Category: புஹாரி

Bukhari

Bukhari-3845

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 அல் கஸாமா என்னும் அறியாமைக் காலச் சத்தியம்81
3845. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அறியாமைக் காலத்தில் நடைபெற்ற முதல் ‘கஸாமா’ (எனும் சத்தியம் தொடர்பான சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்ட சம்பவம்) எங்கள் பனூ ஹாஷிம் குலத்தினரிடையே தான் நிகழ்ந்தது. (அதன் விவரம் வருமாறு:) பனூ ஹாஷிம் குலத்தில் (அம்ர் இப்னு அல்கமா என்னும்) ஒருவர் இருந்தார். அவரைக் குறைஷிகளில் மற்றொரு கிளையைச் சேர்ந்த (ம்தாஷ் இப்னு அப்தில்லாஹ் என்னும்) ஒருவர் கூலிக்கு அமர்த்திக் கொண்டார். அந்தக் கூலிக்காரர் தம் முதலாளியுடன் அவரின் ஒட்டகத்தில் (வாணிபக் குழுவினருடன் ஷாம் நோக்கிச்) சென்றார். அப்போது பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த இன்னொருவர் அந்தக் கூலிக்காரரின் அருகே சென்று கொண்டிருந்தார். அந்த பனூ ஹாஷிம் குலத்தவருடைய (ஒட்டகத்தின் இரண்டு பக்கங்களிலும் தொங்க விடப்படும்) பையின் பிடி அறுந்து விட்டிருந்தது. அவர் அந்தக் கூலிக்காரைப் பார்த்து, ‘என்னுடைய ஒட்டகம்தப்பியோடாமல் இருக்க, (அறுந்து போன) என்னுடைய பையின் பிடியை (இணைத்து)க் கட்டுவதற்கு ஒரு கயிறு கொடுத்தார். உடனே அவர், அதன் மூலம் தன்னுடைய பையின் பிடியை (இணைத்து)க் கட்டிக் கொண்டார். அவர்கள் அனைவரும் (ஓய்வெடுப்பதற்காக ஓரிடத்தில்) தங்கியபோது எல்லா

