Category: புஹாரி

Bukhari

Bukhari-3925

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3925. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்:

எங்களிடம் (மதீனாவுக்கு முஹாஜிராக) முதலில் வருகை தந்தவர்கள் முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களும் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களும் தாம். இவர்கள் மக்களுக்கு (குர்ஆன்) ஓதக் கற்றுக் கொடுத்து வந்தனர். பிறகு பிலால் (ரலி) அவர்களும், ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களும், அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்களும் வருகை தந்தனர். பிறகு உமர்பின் கத்தாப் (ரலி), நபித்தோழர்கள் இருபது பேர் (கொண்ட ஒரு குழு) உடன் வந்தார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களால்(அவர்களது வருகையால்) மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் பார்க்கவில்லை. எந்த அளவுக்கென்றால் (மதீனாவின்) அடிமைப்பெண்கள், ‘இறைத்தூதர் வந்துவிட்டார்கள்’ என்று பாடி (மகிழலா)னார்கள். ‘ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா’ என்னும் (87-வது) அத்தியாயத்தை, குர்ஆனின் (மற்ற) விரிவான (முஃபஸ்ஸல்) அத்தியாயங்கள் சிலவற்றுடன் நான் (மனப்பாடமாக) ஓதும் வரை நபி (ஸல்) அவர்கள் (மதீனா) வருகை தரவில்லை.

அத்தியாயம்: 63


أَوَّلُ مَنْ قَدِمَ عَلَيْنَا مُصْعَبُ بْنُ عُمَيْرٍ، وَابْنُ أُمِّ مَكْتُومٍ وَكَانَا يُقْرِئَانِ النَّاسَ، فَقَدِمَ بِلاَلٌ وَسَعْدٌ وَعَمَّارُ بْنُ يَاسِرٍ، ثُمَّ قَدِمَ عُمَرُ بْنُ الخَطَّابِ فِي عِشْرِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ ” قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَا رَأَيْتُ أَهْلَ المَدِينَةِ فَرِحُوا بِشَيْءٍ فَرَحَهُمْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى جَعَلَ الإِمَاءُ يَقُلْنَ: قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَا قَدِمَ حَتَّى قَرَأْتُ: سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى فِي سُوَرٍ مِنَ المُفَصَّلِ


Bukhari-3924

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3924. பராஉ(ரலி) அறிவித்தார்.
எங்களிடம் (மதீனாவுக்கு முஹாஜிராக) முதன் முதலில் வருகை தந்தவர்கள் முஸ்அப் இப்னு உமைர்(ரலி) அவர்களும், இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்களும் தாம். பிறகு எங்களிடம் அம்மார் இப்னு யாசிர்(ரலி) அவர்களும், பிலால்(ரலி) அவர்களும் வந்தனர்.
Book :63


«أَوَّلُ مَنْ قَدِمَ عَلَيْنَا مُصْعَبُ بْنُ عُمَيْرٍ، وَابْنُ أُمِّ مَكْتُومٍ، ثُمَّ قَدِمَ عَلَيْنَا عَمَّارُ بْنُ يَاسِرٍ، وَبِلاَلٌ رَضِيَ اللَّهُ عَنْهُمْ»


Bukhari-3923

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3923. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ஹிஜ்ரத் குறித்துக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கு என்ன கேடு?’ (எனச் செல்லமாகக் கேட்டுவிட்டு) நிச்சயமாக அதன் நிலை மிகவும் கடினமானது. உன்னிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அவற்றிற்குரிய ஸகாத் கொடுத்து வருகிறாயா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அவற்றிலிருந்து (இலவசமாகப் பால் கறந்து கொள்ள, ஏழைகளுக்கு) இரவல் கொடுக்கிறாயா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அவை (நீர் நிலைகளுக்கு) நீரருந்தச் செல்லும் (முறை வரும்) நாளில் அவற்றின் பாலைக் கறந்து (ஏழைகளுக்குக்) கொடுக்கிறாயா?’ என்று கேட்க அவர், ‘ஆம்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், நீ கடல்களுக்கு அப்பால் சென்று கூட வேலை செய்(து வாழலாம்..) அல்லாஹ் உன் நற் செயல்(களின் பிரதிபலன்)களிலிருந்து எதையும் குறைக்க மாட்டான்’ என்று கூறினார்கள்.
இரண்டு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :63


جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ عَنِ الهِجْرَةِ، فَقَالَ: «وَيْحَكَ إِنَّ الهِجْرَةَ شَأْنُهَا شَدِيدٌ، فَهَلْ لَكَ مِنْ إِبِلٍ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَتُعْطِي صَدَقَتَهَا»، قَالَ: نَعَمْ، قَالَ: «فَهَلْ تَمْنَحُ مِنْهَا؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَتَحْلُبُهَا يَوْمَ وُرُودِهَا»، قَالَ: نَعَمْ، قَالَ: «فَاعْمَلْ مِنْ وَرَاءِ البِحَارِ، فَإِنَّ اللَّهَ لَنْ يَتِرَكَ مِنْ عَمَلِكَ شَيْئًا»


Bukhari-3922

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3922. அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்.
(ஹிஜ்ரத் பணயித்தின்போது வழியில்) நபி(ஸல்) அவர்களுடன் நான் (‘ஸவ்ர்’ மலைக்குகையில் (தங்கி) இருந்தேன். நான் தலையை உயர்த்தியபோது (எங்களைத் தேடி வந்த) கூட்டத்தாரின் பாதங்கள் என் (தலைக்கு) மேலே தெரிந்தன. நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் எவராவது தம் பார்வையைத் தாழ்த்தி (குகைக்குள் உற்று நோக்கி)னால் நம்பை; பார்த்து விடுவாரே! (இப்போது என்ன செய்வது?’ என்று சொன்னேன். (நபி(ஸல்) அவர்கள், ‘அமைதியாயிருங்கள்; அபூ பக்ரே! (நாம்) இருவர்; நம்முடன் அல்லாஹ் மூன்றாமவன். (அவன் நம்மைக் காப்பாற்றுவான்)’ என்று கூறினார்கள்.
Book :63


كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الغَارِ، فَرَفَعْتُ رَأْسِي فَإِذَا أَنَا بِأَقْدَامِ القَوْمِ، فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، لَوْ أَنَّ بَعْضَهُمْ طَأْطَأَ بَصَرَهُ رَآنَا، قَالَ: «اسْكُتْ يَا أَبَا بَكْرٍ، اثْنَانِ اللَّهُ ثَالِثُهُمَا»


Bukhari-3921

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3921. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(என் தந்தை) அபூ பக்ர்(ரலி) ‘பனூகல்ப்’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணமுடித்தார்கள். ‘உம்மு பக்ர்’ என்று அவருக்குச் சொல்லப்படும். அபூ பக்ர்(ரலி) (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்தபோது அப்பெண்ணை விவாக விலக்கு செய்து விடவே, அவரை அவரின் தந்தையின் சகோதரர் மகன் (மறு) மணம் புரிந்து கொண்டார். அவர்தான் (பத்ருப் போரில்) கொல்லப்பட்டு, பத்ர் பாழுங்கிணற்றில் போடப்பட்ட) குறைஷிக்குல இறை மறுப்பாளர்களுக்காக இந்த இரங்கல் பாவைப் பாடிய கவிஞராவார்.
பத்ரின் பாழுங்கிணற்றுக்கு
(இப்போது)
என்ன களங்கம் நேர்ந்துவிட்டது?
ஒட்டகத் திமில்களால்
அலங்கரிக்கப்பட்ட மரத்தட்டுகளால்
(விருந்தளிக்கம் அதிபர்கள்
தூக்கி வீசப்பட்டதால்…)
பத்ரின் பாழுங்கிணற்றுக்கு
என்ன (களங்கமா)
நேர்ந்துவிட்டது?
அழகிய பாடம்களால்…
மதிப்புக்குரிய
மதுபோதைப்பிரியர்களால்…
(என் காதலி)
உம்முபக்ர் எங்கள்
மனச் சாந்திக்காக
ஆறுதல் சொல்கிறாள்.
என் சமுதாயமே
(சமாதிக்குப்) போன பின்
எனக்கேது மனச்சாந்தி…?
(மரணத்திற்குப் பின்)
நாம் மீண்டும் உயிர்தெழுவோம்
என்கிறார் இறைத்தூதர்!
(ஆனால்,)
ஆந்தைகளும் தேவாங்குகளும்
உயிர் பிழைப்பது எப்படி…?
Book :63


أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، تَزَوَّجَ امْرَأَةً مِنْ كَلْبٍ يُقَالُ لَهَا أُمُّ بَكْرٍ، فَلَمَّا هَاجَرَ أَبُو بَكْرٍ طَلَّقَهَا، فَتَزَوَّجَهَا ابْنُ عَمِّهَا، هَذَا الشَّاعِرُ الَّذِي قَالَ هَذِهِ القَصِيدَةَ رَثَى كُفَّارَ قُرَيْشٍ:
[البحر الوافر]
وَمَاذَا بِالقَلِيبِ قَلِيبِ بَدْرٍ … مِنَ الشِّيزَى تُزَيَّنُ بِالسَّنَامِ
وَمَاذَا بِالقَلِيبِ قَلِيبِ بَدْرٍ … مِنَ القَيْنَاتِ وَالشَّرْبِ الكِرَامِ
تُحَيِّينَا السَّلاَمَةَ أُمُّ بَكْرٍ … وَهَلْ لِي بَعْدَ قَوْمِي مِنْ سَلاَمِ
يُحَدِّثُنَا الرَّسُولُ بِأَنْ سَنَحْيَا … وَكَيْفَ حَيَاةُ أَصْدَاءٍ وَهَامِ


Bukhari-3920

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3920. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது, அவர்கள் தம் தோழர்களிலேயே அபூபக்ர் (ரலி) தாம் அதிக வயதுடையவர்களாக இருந்தார்கள்.

பிறகு, தம் (தாடிமுடியை) அபூபக்ர் (ரலி) மருதாணியாலும், ‘கத்தம்’ எனும் இலைச் சாயத்தாலும் தோய்த்து (நரையை) மறைத்துக் கொண்டார்கள். அதனால் அதன் நிறம் கருஞ்சிவப்பாகிவிட்டது.

அத்தியாயம்: 63


«قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ فَكَانَ أَسَنَّ أَصْحَابِهِ أَبُو بَكْرٍ، فَغَلَفَهَا بِالحِنَّاءِ وَالكَتَمِ حَتَّى قَنَأَ لَوْنُهَا»


Bukhari-3919

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3919. நபி(ஸல்) அவர்களின் ஊழியரான அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்தார்கள். அப்போது அவர்கள் தம் தோழர்களில் அபூ பக்ர்(ரலி) மட்டுமே கருப்பு – வெள்ளை முடி உடையவர்களாக இருந்தார்கள். அன்னார் மருதாணியாலும், ‘கத்தம்’ எனும் (ஒரு வகை) இலைச் சாயத்தாலும் தம் (தாடி) முடியைத் தோய்த்து (நரையை) மறைத்துக் கொண்டார்கள்.
Book :63


«قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَيْسَ فِي أَصْحَابِهِ أَشْمَطُ غَيْرَ أَبِي بَكْرٍ، فَغَلَفَهَا بِالحِنَّاءِ، وَالكَتَمِ»


Bukhari-3918

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3918. பராஉ(ரலி) அறிவித்தார்.
நான் அபூ பக்ர்(ரலி) அவர்களுடன் அவர்களின் வீட்டாரிடம் சென்றேன். அப்போது அவர்களின் மகளான ஆயிஷா(ரலி), காய்ச்சல் கண்டு (படுக்கையில்) படுத்திருந்தார்கள். அவரின் தந்தை(யான அபூ பக்ர் – ரலி அவர்கள்) அவரின் கன்னத்தில் (பாசத்தோடு) முத்தமிட்டு, ‘எப்படியிருக்கிறாய்? அருமை மகளே!’ என்று கேட்டதை கண்டேன்.
Book :63


