Category: புஹாரி

Bukhari

Bukhari-3170

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 ஒப்பந்தத்தை முறித்தவர்களுக்கு எதிராகத் தலைவர் பிரார்த்திப்பது.

3170. ஆஸிம்(ரஹ்) அறிவித்தார்.

நான் அனஸ்(ரலி) அவர்களிடம் ‘குனூத்’ ஓதுவதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், ‘ருகூஉ செய்வதற்கு முன்னால் (ஓத வேண்டும்)’ என்று கூறினார்கள். ‘ருகூஉக்குப் பின்னால் (குனூத் ஓத வேண்டும்)’ என்று நீங்கள் கூறியதாக இன்னார் நினைத்துக் கொண்டிருக்கிறார்’ என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், ‘அவர் பொய் சொன்னார்’ என்று கூறினார்கள். பிறகு அவர்கள், நபி(ஸல்) அவர்களைக் குறித்து, ‘அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் சில கிளையினருக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்’ என்று அறிவித்தார்கள்.

அப்போது அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்து அதை ஓதும் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் நாற்பது அல்லது எழுபது பேரை இணைவைக்கும் மக்கள் சிலரிடம் அனுப்பி வைத்தார்கள்… என்று (அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் நாற்பது பேரா, எழுபது பேரா என்னும்) சந்தேகத்துடன் கூறினார்கள்…

அவர்களுக்கு இவர்கள் இஸ்லாத்தை எடுத்துரைக்க, அவர்கள் இவர்களைக் கொன்றுவிட்டார்கள். பனூ சுலைம் குலத்தாருக்கு நபி(ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு சமாதான ஒப்பந்தம் இருந்து வந்தது. எனவே, அவர்களின் மீது கோபமடைந்ததைப் போல்

سَأَلْتُ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ القُنُوتِ، قَالَ: قَبْلَ الرُّكُوعِ، فَقُلْتُ: إِنَّ فُلاَنًا يَزْعُمُ أَنَّكَ قُلْتَ بَعْدَ الرُّكُوعِ؟ فَقَالَ: كَذَبَ، ثُمَّ حَدَّثَنَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّهُ قَنَتَ شَهْرًا بَعْدَ الرُّكُوعِ، يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ بَنِي سُلَيْمٍ»، قَالَ: «بَعَثَ أَرْبَعِينَ – أَوْ سَبْعِينَ يَشُكُّ فِيهِ – مِنَ القُرَّاءِ إِلَى أُنَاسٍ مِنَ المُشْرِكِينَ»، فَعَرَضَ لَهُمْ هَؤُلاَءِ فَقَتَلُوهُمْ، وَكَانَ بَيْنَهُمْ وَبَيْنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهْدٌ، «فَمَا رَأَيْتُهُ وَجَدَ عَلَى أَحَدٍ مَا وَجَدَ عَلَيْهِمْ»


Bukhari-3169

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 7

இணைவைப்பவர்கள் முஸ்லிம்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தால் அவர்கள் மன்னிக்கப்படுவார்களா?

3169. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. (விஷயம் தெரிந்தவுடன்) நபி (ஸல்) அவர்கள், ‘இங்கேயுள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று கூறினார்கள்.

அவ்வாறே, அவர்கள் ஒன்று திரட்டி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்கள். (அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப் போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மையைச் சொல்வீர்களா?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த யூதர்கள், ‘சரி (உண்மையைச் சொல்கிறோம்)’ என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘உங்கள் தந்தை யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘இன்னார்’ என்று பதிலளித்தார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள், ‘பொய் சொன்னீர்கள். மாறாக, உங்கள் தந்தை இன்னார் தான்’ என்று கூறினார்கள். அவர்கள், ‘நீங்கள் சொன்னது உண்மை தான்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘நான் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டால் அதைப் பற்றி நீங்கள் என்னிடம் உண்மையைச் சொல்வீர்களா?’ என்று