إِنَّ أَوَّلَ قَسَامَةٍ كَانَتْ فِي الجَاهِلِيَّةِ، لَفِينَا بَنِي هَاشِمٍ، كَانَ رَجُلٌ مِنْ بَنِي هَاشِمٍ، اسْتَأْجَرَهُ رَجُلٌ مِنْ قُرَيْشٍ مِنْ فَخِذٍ أُخْرَى، فَانْطَلَقَ مَعَهُ فِي إِبِلِهِ، فَمَرَّ رَجُلٌ بِهِ مِنْ بَنِي هَاشِمٍ، قَدِ انْقَطَعَتْ عُرْوَةُ جُوَالِقِهِ، فَقَالَ: أَغِثْنِي بِعِقَالٍ أَشُدُّ بِهِ عُرْوَةَ جُوَالِقِي، لاَ تَنْفِرُ الإِبِلُ، فَأَعْطَاهُ عِقَالًا فَشَدَّ بِهِ عُرْوَةَ جُوَالِقِهِ، فَلَمَّا نَزَلُوا عُقِلَتِ الإِبِلُ إِلَّا بَعِيرًا وَاحِدًا، فَقَالَ الَّذِي اسْتَأْجَرَهُ: مَا شَأْنُ هَذَا البَعِيرِ لَمْ يُعْقَلْ مِنْ بَيْنِ الإِبِلِ؟ قَالَ: لَيْسَ لَهُ عِقَالٌ، قَالَ: فَأَيْنَ عِقَالُهُ؟ قَالَ: فَحَذَفَهُ بِعَصًا كَانَ فِيهَا أَجَلُهُ، فَمَرَّ بِهِ رَجُلٌ مِنْ أَهْلِ اليَمَنِ، فَقَالَ: أَتَشْهَدُ المَوْسِمَ؟ قَالَ: مَا أَشْهَدُ، وَرُبَّمَا شَهِدْتُهُ، قَالَ: هَلْ أَنْتَ مُبْلِغٌ عَنِّي رِسَالَةً مَرَّةً مِنَ الدَّهْرِ؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَكَتَبَ إِذَا أَنْتَ شَهِدْتَ المَوْسِمَ فَنَادِ: يَا آلَ قُرَيْشٍ، فَإِذَا أَجَابُوكَ فَنَادِ: يَا آلَ بَنِي هَاشِمٍ، فَإِنْ أَجَابُوكَ، فَسَلْ عَنْ أَبِي طَالِبٍ فَأَخْبِرْهُ: أَنَّ فُلاَنًا قَتَلَنِي فِي عِقَالٍ، وَمَاتَ المُسْتَأْجَرُ، فَلَمَّا قَدِمَ الَّذِي اسْتَأْجَرَهُ، أَتَاهُ أَبُو طَالِبٍ فَقَالَ: مَا فَعَلَ صَاحِبُنَا؟، قَالَ: مَرِضَ، فَأَحْسَنْتُ القِيَامَ عَلَيْهِ، فَوَلِيتُ دَفْنَهُ، قَالَ: قَدْ كَانَ أَهْلَ ذَاكَ مِنْكَ، فَمَكُثَ حِينًا، ثُمَّ إِنَّ الرَّجُلَ الَّذِي أَوْصَى إِلَيْهِ أَنْ يُبْلِغَ عَنْهُ وَافَى المَوْسِمَ، فَقَالَ : يَا آلَ قُرَيْشٍ، قَالُوا: هَذِهِ قُرَيْشٌ، قَالَ: يَا آلَ بَنِي هَاشِمٍ؟ قَالُوا: هَذِهِ بَنُو هَاشِمٍ، قَالَ: أَيْنَ أَبُو طَالِبٍ؟ قَالُوا: هَذَا أَبُو طَالِبٍ، قَالَ: أَمَرَنِي فُلاَنٌ أَنْ أُبْلِغَكَ رِسَالَةً، أَنَّ فُلاَنًا قَتَلَهُ فِي عِقَالٍ. فَأَتَاهُ أَبُو طَالِبٍ فَقَالَ لَهُ: اخْتَرْ مِنَّا إِحْدَى ثَلاَثٍ: إِنْ شِئْتَ أَنْ تُؤَدِّيَ مِائَةً مِنَ الإِبِلِ فَإِنَّكَ قَتَلْتَ صَاحِبَنَا، وَإِنْ شِئْتَ حَلَفَ خَمْسُونَ مِنْ قَوْمِكَ إِنَّكَ لَمْ تَقْتُلْهُ، فَإِنْ أَبَيْتَ قَتَلْنَاكَ بِهِ، فَأَتَى قَوْمَهُ فَقَالُوا: نَحْلِفُ، فَأَتَتْهُ امْرَأَةٌ مِنْ بَنِي هَاشِمٍ، كَانَتْ تَحْتَ رَجُلٍ مِنْهُمْ، قَدْ وَلَدَتْ لَهُ، فَقَالَتْ: يَا أَبَا طَالِبٍ، أُحِبُّ أَنْ تُجِيزَ ابْنِي هَذَا بِرَجُلٍ مِنَ الخَمْسِينَ، وَلاَ تُصْبِرْ يَمِينَهُ حَيْثُ تُصْبَرُ الأَيْمَانُ، فَفَعَلَ، فَأَتَاهُ رَجُلٌ مِنْهُمْ فَقَالَ: يَا أَبَا طَالِبٍ أَرَدْتَ خَمْسِينَ رَجُلًا أَنْ يَحْلِفُوا مَكَانَ مِائَةٍ مِنَ الإِبِلِ، يُصِيبُ كُلَّ رَجُلٍ بَعِيرَانِ، هَذَانِ بَعِيرَانِ فَاقْبَلْهُمَا عَنِّي وَلاَ تُصْبِرْ يَمِينِي حَيْثُ تُصْبَرُ الأَيْمَانُ، فَقَبِلَهُمَا، وَجَاءَ ثَمَانِيَةٌ وَأَرْبَعُونَ فَحَلَفُوا، قَالَ ابْنُ عَبَّاسٍ: فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، مَا حَالَ الحَوْلُ، وَمِنَ الثَّمَانِيَةِ وَأَرْبَعِينَ عَيْنٌ تَطْرِفُ


Bukhari-3844

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3844. ஃகைலான இப்னு ஜரீர்(ரஹ்) அறிவித்தார்.
நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் செல்வோம். அவர்கள் அன்சாரிகளைக் குறித்து எங்களிடம் பேசுவார்கள். அவர்கள், ‘(அறியாமைக் காலத்தில்) உங்கள் (அன்சாரிச்) சமுதாயத்தினர் இன்ன இன்ன நாளில் இப்படி இப்படியெல்லாம் செய்து வந்தார்கள் என்று என்னிடம் சொல்வார்கள்.
Book :63


