَى نَاحِيَةٍ»، فَفَعَلْتُ ثُمَّ دَعَوْتُهُ، فَلَمَّا نَظَرُوا إِلَيْهِ كَأَنَّهُمْ أُغْرُوا بِي تِلْكَ السَّاعَةَ، فَلَمَّا رَأَى مَا يَصْنَعُونَ أَطَافَ حَوْلَ أَعْظَمِهَا بَيْدَرًا ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ جَلَسَ عَلَيْهِ، ثُمَّ قَالَ: «ادْعُ لِي أَصْحَابَكَ» فَمَا زَالَ يَكِيلُ لَهُمْ حَتَّى أَدَّى اللَّهُ عَنْ وَالِدِي أَمَانَتَهُ، وَأَنَا أَرْضَى أَنْ يُؤَدِّيَ اللَّهُ أَمَانَةَ وَالِدِي، وَلاَ أَرْجِعَ إِلَى أَخَوَاتِي بِتَمْرَةٍ، فَسَلَّمَ اللَّهُ البَيَادِرَ كُلَّهَا، وَحَتَّى إِنِّي أَنْظُرُ إِلَى البَيْدَرِ الَّذِي كَانَ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنَّهَا لَمْ تَنْقُصْ تَمْرَةً وَاحِدَةً


Bukhari-4052

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4052. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்.
என்னிடம் இறைத்தூதர்(ஸல்)அவர்கள், ‘திருமணம் முடித்துக் கொண்டாயா? ஜாபிரே!’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று கூறினேன். ‘கன்னி கழிந்த பெண்ணையாக? கன்னிப் பெண்ணையா?’ என்று கேட்டார்கள். நான், ‘(கன்னிப் பெண்ணை) அல்ல கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)’ என்று கூறினேன். ‘உன்னோடு கொஞ்சிக் குலவும் கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா?’ என்று கேட்டார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தை (அப்துல்லாஹ் – ரலி அவர்கள்) ஒன்பது பெண்மக்களைவிட்டுவிட்டு உஹுதுப் போரின்போது (உயிர் தியாகியாகக்) கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்துவரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்)’ என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘நீ செய்தது சரிதான்’ என்று கூறினார்கள்.
Book :64


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «هَلْ نَكَحْتَ يَا جَابِرُ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «مَاذَا أَبِكْرًا أَمْ ثَيِّبًا؟» قُلْتُ: لاَ بَلْ ثَيِّبًا، قَالَ «فَهَلَّا جَارِيَةً تُلاَعِبُكَ» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي قُتِلَ يَوْمَ أُحُدٍ، وَتَرَكَ تِسْعَ بَنَاتٍ، كُنَّ لِي تِسْعَ أَخَوَاتٍ، فَكَرِهْتُ أَنْ أَجْمَعَ إِلَيْهِنَّ جَارِيَةً خَرْقَاءَ مِثْلَهُنَّ، وَلَكِنِ امْرَأَةً تَمْشُطُهُنَّ وَتَقُومُ عَلَيْهِنَّ، قَالَ: «أَصَبْتَ»


Bukhari-4051

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 உங்களில் இரு குழுவினருக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்க, அவர்கள் தைரியம் இழக்க முனைந்த நேரத்தையும்(நபியே! நினைவு கூருக!) இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும்! (என்ற 3:122-வது இறைவசனம்)119
4051. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
‘(உஹுதுப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழக்க முனைந்த நேரத்தையும்…’ என்னும் இந்த (திருக்குர்ஆன் 03:122-ம்) இறைவசனம், பனூ சலிமா மற்றும் பனூ ஹாரிஸா கூட்டத்தாராகிய எங்களைக் குறித்தே இறங்கியது. மேலும், இந்த வசனம் இறங்காமலிருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்படமாட்டேன். (ஏனெனில்) அல்லாஹ், ‘அவ்விரு பிரிவாருக்கும் அல்லாஹ்வே பாதுகாவலனாக இருந்தான்’ என்று (எங்களை மேன்மைப்படுத்திக்) கூறுகிறான்.
Book : 64


نَزَلَتْ هَذِهِ الآيَةُ فِينَا: {إِذْ هَمَّتْ طَائِفَتَانِ مِنْكُمْ أَنْ تَفْشَلاَ} [آل عمران: 122] بَنِي سَلِمَةَ، وَبَنِي حَارِثَةَ، وَمَا أُحِبُّ أَنَّهَا لَمْ تَنْزِلْ، وَاللَّهُ يَقُولُ: {وَاللَّهُ وَلِيُّهُمَا} [آل عمران: 122]


Bukhari-4050

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4050. ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அறிவித்தார்.

உஹுதுப்போருக்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றபோது, நபி (ஸல்)அவர்களுடன் புறப்பட்டுச் சென்றவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) திரும்பி வந்துவிட்டனர். (இவர்களின் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது என்னும் விஷயத்தில்) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் இரண்டு பிரிவினராகப் பிரிந்துவிட்டார்கள். ஒரு பிரிவினர், ‘(திரும்பி ஓடியவர்களைக்) கொன்று விடுவோம்’ என்று கூறினர். மற்றொரு பிரிவினர், ‘அவர்களை நாம் கொலை செய்யக் கூடாது’ என்று கூறினர்.

(அவர்கள் கருத்து வேறுபட்டு பிரிந்தனர்.) அப்போது பின்வரும் வசனம் அருளப்பட்டது.

உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நயவஞ்சகர்களின் விஷயத்தில் இரண்டு (வகையான கருத்துக் கொண்ட) பிரிவினர்களாய் ஆகி விட்டீர்கள்! ஆயினும் அல்லாஹ், அவர்கள் சம்பாதித்துக் கொண்ட தீவினைகளின் காரணமாக அவர்களைத் தலைகீழாகப் புரட்டி விட்டிருக்கிறான். (திருக்குர்ஆன் 04:88)

மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘மதீனா தூய்மையானது; நெருப்பு, வெள்ளியின் அழுக்கை நீக்குவதைப் போல் அது பாவங்களைப் போக்கிவிடுகிறது’ என்று கூறினார்கள்.
Book :64


لَمَّا خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أُحُدٍ، رَجَعَ نَاسٌ مِمَّنْ خَرَجَ مَعَهُ، وَكَانَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِرْقَتَيْنِ: فِرْقَةً تَقُولُ: نُقَاتِلُهُمْ، وَفِرْقَةً تَقُولُ: لاَ نُقَاتِلُهُمْ، فَنَزَلَتْ {فَمَا لَكُمْ فِي المُنَافِقِينَ فِئَتَيْنِ وَاللَّهُ أَرْكَسَهُمْ بِمَا كَسَبُوا} [النساء: 88] وَقَالَ: «إِنَّهَا طَيْبَةُ، تَنْفِي الذُّنُوبَ، كَمَا تَنْفِي النَّارُ خَبَثَ الفِضَّةِ»


Next Page » « Previous Page