لَمَّا فُتِحَتْ خَيْبَرُ أُهْدِيَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ فِيهَا سُمٌّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْمَعُوا إِلَيَّ مَنْ كَانَ هَا هُنَا مِنْ يَهُودَ» فَجُمِعُوا لَهُ، فَقَالَ: «إِنِّي سَائِلُكُمْ عَنْ شَيْءٍ، فَهَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْهُ؟»، فَقَالُوا: نَعَمْ، قَالَ لَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَبُوكُمْ؟»، قَالُوا: فُلاَنٌ، فَقَالَ: «كَذَبْتُمْ، بَلْ أَبُوكُمْ فُلاَنٌ»، قَالُوا: صَدَقْتَ، قَالَ: «فَهَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْ شَيْءٍ إِنْ سَأَلْتُ عَنْهُ؟»، فَقَالُوا: نَعَمْ يَا أَبَا القَاسِمِ، وَإِنْ كَذَبْنَا عَرَفْتَ كَذِبَنَا كَمَا عَرَفْتَهُ فِي أَبِينَا، فَقَالَ لَهُمْ: «مَنْ أَهْلُ النَّارِ؟»، قَالُوا: نَكُونُ فِيهَا يَسِيرًا، ثُمَّ تَخْلُفُونَا فِيهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْسَئُوا فِيهَا، وَاللَّهِ لاَ نَخْلُفُكُمْ فِيهَا أَبَدًا»، ثُمَّ قَالَ: «هَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْ شَيْءٍ إِنْ سَأَلْتُكُمْ عَنْهُ؟»، فَقَالُوا: نَعَمْ يَا أَبَا القَاسِمِ، قَالَ: «هَلْ جَعَلْتُمْ فِي هَذِهِ الشَّاةِ سُمًّا؟»، قَالُوا: نَعَمْ، قَالَ: «مَا حَمَلَكُمْ عَلَى ذَلِكَ؟»، قَالُوا: أَرَدْنَا إِنْ كُنْتَ كَاذِبًا نَسْتَرِيحُ، وَإِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ


Bukhari-3168

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3168. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.

இப்னு அப்பாஸ்(ரலி), ‘(அந்த) வியாழக்கிழமை! எப்படிப்பட்ட வியாழக்கிழமை (தெரியுமா)?’ என்று சொல்லிவிட்டு சிறு சரளைக் கற்களை அவர்களின் கண்ணீர் நனைத்து விடும் அளவிற்கு அழுதார்கள். நான், ‘இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களே! வியாழக்கிழமை (அப்படி) என்ன (நடந்தது)?’ என்று கேட்டேன். அவர்கள், ‘(அன்று தான்) அல்லாஹ்வின் தூதருக்கு அவர்களின் (நோயின்) வேதனை கடுமையாகிவிட்டது.

அப்போது அவர்கள், ‘என்னிடம் புஜ எலும்பு ஒன்றைக் கொண்டு வாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை (இறுதியுபதேசத்தை) நான் எழுதுகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழி தவற மாட்டீர்கள்’ என்று கூறினார்கள். மக்கள் (கருத்து பேதம் கொண்டு) சச்சரவிட்டார்கள். (இதனைக் கண்ட நபி(ஸல்) அவர்கள்), ‘இறைத்தூதரின் முன்பாக சச்சரவிட்டுக் கொள்வது அழகல்ல’ (என்று கூறினார்கள்.) மக்கள், ‘அவர்களுக்கு என்ன நேர்ந்தது? (எழுதித் தர முடியாத அளவிற்கு) அவர்கள் பலவீனமடைந்துவிட்டார்களா? அவர்களிடமே (விளக்கம்) கேளுங்கள்’ என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘என்னைவிட்டு விடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த (மரண சாசனம் எழுதும்) பணியைவிட நான் இப்போதுள்ள இந்த (இறை நினைவில் லயித்திருக்கும்) நிலையே சிறந்தது’ என்று கூறிவிட்டு மூன்று

يَوْمُ الخَمِيسِ وَمَا يَوْمُ الخَمِيسِ، ثُمَّ بَكَى حَتَّى بَلَّ دَمْعُهُ الحَصَى، قُلْتُ يَا أَبَا عَبَّاسٍ: مَا يَوْمُ الخَمِيسِ؟ قَالَ: اشْتَدَّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعُهُ، فَقَالَ: «ائْتُونِي بِكَتِفٍ أَكْتُبْ لَكُمْ كِتَابًا لاَ تَضِلُّوا بَعْدَهُ أَبَدًا»، فَتَنَازَعُوا، وَلاَ يَنْبَغِي عِنْدَ نَبِيٍّ تَنَازُعٌ، فَقَالُوا: مَا لَهُ أَهَجَرَ اسْتَفْهِمُوهُ؟ فَقَالَ: «ذَرُونِي، فَالَّذِي أَنَا فِيهِ خَيْرٌ مِمَّا تَدْعُونَنِي إِلَيْهِ»، فَأَمَرَهُمْ بِثَلاَثٍ، قَالَ: «أَخْرِجُوا المُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ العَرَبِ، وَأَجِيزُوا الوَفْدَ بِنَحْوِ مَا كُنْتُ أُجِيزُهُمْ» وَالثَّالِثَةُ خَيْرٌ، إِمَّا أَنْ سَكَتَ عَنْهَا، وَإِمَّا أَنْ قَالَهَا فَنَسِيتُهَا، قَالَ سُفْيَانُ: هَذَا مِنْ قَوْلِ سُلَيْمَانَ


Bukhari-3167

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 யூதர்களை அரபு தீபகற்பத்திலிருந்து வெளியேற்றுதல்.