كُنَّا نَأْتِي أَنَسَ بْنَ مَالِكٍ، فَيُحَدِّثُنَا عَنِ الأَنْصَارِ، ” وَكَانَ يَقُولُ لِي: فَعَلَ قَوْمُكَ كَذَا وَكَذَا يَوْمَ كَذَا وَكَذَا، وَفَعَلَ قَوْمُكَ كَذَا وَكَذَا يَوْمَ كَذَا وَكَذَا


Bukhari-3843

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3843. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
அறியாமைக் கால மக்கள் ஹபலுல் ஹபலாவுக்காக – கருவிலுள்ள ஒட்டகக் குட்டி பிறந்து அந்தக் குடடி சுமந்து பெறவிருக்கும் குட்டிக்காக – ஒட்டகத்தின் இறைச்சிகளை விற்று வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இத்தகைய வியாபாரம் செய்யக் கூடாது என்று அவர்களுக்குத் தடைவிதித்தார்கள்.
Book :63


كَانَ أَهْلُ الجَاهِلِيَّةِ يَتَبَايَعُونَ لُحُومَ الجَزُورِ إِلَى حَبَلِ الحَبَلَةِ، قَالَ: وَحَبَلُ الحَبَلَةِ أَنْ تُنْتَجَ النَّاقَةُ مَا فِي بَطْنِهَا، ثُمَّ تَحْمِلَ الَّتِي نُتِجَتْ، فَنَهَاهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ


Bukhari-3842

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

3842. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அடிமை ஒருவன் இருந்தான். அவன் (அடிமை என்ற முறையில் தன் எசமானாகிய) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு(த் தனது சம்பாத்தியத்தில்) நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்திவந்தான். அபூபக்ர் (ரலி) அவர்கள் அவன் செலுத்தும் தொகையிலிருந்து உண்டுவந்தார்கள். ஒருநாள் அவன் ஏதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தான். அதிலிருந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் சிறிது உண்டார்கள். அப்போது அவர்களிடம் அந்த அடிமை, “இது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான். அபூபக்ர் (ரலி) அவர்கள், “இது என்ன?” என்று கேட்டார்கள்.

அவன், “நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லிவந்தேன்; எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது. ஆயினும், (குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து) அவரை நான் ஏமாற்றி விட்டேன். அவர் அதற்காக எனக்குக் கூலி கொடுத்தார். நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக) எனக்குக் கூலியாகக் கிடைத்த அந்தப் பொருளிலிருந்துதான்” என்று சொன்னான்.

உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் கையை (வாய்க்குள்) நுழைத்துத் தம் வயிற்றிலிருந்த அனைத்தையும் வாந்தியெடுத்துவிட்டார்கள்.

அத்தியாயம்: 63


كَانَ لِأَبِي بَكْرٍ غُلاَمٌ يُخْرِجُ لَهُ الخَرَاجَ، وَكَانَ أَبُو بَكْرٍ يَأْكُلُ مِنْ خَرَاجِهِ، فَجَاءَ يَوْمًا بِشَيْءٍ فَأَكَلَ مِنْهُ أَبُو بَكْرٍ، فَقَالَ لَهُ الغُلاَمُ: أَتَدْرِي مَا هَذَا؟ فَقَالَ أَبُو بَكْرٍ: وَمَا هُوَ؟ قَالَ: كُنْتُ تَكَهَّنْتُ لِإِنْسَانٍ فِي الجَاهِلِيَّةِ، وَمَا أُحْسِنُ الكِهَانَةَ، إِلَّا أَنِّي خَدَعْتُهُ، فَلَقِيَنِي فَأَعْطَانِي بِذَلِكَ، فَهَذَا الَّذِي أَكَلْتَ مِنْهُ، فَأَدْخَلَ أَبُو بَكْرٍ يَدَهُ، فَقَاءَ كُلَّ شَيْءٍ فِي بَطْنِهِ


Bukhari-3841

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3841. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கவிஞர்) லபீத் அவர்கள் சொன்ன ‘அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே’ என்றும் சொல்தான், கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல்லாகும். (கவிஞர்) உமய்யா இப்னு அபிஸ் ஸல்த் (தன் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்துவிட்டார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :63