قَالَ الْبَرَاءُ : فَدَخَلْتُ مَعَ أَبِي بَكْرٍ عَلَى أَهْلِهِ ، فَإِذَا عَائِشَةُ ابْنَتُهُ مُضْطَجِعَةٌ قَدْ أَصَابَتْهَا حُمَّى ، فَرَأَيْتُ أَبَاهَا فَقَبَّلَ خَدَّهَا وَقَالَ: كَيْفَ أَنْتِ يَا بُنَيَّةُ


Bukhari-3917

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3917. பராஉ(ரலி) அறிவித்தார்.
அபூ பக்ர்(ரலி) (என் தந்தை) ஆஸிப்(ரலி) அவர்களிடமிருந்து ஒட்டகச் சேணம் ஒன்றை விலைக்கு வாங்கினார்கள். நான் அவர்களுடன் அதைச் சுமந்து சென்றேன். ஆஸிப்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (ஹிஜ்ரத்) பயணம் குறித்து அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள் கூறினார்கள். ‘எங்களின் மீது (எதிரிகளால்) கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. எனவே, நாங்கள் இரவில் புறப்பட்டோம். நாங்கள் நண்பகல் நேரம் வரும் வரை இரவும் பகலும் கண் விழித்துப் பயணித்தோம். பிறகு எங்களுக்குப் பாறை ஒன்று தென்பட்டது. நாங்கள் அதனருகே சென்றோம். அதற்கு ஏதோ கொஞ்சம் நிழல் இருந்தது. நான் அல்லாஹ்வின் தூதருக்காக என்னுடன் இருந்த தோல் ஒன்றை விரித்தேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் அதன் மீது படுத்தார்கள். நான் அவர்களைச் சுற்றிலுமிருந்த புழுதியைத் தட்டிக் கொண்டே சென்றேன். அப்போது (தற்செயலாக) ஓர் ஆட்டிடையனைக் கண்டேன். அவன் தன்னுடைய சிறிய ஆட்டு மந்தை ஒன்றுடன் நாங்கள் நாடிச் சென்ற (அதே பாறை நிழல்)தனை நாடி, அதை நோக்கி வந்து கொண்டிருந்தான். நான் அவனிடம், ‘இளைஞனே! நீ யாருடைய பணியாள்?’ என்று கேட்டேன். அவன், ‘நான் இன்னாரின் பணியாள்’ என்று சொன்னான். நான், ‘உன் ஆடுகளிடம் சிறிது பால் இருக்குமா?’ என்று கேட்டேன். அவன், ‘ஆம்’ என்றான்.

ابْتَاعَ أَبُو بَكْرٍ مِنْ عَازِبٍ رَحْلًا، فَحَمَلْتُهُ مَعَهُ، قَالَ: فَسَأَلَهُ عَازِبٌ عَنْ مَسِيرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” أُخِذَ عَلَيْنَا بِالرَّصَدِ، فَخَرَجْنَا لَيْلًا فَأَحْثَثْنَا لَيْلَتَنَا وَيَوْمَنَا حَتَّى قَامَ قَائِمُ الظَّهِيرَةِ، ثُمَّ رُفِعَتْ لَنَا صَخْرَةٌ، فَأَتَيْنَاهَا وَلَهَا شَيْءٌ مِنْ ظِلٍّ، قَالَ: فَفَرَشْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرْوَةً مَعِي، ثُمَّ اضْطَجَعَ عَلَيْهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْطَلَقْتُ أَنْفُضُ مَا حَوْلَهُ، فَإِذَا أَنَا بِرَاعٍ قَدْ أَقْبَلَ فِي غُنَيْمَةٍ يُرِيدُ مِنَ الصَّخْرَةِ مِثْلَ الَّذِي أَرَدْنَا، فَسَأَلْتُهُ: لِمَنْ أَنْتَ يَا غُلاَمُ؟ فَقَالَ: أَنَا لِفُلاَنٍ، فَقُلْتُ لَهُ: هَلْ فِي غَنَمِكَ مِنْ لَبَنٍ؟ قَالَ: نَعَمْ، قُلْتُ لَهُ: هَلْ أَنْتَ حَالِبٌ؟ قَالَ: نَعَمْ، فَأَخَذَ شَاةً مِنْ غَنَمِهِ، فَقُلْتُ لَهُ: انْفُضِ الضَّرْعَ، قَالَ: فَحَلَبَ كُثْبَةً مِنْ لَبَنٍ، وَمَعِي إِدَاوَةٌ مِنْ مَاءٍ عَلَيْهَا خِرْقَةٌ، قَدْ رَوَّأْتُهَا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَبَبْتُ عَلَى اللَّبَنِ حَتَّى بَرَدَ أَسْفَلُهُ، ثُمَّ أَتَيْتُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: اشْرَبْ يَا رَسُولَ اللَّهِ، فَشَرِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رَضِيتُ، ثُمَّ ارْتَحَلْنَا وَالطَّلَبُ فِي إِثْرِنَا


