Category: புஹாரி

Bukhari

Bukhari-3795

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 நபி (ஸல்) அவர்கள், அன்சாரிகளின் நிலையையும் முஹாஜிர்களின் நிலையையும் செம்மைப்படுத்துஎன்று பிரார்த்தித்தது.
3795. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நித்தியமான) வாழ்க்கை இல்லை; அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிரந்தர மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக’ என்று (பாடியபடி) சொன்னார்கள்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ‘அன்சாரிகளுக்கு(ம் முஹாஜிர்களுக்கும்) நீ மன்னிப்பு அளிப்பாயாக’ என்று பாடியபடி கூறினார்கள் என உள்ளது.
Book : 63


«لاَ عَيْشَ إِلَّا عَيْشُ الآخِرَةِ، فَأَصْلِحِ الأَنْصَارَ، وَالمُهَاجِرَةَ» وَعَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ، وَقَالَ: «فَاغْفِرْ لِلْأَنْصَارِ»


Bukhari-3794

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3794. யஹ்யா இப்னு ஸயீத்(ரலி) அறிவித்தார்.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவாக்ள் என்னுடன் பயணமாம் வலீத் இப்னு அப்தில் மலிக்கைச் சந்தித்தபோது (வலீத் இடம்) கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் பஹ்ரைனுடைய நிலங்களை வருவாய் மானியமாக எங்களுக்குத் தருவதற்காக அழைத்தார்கள். அன்சாரிகள், ‘எங்கள் முஹாஜிர் சகோதரர்களுக்கும் இதே போன்று மானியம் தந்தாலே தவிர நாங்கள் இதை ஏற்க மாட்டோம்’ என்று கூறினர். ‘நீங்கள் இதை ஏற்க மாட்டீர்கள் என்றால், என்னை (மறுமையில் ஹவ்ளுல் கவ்ஸர் தாடாகத்தின் அருகே) சந்திக்கம் வரை பொறுத்திருங்கள். ஏனெனில், எனக்குப் பின் (ஆட்சியதிகாரத்தில்) உங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் நிலை உங்களுக்கு நேரும்’ என்று கூறினார்கள்.
Book :63


دَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الأَنْصَارَ إِلَى أَنْ يُقْطِعَ لَهُمُ البَحْرَيْنِ، فَقَالُوا: لاَ إِلَّا أَنْ تُقْطِعَ لِإِخْوَانِنَا مِنَ المُهَاجِرِينَ مِثْلَهَا، قَالَ: «إِمَّا لاَ، فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي، فَإِنَّهُ سَيُصِيبُكُمْ بَعْدِي أَثَرَةٌ»


Bukhari-3793

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3793. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம், ‘எனக்குப் பிறகு (உங்களை விட ஆட்சியதிகாரத்தில் மற்றவர்களுக்கு) முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். எனவே, (மறுமையில்) என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுமையாக இருங்கள். என்னைச் சந்திக்க உங்களுக்குக் குறித்துள்ள இடம் (மறுமையில் எனக்கு சிறப்புப் பரிசாக இறைவன் வழங்கிவருக்கும் ஹவ்ளுல் கவ்ஸர் எனும்) தடாகமேயாகும்.
Book :63


قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْأَنْصَارِ: «إِنَّكُمْ سَتَلْقَوْنَ بَعْدِي أَثَرَةً، فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي وَمَوْعِدُكُمُ الحَوْضُ»


Bukhari-3792

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம், என்னை (மறுமையில்) தடாகத்தின் அருகே சந்திக்கும் வரை பொறுமையாயிருங்கள் என்று சொன்னது. இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.20
3792. உஸைத் இப்னு ஹுளைர்(ரலி) அறிவித்தார்.
அன்சாரிகளில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! இன்னாரை நீங்கள் அதிகாரியாக நியமித்தது போல் என்னையும் அதிகாரியாக நியமிக்கமாட்டீர்களா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘எனக்குப் பிறகு (உங்களை விட) மற்றவர்களுக்கு (ஆட்சியதிகாரத்தில்) முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். எனவே, (மறுமையில் எனக்குச் சிறப்புப் பரிசாகக் கிடைக்கும் ‘ஹவ்ளுல்கவ்ஸர்’ என்னும்) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள்’ என்று கூறினார்கள்.
Book : 63