அல்லாஹ் உங்களை இங்கே வசிக்கச் செய்யும் வரை நானும் உங்களை இங்கேயே வசிக்க அனுமதிக்கிறேன். என்று நபி (ஸல்) அவர்கள் (கைபரில் வசித்த யூதர்களிடம்) கூறினார்கள். இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3167. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் (தம் அறையிலிருந்து) வெளியே வந்து, ‘யூதர்களை நோக்கி நடங்கள்’ என்று கூறினார்கள். உடனே, நாங்கள் புறப்பட்டுச் சென்று ‘பைத்துல் மித்ராஸ்’ எனுமிடத்தை அடைந்தோம். அப்போது நபியவர்கள், ‘இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; ஈடேற்றம் பெறுவீர்கள்.

மேலும், பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நான் உங்களை இந்த பூமியிலிருந்து நாடு கடத்திட விரும்புகிறேன். உங்களில் ஒருவருக்கு (கையில் எடுத்துச் செல்ல முடியாத) அவரின் செல்வத்திற்குப் பகரமாக ஏதேனும் கிடைத்தால் அதை அவர் விற்று விடட்டும். இல்லையெனில், பூமியானது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.
Book : 58


بَيْنَمَا نَحْنُ فِي المَسْجِدِ، خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «انْطَلِقُوا إِلَى يَهُودَ»، فَخَرَجْنَا حَتَّى جِئْنَا بَيْتَ المِدْرَاسِ فَقَالَ: «أَسْلِمُوا تَسْلَمُوا، وَاعْلَمُوا أَنَّ الأَرْضَ لِلَّهِ وَرَسُولِهِ، وَإِنِّي أُرِيدُ أَنْ أُجْلِيَكُمْ مِنْ هَذِهِ الأَرْضِ، فَمَنْ يَجِدْ مِنْكُمْ بِمَالِهِ شَيْئًا فَلْيَبِعْهُ، وَإِلَّا فَاعْلَمُوا أَنَّ الأَرْضَ لِلَّهِ وَرَسُولِهِ»


Bukhari-3166

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 (இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் முஸ்லிமல்லாத) ஒப்பந்தப் பிரஜையைக் குற்றமின்றி கொல்வதிலுள்ள பாவம்.

3166. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இஸ்லாமிய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து அதன் கீழ் வாழ்ந்து வரும்) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொன்று விடுபவன் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டான். அந்த நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்.
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
Book : 58


«مَنْ قَتَلَ مُعَاهَدًا لَمْ يَرِحْ رَائِحَةَ الجَنَّةِ، وَإِنَّ رِيحَهَا تُوجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا»


Bukhari-3165

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3165. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து நிதி ஒன்று கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘அதைப் பள்ளி வாசலில் பரப்பி வையுங்கள்’ என்று உத்தரவிட்டார்கள். அது நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட செல்வத்திலேயே அதிகமானதாக இருந்தது. அப்போது, அப்பாஸ்(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குக் கொடுங்கள். நான் (பத்ருப் போரில் கைது செய்யப்பட்ட பின் விடுதலை பெறுவதற்காக) எனக்காகவும் (என் சகோதரர் மகன்) அகீலுக்காகவும் பிணைத் தொகை கொடுத்திருக்கிறேன்’ என்று கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்கள். உடனே, அப்பாஸ்(ரலி), தம் துணியில் அதை அள்ளிப் போட்டார்கள். பிறகு அதைத் தூக்கிச் சுமக்கச் சென்றார்கள். அவர்களால் (அதைச் சுமக்க) முடியவில்லை. எனவே, ‘(உங்கள் தோழர்களான) இவர்களில் ஒருவருக்கு இதை என் (தோளின்) மீது தூக்கி வைக்கும்படி உத்தரவிடுங்கள்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நான் உத்தரவிட மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு அப்பாஸ்(ரலி), ‘நீங்களாவது என் தோள் மீது இதைத் தூக்கி வையுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கும் நபி(ஸல்) அவர்கள், ‘வைக்க மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார்கள்.