Bukhari-3916

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3916. அபூ உஸ்மான் அந்நஹ்தீ(ரஹ்) கூறினார்.
இப்னு உமர்(ரலி) அவர்களிடம், ‘நீங்கள் உங்கள் தந்தையை விட முன்னதாக ஹிஜ்ரத் செய்து வந்தீர்கள்’ என்று சொல்லப்படும்போது அவர்கள் கோபமுற்றுக் கூறுவார்கள்: ‘நானும் (என் தந்தை) உமர்(ரலி) அவர்களும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (‘பைஅத்’ எனும் உறுதிமொழி எடுத்துக் கொள்வதற்காகச்) சென்றோம். நபி அவர்கள் மதிய ஓய்வெடுத்து (உறங்கி)க் கொண்டிருக்கக் கண்டோம். எனவே நாங்கள் வீட்டிற்குத் திரும்பி விட்டோம். பிறகு உமர்(ரலி) என்னை அனுப்பி, ‘நீ போய், அவர்கள் (உறக்கத்திலிருந்து) விழித்தெழுந்துவிட்டார்களா என்று பார்’ என்று கூறினார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (அவர்கள் விழித்திருந்தார்கள். எனவே,) அவர்களிடம் உறுதி மொழி கொடுத்தேன். பிறகு உமர்(ரலி) அவர்களிடம் சென்று நபி(ஸல்) அவர்கள் விழித்தெழுந்துவிட்டார்கள் என்று தெரிவித்தேன். பிறகு நாங்கள் நபி(ஸல்) அவர்களை நோக்கிப் புறப்பட்டு விரைந்தோடிச் சென்றடைந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) உறுதிமொழி கொடுத்தார்கள். பிறகு நானும் (இரண்டாம் முறையாக) உறுதிமொழி கொடுத்தேன்.
Book :63


سَمِعْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، إِذَا قِيلَ لَهُ هَاجَرَ قَبْلَ أَبِيهِ يَغْضَبُ، قَالَ: ” وَقَدِمْتُ أَنَا وَعُمَرُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدْنَاهُ قَائِلًا، فَرَجَعْنَا إِلَى المَنْزِلِ فَأَرْسَلَنِي عُمَرُ، وَقَالَ: اذْهَبْ فَانْظُرْ هَلِ اسْتَيْقَظَ فَأَتَيْتُهُ، فَدَخَلْتُ عَلَيْهِ فَبَايَعْتُهُ، ثُمَّ انْطَلَقْتُ إِلَى عُمَرَ فَأَخْبَرْتُهُ أَنَّهُ قَدِ اسْتَيْقَظَ، فَانْطَلَقْنَا إِلَيْهِ نُهَرْوِلُ هَرْوَلَةً حَتَّى دَخَلَ عَلَيْهِ، فَبَايَعَهُ ثُمَّ بَايَعْتُهُ


Next Page » « Previous Page