أَنَّ رَجُلًا مِنَ الأَنْصَارِ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَلاَ تَسْتَعْمِلُنِي كَمَا اسْتَعْمَلْتَ فُلاَنًا؟ قَالَ: «سَتَلْقَوْنَ بَعْدِي أُثْرَةً، فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي عَلَى الحَوْضِ»


Bukhari-3791

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3791. அபூ ஹுமைத்(ரலி) அறிவித்தார்.
‘அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது. பனூ நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல், பிறகு பனுல் ஹாரிஸ், பிறகு பனூ சாஇதா குடும்பங்கள் ஆகும். அன்சாரிக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி) எங்களிடம் வந்து சேர்ந்தார். அப்போது (அவரிடம்) அபூ உஸைத்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளைச் சிறந்தவர்கள் எனக் குறிப்பிட்டு (அப்படிக் குறிப்பிட்டவர்களில்) நம்மைக் கடைசியானவர்களாகக் குறிப்பிட்டுள்ளதை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கேட்டார்கள். (இதைக் கேட்ட) உடனே ஸஅத் இப்னு உபாதா(ரலி) நபி(ஸல்) அவர்களை அடைந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அன்சாரிகளின் கிளைக் குடும்பங்கள் (தங்களால்) சிறப்பித்துக் கூறப்பட்டபோது (அன்சாரிகளில் ஒரு குடும்பத்தினரான) நாங்கள் கடைசியாகக் குறிப்பிடப்பட்டுள்ளோமே (ஏன்?)’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் மிகச் சிறந்(குடும்பத்)தவர்களில் இடம் பெற்றிருப்பதே உங்களுக்குப் போதுமானதல்லவா?’ என்று கூறினார்கள்.
Book :63


«إِنَّ خَيْرَ دُورِ الأَنْصَارِ دَارُ بَنِي النَّجَّارِ، ثُمَّ عَبْدِ الأَشْهَلِ، ثُمَّ دَارُ بَنِي الحَارِثِ، ثُمَّ بَنِي سَاعِدَةَ، وَفِي كُلِّ دُورِ الأَنْصَارِ خَيْرٌ» فَلَحِقَنَا سَعْدُ بْنُ عُبَادَةَ فَقَالَ: أَبَا أُسَيْدٍ أَلَمْ تَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيَّرَ الأَنْصَارَ فَجَعَلَنَا أَخِيرًا؟ فَأَدْرَكَ سَعْدٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ خُيِّرَ دُورُ الأَنْصَارِ فَجُعِلْنَا آخِرًا، فَقَالَ: «أَوَلَيْسَ بِحَسْبِكُمْ أَنْ تَكُونُوا مِنَ الخِيَارِ»


Bukhari-3790

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3790. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்சாரிகளில் சிறந்தோர்… அல்லது அன்சாரிகளின் கிளைக்குடும்பங்களில் சிறந்தது. பனூ நஜ்ஜார் குடும்பமும், பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமும் மற்றும் பனூ ஹாரிஸ், பனூ சாஇதா குடும்பங்களும் ஆகும்.
என அபூ உஸைத்(ரலி) அறிவித்தார்.
Book :63


خَيْرُ الأَنْصَارِ، أَوْ قَالَ: خَيْرُ دُورِ الأَنْصَارِ، بَنُو النَّجَّارِ، وَبَنُو عَبْدِ الأَشْهَلِ، وَبَنُو الحَارِثِ، وَبَنُو سَاعِدَةَ


Bukhari-3789

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களின் சிறப்பு
3789. அபூ உஸைத்(ரலி)அவர்கள் அறிவித்தார்.
‘அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பனூ நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும். பிறகு பனூ ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் குடும்பமாகும். பிறகு பனூ சாஇதா குடும்பமாகும். அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் எங்களை விட (வேறு சில குலங்களைச்) சிறப்பித்துக் கூறினார்கள் எனவே காண்கிறேன்’ என்று கூறினார்கள். அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் (இங்கே குறிப்பிடப்படாத மற்ற) பலரையும் விட உங்களைச் சிறப்பித்துக் கூறினார்கள்’ என்று சொல்லப்பட்டது.
மற்றோர் அறிவிப்பில், ‘ஸஅத் இப்னு உபாதா’ என்று (முழுமையாகப் பெயர்) குறிப்பிட்டு அறிவிப்பாளர் கூறினார்.
Book : 63