பிறகு, அதிலிருந்து கொஞ்சத்தை (எடுத்துக்

وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ عَبْدِ العَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَالٍ مِنَ البَحْرَيْنِ، فَقَالَ: «انْثُرُوهُ فِي المَسْجِدِ»، فَكَانَ أَكْثَرَ مَالٍ أُتِيَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ جَاءَهُ العَبَّاسُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي إِنِّي فَادَيْتُ نَفْسِي وَفَادَيْتُ عَقِيلًا، قَالَ: «خُذْ»، فَحَثَا فِي ثَوْبِهِ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ فَلَمْ يَسْتَطِعْ، فَقَالَ: اؤْمُرْ بَعْضَهُمْ يَرْفَعْهُ إِلَيَّ، قَالَ: «لاَ» قَالَ: فَارْفَعْهُ أَنْتَ عَلَيَّ، قَالَ: «لاَ»، فَنَثَرَ مِنْهُ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ فَلَمْ يَرْفَعْهُ، فَقَالَ: فَمُرْ بَعْضَهُمْ يَرْفَعْهُ عَلَيَّ، قَالَ: «لاَ»، قَالَ: فَارْفَعْهُ أَنْتَ عَلَيَّ، قَالَ: «لاَ»، فَنَثَرَ مِنْهُ، ثُمَّ احْتَمَلَهُ عَلَى كَاهِلِهِ، ثُمَّ انْطَلَقَ فَمَا زَالَ يُتْبِعُهُ بَصَرَهُ حَتَّى خَفِيَ عَلَيْنَا، عَجَبًا مِنْ حِرْصِهِ، فَمَا قَامَ رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلم وَثَمَّ مِنْهَا دِرْهَمٌ


Bukhari-3164

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3164. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு முறை), ‘நம்மிடம் பஹ்ரைனின் நிதி வந்தால் உனக்கு நான் இப்படி, இப்படி, இப்படி (அள்ளிக்) கொடுப்பேன்’ என்று (மூன்று முறை) என்னிடம் சொல்லியிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டிருந்தபோது பஹ்ரைனின் நிதி வர, அபூ பக்ர்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எவருக்காவது ஏதேனும் வாக்களித்திருந்(து அதை நிறைவேற்றும் முன்பாக அவர்கள் மரணமடைந்து விட்டிருந்)தால் அவர் என்னிடம் வரட்டும்’ என்று கூறினார்கள்.

உடனே நான் அவர்களிடம் சென்று, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நம்மிடம் பஹ்ரைனின் செல்வம் வந்தால் உனக்கு இப்படி, இப்படி, இப்படி (அள்ளிக்) கொடுப்பேன்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள்’ என்று கூறினேன். உடனே அவர்கள் என்னிடம், ‘அதை அள்ளிப் போட்டுக் கொள்’ என்றார்கள். நான் அதை நிறைவாக அள்ளிப் போட்டுக் கொண்டேன். அவர்கள் என்னிடம், ‘அதை எண்ணிக் கொள்’ என்றார்கள். நான் அதை எண்ணிப் பார்த்தேன். அது ஐநூறு இருந்தது. எனவே, அவர்கள் எனக்கு (மொத்தம்) ஆயிரத்து ஐநூறு தந்தார்கள்.
Book :58


«لَوْ قَدْ جَاءَنَا مَالُ البَحْرَيْنِ قَدْ أَعْطَيْتُكَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا». فَلَمَّا قُبِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَاءَ مَالُ البَحْرَيْنِ، قَالَ أَبُو بَكْرٍ: مَنْ كَانَتْ لَهُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِدَةٌ فَلْيَأْتِنِي، فَأَتَيْتُهُ فَقُلْتُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ كَانَ قَالَ لِي «لَوْ قَدْ جَاءَنَا مَالُ البَحْرَيْنِ لَأَعْطَيْتُكَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا» فَقَالَ لِي: احْثُهُ، فَحَثَوْتُ حَثْيَةً فَقَالَ لِي: عُدَّهَا، فَعَدَدْتُهَا فَإِذَا هِيَ خَمْسُ مِائَةٍ، فَأَعْطَانِي أَلْفًا وَخَمْسَ مِائَةٍ


Bukhari-3163

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 பஹ்ரைன் நிலங்களை (தோழர்கள் சிலருக்கு) நபி (ஸல்) அவர்கள் வருவாய் மானியமாக வழங்கியதும்,பஹ்ரைனின் நிதியிலிருந்தும், ஜிஸ்யாவிலிருந்தும் வழங்குவதாக நபிகளார் வாக்களித்ததும், ஃபய்உ’மற்றும் ஜிஸ்யா’ நிதி யாருக்குப் பங்கிடப்படும் என்பதும்.