أَصْدَقُ كَلِمَةٍ قَالَهَا الشَّاعِرُ، كَلِمَةُ لَبِيدٍ:
[البحر الطويل]
أَلاَ كُلُّ شَيْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلٌ … وَكَادَ أُمَيَّةُ بْنُ أَبِي الصَّلْتِ أَنْ يُسْلِمَ


Bukhari-3840

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3840. மேலும், இப்னு அப்பாஸ்(ரலி), ‘என் தந்தை (அப்பாஸ் – ரலி – அவர்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு முன் அவர்களின்) அறியாமைக் காலத்தில் ‘எங்களுக்குத் தொடர்ந்து நிரம்பும் கிண்ண(திலிருப்ப)தை அருந்தச் செய்’ என்று (தம் பணியாளரிடம்) கூற கேட்டேன்’ எனக் கூறினார்கள்.
Book :63


سَمِعْتُ أَبِي يَقُولُ فِي الجَاهِلِيَّةِ: «اسْقِنَا كَأْسًا دِهَاقًا»


Bukhari-3839

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3839. (இப்னு அப்பாஸ் – ரலி – அவர்களின் முன்னாள் அடிமையான) இக்ரிமா(ரஹ்) அறிவித்தார்.
திருக்குர்ஆனில் (திருக்குர்ஆன் 78: 34-ல்) இடம் பெற்றுள்ள ‘கஃஸன் திஹாக்கன் – நிரம்பிய கிண்ணமும்’ என்பதற்கு ‘(தீரத்திரத்) தொடர்ந்து நிரம்பிக் கொண்டிருக்கக் கூடிய கிண்ணமும் (சொர்க்கத்தில் உண்டு)’ என்று பொருளாகும்.
Book :63


{وَكَأْسًا دِهَاقًا} [النبأ: 34] قَالَ: «مَلْأَى مُتَتَابِعَةً»


Bukhari-3838

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3838. உமர்(ரலி) அறிவித்தார்.
(ஹஜ்ஜின் போது) ‘ஸபீர்’ மலை மீது சூரியன் ஒளிராத வரை, இணைவைப்பவர்கள் முஸ்தலிஃபாவைவிட்டுப் புறப்பட மாட்டார்கள். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் மாறு செய்து சூரியன் உதிக்கும் முன்பாகப் புறப்பட்டார்கள்.
Book :63


«إِنَّ المُشْرِكِينَ كَانُوا لاَ يُفِيضُونَ مِنْ جَمْعٍ، حَتَّى تَشْرُقَ الشَّمْسُ عَلَى ثَبِيرٍ، فَخَالَفَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَفَاضَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ»


Bukhari-3837

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3837. அப்துர் ரஹ்மான் இப்னு காஸிம்(ரஹ்) அறிவித்தார்.
(என் தந்தை) காஸிம்(ரஹ்) ஜனாஸாவுக்கு (பிரேதத்திற்கு) முன்னால் நடந்து செல்வார்கள். அதற்காக எழுந்து நிற்கமாட்டார்கள்.
மேலும், ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து இப்படியும் அறிவிப்பார்கள்:
ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பதும் அதைக் கண்டால், ‘(உன் வாழ் நாளில்) நீ எப்படி இருந்தாயோ அப்படியே இப்போதும் இருப்பாய்’ என்று இருமுறை கூறுவதும் அறியாமைக் கால மக்களின் வழக்கமாகும்.
Book :63


أَنَّ القَاسِمَ كَانَ يَمْشِي بَيْنَ يَدَيِ الجَنَازَةِ وَلاَ يَقُومُ لَهَا، وَيُخْبِرُ عَنْ عَائِشَةَ قَالَتْ: ” كَانَ أَهْلُ الجَاهِلِيَّةِ يَقُومُونَ لَهَا يَقُولُونَ إِذَا رَأَوْهَا: كُنْتِ فِي أَهْلِكِ مَا أَنْتِ مَرَّتَيْنِ


Bukhari-3836

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3836. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
‘சத்தியம் செய்ய விரும்புகிறவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்களின் மீது சத்தியம் செய்து வந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் முன்னோர்களின் மீது சத்தியம் செய்யாதீர்கள்’ என்று கூறினார்கள்.
Book :63


«أَلاَ مَنْ كَانَ حَالِفًا فَلاَ يَحْلِفْ إِلَّا بِاللَّهِ»، فَكَانَتْ قُرَيْشٌ تَحْلِفُ بِآبَائِهَا، فَقَالَ: «لاَ تَحْلِفُوا بِآبَائِكُمْ»


Next Page » « Previous Page