«خَيْرُ دُورِ الأَنْصَارِ، بَنُو النَّجَّارِ، ثُمَّ بَنُو عَبْدِ الأَشْهَلِ، ثُمَّ بَنُو الحَارِثِ بْنِ خَزْرَجٍ، ثُمَّ بَنُو سَاعِدَةَ، وَفِي كُلِّ دُورِ الأَنْصَارِ خَيْرٌ»، فَقَالَ سَعْدٌ: ” مَا أَرَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا قَدْ فَضَّلَ عَلَيْنَا؟ فَقِيلَ: قَدْ فَضَّلَكُمْ عَلَى كَثِيرٍ ” وَقَالَ عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا قَتَادَةُ، سَمِعْتُ أَنَسًا، قَالَ أَبُو أُسَيْدٍ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا، وَقَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ


Bukhari-3788

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3788. அன்சாரிகளில் ஒருவரான அபூ ஹம்ஸா(ரலி) அறிவித்தார்.
அன்சாரிகள் (நபி – ஸல் அவர்களிடம்), ‘ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களைப் பின்தொடரும் சார்பு நிலையாளர்கள் உண்டு. எங்களைப் பின்பற்றும் சார்பு நிலையாளர்களை எங்களிலிருந்தே உருவாக்கித் தரும்படி நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! இவர்களுடைய சார்பாளர்களை இவர்களிலிருந்தே உருவாக்கித் தருவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.
Book :63


قَالَتِ الأَنْصَارُ: إِنَّ لِكُلِّ قَوْمٍ أَتْبَاعًا، وَإِنَّا قَدِ اتَّبَعْنَاكَ، فَادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَ أَتْبَاعَنَا مِنَّا، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : «اللَّهُمَّ اجْعَلْ أَتْبَاعَهُمْ مِنْهُمْ»، قَالَ عَمْرٌو: فَذَكَرْتُهُ لِابْنِ أَبِي لَيْلَى، قَالَ: قَدْ زَعَمَ ذَاكَ زَيْدٌ، قَالَ شُعْبَةُ: أَظُنُّهُ زَيْدَ بْنَ أَرْقَمَ


Bukhari-3787

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 அன்சாரிகளைப் பின்தொடந்த (நட்புக் கூட்டங்கள் மற்றும் அவர்களால் விடுதலை செய்யப்பட்ட)வர்கள்.
3787. ஸைத் இப்னு அர்கம்(ரலி) கூறினார்.
அன்சாரிகள் (நபி – ஸல் – அவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! இறைத்தூதர்களை ஒவ்வொருவருக்கும் அவர்களைப் பின்தொடர்ந்த (சார்பு நிலை கொண்ட)வர்கள் இருந்தனர். நாங்கள் உங்களைப் பின் பற்றினோம். எனவே, எங்களுக்கும் எங்களைப் பின்தொடரும் சார்பு நிலையாளர்களை எங்களிலிருந்தே உருவாக்கித் தரும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கேட்டுக் கொண்டனர். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
Book : 63


قَالَتِ الأَنْصَارُ: يَا رَسُولَ اللَّهِ، لِكُلِّ نَبِيٍّ أَتْبَاعٌ، وَإِنَّا قَدْ اتَّبَعْنَاكَ، فَادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَ أَتْبَاعَنَا مِنَّا. «فَدَعَا بِهِ» فَنَمَيْتُ ذَلِكَ إِلَى ابْنِ أَبِي لَيْلَى، قَالَ: قَدْ زَعَمَ ذَلِكَ زَيْدٌ


Bukhari-3786

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3786. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தம் குழந்தையொன்றைத் தம்முடன் எடுத்துக் கொண்டு அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அவரிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பேசினார்கள். அப்போது அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரிகளான) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்’ என்று இரண்டு முறை கூறினார்கள்.
Book :63


جَاءَتِ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهَا صَبِيٌّ لَهَا، فَكَلَّمَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّكُمْ أَحَبُّ النَّاسِ إِلَيَّ» مَرَّتَيْنِ


Next Page » « Previous Page