3163. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளை, அவர்களுக்கு பஹ்ரைனின் நிலங்களை வருவாய் மானியமாக எழுதித் தருவதற்காக அழைத்தார்கள். அன்சாரிகள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் குறைஷிச் சகோதரர்களுக்கும் இதே போன்று எழுதித் தரும் வரை நாங்கள் (இவற்றை) ஏற்றுக் கொள்ள மாட்டோம்’ என்று கூறிவிட்டார்கள்.

இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘அது குறைஷிகளுக்குக் கிடைக்கும்; அல்லாஹ் அதை விரும்பும் பட்சத்தில்’ என்று கூறினார்கள். குறைஷிகளுக்கும் எழுதித் தரும்படி அன்சாரிகள் (தொடர்ந்து) வற்புறுத்திக் கூறினார்கள். அப்போது, நபி(ஸல்) அவர்கள், ‘(அன்சாரிகளே!) எனக்குப் பின் (சிறிது காலத்திற்குள்ளாகவே) உங்களை விடப் பிறருக்கு (ஆட்சியதிகாரத்தில்) முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். எனவே, (மறுமையில், எனக்குச் சொந்தமான) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும் (காலம்) வரை பொறுமையைக் கைக் கொள்ளுங்கள்’ என்றார்கள்.
Book : 58


دَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الأَنْصَارَ لِيَكْتُبَ لَهُمْ بِالْبَحْرَيْنِ، فَقَالُوا: لاَ وَاللَّهِ حَتَّى تَكْتُبَ لِإِخْوَانِنَا مِنْ قُرَيْشٍ بِمِثْلِهَا، فَقَالَ: «ذَاكَ لَهُمْ مَا شَاءَ اللَّهُ عَلَى ذَلِكَ»، يَقُولُونَ لَهُ، قَالَ: «فَإِنَّكُمْ سَتَرَوْنَ بَعْدِي أَثَرَةً، فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي عَلَى الحَوْضِ»


Bukhari-3162

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பொறுப்பில் உள்ள (முஸ்லிமல்லாத)வர்களைப் பாதுகாக்கும்படி அறிவுரை கூறுதல்.

3162. ஜுவைரிய்யா இப்னு குதாமா அத் தமீமீ(ரஹ்) அறிவித்தார்.

(ஒருமுறை) நாங்கள், ‘எங்களுக்கு அறிவுரை கூறுங்கள், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே!’ என்று உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களிடம் கேட்டோம். அப்போது உமர்(ரலி), ‘(இஸ்லாமிய அரசின் கீழுள்ள முஸ்லிமல்லாதவர்களைக் காக்கும்) அல்லாஹ்வின் பொறுப்பை நிறைவேற்றும்படி உங்களுக்கு நான் அறிவுரை கூறுகிறேன். ஏனெனில், அது உங்கள் நபியின் பொறுப்பும் உங்கள் குடும்பத்தினரின் வாழ்வாதாரமும் ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 58


قُلْنَا: أَوْصِنَا يَا أَمِيرَ المُؤْمِنِينَ، قَالَ: «أُوصِيكُمْ بِذِمَّةِ اللَّهِ، فَإِنَّهُ ذِمَّةُ نَبِيِّكُمْ، وَرِزْقُ عِيَالِكُمْ»


Bukhari-3161

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 ஆட்சித் தலைவர் ஓர் ஊரின் அரசனுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளும் பட்சத்தில் அது அந்த ஊர்வாசிகள் அனைவருக்கும் பொருந்துமா?

3161. அபூ ஹுமைத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்து கொண்டோம். ‘அய்லா’வின் அரசன் நபி(ஸல்) அவர்களுக்கு (‘தல்தல்’ எனும்) வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை ஒன்றை அன்பளிப்புச் செய்தான். நபி(ஸல்) அவர்கள் அவனுக்குச் சால்வையொன்றை (அனுப்பி) அணிவித்தார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய அரசின் கீழ் கட்டுப்பட்டு இருக்கும்படியும் அவனுக்கு எழுதினார்கள்.
Book : 58


«غَزَوْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبُوكَ وَأَهْدَى مَلِكُ أَيْلَةَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَغْلَةً بَيْضَاءَ، وَكَسَاهُ بُرْدًا، وَكَتَبَ لَهُ بِبَحْرِهِمْ»


Next Page » « Previous Page