ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம் : 13
புகாரி அவர்கள் (அல்ஜாமிஉ என்ற) இந்த புகாரீ நூலில் பத்ருபோர் வீரர்களில் 46 பெயரை குறிப்பிட்டுள்ளார்…
பாடம் : 14
‘பனூ நளீர்’ குலத்தார் பற்றிய செய்தியும், பனூ ஆமிர் குலத்தாரில் கொலையுண்ட இருவருக்கான உயிரீட்டுத்தொகை தொடர்பாக பனூ நளீர் குலத்தாரிடம் உதவி நாடி நபி (ஸல்) அவர்கள் சென்றதும் , அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஞ்சகம் செய்ய அவர்கள் திட்டம் தீட்டியதும்.
பத்ர் போர் நடந்த ஆறாவது மாதத்தின் தொடக்கத்தில் உஹுதுக்கு முன்பாக இந்த ‘பனூ நளீர்’ போர் நடந்தது என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
மேலும் , “அவனே வேதம் வழங்கப்பட்டவர்களில் நிராகரிப்பாளர்களாய் இருந்தவர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பிலேயே வெளியேற்றினான்” என்று அல்லாஹ் கூறுகிறான். (59 : 2)
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் இந்தப்போர் , ‘பிஃரு மஊனா’ போருக்கும் உஹுதுப் போருக்கும் பின்னால் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
4028. (மதீன யூதர்களான பனூ) நளீர் குலத்தாரும் (பனூ) குறைழா குலத்தாரும் (நபி – ஸல் அவர்களின் மீது) போர் தொடுத்தனர். எனவே, பனூ நளீர் குலத்தாரை நபி (ஸல்) அவர்கள் நாடு கடத்தினார்கள்.
(பனூ) குறைழா குலத்தார் (வருத்தம் தெரிவித்ததால் அவர்கள்) மீது கருணை
حَارَبَتِ النَّضِيرُ، وَقُرَيْظَةُ، فَأَجْلَى بَنِي النَّضِيرِ، وَأَقَرَّ قُرَيْظَةَ وَمَنَّ عَلَيْهِمْ، حَتَّى حَارَبَتْ قُرَيْظَةُ، فَقَتَلَ رِجَالَهُمْ، وَقَسَمَ نِسَاءَهُمْ وَأَوْلاَدَهُمْ وَأَمْوَالَهُمْ بَيْنَ المُسْلِمِينَ، إِلَّا بَعْضَهُمْ لَحِقُوا بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَآمَنَهُمْ وَأَسْلَمُوا، وَأَجْلَى يَهُودَ المَدِينَةِ كُلَّهُمْ: بَنِي قَيْنُقَاعٍ، وَهُمْ رَهْطُ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ، وَيَهُودَ بَنِي حَارِثَةَ، وَكُلَّ يَهُودِ المَدِينَةِ
சமீப விமர்சனங்கள்